KUK - 17

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends i come with the next update and i thank for your comments on last update also give your comments for this update also am waiting for your comments and also tell me how the story is going it is nice or any other change is needed tell me friends and i give a next update tomorrow or day after tomorrow friends. happy reading.................................

உள்ளம்- 17

எவ்வளவு சிந்தித்தாலும் ரவிக்கு ஒன்று மட்டும் புலப்படவில்லை வெளியில் இருக்கும் பங்குகளை எல்லாம் அவர்கள் வாங்கி இருந்தாலும் மீதம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிக பங்கு இருக்கிறது இவர்கள் எதை கொண்டு கம்பனியை தங்கள் வசம் ஒப்படைக்க சொல்கின்றனர்


வர்ஷா பெயரில் எந்த பங்குகளும் இல்லை பின் எப்படி அவர்கள் பெரும்பான்மை பெற முடியும் என்றே சிந்தித்தார் அதை தன்னுடைய வக்கீல் இடமும் கூறினார்

என்ன முயன்றும் அவரால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை அவரின் அடையலாம் லச்சியம் எல்லாமே இந்த கம்பனிதான் அதை இழந்துவிடுவோமோ என்ற பயம் அவரின் மனதில் உருவானது அதுவே அவரை சிந்திக்க விடாமல் செய்தது

கம்பனியை பற்றிய யோசனையுடனே வீடு வந்து சேர்ந்தவர் முதலில் அம்மு எங்கே என்று பார்த்தார் அவள் இன்னும் வீடு வரவில்லை என்று தெரிந்ததும் அவள் வந்தவுடன் அவளிடம் பேச தன்னை தயார்படுத்தி கொண்டார்


அம்முவோ நாளை அவளின் அத்தை வரும் மகிழ்ச்சியில் வீட்டிற்கு வர அவள் உள்ளே நுழைந்ததும் ரவி அவளை பார்த்து “உன்னிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும் நீ என்னுடன் அலுவலக அறைக்கு வா”

அம்மு “hallo mr.ரவி என்னை வா போ என்று குப்பிட நீங்க யார் மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்கிகொள்ள வேண்டும் சமுதாயத்தில் பெரிய மனிதன் என்று பெயர் எடுத்தால் பத்தாது அடுத்தவரிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியவேண்டும்”

அப்போது அபை உள்ளே நுழைய அவனும் அம்முவின் சொற்களை கேட்டான் கேட்டவுடன் “அபி நீ பேசுவது சரியில்லை என முதல் முறையாக அவளை அபி இரு அழைத்தான்”

அம்மு “அப்ப உங்க மாமா பேசுவது மட்டும் சரியா சரண் எதோ வீட்டில் வேலை செய்பவரை கூப்பிடுற மாதிரி என்னை அழைக்கிறார். எங்கள் வீட்டில் எல்லாம் வேலை செய்பவர்களை கூட மரியாதையாக அழைத்துதான் பழக்கம்”

அபை “மாமா நீங்களும் அவங்களை ஒருமையில் அழைக்க வேண்டாம் முதல் முறையாக தன்னுடைய அம்முவிற்கு அதரவாக தன்னுடைய மாமாவிடம் பேசினான்”

ரவிக்கோ நான் என்ன சொன்னேன் வா என்று தானே அதுவும் வயதில் சிறியவள் என் பெண்ணின் வயது என்று நினைத்தே அவ்வாறு கூப்பிட்டேன் இதில் என்ன தவறு அபை.

அம்மு “என்னை வா போ என அழைக்க நான் ஒன்றும் உங்கள் வீட்டு பெண்ணும் அல்ல என்னை நீங்கள் அப்படி அழைக்க அவசியமும் இல்லை”

ரவி “எப்படியோ போ எனக்கு ஒன்றுக்கு மட்டும் பதில் சொல் என்னுடைய கம்பனியை A.A வசம் ஒப்படைக்க சொல்லி எதற்கு நோட்டிஸ் அனுப்பினாய்”

இதுவரை இங்கே நடந்த அனைத்து உரையாடலையும் கேட்டு கொண்டிருந்த குடும்பத்தினர் ரவி நம்ம கம்பனியை எதுக்கு அவங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றனர்

ரவி “நமது கம்பனியின் வெளியில் உள்ள அனைத்து பங்குகளையும் இவள் வாங்கி விட்டாள்”

லக்ஷ்மி “என்னங்க நீங்க சொல்வது உண்மையா அப்படியே நீங்க சொல்வது போல் வெளியில் உள்ள பங்குகளை வாங்கினாலும் மீதம் நம்மிடம் தானே 52 சதவிதம் இருக்கும் பிறகு எப்படி இவர்களுக்கு ஒப்படிக்க முடியும் அதிக பங்கு நம்மிடம் தானே உள்ளது”

ரவி “எனக்கும் அதுதான் குழப்பமாக உள்ளது ஆனால் இவள் அனுப்பிய நோட்டிசில் கம்பனியின் 60 சதவிகித பங்குகள் இவளிடம் இருப்பதாக அனுப்பி இருந்தாள்”

சுமலா “எப்படி அண்ணா அவ்வாறு அனுப்ப முடியும் பங்குகள் அனைத்தும் உங்கள் பெயரில்,அண்ணி மற்றும் வர்ஷன் பெயரில் அல்லவா உள்ளது பின் எவ்வாறு இவர்கள் இதுபோல் ஒரு கடிதம் அனுப்ப இயலும்”

பாட்டி “நீ வேற சுமலா இவள் இதுபோல் நம்மை பயபடுத்தி பணம் பறிக்க பார்க்கிறாள் அதற்கு இதுபோல் கடிதம் அனுப்பி நம்மை அவள் சொல்பேச்சு கேட்டு நடக்கும் படி செய்கிறாள்”

இன்று விரைவாக வீடு வந்த அர்ஜுன் வர்சாவை அழைத்து கொண்டு தன்னுடைய அம்மா சொன்னதற்காக இங்குள்ள கோவிலில் தாலி மாற்றும் சடங்கை பற்றிய விவரம் கேட்க சென்றவன் அப்போது வர இவர்கள் பேசியது அனைத்தும் அவன் காதுகளில் விழுந்தது. அதை கேட்ட வேகத்தோடு உள்ளே வந்தவன்

“எல்லோரயும் உங்கள் மாதிரி பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்பவர் என நினைக்க கூடாது. நாங்கள் முறைபடி நோட்டிஸ் அனுப்பி உள்ளோம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டது போல் எங்களிடம் 60% பங்குகள் உள்ளது அதையும் நாங்கள் முறையாக பணம் கொடுத்து வாங்கினோம்”

லக்ஷ்மி “அது எப்படி பா முடியும் வெளியில் இருக்கும் பங்குகளை நீங்கள் வாங்கி இருக்கலாம் ஆனால் எங்கள் குடும்பத்தில் உள்ளதை எவ்வாறு வாங்க இயலும்”

அச்சு “உங்கள் பெயரில் உள்ளதை நீங்கள் யார் விருப்பமும் இல்லாமல் விற்கலாம் தானே அதே போல் உங்கள் மகன் வர்ஷன் அவரின் பெயரில் உள்ள பங்குகளை எங்களுக்கு விற்றுவிட்டார் அதற்காக நாங்கள் மற்ற பங்குகள் வங்கியதை விட அவருக்கு இருமடங்கு பணம் கொடுத்துள்ளோம் இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா”

அம்மு “இப்போ அவங்க சந்தேகம் முழுவதும் தீர்ந்திருக்கும் அச்சு இனி கம்பனியை எப்போது ஒப்படிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் அதுவும் கொடுத்த கால கெடுக்குள். அதை விடு நீ போன காரியம் என்ன ஆனது”

அது ஓகே தான் அம்மு ஆனால் அம்மா சொல்வது போல் ஒரு பூஜை நடத்த வேண்டும் கேட்டோம் அதற்கு என்ன என்ன வாங்கவேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து இருகாங்க இதை எப்போது சென்று வாங்க

அம்மு “நீயும் செல்ல வேண்டாம், நானும் செல்லவேண்டாம் இன்னும் கொஞ்ச நாளில் எப்படியும் வர்ஷா நம்முடைய வீட்டில் தானே வந்து வாழ வேண்டும் அதனால் இப்போதே அதற்கு கொஞ்சம் பழக்குவோம் அவளே சென்று அனைத்தும் வாங்கி வரட்டும்”

அச்சு “நீ சொல்லவதும் சரிதான் அம்மு நாளை மதியம் அம்மா வந்து விடுவார் அதற்குள் அனைத்தும் செய்ய வேண்டும். நான் வர்சாவை அனுப்புகிறேன்”

லஷ்மி “உங்களின் செயல்கள் ஒன்றும் சரியில்லை நானும் வீட்டிற்கு வந்த மருமகன் என்று பேசாமல் இருந்தால் எங்களுக்கே தெரியாமல் எங்கள் பையனிடம் இருந்து கம்பனியின் பங்குகளை வாங்கி இருகீங்க அதோடு இப்போது என்னுடைய பெண்ணை வீட்டு வேலை செய்பவர்கள் செய்யும் காரியங்களை செய்ய சொல்றீங்க”

அச்சு “உங்க பையன் சின்ன குழைந்தை பாரு அவரை ஏமாற்றி நாங்கள் பங்குகளை வாங்க அவரேதான் தான் மிகவும் அவசர பண தேவையில் இருப்பதாகவும் அதற்காக இந்த பங்குகளை எங்களுக்கு தருவதாகவும் அதற்க்கு பதிலாக இரண்டு மடங்கு பணம் வேண்டும் என்றும் கேட்டார் சரி என்று நாங்களும் வாங்கி கொண்டோம்.

அதோடு எங்கள் குடும்பங்களில் வீட்டில் ஒரு பூஜை என்றால் அந்த வீட்டு மருமகள் அனைத்தையும் கவனிக்கவேண்டும் வெளி ஆட்களோ இல்லை வேலை செய்பவர்களோ அதை செய்ய கூடாது. இது போன்ற வேலைகள் அந்த பெண்ணிற்கு கொடுக்கும் கவுரவமாக பார்க்கப்படும் ஏனெனில் பெண்கள் துர்கையின் அம்சம் என்று எங்கள் பக்கம் கூறுவர் அவள் எந்த பூஜையாக இருந்தாலும் ஒரு குறைவராமல் செய்தால் அவளின் கையே அந்த குடும்பத்தில் ஓங்கி இருக்கும் என்றும் அதோடு அந்த குடும்பத்தின் செல்வ நிலை நன்றாக இருக்கும் எனவும் கருதப்படும்”

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த யாதவ் “அப்படியா அதனால் தான் அண்ணி இந்த வேலையை வர்ஷாவை செய்ய சொன்னார்களா”


அச்சு “ஆமாம் யாதவ் என்னதான் எங்களுக்கும் உங்களுக்கும் ஆகாது என்றாலும் வர்ஷா என்னுடைய மனைவி அவளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவேண்டும் என்று அம்மு விரும்புகிறாள். அது எப்படி என்னோருத்தரின் தாலியை அபகரித்து வாழும் இவங்களுக்கு புரியும்”

ரவி “ஏய் என்ன விட்ட ரொம்ப பேசுற நீயும் அவளும் என்ன திட்டத்தோடு இங்கே வந்திருகீங்க எல்லாம் அந்த நந்தினியோட திட்டமா அவளின் திட்டம் ஏதும் என்னிடம் பலிக்காது. கட்டிய கணவன் இருக்கும் போதே இன்னொருத்தனோடு சென்றவள் அவளுக்கே இவ்வளோ திமிரு இருக்கும் போது எனக்கு இருக்கிறதா. இனி தானே பார்க்க போறீங்க இந்த ரவீந்தர் யார் அவன் என்ன எல்லாம் செய்வன் என

இவ்வளோ நாள் என்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்காக அமைதியாக சென்றேன் எனக்கு என் பெண் முக்கியமா இல்லை கம்பனி முக்கியமா என்று கேட்டால் என்னுடைய கம்பனியே முக்கியம் என்பேன் அப்படி பட்ட நான் நீ வந்து கேட்டவுடன் அதை உங்களுக்கு தாரை வார்த்து கொடுத்துவிடுவேனா” என்றார்

அபை “மாமா என்னுடைய மனைவியை நீங்கள் இன்னும் அவள்,இவள் என்று மரியாதையை இல்லாமல் தான் அழைக்கிறீர்கள் அதோடு நீங்கள் நந்தினி அத்தையை பற்றி பேசுவது சரியில்லை இதுவரை நான் உங்களை எதிர்த்து ஒன்றும் செய்தது கிடையாது அத்தையை பற்றி பேசி என்னை உங்களுக்கு எதிராக திருப்பிவிடாதிர்கள். அதோடு இவங்க என்னுடைய மனைவி அதற்கான மரியாதையும் நீங்க கொடுத்து ஆக வேண்டும்”

பாட்டி “என்னடா உன்னுடைய மனைவி அவளுக்கு நாங்க மரியாதையை கொடுக்கனும்மா நீயே இந்த வீட்டில் யாரோ தான் எதோ உன்னுடைய அம்மா அதான் என் மகள் உன்னை பெற்றுவிட்டாலே என்று அமைதிக உள்ளேன் அதோடு என்னுடைய மகனும் உன்னுடைய அப்பனுக்கு வாக்கு கொடுத்துவிட்டான் உன்னை வளர்ப்பதாக இல்லை என்றால் உன்னை எப்போதே அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பிருப்பேன்.

இவனே இந்த வீட்டில் தெண்ட சோறு இதில் இவன் பொண்டாட்டிக்கு வேறு மரியாதையை கொடுக்கணுமாம். உன்னை வளர்த்ததற்கு என் பையனுக்கு ரொம்ப நல்லது செய்துவிட்ட உன்னை வளர்த்த கடனுகாவது உன் பொண்டாட்டி கிட்ட இருக்க பங்குகளை வாங்கி கொடு

பாட்டியின் வார்த்தைகள் அபையின் மனதை மிகவும் காயபடுத்தியது அதோடு அவன் ஏதும் பேசாமல் தன்னுடைய அறையை நோக்கி சென்றான் அவன் சென்றதும் வெற்றி “உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி என்பதே இல்லையா அவனுடைய சின்ன வயதில் இருந்து இப்படியே பேசி கொண்டே இருகீங்க அவன் மனது என்ன பாடுபடும்”

சுமலா “ரொம்ப ஓவரா அவன் மேல பாசம் பொங்குது பெத்தவ நானே சும்மா இருக்கேன் உங்களுக்கு என்ன வந்தது அவனுக்கு நீங்களா அப்பா இல்லை தானே பின் என்ன போங்க போய் வேலைய பாருங்க. பெருசா பேச வந்துட்டார். நானே அண்ணா சொன்னதற்காக மட்டுமே அவனை வீட்டில் வைத்திருக்கேன்”

அதோடு அந்த பேச்சு முடிய அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்


அம்முவும்,அச்சுவும் வர்ஷாவை பார்த்து எது எப்படி வாங்க வேண்டும் என்று சொல்ல அவளை தேட அவளோ தனது அம்மாவிடம் “மா நீங்க பேசியது கொஞ்சம் கூட சரியில்லை அவர் சொன்னதை நீங்களும் கேட்டீர்கள் தானே அவங்க குடும்பத்தில் மருமகளுக்கு கொடுக்கும் கவுரவத்தை எனக்கு கொடுப்பதாக கூறினார் அவரை போய் இப்படி பேசிவிட்டீர்களே”

லஷ்மி “ஆமா டி நான் பேசினது மட்டும்தான் தப்பு உன்னுடைய புருஷன் பேசினது எல்லாம் சரி அவன் என்னை எப்படியெல்லாம் பேசிவிட்டான் அதுவெல்லாம் உனக்கு தெரியவில்லை. நீ அங்கவே எப்படி என்னுடைய அம்மாவை நீங்க இப்படி பேசலாம் கேட்டிருந்தா பரவாயில்லை அத விட்டு இங்க என்கிட்ட வந்து அவனுக்காக வாக்களத்து வாங்கற. அவன் உன்னை கண்டுக்கறதே இல்லை எப்போ பாரு அம்மு அம்மு அந்த அபிதா பின்னாடியே சுத்திட்டு இருக்கான் இப்பவே நீ அவனுக்குகாக என்கிட்ட பேசற அவன் மட்டும் உன்னை பார்த்து கொண்டால் இன்னும் என்ன பேசுவ நீ. இப்படியே உன் புருஷனை விட்டுவைத்த அப்புறம் அவன் காலத்துக்கும் உனக்கு சொந்தம் ஆகமாட்டான். அந்த அபிதாக்கு தான் சொந்தம் ஆவான்”

அம்மா நீ என்ன பேசுற அபிதாக்கும் அத்தானுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி அவங்க எதுக்கு என்னுடைய வாழ்க்கையில் குறுக்க நீக்க போறாங்க இப்ப கூட அவங்கதான் அவர்கிட்ட சொன்னாங்க வீட்டு மருமகளுக்கான உரிமையை கொடுக்கசொல்லி அவங்கள பேசறது சரியில்லை

போடி இப்பவே அவ சொல்லிதான் உன் புருஷன் உன்னை இந்த செய்ய சொல்றான் நாளைக்கே அவ சொன்ன உன்னை தள்ளிகூட வைப்பான்

வர்ஷா “அப்படியெல்லாம் அவங்க சொல்லவும் மாட்டங்க அவரும் என்னை தள்ளி வைக்க மாட்டார். நீ என்னை போட்டு குழப்பாதே”

இதை அனைத்தும் கேட்ட அச்சுக்கும்,அம்முக்கும் இவங்கலாம் என்ன மாதிரி மனிதர்கள் என்றே தோன்றியது அதோடு இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

பாட்டி சொன்னதும் மனம் வருந்திய அபை தன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்து “அத்தை நீங்க எங்க இருகீங்க. நீங்க என்னுடன் இருந்திருந்தால் இவங்க பேசும் போது இவ்வளோ வருத்தம் இருந்திருக்காது ஏனா எனக்காக பேச நீங்க இருந்திருபீங்க அதோடு யாரையும் இதுபோல் பேச விட்டிருக்க மாட்டீங்க எதுக்காக என்னை விட்டு சென்றீர்கள்.

இப்ப உங்க பொண்ணு சொல்லி ஒருத்தி வந்து நிக்கிறா ஆனா அவளும் உங்களை பற்றி ஒன்னும் சொல்லமாட்டேன் என்கிறாள். நீங்க எங்கிருந்தாலும் சீக்கிரம் என்னிடம் வாருங்கள் அத்தை என நந்தினியோடு மனதில் பேசிகொண்டிருக்க அப்போது அபிதா உள்ளே நுழைத்தாள் அவள் வந்தது கூட தெரியாமல் அபை அவபோக்கில் சிந்தனைகளில் இருக்க அபிதா அவனின் அருகே வந்து அவன் தோல் தொட அவளின் கைகளை பிடித்து கொண்டு அதில் முகம் புதைத்தான்

அபிதா கைகளை விடுவித்து கொண்டு அவனை வயிற்றோடு அனைத்து தலையை கொதிகொடுத்தாள்.

அவள் வயிற்று பகுதியில் ஈரம் உணர அவன் அழுவது அவளுக்கு புரிந்தது அவளும் ஏதும் பேசாமல் உனக்கு நான் இருக்கிறேன் என்னும் வண்ணம் அவனின் தலைமுடியை கொதிகொடுக்க அபை இன்னும் அவள் வயிற்றோடு ஒன்றினான் அதில் ஒரு குழந்தையின் பரிதவிப்பை உணர்ந்த அம்முவும் அவனை அனைத்து கொண்டாள்

சிறிது நேரம் கழித்து விலகிய அபை அம்முவை பார்த்து “நான் உன் மடியில் படுத்துகொள்ளட்டுமா” என்றான்
அவளும் தலையசைத்து பெட்டின் மேல் அமர அவனோ அவளின் மடிமீது தலைவைத்து படுத்துகொண்டான்.அம்முவும் அவன் முடிகொத அப்படியே உறக்கம் கொண்டான் அவன் உறங்கியதும் இவள் எல நினைக்க அவனோ அவளை விடாது கைகளினால் அவள் இடையை இறுக்கினான் எல முயன்று அவன் செய்கைகளினால் அப்படியே அமர்ந்து கொண்டாள்


அச்சு போன் செய்ய அவன் உறக்கம் களைந்து விடுமோ என அவசரமாக போனை எடுத்தவள் அர்ஜுன் சாப்பிட குப்பிடவும் வேண்டாம் என மறுத்துவிட்டாள். அதன் பின் உறங்கும் அவனையே பார்த்து கொண்டிருந்தவள் நான் ஏன் இவனுக்காக இதையெல்லாம் செய்கிறேன் இவன் வருத்தம் கொள்வது எனக்கு ஏன் கஷ்டமாக உள்ளது சிந்தித்துக்கொண்டே அமர்ந்த நிலையிலே உறங்கிபோனாள்

அதிகாலையில் கண் விழித்த அபை இன்னும் அம்முவின் மடிமீது படுத்திருப்பது கண்டு எழுந்தான் எழுத்தவன் அவள் உறங்கிய நிலையிலே உறங்குவது கண்டு அவளை நன்றாக படுக்கவைத்தான்

மனதினுடனே “என்ன இது நாம நேற்று இப்படி நடந்து கொண்டோம் என்னுடைய பலகீனத்தை யாருக்கும் காட்ட பிரியபடாத நான் நேற்று இவளிடம் மட்டும் ஏன் வெளிபடுத்தினேன் ஒருவேளை அத்தையின் பெண் என்பதலா ம் அப்படிதான் இருக்கும். ஆனால் இந்த ராட்சசி எப்போதும் அவளை அண்ட விட மாட்டாளே பின் எப்படி நேற்று நான் கேட்டும் போது அமைதியாக இருந்தாள் சிந்தித்து கொண்டே தனது காலை வேலைகளை தொடர்ந்தான்

உள்ளம் கரையும்..............................
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மு சூப்பர்
அபிதா இன்னும் தன்னோட சொந்த மகள்ன்னு கூடத் தெரியலை
ரவீந்திரன் என்ன செய்யப் போகிறான்?
அர்ஜுனின் அம்மா வந்தால் இன்னும் ஏதாவது திருப்பம் வருமோ?
ரவியின் நடவடிக்கை என்ன என்பதை சீக்கிரமா வந்து சொல்லுங்க, நளினி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top