JERRY'S - 17.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

JERRY

Well-Known Member
#1

17.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

கதிர்,தன்னை பார்வையால் எரிக்கும் பெண்ணவளிடம் மெல்லப் பேச ஆரம்பித்தான்.

"எதுக்கு பாப்பா என்னை முறைக்குற..."

"என்னது பாப்பாவா... "

"அடி பலமா பாப்பா..."

"மறுபடியும் பாப்பாவா..."

"..."

"ஏன் சார்,உங்களுக்கு மட்டும் அரசாங்கம் தனியா ரோடு போட்டு குடுத்துருக்கா..."

"அப்டி எதுவும் இல்லையே..."

"அப்புறம் ஏன் நடு ரோட்டுல நின்னுட்டு இருந்தீங்க..."

"இல்ல, ரொம்ப நாள் ஆச்சு மெரினாவுக்கு போய் அது தான் கொஞ்சம் ஆர்வத்துல..."

"உங்க ஆர்வம் தப்பில்ல,நானா இருக்கப் போய் சரியா போயிடுச்சு,
வயசானவங்க,குழந்தைகள் வரப்போ இந்த மாதிரி ஒரு விபத்து நடந்து இருந்தா என்ன செய்வீங்க..."

"சாரி... "

"தேவையில்ல..."

"நான் வேண்டும் என்றால் ஹெல்ப் பண்ணவா..."

"நீங்க போகலாம்னு சொன்னேன்... "

என்று கதிரிடம் கூறி விட்டு,கீழே விழுந்து இருந்த தன் இரு சக்கர வாகனத்தை அதே கடையின் முன் நிறுத்தி,வண்டியை பூட்டி விட்டு, மெரினா கடற்கரையை நோக்கி செல்லத் தொடங்கினாள்.
நீல வண்ணத்தில் அவள் அணிந்து இருந்த சுடிதார் அவளுக்கு வெகு அழகாக பொருந்தி இருந்தது.தங்கள் காரையும் கடையின் முன் ஓரமாய் நிறுத்தி விட்டு ஈசனும்,பத்ராவும் எதையும் நாங்கள் பார்க்கவே இல்லை என்பது போல் நீல வண்ண சுடிதார் அணிந்த மங்கையை பார்த்துக் கொண்டு இருந்த கதிரின் இரு பக்கங்களிலும் சென்று நின்று கொண்டனர். மூவரும் எதுவும் பேசாமல் ஒருவர் கரங்களை மற்றொருவர் பற்றியவாறு கடற்கரையை நோக்கி செல்லத் தொடங்கினர்.

மெரினாவை பார்த்தவுடன் ஈசனும்,கதிரும் சுட்டித்தனம் மிகுந்த சிறுவர்களாக மாறி அலைகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.
இருவரும் பத்ராவை அழைத்த போது,அவள் வரவில்லை என்றும் கடற்கரை மணலில் சிறிது தூரம் நடந்து வருவதாக அவர்களிடம் கூறினாலும், அவர்களை கவனமாக இருக்கும் படி அறிவுறுத்த மறக்கவில்லை.பல்வேறு மனிதர்களை பார்த்தவாறு கடற்கரை மணலில் நடந்து வந்த பத்ரா,சிறுவன் ஒருவன் மரண பயத்தில் ஓடி வருவதையும்,அவன் கரங்களில் இருந்த சிறு பெண் குழந்தையும் அழுதவாறு ஓடி வருவதையும் பார்த்தாள்.

"ஏன் இப்படி ஓடி வருகிறார்கள்?"என்றவாறு ஓடும் சிறுவனின் பாதையில் வழி மறித்து நின்றாள் பத்ரா.

