Naan Ini Nee - Epilogue By KavithaC

Advertisement

KavithaC

Well-Known Member
My first attempt. Hope you all enjoy my version of the epilogue. Thanks for reading.

Comments will be much appreciated:)

கதவு திறக்கும் சத்தம் கேட்டு மானிட்டரிலிருந்து தலையை நிமிர்த்தினாள் ராகா.
"மம்மி" என்று கத்திக்கொண்டே ஒரு சிறு புயல் ஒன்று ஓடி வந்து மடியில் விழுந்தது.

"லியா பேபி " தன் ஐந்து வயது மகளை அணைத்து முத்தமிட்டாள் ராகா. கணவனை கண் தேட , தப்பாமல் ஒரு பையோடும் , புன்னகையோடும் வந்தான் தீபன்.

"என்ன தீப்ஸ், ஆபீஸ் வரேன்னு சொல்லவேயில்லை ?"
"அம்மா ஹாஸ்பிடல் போயிருக்காங்க, அதான் இங்க வந்துட்டோம், ஸ்வரா ப்ராஜெக்ட் செய்ய."
"மிதுன் பரவாயில்லையா ?" ஒரு பெருமூச்சுடன், "இப்போ இன்பெக்ஷன் அடங்கிருக்கு, ஆனா இன்னும் வீக் ஆகிட்டே வரான்.".

5 வருடமாக கோமா மிதுனை விட்டு விலகவில்லை. வாழ்க்கை என்ன சினிமாவா சுபம் போட ?

"டாட் ...நீரு ஆன்ட்டி சொல்றது கரெக்ட் . அம்மா கூட பேசினா எல்லாரையும் மறந்துடுவீங்க ", இடுப்பில் இரண்டு புறமும் கை வைத்து முறைத்தாள் ஸ்வரலயா . ராகா பொண்ணு ஸ்வரா என்று நிரூபித்தாள்.

"யா ராகா , சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாதே . எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு.நீ உன் வேலைய பாரு நீ வா பேபி " என்று கெத்து குறையாமல் மகளை சமாளித்தான் தீபன்.

விசிட்டர் சோபா, டீபாய் மேல் சார்ட் பேப்பர் , படங்கள் என்று பரப்பினார்கள்.

மகள் பள்ளியிலிருந்து வந்து உஷாவுடன் உணவு அருந்தி தூங்கி எழும்போது தீபனோ, ராகவோ இருப்பது போல் பார்த்துக்கொள்வார்கள். தீபன் தொகுதி வேலையும் அவனுடைய டி வில்லேஜ் கிளைகளையும் , அவர்கள் தொழில்களையும் பார்த்துக்கொள்கிறான் .
சக்கரவர்த்தி சொல்லியிருந்தார். "முன்பு போல் நிழல் பரிவர்த்தனைகள் வேண்டாம். தொகுதிக்குள் இன்னும் நல்லது செய்வோம், கொஞ்சம் புண்ணியமாவது சேரட்டும்", என்று. அதில் ராகாவுக்கும் நிம்மதியே.

அவள் பிரான்ச், அவள் விஸ்தரித்துக்கொண்டிருந்தாள். இப்போதும், புது மார்க்கெட்டில் நுழைவதால் ஆறுமணி ஆகியும் கான்ட்ராக்ட் சரி பார்த்துக்கொண்டிருந்தாள் .

லேசாக திரும்பி மகளையும் கணவனையும் பார்த்தாள். இந்த ஐந்து வருடங்கள் இருவருக்கும் நிதானத்தை கற்றுக்கொடுத்திருந்தது. இப்போதும் ராகாவின் அலுவல்கள் அனைத்தும் அவனுக்கு தெரியும். அதற்கு ராகாவும் பழகிருந்தாள். தீபனும் அவன் விஷயங்களை இப்போது அவளிடம் பகிர்ந்துகொண்டான். சண்டைகள் வருவதும் இப்போது கம்மிதான்.

போன ஞாயிறு நீரஜாவின் பேபி ஷவர் பார்ட்டி ஞாபகம் வந்தது.
புனீத் அங்கலாய்த்துக் கொண்டான். "பிரேக் அப் பார்ட்டி , பிக்கப் பார்ட்டின்னு இருந்த நாம, இப்ப சுறா பர்த்டே பார்ட்டி , நீரு பேபி ஷவர் பார்ட்டி ரேஞ்சுக்கு ஏறங்கிட்டோமே தீப்ஸ் "
"டேய் , ஏன் பொண்ணு பேரு ஸ்வரா.. "
"க்கும் எனக்கு அவ ஜாஸ்(Jaws) படத்துல வர சுறாதான் …எப்போ எங்க அட்டாக் பண்ணுவானே தெரியாது " என்று இரண்டு வயதில் எல்லோரையும் கடித்து வைக்கும் அவள் பழக்கத்தை இன்னும் கேலி செய்து புனித் சொல்லி முடிக்கவும், பின்னோடே அம்மாவும் பொண்ணும் முறைத்துக் கொண்டிருந்தார்கள் .

" ஹி ஹி ..கேட்டுடீங்களா " என்று அசடு வழிந்தான்.

"டாட் ...நீங்க எதுக்கு பேட் பாயோட எல்லாம் பிரெண்டா இருக்கீங்க ?" ஸ்வரா கேட்கவும் , "நீ எப்படா குட் பாய் லிஸ்ட்ல சேர்ந்த ", என்று தீபனை வாரினான் புனீத் .

"எங்கப்பா குட் பாய் தான் எப்பவுமே ", என்று முறைத்தாள் குட்டி தேவதை .

"ஆமாம், ஸ்வரா குட்டி கூட சேர்ந்ததும் நான் குட் பாய் ஆகிட்டேன்." என்று அவளை தூக்கிக் கொண்டு ஐஸ் கிரீம் தேடிச் சென்றான்.

"என்ன ராகா சொல்றான் ?" என்று தேவ் கேட்கவும், சொல்லாமலே எதை பற்றி என்று புரிந்தது மூவருக்கும். சக்கரவர்த்தி முடிவாகவே சொல்லிருந்தார். " இன்னும் மிதுன் எழுந்து வருவான், வந்தாலும் அரசியலுக்கு வரமுடியுமான்னு சொல்லமுடியாது. அடுத்த பொது தேர்தலுக்கு இன்னும் நாலு வருஷம் இருக்கு. நீ உன்னை ரெடி ஆகிக்கோ தீபன். ராகா தொழில் பார்க்கட்டும், நீ அரசியலுக்கு வா. இனியும் தள்ளிப்போட முடியாது. புதுசா யாரையும் கொண்டுட்டு வரவும் முடியாது."

"மிதுன் நிலைமை ஒரு மாதிரி அக்ஸப்ட் பண்ணிக்கறார். அவருக்கே புரியுது, புதுசா யார் வந்தாலும் ரிஸ்க் உண்டுன்னு. இப்போ தொகுதிலயும், யூத் மத்தில நல்ல பேரு. நிறையவும் செய்யறார். முன்ன மாதிரி, பின்னாடி நிக்காம இப்போ வெளிச்சத்துக்கும் வரவெச்சிடுறாங்க. அநேகமா ஒத்துக்குவார் வேற ஆப்ஷன் இல்லை.", என்றாள் ராகா.

"உனக்கு ஓகேவா ?" என்று கேட்டான் தேவ்.

“எனக்குமே வேற என்ன ஆப்ஷன் ? அவர் அந்த பரபரப்பு இல்லாம இருக்கவும் முடியாது. அதனால .. “,தோளை குலுக்கி புன்னகைத்தாள் ராகா.
'மா , எப்படி இருக்கு ?' என்று அவர்கள் செய்து முடித்த சார்ட்டை காட்டினாள் ஸ்வரலியா.

நினைவு கலைந்து , 'சூப்பர் ' என்றாள். ' என்ன தீப்ஸ், கூர்க் டி வில்லேஜ் பிளான் கூட இவ்ளோ ஒர்க் பண்ணிருக்கமாட்ட போலவே ?' என்று கண்ணடித்தாள் .
சிரித்தவன் , 'கிண்டல் பண்ணாம, கிளம்புடி சீக்கிரம் ' என்று சார்ட் ஒரு கையிலும் மகளை மறுகையிலும் பிடித்துக் கொண்டு , லிப்ட் நோக்கி போனான்.

வாழ்க்கையின் அடுத்த பரிமாணம் காத்திருக்கிறது. அவர்கள் காதலும், புரிதலும் அதையும் வெற்றி பெறவைக்கும் என்ற நம்பிக்கையோடு, அறையை பூட்டி, கணவனோடு சேர்ந்து கொண்டாள் அனு ராகா.
 
Last edited by a moderator:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
For some reason, using my laptop I am unable to type in this space. It closes the window itself. So I have attached as a file.

If admin or someone can help copy paste the content for easier reading, I will be much obliged. Thanks.

Hi kavitha,

Ping me the content ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top