Kathirukkiren kannamma-2

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
மொரிஷியஸின் தலைநகரான போர்ட் லூயிஸிலிருந்து கடலை கிழித்துக் கொண்டு சென்றது ஜி.எஸ் குரூஸ் கப்பல்.அதிநவீன வசதிகளோடு பெரிய மாளிகையை ஒத்திருந்தது அது.அதின் திறந்த வெளியில் புதிய மாடல் ஐ போனில் பேசியபடி நடைப் போட்டுக் கொண்டிருந்தான் அந்த குரூஸின் சொந்தக்காரன்.நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் அவன்.ஆனால் அவனின் ஆறடி உயருமும் கட்டுடலும் கம்பீரமும் அவனை இருபத்தைந்து வயது இளைஞனாக காட்டியது.அவனின் ஆடை அலங்காரங்கள் அவனின் செல்வத்தை பறைசாற்றின. அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த கோட் சூட்டும் வைரம் பதித்த ரோலெக்ஸ் வாட்சும்,கண்களிலில் அணிந்திருந்த தங்க ஃபேரேமிட்ட கண்ணாடியும் அவன் கோடிகளில் புரளும் பெரிய மனிதனென சொல்லாமல் சொன்னது.அவன் பேசி முடித்து போனை அணைக்கவும் குரூஸ் அந்த தீவை அடையவும் சரியாக இருந்தது.

நெடிந்துயர்ந்த மரங்களோடு பரந்து விரிந்திருந்தது அந்த தீவு.எதிரில் தெரிந்தது தீவின் பாதியை அடைத்திருந்த பிரம்மாண்டமான அந்த அரண்மனை.கடலின் மேலிருந்து ஆரம்பித்திருந்தது வழவழப்பான சிமிண்ட் பாதை.அதில் அவனை அழைத்துச் செல்வதற்கு தயாராக நின்றிருந்தது அதிநவீன பி.எம்.டபிள்யூ கார்.பாடிகாட்கள் முன்சீட்டில் ஏற பின் சீட்டில் ஏறிக் கொண்டான் அவன்.இருபது நிமிடங்களில் கார் அந்த அரண்மனை வாயிலை சென்றடைந்தது.கேட்டில் ஸ்ரீவத்சவ் என்ற பெயர் பொன்னெழுத்துக்களாக மின்னின.

நிமிர்ந்த நடையோடு சல்யூட் அடித்த பணியாட்களுக்கு தலையசைத்த வண்ணம் அந்த அரண்மனையின் உள்ளே சென்றான் அவன்.நேராக மேல் தளத்தில் இருந்த அவனின் அறைக்குச் சென்றான்.நூறு பேருக்கு மேல் அமர்ந்து உணவருந்தும் அளவுக்கு இருந்தது பரந்து விரிந்திருந்த அவனின் அறை.அதின் ஒருபுறமிருந்த நவீன வசதிகள் நிறைந்த குளியலறையில் இருந்த பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரில் வெற்றுடம்புடன் அமழ்ந்தான் அவன்.பிரயாண களைப்பு நீங்கியதும் சாதாரண உடையில் படுக்கை அறையின் மறுபுறத்திலிருந்த அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டான்.

ஒளிர்ந்த விளக்கொளியில் அகன்ற அந்த அறையின் சுவர் முழுவதும் ஒரு பெண்ணின் ஓவியமே அலங்கரித்தது.ஒரு ஓவியத்தில் நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.இன்னொன்றிலோ ரோஜா மலரொன்றை தன் பளிங்கு கன்னத்தில் வைத்து அதன் மென்மையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.பக்கத்திலிருந்த ஓவியத்தில் வெட்கத்தால் முகம் சிவந்து அவளின் கண்கள் நிலம் பார்த்துக் கொண்டிருந்தது.அந்த ஓவியத்தையே வெகு நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

திடிரென அறையை விட்டு வெளியேறியவன் வெளிநாட்டிலிருந்து அன்றுதான் அவன் வரவழைத்திருந்த அபூர்வ வகைப் பூங்கொத்தோடு அரண்மனையின் பின்புறமிருந்த விஸ்தாரமான தோட்டத்திற்கு சென்றான்.