யாரோ வழி மறித்து நிற்பதை பார்த்த சிறுவன்,மீண்டும் வந்து விட்டார்களா என எண்ணி தன் தங்கையினை பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்வது என சிந்திக்கலானான்.அவன் சிந்தனை செய்யும் தருணத்தில்,அக்குழந்தைகளின் உயரத்திற்கு அவர்கள் முன்னால் மண்டியிட்டு அவன் கரங்களை மெதுவாக தொட்டாள்.அவன் பத்ராவின் கரங்களை தட்டி விட்டு,தன் தங்கையை தன் பின்னால் மறைத்துக் கொண்டு,வேறு எவரும் இருக்கிறார்களா என சுற்றி பார்த்தான்.தன் பார்வை வட்டாரத்தில், அடியாட்கள் யாரும் தென்படாததால்,
அவனிடம் நிம்மதி பெருமூச்சு ஒன்று பிறந்தது.அவன் தோற்றமும் நடவடிக்கைகளும்,ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து இருவரும் தப்பிப் பிழைத்து வந்தவர்கள் போல் அவளை நினைக்கச் செய்தது,அது மட்டும் அல்லாமல் சிறுவனின் வலது கன்னத்தில் பதிந்து இருந்த விரல் தடங்கள் சிறுவன் என்றும் பாராமல் அவனை கடுமையாக தாக்கி உள்ளனர் என்பதும் அவளுக்கு புரிந்தது.

தன்னை நோக்கி சந்தேகமான பார்வை வீசும் சிறுவனையும், அவன் பின்னால் அழுது கொண்டே மறைந்து இருந்து பார்த்த சிறுமியையும் பார்த்த பத்ராவிற்கு உள்ளம் உருகி விட்டது.சிறுவனை பார்க்கும் போது, தன் அண்ணன் தீரனை பார்ப்பது போல் எண்ணம் ஒன்று தோன்றியது.பத்ராவை காணாமல் ஈசனும்,கதிரும் அவளை தேடிக் கொண்டு அவள் இருந்த இடத்தை வந்து அடைந்தனர்.அவள் மீண்டும் சிறுவன் கைகளை பற்றியவாறு அவனிடம் பேசத் தொடங்கினாள்.அவள் பேசத் தொடங்கிய தருணத்தில் ஈசனும்,கதிரும் அவள் அருகே வந்து நின்றனர்.புதியவர்களை பார்த்த சிறுமி சத்தமாக அழத் தொடங்கினாள்.
குழந்தைகள் இருவரையும் பார்த்து மெல்ல புன்னகை செய்த பத்ரா,

"யார் நீங்க, ஏன்டா மா அழுகுறீங்க?, உங்களை யாரு அடிச்சா? "

என்று இரு குழந்தைகளிடமும் கேட்டாள். அவள் கேள்வி புரிந்தாலும் சிறுவன் ஒரு வார்த்தை பேசவில்லை,பெரியவர்கள் மூவரையும் நம்பிக்கை இல்லாத பார்வை பார்த்து வைத்தான்.சிறுமிக்கு மூவரையும் பார்த்து என்ன தோன்றியதோ அவர்களிடம் பேசத் தொடங்கினாள்.

"அடிக்குறாங்க... எல்லாரும் பெரிய அண்ணாவை அடிக்குறாங்க... அங்க இருந்த ஒருத்தன் என் அண்ணாவோட கன்னத்துல அடிச்சுட்டான் தெரியுமா,நான் எங்க அம்மா கிட்ட சொல்லி அவனை அடி வாங்கி குடுக்கல,நான் அம்மு இல்ல..."

என்று கூறி விட்டு தன் அண்ணனை அடித்த தடியன் இருக்கும் திசையினை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிறுவன் தன் தங்கை உளறி விட்டாள் என்பது போல் பார்த்து வைக்க,இதற்கு மேல் மறைக்க ஒன்றும் இல்லை,தங்களை காப்பாற்ற போய் தான் ஏசிபி சார் அவர்களிடம் மாட்டிக் கொண்டார், இனிமேல் சென்று அப்பாவிடம் கூறி ஏசிபி சாரை காப்பாற்றுவதில் நேரம் தாமதம் ஆகலாம்,ஒரு வேளை இந்த மூவரால் ஏசிபி சாரை காப்பாற்ற வாய்ப்புகள் இருந்தால் முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை,"நல்லது செய்ய யோசிக்கவும் கூடாது,கால தாமதமும் கூடாது பரத் கண்ணா..." என்று தன் தாய் தன்னிடம் கூறியது அச்சிறுவனின் நினைவிற்கு வந்தது. பத்ராவின் கண்களை நேராக பார்த்து சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடன் விளையாடிய தன் தங்கை காணாமல் போனதால் தான் தேடிச் சென்றதையும்,தன் தங்கையை கண்டுபிடித்து திரும்பி வரும் வழியில் தங்களை பணையமாக வைத்து,சிலர் ஏசிபி சாரின் தலையில் கூர்மையான ஒரு வகை இரும்பால் அடித்து விட்டு,பின் தன்னையும் கன்னத்தில் அரைந்து,தங்களை அங்கிருந்து ஓடி விடும்படி கூறியதையும் சொல்லி முடித்தான்
அச்சிறுவன்.

