KUK - 14

Advertisement

jeevaranjani

Well-Known Member
புலி வருது புலி வருதுனு ஒரு வழியா நந்தினி பேரை வீட்டுக்குள்ள யாதவ் சொல்லிட்டான்...இனிமேல் தான் ஆட்டம் இருக்குது...
நீங்க எப்பி ஏன் லேட் பன்றீங்க லேட் பன்னாம குடுங்களேன் ப்ளீஸ்
 

n.palaniappan

Well-Known Member
Hai friends i come with next update and thanks for your valuable comments for last update and to read this update also and tell your comments to me and i waiting for your comments happy to read............................. next update sun day friends bye ......... bye.................

உள்ளம் – 14

காலை விடியல் பொழுது துவங்க ரவியின் வீட்டில் ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது லக்ஷ்மிக்கு நேற்று அர்ஜுன் பேசியதில் இருந்து லேசாக தோன்ற ஆரம்பித்த குற்றவுணர்வு அதிகரிக்க ஆரம்பித்து இருந்தது தனது வாழ்வில் இரண்டாம் முறையாக தான் செய்தது தவறோ என்றும் அர்ஜுன் சொன்னது போல் தன்னுடைய கணவன் தொழிலிற்காகவும் சொத்துக்காக தன்னை திருமணம் செய்து கொண்டாரா என்றும் தோன்ற ஆரம்பித்து இருந்தது

வர்ஷாக்கு தன்னுடைய அன்னை இரண்டாம் தாரம் என்பதே பேரதிர்ச்சியாக இருந்தது அவளுடைய மனது அதிலே உழன்றது

சுமலாக்கும், பாட்டிக்கும் இவர்களுக்கு எப்படி இந்த விசியம் தெரியும் என்றும் இதை யாரிடம் இருந்தோ தெரிந்து கொண்டு பணம் பறிக்க வந்திருப்பார்களோ எனவும் தோன்றியது. வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றவில்லை

ரவியின் மனதில் தன்னுடைய தொழில் பிரச்சனைக்கு இவர்களே காரணம் என்றே தோன்றியது அதோடு இவர்கள் எதற்காக இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்ன நோக்கத்தோடு இங்கு வந்துள்ளார்கள் என சிந்திக்க தொடங்கியது. அதோடு என்னை வீழ்த்துவதால் இவர்களுக்கு என்ன லாபம் ஒருவேளை தன்னுடைய தொழில் எதிரிகள் இவர்களை அனுப்பி இருப்பார்களோ என்று யோசித்தார்

எவ்வளவு யோசித்தாலும் ஒன்று மட்டும் அவருக்கு புலப்படவில்லை எல்லாருக்கும் தன்னுடைய தொழில் வட்டத்தில் மனைவி லக்ஷ்மி என்றே தெரியும் சொந்தங்களில் கூட ஒருசிலருக்கே மறுமணம் புரிந்தது தெரியும் ஆனால் அப்படி தெரிந்த யாரும் இப்பொழுது இல்லை அப்படி இருக்கும் பொழுது இவர்களுக்கு எப்படி தெரிய வந்தது என்பது மட்டுமே ரவிக்கு புரியாத புதிராக இருந்தது

அவரின் மனதில் தனக்கும் நந்தினிக்கும் குழந்தை பிறந்து இருக்கும் என்கிற சிறிய எண்ணம் கூட உதிக்கவில்லை ஆனால் அவருடைய விதி நந்தினிக்கு குழந்தை பிறந்தது தெரியாமல் செய்ததோடு இப்போது அவரையே பழிவாங்க மனம் முழுக்க பகையோடும், செந்தணல் போன்ற கொவத்தொடும் வந்திருக்கும் அவருடைய மகளை பற்றி அறியவிடவில்லை

வர்சனுக்கு தன்னுடைய அம்மா இரண்டாம் மனைவி என்று தெரிந்தால் தன்னுடைய நட்பு வட்டத்தில் மதிப்பு குறைந்து விடுமே என்று மட்டுமே கவலை கொண்டது அவனுடைய மனைவி தேவியே நேற்றிலிருந்து அவனை பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் தெரிந்தது ஏனெனில் தேவியை எப்பொழுதும் அவனுக்கு கீழே வைத்துகொள்ள நினைத்த வர்ஷன் அவளை எப்பொழுதும் நீ இரண்டாம் தந்தைக்கு பிறந்தவள் தானே என்றும் பேசுவான் தேவியும் வேறு எதற்கும் அடங்கி செல்பவள் கிடையாது இவன் இரண்டாம் தந்தை என்று சொல்லும்போது மட்டுமே அவள் அடங்குவாள்

இவன் சில விசியங்களில் சுகந்திரமாக செயல்பட இதையே ஒரு ஆயுதமாக உபயோகித்து வந்தான் ஆனால் இப்பொழுது இவனே இரண்டாம் மனைவிக்கு பிறந்தான் என்பது தன்னுடைய தராதரம் நண்பர்கள் முன்னும் தேவியை இனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முடியது என்றும் தெரிந்தது அதை எண்ணி மட்டுமே கவலை கொண்டது

வெற்றிக்கோ எப்படியாவது தன்னுடைய தங்கையை பற்றி சிறிய விசியமாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற துடிப்பு மட்டுமே இருந்தது

அபைக்கு இவளுக்கு நிச்சியம் அத்தையை பற்றி எல்லாம் தெரியும் என்றும் ஆனால் அதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறாள் அத்தையை பார்க்க நான் எப்படி துடித்து கொண்டிருக்கிறேன் இவளோ வாயை திறந்து ஒருவார்த்தை சொல்லமாட்டேன் என்கிறாளே என அபிதாவின் மீது கோவமும் எழுந்தது

இப்படியாக அந்த வீட்டில் இருந்த அனைவர் மனதிலும் சிந்தனைகளை உருவாக்கிய அம்முவும்,அர்ஜுனும் எப்பொழுதும் போல் தன்னுடைய காலை ஓட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர்

இந்த வீட்டிற்கு வந்தது முதல் அம்மு பார்த்த வரையிலும் அனைவருக்கும் காலை என்பது 7 மணிக்கே ஆனால் இன்றோ காலை 6 மணிக்கே வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து கூடத்தில் இருந்தனர் அவர்கள் விழிப்புக்கு காரணம் அம்மு,அச்சு இருவருக்கும் தெரிந்தே இருந்தது. ஏன்னெனில் நேற்று இரவு இவர்கள் உடைத்த விசியம் அப்படிபட்டது என்பதை அறிந்தே இருந்தனர்

கங்கா இவர்களுக்கு காலை இவர்கள் குடிக்கும் கஞ்சியை கொண்டுவந்து கொடுக்க அதை பருகி கொண்டே அங்கிருப்பவர்களை தன்னுடைய கண்களால் அளந்து கொண்டிருந்தனர்

அனைவரும் எப்படி பேச்சை தொடங்குவது அதும் இவர்களுடன் என்று நினைக்க இது எதை பற்றியும் அறியாமல் அப்பொழுது அங்கு வந்த யாதவ் என்ன எல்லாரும் இங்கே இருக்கீங்க எதாவது நம்ப வீட்டில் விசேஷமா

சுமலா “இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல் வையை மூடுடா என்றுவிட்டு அம்முவை நோக்கி ஏய் உனக்கு எப்படி எங்க குடும்ப விசியம் தெரியும் இது எல்லாம் யார் உனக்கு சொன்னது. நல்ல பணக்கார குடும்பம் இத சொல்லி பணம் பறிக்கலாம் அதை கொண்டு சொகுசா வாழலாம் நினைத்து கொண்டு வந்திருக்கியோ

அப்படி ஒரு நினைப்போடு வந்திருந்தால் இப்பவே வெளிய சென்றுவிடு உனக்கு சல்லி காசு கூட தரமாட்டோம்

அச்சு “அம்மு உன்னுடைய மாமியார் ரொம்ப நல்லா காமிடி பண்றாங்க இல்ல எப்படி நாம இவங்க கிட்ட இருந்து பணம் பறிக்க வந்திருக்கோமா ஒரு பெண்ணை திட்டம் போட்டு வீட்டை விட்டு துரத்தினதும் இல்லாமல் அவள் யாருடனோ ஓடி போய்விட்டதாக கதை சொல்லி அந்த பெண்ணுடைய குடும்பத்தை அவுமான படுத்தி அந்த பெண்ணின் அண்ணாவை உன்னுடைய தங்கை செஞ்சதுக்கு நீங்க தான் பரிகாரம் செய்யவேண்டும் என மிரட்டி கல்யாணம் செய்து கொண்ட இவங்க நம்மை பார்த்து பணம் பறிக்க வந்தோம் சொல்றங்க கேட்கவே கேவலமா இல்ல”

அம்மு “நீ ஏன் அச்சு இவங்க பேசுறதை எல்லாம் காதில் வாங்குற ரோட்டில் போறப்போ நம்மை பார்த்து நாய் குலைத்தது என்றால் நாம் என்ன அதனுடன் மல்லு கட்டவா முடியும் அதே போல் நினைத்து கொண்டு செல்ல வேண்டியது தான்”

சுமலா “ஏய் என்ன கொழுப்பா யாரை பார்த்து நாய் என்று சொல்ற ஒண்ணுக்கும் வக்கிலாம என்னுடைய பையனை மயக்கி கல்யாணம் செய்துகொண்டு வந்தவ தானே நீ”

அபிதா “எது நான் ஒன்னும் இல்லதவா நீங்க எல்லாம் அப்படியே அம்பானி வீட்டு பிளைங்க பாரு, நீங்களே இதோ இங்க இருக்காங்களே லஷ்மி இவங்க சொத்தில் வாழ்ந்து கொண்டு இருகீங்க உங்களுக்கு என்று இருந்த சொத்தைஎல்லாம் உங்க அப்பா உங்க புருஷன் பேரில் எழுதி வச்சிட்டாங்களே அதும் தன்னுடைய பெற்ற மகளுக்கும்,மகனுக்கும் இதில் உரிமை கொண்ட அனுமதி இல்லை என்றும் தன்னுடைய முதல் பேரன் அபைக்கு மட்டுமே அவரிடம் இருந்து அந்த சொத்தை பெற்று கொள்ள உரிமை உண்டு என்றும் அவன் விரும்பினால் அவனுடைய உடன் பிறப்புகளுக்கு கொடுக்கலாம் என்றும் அப்போதும் தனுடைய மகளுக்கோ, மகனுக்கோ கொடுக்க அவனுக்கும் உரிமை இல்லை என்றும் எழுதிவைத்து இருக்கார்”

பெத்த அப்பாவே உங்களை நம்பி சொத்தை கொடுக்கவில்லை இதில் இவங்க எங்களை சொல்ல வந்துடாங்க”

அவள் இதை உரைத்ததும் மொத்த குடும்பமும் பிரம்பித்து அதே இடத்தில் நின்றது. ரவியின் உணர்வோ தனக்கு எங்கோ பலமான எதிரி இருக்கிறான் கூடிய விரைவில் இவர்கள் யார் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் அல்லது இவர்களை செய்ய வைக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணியது

அம்மு இவை அனைத்தையும் பேசி முடித்து தன்னுடைய வேலைகளை பார்க்க சென்று விட்டாள் ஆனால் அங்கிருந்தவர்களில் ஒருவரின் முகத்தில் இருந்த பிரமிப்பும் விலகவில்லை

அப்படியே நேரம் சென்றது அம்மு தயாராகி அறையை விட்டு வெளியே வர அவளை வெளியே வர விடாது தடுத்த அபை “உனக்கு இது எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்டால் நீ சொல்ல போவது இல்லை எனக்கு ஒன்று மட்டும் சொல் இது எல்லாம் தெரிந்து கொண்டதால் மட்டுமே என்னை திருமணம் செய்து கொண்டாயா” என அவளிடம் இவன் வைத்திருப்பதை விட பல நூறு மடங்கு சொத்து இருப்பதை அறியாமல் கேட்டான்

அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என அவனின் மனம் அடித்து கொள்ள அவளோ அவனின் கேள்வியே அவனுக்கு திருப்பினாள் “நீ என்ன நினைக்கிறா நான் உன் சொத்திற்காக உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்றா”

அபையின் தலை தானாகவே இல்லை என அட அம்முவின் முகத்தில் சிறு புன்னகை உருவானது ஆனால் என்று அபை இழுக்க “அம்முவின் புன்னகை சுருங்கி அவனை தன் கூர் விழிகளால் நோக்க”

அபை “நீ மாமாவை எதற்காக பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை நேற்றும் இன்றும் நீ பேசியதிலிருந்து அத்தைக்கும் அவர் குடும்பத்திற்கும் நீ நெருக்கமானவள் என தோன்றுகிறது ஆனால் உன்னை வெற்றி அப்பாவிற்கும் தெரியவில்லை அதுவே என்னுடைய குழப்பத்தை அதிகரிக்கிறது நீ யார் என்று அதோடு நிச்சியம் உனக்கு என்னுடைய அத்தை பற்றி தெரியும்”

அம்மு அவன் கூறுவதை கேட்டு கொண்டிருந்தாலும் அவளுடைய மனது அம்மா உங்க மருமகன் கொஞ்சம் புத்திசாலிதான் போல என்று தனது அம்மாவிடம் பேசிகொண்டிருந்தது

அபையோ உனக்கு அத்தையை பற்றி என்ன தெரியும் என்று எனக்கு தெரியவில்லை ஒன்றை மட்டும் எனக்கு சொல் அவர்கள் நன்றாக உள்ளார்களா என்னை அவர்களுக்கு நினைவு இருக்கிறதா என்றான்

அம்மு “இந்த வீட்டில் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு எதற்கு என்னிடம் இப்படி பேசி உண்மையை வாங்கி உன்னுடைய மாமாவிற்கு உதவலாம் என்று நினைக்கிறாயா அது ஒரு போதும் நடக்காது”

அம்மு கூறியதை கேட்டதும் அபைக்கு கோவம் வர அவளை அடிக்க கை ஓங்கினான் அப்பொழுதும் அம்மு அசையாமல் அவனை தன்னுடைய கூர் விழிகளால் நோக்க அந்த விழியின் கூர்மை தங்காமல் அவனின் கை தானாக இறங்கியது

அனைவரும் காலை உணவு உண்பதற்காக மேசையில் அமர்ந்திருக்க மேலே அபையை தன் கூர் விழிகளால் தாக்கியவள் வந்து அமர்ந்தாள் அவள் பின்னே அபையும் வந்து அமர அவள் வந்த சில நொடிகளிலே அர்ஜுனும் வந்து அமர யாரும் அவர்களிடம் பேச்சு கொடுக்கவில்லை பின் பேச்சு கொடுத்து என்னும் எதாவது பூகம்பம் வந்துவிட்டால் என்ன செய்வது

அவர்கள் வந்தவுடன் அங்கே முழு அமைதி நிடித்தது எல்லோரும் அவர் அவர் உண்பதில் மட்டுமே கவனமாக இருப்பதுபோல் கட்டிகொண்டனர் அங்கிருந்த அமைதியை கலைக்கும் வண்ணம் யாதவ் அண்ணி என்று அம்முவை அழைக்க அவள் இவன் என்னையா அழைத்தான் என்னும் விதமாக அவனை நோக்க

அவனோ என்ன அண்ணி “இவன் நம்மையா அண்ணி என்கிறான் என்று நினைகிறீங்களா சத்தியமா உங்களை தான் அண்ணி என்றேன்”

அம்மு அவனை பார்க்க “இவன் இந்த வீட்டிற்கு வந்தது முதல் பேசாதவன் இப்போது தானே வந்து பேசுகிறான் என்று நினைக்கிறிங்களா அது ஒன்னும் இல்லை அண்ணி எங்க அண்ணன் யாருடனும் அதிகம் பேச மாட்டான் அவனை போல நீங்களும் இருப்பிங்களோ என்று நினைத்தேன் அதுமில்லாமல் நீங்க வந்த அன்று இருந்து இப்போவரை இந்த வீட்டில் எல்லோரையும் ஆட்டி படிக்கிறீங்களா அதுதான் பேச கொஞ்சம் பயமா இருந்தது”

அர்ஜுன் “இப்போது உன்னுடைய பயம் என்ன ஆனது” வினவ

யாதவ் “அதுவா அர்ஜுன் அண்ணா அப்படி கூப்பிடலாம் தானே வினவி அவனே அர்ஜுனை பதில் சொல்ல விடாது நேற்று அண்ணியை A.A அலுவலகத்தில் அதுவும் சென்னை அலுவலகத்தின் M.D ஆக பார்த்தேனா எனக்கு ஒரே ஆச்சரியம் என்னுடைய கனவு எல்லாம் அந்த நிறுவனத்தில் வேலை செய்வது தான் அதற்கவே என்னுடைய தயக்கங்களை ஒதுக்கி விட்டு பேசுகிறேன்

அண்ணி நீங்க எப்படி அங்கே வேலைக்கு சேந்திங்க அதும் இவ்வளவு பெரிய பொறுப்பில் என என்றால் அங்கே சாதாரண வேலையாளாக சேரவேண்டும் என்றே மிகவும் திறமை வேண்டும் அப்படி என்றால் உங்களுக்கு எவ்வளவு திறமை இருக்க வேண்டும்

அர்ஜுன் “உனக்கு A.A பற்றி என்ன தெரியும்”

யாதவ் “எனக்கு அது கனவு நிறுவனம் அதோடு அந்த நிறுவனத்தை பற்றி எல்லாம் தெரியும் அவங்களுடைய இப்போதைய ப்ராஜெக்ட் அடுத்து அவங்க இறங்க போற துறை மருத்துவம் என்றுதான் பிஸ்னஸ் ஆலோசகர்கள் அனைவரது கருத்தும் என்ன அண்ணி நான் சொல்வது உண்மை தானே அடுத்து உங்க கம்பனி இறங்க போவது மருத்துவ துறையில் தானே அதோடு எல்லா துறைகளிலும் கால் பதித்த A.A இதுவரை கட்டுமான துறையில் மட்டும் தடம் பதிக்கவில்லை” என்றான்

அம்மு “பரவாயில்லை அங்கே வேலை செய்யும் அளவுக்கு உனக்கு முளை உள்ளது அது மட்டுமே அங்கு வேலை செய்ய போதாது என்ன தான் A.A திறமைக்கு மதிப்பு கொடுத்தாலும் அங்கு வேலை பார்ப்பவர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும் வேலையில் மட்டும் அல்ல அவர்கள் வாழ்விலும் அப்படி இருந்தால் மட்டுமே அங்கு வேலை இல்லை என்றால் நீ எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அடுத்த நொடி நீ வெளியேற்ற படுவாய் அதோடு நீ அடுத்து எங்கும் வேலை செய்யாதபடி செய்து விடுவார்கள்”

யாதவ் “ம் கேள்வி பட்டிருக்கிறேன் அண்ணி நான் எப்பொழுதும் வாழ்வில் ஒழுக்கத்துடன் இருப்பேன் என்னுடைய அப்பாவை போல”

அம்மு “இருந்தால் சரிதான்”

யாதவ் “அண்ணி நீங்க A.A M.Dயை பார்த்து இருகீங்களா என்னுடைய இன்ஸ்பிரேஷன் அவங்கதான்”

அர்ஜுன் “உனக்கு அவங்களை பற்றி என்ன தெரியும்”

யாதவ் “A.A M.D நந்தினி அவங்க ஒரு பெண்ணாக இருந்தும் அனைத்து துறையிலும் தனுடைய கால்தடத்தை பதித்து உள்ளார்கள்”

இதவரை இவர்கள் பேசுவதை கேட்காதது போல் கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும் நந்தினி என்ற பெயரை கேட்டவுடன் பேய் அறைந்தது போல் ஆனது

அபைக்கு ஒருவேளை இவன் சொல்வது என்னுடைய அத்தையாக இருக்குமோ அதை நினைக்கும் போதே அபை மனதில் சந்தோஷம் எழுந்தது

வெற்றிக்கோ இது அதிர்ச்சி என்றும் அது நிச்சியம் தனது தங்கையாக இருக்கவேண்டும் என்றே தோன்றியது

அனைவரும் நந்தினி என்ற பெயரை கேட்ட உடனே உறைந்து நின்றனர் ஒருவேளை அவளாக இருக்குமோ என்று

உள்ளம் கரையும் ..................................
ஆகா ஆகாகா அப்படி போடு அருவாளை.
என்ன arrestஆ
முன் வினைப்பயன் அருவடையாக ரெடி
காத்திருக்கேன் அடுத்த கத்திவீச்சுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top