அங்கே வாசனை நிரம்பிய பூக்காளால் நிரம்பிய பந்தலின் கீழிருந்த பளிங்கு கல்லறையின் மேல் அந்த பூங்கொத்தை வைத்தான்.அந்த கல்லறையின் கீழே

வசுமதி
பிறப்பு:1978
இறப்பு:1998

என்று இருந்தது.

அதை மென்மையாகத் தொட்டவனின் கண்கள் சிவந்து கைகள் இறுகின.அவளின் உயிரற்ற உடல் எதிரே இருப்பது போல் அவன் உடல் நடுங்கின.மனதின் கணத்தைத் தாங்க மாட்டாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.அதுவரை தெளிந்திருந்த வானம் கருமை நிறம் பூண்டது.பெரிய மரங்களையே சாய்க்கும் பேய் காற்று சூழன்றடித்தது.கண்ணைப் பறிக்கும் மின்னல் வானவெளியெங்கும் ஒளி நிரப்பியது.பூமியே நடுங்கும் வண்ணம் இடி இடித்தது.

வெளியே நடக்கும் எதையும் உணராமல் இருந்த அவன் காதுகளில் இடி ஒலியும் மீறி,

"கெளகெளத்தம்ம்....."என்று கூவிய ஒலியில் திடுக்கிட்டு கண்விழித்தான் கெளதம் ஸ்ரீவத்சவ் வசுமதியின் கணவன்.

---------------------------------------------
அந்த குரலின் தாக்கத்திலிருந்து தங்களை மிட்டெடுத்தவர்கள் வசுந்தராவின் அறை நோக்கி ஓடினர்.அங்கே எதையோ வெறுத்து நோக்கியவாறு நின்றிருந்த வசுந்தரா தன் நினைவிழந்து நிலத்தில் விழுந்தாள்.

"வசுந்தரா..."

"வசும்மா..."

"வசு...வசு...."

என மூவரும் நினைவிழந்த வசுந்தராவை அழைத்தனர்.அவளை பூவென தூக்கிய நிரஞ்சன் அவள் படுக்கையில் மெதுவாகப் படுக்க வைத்தான்.

"கமலம்மா!ஹால்ல இருக்கற என் பெட்டிய கொண்டு வாங்க"என்று அங்கே வாயிலில் நின்றிருந்த வேலை செய்பவரை கேட்டான்.

அவர் கொணர்ந்த பெட்டியைத் திறந்து ஊசி மருந்தொன்றை மெதுவாக அவள் கைகளில் ஏற்றினான்.கவலையோடு மகளைப் பார்த்திருந்த சிறிய தந்தை தாய்யை

"சித்தப்பா!சித்தி! கவலைப்படாதீங்க....வசுக்கு ஒண்ணு இல்ல....நாம இப்ப வெளியே போலாம் வாங்க"என அவர்களுக்கு தைரியம் கூறி அவர்களை வெளியே அழைத்து வந்தான்.

ஹாலிலிருந்த சோபாவில் மூவரும் அமர்ந்த பின்,

"சித்தப்பா!வசுவோட கோவா போன பிரண்ட்ஸ் யாராவது ஒத்தரோட நா விரிவா பேசனும்... அப்பத்தான் வசுவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்"

"கூட போன பத்து பேரும் அவளுக்கு நல்ல பிரண்ட்ஸ் தான்.ஆனா அதுலையும் மித்ராங்கர பொண்ணு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.அவதான் இங்க வீட்ல விட்டுட்டு விவரம் எல்லாத்தையும் சொல்லிட்டு போன.இப்ப தினமும் வந்து வசும்மாவ பாத்துட்டு போறா...நா அவளுக்கு போன் பண்ணி இப்பவே வர சொல்றேன்"என்றபடி அவளுக்கு போன் செய்ய எழுந்து போனார்.