அவன் கூறி முடிக்கவும்,மூவரும் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்.தான் இன்று மருத்துவமனையில் பார்த்த தீரனாக இருக்குமோ? என்று ஈசனின் உள்ளம் எண்ணத் தொடங்கியது.பத்ராவின் மனமோ இன்னது என்று புரியாமல் ஒரு பக்கம் கலங்கினாலும்,என்ன நடந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று தெளிவான முடிவு ஒன்றை எடுத்தாள்.

"குழந்தைகளுக்காக அடி வாங்கி உள்ளார் என்றால் அவர் நிச்சயமாக நல்லவராக தான் இருக்க வேண்டும்,அவர் யாராக இருந்தாலும் அவரை காப்பாற்ற வேண்டும்" என்ற எண்ணம் மூவருக்கும் தோன்றியது.

சண்டை எங்கு நடந்தது என அச்சிறுவனிடம் தெரிந்து கொண்டு,ஏசிபி சாரை காப்பாற்றி விடுவதாக அவனுக்கு மூவரும் வாக்கு கொடுத்தனர்.

அம்முவிடம் திரும்பி,
"கண்டிப்பா உன்னோட அண்ணணை யார் அடிச்சு இருந்தாலும் அவனை இந்த பத்ரா தண்டிப்பேனு உனக்கு பிங்கி ப்ரோமிஸ் பண்ணித் தரேன்டா அம்மு..."என்று பத்ரா அம்முவை சமாதானம் செய்தாள்.

"ரெண்டு பேரும் வீட்டுக்கு பத்திரமா போயிடுவீங்களா?,இல்ல நாங்க யாராவது உங்களை வீட்டுல வந்து விடவா..."

"இல்ல எங்க வீடு பக்கம் தான்,நாங்க போயிடுவோம், நீங்க அந்த சாரை எப்படியாவது காப்பாற்றிடுங்க..."
என்று கூறி அண்ணனும், தங்கையும் தங்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

சண்டை நடைபெற்ற திசையில் ஈசன், கதிர் மற்றும் பத்ரா மூவரும் வேகமாக நடந்தனர்.

********
கத்தியால் அடியாட்களை தாக்கி விட்டு,
மறைவில் இருந்து தீரனை பார்த்துக் கொண்டு இருந்தாள் உத்ரா.அவள் வீசிய வேகத்தை பார்த்து மித்ரனே ஒரு நிமிடம் மிரண்டு விட்டான்.

"இந்த கத்தி எல்லாம் உன்னோட கோர்ட்க்கு உள்ளவா இத்தனை நாள் வச்சிருந்தியா??? "

"இப்போ ரொம்ப முக்கியமா?"

"இல்ல..."

"ஏதாச்சும் ஆபத்துனா,யூஸ் பண்ண எப்பவும் எடுத்து வைக்குறது தான்..."

என்று மித்ரனிடம் உத்ரா கூறும் போது, தீரன்
கடற்கரை மணலில் சரிவதை பார்த்து நொடியும் தாமதிக்காமல் அவனை நோக்கி ஓடி அவனை தன் மடியில் ஏந்தி அவனை சுய உணர்விற்கு கொண்டு வர முயன்றாள் உத்ரா.

கத்தி ஒரு இடத்தில் தான் குத்தி இருந்தாலும், ஆழமாக அனைவருக்கும் இறங்கி இருந்தது,கத்தியை காயத்தில் இருந்து எடுக்க முயன்றாலும் வலி அதிகமாக எடுக்கத் துவங்கியது,அனைவருக்கும் சதையை கிழித்து,எலும்புகளை ஊடுருவி கத்தி ஆழமாக பாய்ந்து இருந்ததை அடியாட்களின் தலைவன் கவனித்தான்,இந்நிலையில் தாங்கள் பின் வாங்கக் கூடாது,தங்களின் இவ்வலிக்கு காரணமானவனின் மரணத்தை உறுதி செய்து விட்டு தான் இங்கு இருந்து போக வேண்டும், மற்ற அடியாட்கள் தங்களுக்குள் விவாதித்ததில் கலந்து கொள்ளாமல், தீரனை காப்பாற்ற தான் தாக்குதலை நடத்தி இருக்கிறான் என்றால்,தீரனை அழைத்து செல்ல உறுதியாக வருவான்,வருபவன் எங்கள் கண்ணில் இருந்தும் தப்ப முடியாது, அவன் முதலில் எரிந்த கத்தியாலே,அவன் மரணம் எழுதப்படும் என்று அவன் எண்ணும் போது தான் தீரன் மண்ணில் சரியத் தொடங்கினான்.அவன் விழுந்ததும்,யாரோ ஒரு பெண் ஓடி வந்து அவனை தாங்குவதை பார்த்த அடியாட்களும்,
அவர்களின் தலைவனும் அதிர்ச்சி அடைந்து விட்டனர், தங்களை தாக்கியது ஒரு பெண்ணா என்ற அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
அவர்களின் அதிர்ச்சி மறைந்து கோபம் அவர்களுக்குள் இடம் பெறத் தொடங்கியது,அதே கோவத்துடன் அடியாட்களில் சிலர் உத்ராவை நெருங்க முயன்றனர்.அவர்கள்,உத்ராவை நெருங்க விடாமல் மித்ரன் வெகு சிறப்பாக தடுத்தான். அவர்களின் கத்தி பாய்ந்த இடங்களில் ஓங்கி இரு முறை மிதித்தான்,சிலருக்கு காலில் கத்தி பாய்ந்து இருந்ததால் அவர்களால் எழுந்து நிற்கவே முடியவில்லை,இதனுடன் அவர்களால் சண்டை போட முடியாது என்பதை உத்ரா சரியாக கணித்து அவர்களை கத்தியால் தாக்கி இருந்ததால்,ஐந்து அடியாட்கள் முற்றிலுமாக செயல் இழந்து இருந்தனர்.மீதி இருந்த,அடியாட்களின் தலைவன் உட்பட
ஆறு அடியாட்களுடன் தான் மித்ரன் சண்டையிட்டு கொண்டு இருந்தான்.

தீரனை சுய உணர்விற்கு கொண்டு வர, அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள் உத்ரா.

"டேய் ருத்ரா, எந்திரிடா... "

"... "

"உன்னோட பாப்பு வந்துருக்கேன்டா எந்திரிடா... "

"..."

"ப்ளீஸ்டா,எந்திரிச்சுடுடா,நீ எனக்கு ப்ரோமிஸ் பண்ணி குடுத்துருக்க உனக்கு அது ஞாபகம் இருக்கா ருத்ரா... "

"..."

"நான், என்னோட மனசுக்கு பிடிச்சவனை பார்த்தா உன்கிட்ட தானே முதல்ல சொல்வேன் சொன்னதுக்கு,அவனையே தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைப்பேன் சொன்னயேடா"

"..."

("ஏன்டா அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் பேச விஷயமே கிடைக்கலையாடா நேரடியா என் தலையில் கையை வைக்குறீங்களேடா"என்று தனக்குள் புலம்பிய வண்ணம்,தாக்க வந்த அடியாட்களில் ஒருவனை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தான் மித்ரன் )

"என்னோட மனசுக்கு பிடிச்சவனை பார்த்துட்டேன்டா, அவனை உன்கிட்ட காட்டனும்டா,எந்திரிடா ருத்ரா..."

"..."

உத்ரா,என்ன முயன்றும் தீரனிடம் பெரிதாக ஒரு முன்னேற்றமும் இல்லை,உத்ராவின் கவனம் முழுவதும் தீரனிடம் இருந்ததால் தன் அருகே வந்த அடியாட்களின் தலைவனை கவனிக்க தவறினாள்.தன் தோள்பட்டையை கரம் ஒன்று தொட்டவுடன்,மடியில் தீரன் இருந்ததால் உடனடியாக அவளால் தாக்குதல் நடத்த முடியவில்லை,மித்ரனும் நான்கு பேருடன் போராடிக் கொண்டு இருந்தான்.

"என்னோட அக்கா மேல இருந்து கைய எடுடா..."

என்ற ஒரு குரல் மெரினா கடற்கரை எங்கும் கர்ஜித்தது.

குரல் வந்த திசைப்பக்கம் அனைவரும் தங்கள் பார்வையை திருப்பினர்,அங்கு இன்னொரு பெண் கண்ணில் கொலைவெறியோடு தங்கள் தலைவனை கண்களால் எரித்துக் கொண்டு இருப்பவளை பார்த்து மிரண்டு விட்டனர்.

"ஒருத்தன காப்பாத்த எத்தனை பேருடா வருவீங்க,இப்போ வந்த நீங்க யாருடா?, இப்படிபுதுசு புதுசா எண்ட்ரி குடுத்தா நாங்க என்ன தான் பண்ணுறது, ஆல்ரெடி குடுத்த பணம் இந்த கத்தி கிழிச்ச வைத்திய செலவுக்கு சரியாய் போகும்?,நமக்கு கட்டுப்படி ஆகுற மாதிரி சின்ன தப்பு பண்ணிட்டு சந்தோசமா இருந்துருக்கலாம்?, போலீஸ் மேல கையை வைச்சு பெரிய தப்பு பண்ணிட்டோம், சிக்குற அன்னைக்கு வச்சு செய்யப் போறாங்க, இதை எல்லாம் நம்ம தலைவர் கிட்ட சொன்னா கேட்க மாட்டார்,புத்தியில் உரைக்கும் படி நல்லா அடிச்சு சொல்லுங்க"என்று அடியாட்களில் ஒருவனின் மனம் புலம்பிக் கொண்டு இருந்தது.

பத்ராவின் கர்ஜனைக்கு தீரனின் கரங்கள் அசையத் தொடங்கின.

தொடரும்...
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜெர்ரி டியர்

ஹா ஹா ஹா
ஒருத்தனைக் காப்பாற்ற இத்தனை பேர் வருவீங்களாடா?
ஹா ஹா ஹா
அடேய் ரவுடிகளின் தலைவா
வாங்கின காசுக்கு ஏசிபியை அடிச்சாச்சு
இனி வைத்தியரைப் போய் பாருங்கடா
இல்லாட்டி பத்ரா கொடுக்கிற அடியில் உயிரே போனாலும் போய் விடும், தம்பிகளா
 
Last edited:
#8
ஹா ஹா ஹா
ஒருத்தனைக் காப்பாற்ற இத்தனை பேர் வருவீங்களாடா?
ஹா ஹா ஹா
அடேய் ரவுடிகளின் தலைவா
வாங்கின காசுக்கு ஏசிபியை அடிச்சாச்சு
இனி வைத்தியரைப் போய் பாருங்கடா
இல்லாட்டி பத்ரா கொடுக்கிற அடியில் உயிரே போனாலும் போய் விடும், தம்பிகளா
 
JERRY

Well-Known Member
#9
மூன்று பேரும் சேர்ந்துட்டாங்க........
ஒரு பக்கம் சண்டை போயிட்டு இருக்கு, அங்க தீரன் வேற மயங்கி கிடைக்குறான், அந்த ஜீவன் பத்தி கேட்க மாட்டிக்குறீங்க சித்ரா sis:p:D(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement