Melliya Nesam Episode 1

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
#1
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சைபசேல் என்று இயற்கை அன்னையின் கோடையை அதிகமாகவே பெற்று, சலசலக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலின் ஓசையும், அபூர்வமாகிய போன தூய காற்றும், வெட்கத்தில் தலை குனிந்து நிற்கும் நிற்கதிர்மணியும் பெற்று காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழும் தன் அழகிய கிராமத்தின் அழகை காணும் போதேல்லாம் தன் பிஞ்சு இதயத்தில் தோன்றும் வலியை மறந்து விடும் சாருவதனியால் இன்று அது முடியாமல் போனது. இலக்கற்று எங்கோ பார்த்தபடி இருக்கும் தன் தங்கையை பார்த்து சலித்து கொண்டாள் சந்திரமதி.
" ஏண்டி இப்படி எதையோ தொலைத்தது போல இருக்க, வீட்டுலதான் இப்படி இருக்கன்னு அருவி கரைக்கு கூட்டிட்டுவந்தா இங்கேயும் அப்படிதான் இருக்க" என்றாள்
" போக்கா நாளைக்கு எனக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வரபோகுது, மார்க் எப்படி வருமோன்னு எனக்கு பயமாயிருக்கு "என்றாள் சாருவதனி
" போடி கூறுகெட்டவளே, அது எப்படி வந்தால் என்ன, அத பார்த்தா வரபோற மாப்பிளை உன்னை கட்டிக்கப்போறார். இன்னும் இரண்டு நாள்ல உனக்கு நிச்சயம் பண்ண போறாங்க தெரியுமுள்ள, வீணா மார்க்கு, மண்ணாங்கட்டி என்று கவலை படாமல் முகத்தை சந்தோசமா வச்சுக்க " என்றாள் தமக்கை.
உள்ளே வந்த கோபத்தையும், பயத்தையும் மறைத்தவள், "குழந்தை திருமணம் செய்தாள் சட்டப்படி குற்றம் தெரியுமுல" என்றாள்.
" எனக்கும் தான் 17 வயசுல கல்யாணம் செய்து வைத்தார் அப்பா, எவன் கேட்டான், கேட்கத்தான் முடியுமா? அதிகமாக மொய் வைத்ததே நம்ம தாமோதரன் போலீஸ் மாமாதான், அதுமட்டும் இல்ல உனக்கு இப்போ வரன் கொண்டுவந்ததும் அவர்தான். அப்புறம் எவன் கேள்வி கேட்பான். என்ன எனக்கு திருமணம் செய்யும் போது நான் கொஞ்சம் புஸு புஸுன்னு பார்க்க பொண்ணு மாதிரி இருந்தேன். நீ வாடி வதங்கி முள்ளி பிடிக்க சதை கூட இல்லாம் இருக்க. படிப்பு படிப்புன்னு இப்படி ஆகிட்ட. ஆனாலும் பரவாயில்லை, நீ போகும் இடமும் நம்மளை மாதிரி பெரியிடம்தான், அடுத்தவருசமே ஒரு புள்ளை பெத்துக்கிட்டா நீயும் உருக்கிய வெண்ணை மாதிரி ஆகிடுவ" என்றான் சந்திரமதி.
"17 வயதில் கல்யாணம், 18 வயதில் குழந்தை, வெளங்கிடும். அப்பாதான் இப்படி பண்ராருன்னா நீயும் என்னை புரிஞ்சிக்காம இப்படி பேசுறியே. நான் டாக்டருக்கு படிக்கணும்ன்னு எவ்வளவு ஆசைபடுறேன்னு உனக்கே தெரியுமில்ல" என்றாள் இளையவள் கண்ணில் கண்ணீருடன்.
தங்கை அழுவது பொறுக்காமல் சந்திரமதி அவளை அணைத்துக்கொண்டாள். " சாரும்மா நம்ம கையில எதுவுமே இல்ல. நடக்க கூடியதுக்குத்தான் ஆசைப்படனும். நம்ம அப்பாவுக்கு பிள்ளைகளா பிறந்துட்டு நீ எப்படி ஆசைப்படலாமா. ஏதோ ஊருக்குள்ள பள்ளிக்கூடம் இருந்ததால நாம 12 வரை படிச்சோம். இல்லன்னா பட்டிப்பு வாடையே என்னன்னு பார்த்திருப்போமோ, பார்க்கத்தான் விட்டிருப்பாரா நம்ம அப்பா. நீ உன் ஆசையை நினைக்கதுக்கு முன்னாடி நம்ம அம்மாவை நினைத்துப்பாரு. அம்மா எப்போதும் சொல்லுவதுதான், நம்ம இரண்டு பேருக்காகத்தான் அம்மா உயிரோடு இருப்பதே " என்று தேற்றினாள்.
" அக்கா எனக்கு புரியுது. ஆனா எனக்குள் படிச்சே ஆகணுமுன்னு ஒரு நெருப்பு சதா உள்ளே எரிஞ்சிகிட்டே இருக்கே " என்றாள்.
" அத அப்பாவ நினைத்து தண்ணீர் ஊற்றி அணை. இல்லாட்டி அவரு அதுல பெட்ரோல் ஊற்றி கொளித்திடுவாரு, எரிவது நீயா மட்டும் இருக்காது கூடவே அம்மாவையும் சேர்த்துப்போட்டு எரிச்சிடுவாரு. பாரு ஒரு பேர பிள்ளையை கண்ட பிறகும் நேற்று கூட அம்மாவை அடிச்சாரு " என்றாள் தமக்கை.
அடிச்சாரு என்றவுடன் தன் கதையை மறந்த சாருவதனி கேட்டாள் " ஏங்க்கா அத்தான் உன்னை அடிப்பாரா ? " என்று.
பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டாள் சந்திரமதி. இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னா அத்தானும் அப்பாவை போலத்தானா. ஏன் இந்த ஆம்பிளைங்க எல்லாம் பெண்களை அடிக்கிறாங்கா என்று யோசிக்க ஆரம்பித்தாள் 12ஆம் வகுப்பு படிக்கும் சாருவதனி.
பெண் மென்மையானவள் அதனால் தான் என்னவோ ஆண்மை அவளை பிய்த்து எரிகிறது.
சாருவதனி தாயின் பரபரப்பை கண்டு எரிச்சலில் இருந்தாள். இந்த அம்மா மட்டும் கொஞ்சம் முதுகெலும்போடு இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். திருமணம் ஆகி இருவது வருடம் தாண்டியபிறகும் ஒரு புழுவாகவே வாழ்ந்து பழகிவிட்டார். என்று யோசித்துக்கொண்டிருக்க அவளுடைய தந்தை அழைக்கும் சத்தம் கேட்டது.
" ஏய் சின்னவளே இங்கே வா, மாப்பிளையோட அம்மா உன்னிடம் பேசணுமா, புடவை எடுக்க போறாங்க போல, கலர் எதுவும் கேட்டா உங்களுக்கு பிடிச்சதை எடுங்கன்னு சொல்லணும். உன் துடுக்கை அங்கே காட்டக்கூடாது, அப்புறம் முதுகு பழுத்திடும் " என்று எச்சரித்து போனை அவளிடம் நீட்டினார் அவளின் தந்தை ராஜரத்தினம்.
உள்ளே வழக்கம் போல ஆயிரம் அர்ச்சனை செய்தாலும் வெளியே எதுவும் சொல்லாமல் போனை வாங்கினாள். அப்புறம் ம், ம் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
"என்னவாம் " என்றார் மீசையை நீவி விட்டபடி. அலங்காரம் எல்லாம் ரொம்ப பண்ணக்கூடாதாம் என்றாள் அவள்.
" பரவாயில்லை சம்மந்தியும் என்னை போலவே நினைக்கிறார். நீங்க அலங்காரம் பண்ணிட்டு திரிஞ்சா அசிங்க பட போறது நாங்கதானே, போ போ, போய் வேலையை பாரு " என்றார்.
விவரம் தெரிந்த நாளில் இருந்து கேட்டு கேட்டு பழகியது. ஆனாலும் கேட்கும் போதெல்லாம் வலிக்கும். திருப்பி பேச வேண்டும் என்று மனது துடித்தாலும் நாக்கு துடிக்காது. பிறகு அடி வாங்குவது அம்மா அல்லவா.
அவளின் அத்தனை கோபமும் அவளுக்கு நிச்சயம் செய்ய வர போகும் மாப்பிளை மீதும் அவன் விட்டார் மீதும் திரும்பியது. தன் தாயிடம் வந்து பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள்.
" அவனெல்லாம் ஒரு மாப்பிளை. கத்திரிக்காக்கு கையும் காலும் முளைத்த மாதிரி. அதுல நாட்டாமை மீசை வேற. கருங்குரங்கு. அவனுக்கு நான் அலங்காரம் பண்ண கூடாதாம். அந்த லூசு பய கண்ணை மூடிட்டு ஏதாவது கிணத்துல போய் விழவேண்டியதுதானே. ஆனாலும் நீ கட்டிவைத்திருக்கியே ஒரு ஐயனாரு, எங்கே இருந்துதான் தேடிப்பிடிப்பாரோ இப்படி நட்டுக்கலந்த கேச. இனம் இனத்தோடதான் சேரும். " என்று நிறுத்தாமல் பேசும் மகளை அடக்காமல் ரசித்துக்கொண்டிருந்தார் லட்சுமி.
" அம்மா அவ எப்படி பேசுறா, அவளை அடக்காம என்ன சிரிப்பு, அப்பா வந்துட போறார்" என்றாள் சந்திரமதி.
" அதெல்லாம் வரமாட்டார். மணியை பார்த்தியா, இது உங்க அப்பா தூங்கப்போகும் நேரம். இந்நேரம் படுத்திருப்பார். உனக்கும் எனக்கும் தான் பேச தைரியம் வரல, அவளாவது பேசட்டுமே. என் சாரு குட்டி என்னமா பேசுது பாரு " என்று சிலாகித்தார் பெற்றவள்.
" ஆமா நீங்கதான் மெச்சிக்கணும் அவளை. அந்த அம்மா இப்பவே இவளை அலங்காரம் செய்ய கூடாதுன்னு சொல்லுது. இவ ரூமுல போய் பார்த்தா பெட்டிபெட்டியா நெய்ல்பாலிசும், அலங்காரபொருளுமா வாங்கி ஒளிச்சு வைச்சிருக்கா. இங்கே சரி, அங்கே போயும் இதே வேலையை பார்த்திட போரா. " என்றாள் தமக்கை.
" விடு விடு அவளை பற்றி உனக்கு தெரியாதா, உன் அப்பா கண்ணில மண்ணை தூவிட்டே எல்லாம் பண்ணுவா, அங்கேயும் போய் பார்த்துப்பா. ஆனா நான் தான் என்ன பண்ண போறேனோ தெரியல. உங்க அப்பா முன்னாடி நீயும் ஊமை நானும் ஊமை. இவ ஒருத்திதான் அவர்முன்னாடி இல்லாட்டியும் இந்த வீட்டில் கலகலன்னு அலைவா, இவளும் போன பிறகு" என்று நிறுத்தியவர் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார். ஆனால் இதை எதையுமே கவனிக்காமல் இன்னும் தன் வருங்கால கணவனை திட்டிக்கொண்டிருந்தாள் அந்த குழந்தை.
அன்றைய இரவு மூன்று பெண்களுமே தூங்காமல் கலக்கத்தில் புரண்டுகொண்டிருந்தனர். நாளை என் தேர்வு முடிவு என்னாகுமோ என்று சின்னவளும், அப்பா மாதிரி இல்லாவிட்டாலும் தன் கணவனும் முரடன்தான். அப்படி தங்கைக்கு வாழ்க்கை அமைந்துவிடக்கூடாதுன்னு பெரியவளும் நினைத்துக்கொண்டு இருந்தனர்.
அவர்களை பெற்றவளோ இருபத்தியோரு வருடத்திற்கு முன்பு நடந்தவற்றை யோசித்துக்கொண்டிருந்தாள்.
ராஜரத்தினம் அவரை பெண் பார்க்க வந்த போது லட்சுமி ஒன்றும் பெரிய அலங்காரத்தில் இல்லை. ஆனால் அவர்கள் அதை எதுவும் பார்க்கவில்லை. நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர்கள் தேடியதெல்லாம் ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் உள்ள பெண்ணைதான். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் பெண்தான் அடிமையாக இருப்பாள் அதுவும் இல்லாமல் அவர்கள் குடும்பமும் ஒருகாலத்தில் உயர்த்த குடியாகத்தான் இருக்கும். அதற்கு சரியான குடும்பமாக லட்சுமி குடும்பம் இருந்தது. நல்ல வசதிபடைத்த குடும்பமாக இருந்ததுதான். அந்த குடும்ப தலைவர் திடீரெண்டு இரண்டு ஆண் இரண்டு பெண் என்று நான்கு குழந்தைகளையும் விட்டுவிட்டு மாரடைப்பில் இறந்துவிட, பங்காளிகள் அனைவரும் சேர்ந்து சொத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டனர். கணவனையும் சொத்தையும் இழந்த லட்சுமியின் தாயால் போராடி இவர்களின் பசியைதான் போக்க முடிந்தது.
லட்சுமி ராஜரத்தினம் திருமணமும் முடிந்தது. இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அவர்களின் நோக்கம். ராஜரத்தினத்தின் குணத்தை ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆண் என்ற திமிர் பிடித்தவன் என்று. திருமணம் முடிந்த 8வது நாளில் தொடங்கிய அடி, அது கூட பரவாயில்லை வாயை திறந்தால் வரும் விச வார்த்தை, எப்போதும் மனைவியின் நடத்தையை சந்தேகப்படும் ஆண்மகன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எதையுமே எதிர்த்து கேட்டும் தைரியமும், பலமும் இல்லாத மனைவி. சரி ஒரு குழந்தை பிறந்த பிறகாவது சரியாகாதா என்று பார்த்தால் அவர்கள் குடும்பத்திற்கு ஆண் பிள்ளை மட்டும் தான் வேண்டுமாம். ( பெண் பிள்ளை பிறந்து அவர்கள் செய்யும் பாவம் அவர்களுக்கே tirumbivittaal) எங்கே போவது ஆண் பிள்ளைக்கு. முதலாவது பெண்ணாக பிறக்க அதுக்கு முழு காரணமும் லட்சுமிதான் என்று அதற்கு போனஸ் கவனிப்பு, அப்புறம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் பிறந்தது பெண். பழமொழி ஒன்று உண்டு பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்று. அதுபோல ஆனது லட்சுமிக்கு. இரண்டும் பெண் பிள்ளையாக பிறந்த பெரிய தப்பிற்காக மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க பெண்தேடினார் லட்சுமியின் மாமியார். உலகிலே கணவனுக்கு மனைவி உயிரோடு இருக்கும் போது மறுமணம் என்றால் அதற்காக சந்தோசப்பட்ட ஒரே ஜீவன் லஷ்மியாகத்தான் இருக்க வேண்டும். அப்பா சனியன் விட்டது என்று அவர் நினைக்க பெண் தேடிய மாமியாரை திடீர் நோய் கொண்டுபோய்விட்டது. திறந்த ஒரே கதவும் அடைத்துவிட தான் பெற்று எடுத்த இரண்டு பெண்களுக்காக புழு என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு தன்னை சுருட்டிக்கொண்டார் லட்சுமி.
தன்னிடம் தான் அப்படி என்றால் தான் பெற்ற பிள்ளைகளிடமும் அதே முகத்தை காட்டினார் ராஜரத்தினம். பெரியவள் தாயின் வாரிசு. ஆனால் சின்னவள் அவரின் வாரிசு போல். அவர் சொன்னதை மட்டும் அவள் செய்ததே கிடையாது. ஆனால் அவள் செய்யும் அனைத்தும் அவள் தாயுக்கு மட்டுமே தெரியும்.
பெண் பிள்ளை அடக்கம் ஒடுக்கமாக இருக்கணும் என்றால் இவள் அவர் பின்னாடி அனைத்து சேட்டையும் செய்வார். அலங்காரம் பண்ணாதே என்றால் இரவு நன்றாக அலங்காரம் செய்து கொண்டு போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்குவாள். பாடாதே, ஆடாதே என்றால் அனைத்தையும் செய்வாள் கதவை மூடிக்கொண்டு. படிக்காதேன்னா, அப்படி படித்தாள்..இவள் ஆர்வத்தை பார்த்து இவளை 8ஆம் வகுப்பில் இருந்தே அவள் பள்ளியில் ஒரு ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயார்படுத்திக்கொண்டு வருகிறார். அவள் அனைத்தையும் செய்வது அவள் அப்பாவிற்கு தெரியாமல் தான். இல்லையென்றால் இடம்பொருள் எதுவும் பாராமல் மகள்களின் முன்னாடியே லட்சுமியை அடித்து துவைத்துவிடுவார் அப்புறம் அந்த நாறை வாயை வேற திறந்துவிடுவார். ஆனால் எதுவுமே ராஜரத்தினத்திற்கு தெரியாமல் என்று சொல்லிவிடமுடியாது. சின்ன மகள் சற்று துடுக்குக்காரி என்று அவருக்கு தெரியும். தன் முன் எதுவும் அவள் வைத்துக்கொள்வதில்லை என்பதால் அவரும் எச்சரிக்கையுடன் விட்டுவிடுவார்.
என்னதான் அவள் துடுக்குக்காரியாக இருந்தாலும் டாக்டராக வேண்டும் என்ற தன் ஆர்வத்தையும், நிச்சயம் செய்ய வரும் அன்று கூட அலங்காரம் செய்யக்கூடாதுன்னு சொல்லும் அந்த பரந்த மனது படைத்தவனை திருமணம் செய்வதையும் எப்படி கையாளப்போகிறாள்.
 
Last edited by a moderator:
#3
:D :p :D
உங்களுடைய "மெல்லிய
நேசம்"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Vishvapoomi டியர்
 
Advertisement

New Episodes