அவர் போன் செய்து அரைமணி நேரத்தில் வந்தாள் வசுந்தராவின் தோழி மித்ரா.வசுந்தராவை போலவே அழகாக இருந்தாள் அவள்.அனவசியமான நாணல் கோணல் இல்லாமல் அவனை நேராகப் பார்த்து பேசினாள்.கோவாவில் நடந்ததைப் பற்றிக் கேட்டபோது,

"இங்கேந்து போகும் போது நல்லா உற்சாகமாக தான் வந்தா... ஆக்சுவலா இந்த ட்ரிப் ப்ளான் எல்லாம் அவளோடது தான்.முதல் நாள் சுத்தி பாத்தப்ப நல்லாத்தான் இருந்தது.மறுநாள் பீச்சுக்கு போனோம்... அங்கேதான் வசுவோட பிஹேவியர் சேன்ச் ஆக ஆரம்பிச்சது...கடல பாத்தோன்ன பயப்பட ஆரம்பிச்சா...பின்னால பின்னால போனா...நா கூட முதல் தடவையா கடல பாக்கறதுனால அப்படி நடந்துக்குறான்னு நெனைச்சேன்... அன்னிக்கு ராத்திரி தூக்கத்துல என்னென்னமோ பேசினா...கத்த ஆரம்பிச்சா...கடைசில ஏதோ கெளதம்ன்னு கத்திட்டு மயங்கிட்டா... அதுக்கப்புறம் அப்படியே ரெஸ்ட்லெஸ்ஸாவே இருந்தா... அதனாலதான் ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டு திரும்பி வந்துட்டோம்... எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் சார்"

அவள் கூறியதை ஆழமாக கேட்ட நிரஞ்சன்,

"ரொம்ப தேங்க்ஸ் மிஸ் மித்ரா.... வசுந்தரா சரியாகற வரைக்கும் உங்க ஹெல்ப் எனக்கு தேவைப்படும்"

"ஷ்யூர் சார்... நீங்க எப்ப வேணும்னாலும் என்ன கூப்பிடலாம்...எனி டைம் வசுக்கு ஹெல்ப் பண்ண நா ரெடியா இருக்கேன்..எனக்கு அவ பழையபடி ஆனா போதும்"

ஊசி மருந்துகளோடு ஹிப்னாடிச முறையில் வசுந்தராவின் ஆழ்மனதின் எண்ணங்களை அறிய முயன்றான் நிரஞ்சன்.ஆனால் கெளதம் கடல் பயம் என்றதை விட்டால் வேறு எதுவும் அவள் மனதிலிருந்து வரவழைக்க முடியவில்லை.ஆனால் அவனின் சிகிச்சையால் மெல்ல மெல்ல கத்துவது பயப்படுவது எல்லாம் குறைந்து துள்ளி குதிக்காவிட்டாலும் பழையபடி ஆனாள் அவள்.சரியாக உண்டாள் உறங்கினாள்.

இதன் மத்தியில் மனநல ஆராய்ச்சியாளர்களின் மாநாடு இந்த ஆண்டு மொரிஷியஸில் நடப்பதாக இருந்தது.அதற்கு செல்லவிருந்த நிரஞ்சனின் மனதில் வசுந்தராவை ஏன் கூட அழைத்து போகக் கூடாது என தோன்றியது.மேல் நோக்கிற்கு குணமானவள் போல் தோன்றினாலும் அவளின் ஆழ்மனதில் கெளதம் என்ற பெயரும் கடலைக் கண்டு பயமும் அப்படியே தான் இருப்பதாக உறுதிபட நம்பினான் அவன்.அதை வெளி கொணர்வதற்கு இது சிறந்த வழியாக தோன்றியது அந்த மனநல ஆராய்ச்சியாளனுக்கு.

எப்படியோ பேசி சித்தப்பா சித்தியிடம் அனுமதி வாங்கியவன் மித்ராவையும் தங்களுடன் உடன் வருமாறு அழைத்தான்.தோழியின் நலனுக்காக எதை செய்யவும் தயாராக இருந்த மித்ராவும் உடன் வர சம்மதித்தாள்.

வசுந்தரா குணமாவதற்காக அழைத்துப் போகும் இடமே அவளை மேலும் மிரள வைக்கும் இடமாகும் என இருவருமே அறியவில்லை.
 
Saroja

Well-Known Member
#7
வசுந்தரா வசுமதியின் மறு பிறவியா
தீவுக்கு செல்ல என்ன ஆகுமோ
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement