Mila's என்னை மறந்தவளே 9

mila

Well-Known Member
#1
Last-Empress-2.jpg 45cdf1b40cd82fa5e3ddad326fbe7c10.jpg DEERAMUGUNDAN ENTRY

நேற்று இந்த இரண்டு போட்டோ போட்டு இருந்தேனே யாராச்சும் யாரிவன்னு கேட்டிங்களா!
banumaa தலைமைல கீர்த்தி சுரேஷ் பின்னாடி போய்ட்டிங்க.
போங்க போங்க தீரன் கிட்ட சொல்லி தூக்கிடுறேன்.


அத்தியாயம் 9"நான் டீ கூட பிஸ்கேட் கண்டிப்பா சாப்பிடுவேன் இல்லனா எந்த வேலையும் சரியா பண்ண முடியாது"

என்பது போலதான் நேசமணி சரவணன் சார் உறவு.

நேசமணிக்கு ஆபீசில் பெரிதாக எந்த வேலையும் இல்லை மேற்பார்வை பார்ப்பது தான் பெரிய வேலை. எல்லா தளத்துக்கும் சும்மா ஒரு விசிட் போட்டாவே போதும்.

உணவகத்தின் நாளைய உணவை தீர்மானிப்பதிலிருந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு இருக்கா என்பது வரை எல்லா வேலையையும் பார்ப்பார்.

இந்த வேலையை இவர் பார்க்க வேண்டி கட்டாயம் இல்லை. சில நேரம் வெளி வேலைகளையும் பார்ப்பார்.

இன்றும் அது போல் வெளியே சென்றிருந்தார்.

கணனியில் சைதன்யன் மீராவை அணைத்துக்கொண்டிருக்கும் காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீராவின் கைகளோ அவனின் தோல் மேல் இருக்க பார்ப்பவர்களுக்கு அது வேற அர்த்தத்தை கொடுத்தது.

அதே அர்த்தத்தோடு தான் சரவணன் சாரும் பேசினார். "பாரினில் இந்த வேலைய தான் பார்த்தியா?

நம்ம குடும்ப பாரம்பரியம் என்ன!

உன்ன முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது நீ எல்லாத்தயும் கத்துக்கணும்னு தான் இந்த மாதிரி வேலைசெய்ய இல்ல"

கணணியை காட்டியவாறே "மீராவை உனக்கு கட்டிவைக்க தான் பேசி பழக சொன்னேன் இந்த மாதிரி ஒழுக்கம் கெட்டவிதமா நடந்துக்க இல்ல?

அதுவும் என் ஆபீசில். எப்படி பட்ட குடும்பம் நம்மது.

நல்லவேளை நேசமணி இங்கில்ல, அவன் தூக்கி வளர்த்த பையன் இப்படினு வருத்தப்பட்டு இருப்பான்." கோவமா? ஆதங்கமா? அவர் குரலில்!

மீராவை ஏற்கனவே தெரியுமா என்று கேப்பார் என்று பார்த்தால் இவர் என்ன

கேட்கிறார்?

omg நா மீராகிட்ட தப்பா நடந்துக்கிட்டதா நினைக்கிறாரா! நா தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுறது மாதிரியும் மீரா தடுக்குற மாதிரியும் இல்ல இருக்கு! நொந்துவிட்டான் சைதன்யன்.

காலேஜில் எந்த பொண்ணையும் ஆர்வமா பார்த்ததே இல்ல. யாராச்சும் லவ் னு வந்து நின்னவே எனக்கு கல்யாணம் ஆச்சு சிஸ்டர்ன்னு கழண்டுகொண்டதே இவரால்.

பாரம்பரியம், அம்மாட ஆசனு ஏதேதோ பேசி என்ன லாக் பண்ணிட்டாரு. “என் ஸ்ரீ” “என் ஸ்ரீ” அவ லவ்வ புரிஞ்சிக்காம என்னெல்லாம் பேசிட்டேன். நெஞ்சை நீவி விட்டவன். எல்லாம் இவரால் வந்தது என்று மனதுக்குள்ளே அரற்றியவனாக சோபாவில் தொப்பென்று அமர்ந்தவனுக்கு தன்னை நம்பாமல் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் பேசுபவரிடம் எதுவுமே பேசத்தோண்றவில்லை தன்மேலேயே கோவம் வந்தது.

சைதன்யனுக்கு புரியவில்லை சரவணன் சாரின் மனநிலை. மீராவின் மேல் வைத்த அதிகப்படியான பாசமே அவரை யோசிக்கவிடாது பேச வைத்ததென்பது.

ஒன்னும் பேசாமல் வெளியே செல்பவனுக்கு " லட்சு கிட்ட என்ன சொல்லட்டும்" என்றவாறு பார்க்க;

அவரை வலியுடன் பார்த்தவன் "ஷத்ரிய வம்சா வழியில் வந்த 'அஞ்சா நெஞ்சம்' நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பொண்ணு மானம் காக்க கைல இருந்த வாள குறி பாத்து அவன் கலத்துக்கே வீசினாரே " விஷ்வதீரன் சௌதாகர்" அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்." என்று கூறியவன் திரும்பி பார்க்காமலேயே ஆபீசை விட்டே சென்று விட்டான். {அந்த வாள் எங்க சார்}

சைதன்யனின் பதில் ஒன்றே போதுமானது அவன் தப்பானவனில்லை என்று சொல்ல.

நிதானமாக முடிவெடுக்கும் சரவணன் சாரே இப்படி அவசரப்பட்டுட்டார்.எல்லாம் அன்பு செய்யும் மாயம்.

அவ்வொளித்தட்டை உடைத்து குப்பைக்கூடையில் எறிந்தவர் வேலைசெய்ய மனமில்லாது வீட்டுக்கு சென்றார்.

மாலையில் சைதன்யனுக்காக காத்துக்கொண்டிருந்த மீராவை அணுகினான் தீரமுகுந்தன். அவன் கண்ணில் தான் எத்தனை கனிவு

" என்ன மீரா தேவ் அண்ணா இன்னும் வரலயா?"

அங்கே தீரமுகுந்தனை எதிர் பார்க்காத மீரா ஒரு கணம் தயங்கி " வருவாரு" என்று மாத்திரம் சொன்னாள்.

அவளை கூர்பார்வை பார்த்தவன் "மிஸ்டர் தனஞ்சயுடன் நீயும் லிப்ட் இல் இருந்தாயே! ப்ரோப்லேம் ஒன்னும் ஆகலேயே!" எதையோ தெரிந்துக்கொள்ளும் நோக்கத்துடன்.அவசரமாக "இல்ல இல்ல" என்றவள் மொபைலை கையில் எடுத்தவாறு கால் செய்வது போல் பாசாங்கு செய்யா,அவளை புன்னகையுடன் ஏறிட்டவன் "சரவணன் சார் மத்தியானமே போய்ட்டாரு, மிஸ்டர் தனஞ்சயனும் அப்பவே போய்ட்டாரு" என்று கூடுதலான தகவலையும் சொ ல்ல,"சரவணன் சார் அழைத்து என்ன வேல கொடுத்தாரோ சொல்லாமலேயே போய்ட்டார்" என்றது மீராவின் மனது.தேவின் கார் கேட்டினுள்ளே வரவே மீரா தீரமுகுந்தனிடம் விடை பெறாமலேயே காரின் அருகில் ஓடினாள்.அவளுக்காக முன் இருக்கையின் கதவை திறந்து விட்ட தேவ் இறங்கி தீரமுகுந்தனிடம் பேசலானான்.காரில் அமர்ந்த மீராவுக்கு சைதன்யனை எப்படி தொடர்ப்பு கொள்வது என்ற சிந்தனையே அவனுடைய மோபைல் நம்பர் தெரியாது.

'சந்துரு அண்ணா' என்று முணுமுணுத்தவள் 'அவரிடம் கேட்போம்' என்று தனக்குள்ளே பேசியவள், பின்னாடி அமர்ந்திருந்த ப்ரியாவை கவனிக்கவில்லை.ப்ரியாவும் மோபைல் இல் மெயில் செக் பண்ணிக்கிட்டு இருந்ததால் மீராவிடம் பேசவில்லை.தீரமுகுந்தனிடம் விடை பெற்று தேவ் வரவே சந்துருக்கு அப்புறமா பேசலாம் என்று முடிவெடுத்தவள் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

வண்டியில் எறியதிலிருந்து வீடுவரை வாய் ஓயாது பேசும் மீராவின் அமைதியை வித்தியாசமாக பார்த்த தேவ் "என்ன டா தலைவலிக்குதா" என்று கேட்க,

தனது வேலையை முடித்துக்கொண்ட ப்ரியாவும் மீராவை ஆராயச்சியாய் பார்த்தாள்.

இந்த இரண்டு, மூன்று நாட்களாக மீரா ஏதோ சிந்தனையில் உழன்றவண்ணம் இருக்கின்றாள்.

அவளுடன் மனம் விட்டு பேசனும் என்று நினைத்தாலும் அதிகப்படியான வேலையால் நேரம் கிடைக்கவில்லை."நாம ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு போலாம் தேவ்" என்று ப்ரியா சொன்னதே! மீரா வினு இல்லாமல் ஐஸ் கிரீம் சாப்பிடமாட்டாள் என்பதால். "வினு இல்லாம நா வரல" என்று அவள் சொல்வாளென்று எதிர் பார்த்த இருவருக்கும் 'ஏதோ சரியில்லை' என்று தோன்றியது.

கண்ணாடி வழியாக இருவரினதும் கண்கள் சந்தித்துக்கொண்டன. தேவின் மனதில் பயப்பந்து உருள ஆரம்பிக்க வண்டியை ஓரமாக நிறுத்தியவன், மீராவின் தோலை தொட, கண்ணை திறந்தவள் கேள்வியாக தேவ்வை பார்க்க, சூழ்நிலையை கையில் எடுத்த ப்ரியா " என்ன மீரா ரொம்ப டயடா" என்று கேட்க அப்போது தான் ப்ரியாவை பார்த்தாள் மீரா.

தன்னையே நொந்து கொண்டவள். 'ஹிஹிஹி' என்று இளித்தவாறு "கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்னா விடமாட்டிங்களே!" என்று சமாளிக்க,

அர்த்தமான பார்வையை மாற்றிக்கொண்டனர் ப்ரியாவும் தேவும்.

வண்டி வீட்டை நோக்கி பறந்தது.

தேவிடம் விடை பெற்று வந்த தீரமுகுந்தன் லிப்ட்டினுள் நடந்த காட்சியின் கணநொளியை ஓடவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தான்.

6 வருடங்களுக்கு முன் மீராவை சந்தித்த நாளும் நியாபகம் வந்தது. அவனது முகம் வேதனையை காட்டியது.

தீரமுகுந்தன் 'எஸ்.எஸ் குரூப் ஒப் கம்பெனிகளின் சீப் சிகியூரிட்டி ஒபிஸ்ர்' என்பது தற்போதைய அடையாளம். உண்மையில் அவன் 'ஸ்பெஷல் கிரைம் பிரென்ச்' இல் டெக்னீஷியனாக பணியாற்றுபவன்.

தற்போதெல்லாம் வித விதமாக குற்றங்கள் நடக்கின்றன.

அதிலும் cctv பொருத்தி இருந்தால் அதை அமர்த்துவதும், சாட்சிகளை இல்லாமல் ஆக்க எவ்வழியிலேயோ காட்சிகளை இல்லாமல் செய்வதும் சர்வசாதாரணமாக நடக்கின்றது.

இவைகளை தடுக்கவென அவன் கண்டுபிடித்த சிஸ்டெம் தான் 'ஐம் வாட்சிங் யு' தற்போது எல்லா இடத்திலுள்ள cctv யிலும் இது அமுல் படுத்தப்பட்டுள்ளது.அதை பொருத்தியவர்களுக்கே தெரியாமல்.

cctv ஆப் பண்ணாலும் காட்சிகளை அழித்தலும் அவனது சிஸ்டத்தில் அது என்றும் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

அப்படித்தான் லிப்ட்டில் நடந்ததையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

அதை ஒரு பென்ட்ரைவில் ஏற்றியவன் பத்திரமாக எடுத்து வைத்தான்.


இதற்கிடையில் சைதன்யன் காணாமல் போனான்.
 

mila

Well-Known Member
#4
Ennathuu!
Saiyu va kanamaa???:eek:
Nijamave engala kathara vitutingale sis:mad:

Choo saiyu va oru vartha ketirukalame saravanan..
Meera mela iruntha athey pasam magan mela iruntha nambika vanthirukume:confused:

Dheeramugundan enna seiya poraru therilaye!!??:rolleyes:
Avar nallavara????
Kettavara??
Ennathuu!
Saiyu va kanamaa???:eek:
Nijamave engala kathara vitutingale sis:mad:

Choo saiyu va oru vartha ketirukalame saravanan..
Meera mela iruntha athey pasam magan mela iruntha nambika vanthirukume:confused:

Dheeramugundan enna seiya poraru therilaye!!??:rolleyes:
Avar nallavara????
Kettavara??
ஜஸ்ட் சிகியூரிட்டி ஆபிசர் என்றதும் அசால்ட்டா விட்டுடீங்களே!
சொன்னேன்ல கதறவிடுறேனு ரெண்டு நாளைக்கு சைதன்யான கண்ணுலே காட்ட மாட்டேன்.
 

Punitha M

Well-Known Member
#6
ஜஸ்ட் சிகியூரிட்டி ஆபிசர் என்றதும் அசால்ட்டா விட்டுடீங்களே!
சொன்னேன்ல கதறவிடுறேனு ரெண்டு நாளைக்கு சைதன்யான கண்ணுலே காட்ட மாட்டேன்.
உங்கள நான் நம்புறேன் Darli
நீங்க பாசக்கார புள்ள
அப்டிலாம் எங்கள அழவைக்க மாட்டீங்க;)
 

Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored