JERRY'S - 1.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

JERRY

Active Member
#1
1. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

திருச்சி ஈசனின் வீடு,

"ஓ வெயிலுக்கும் குளிர் வரும்
குளிருக்கும் காச்சல் வருமே
காச்சல் வருமே

உன் விரல் தீண்டும் நொடியினில்
உயிருக்கும் உயிர் வருமே
உயிர் வருமே

ஒரு முறை தான் காதலிப்பேன்
உன் அருகில் தான் இருப்பேன்
இறுதிவரை நீ இருக்க
உன் உயிராய் நான் இருப்பேன் "

"இப்படி பாடனும் நீயும் பாடுன பாரு பாட்டுல ஒரு உணர்வும் இல்ல", என்று சொன்னவனின் குரலில் இருந்த அழுத்தம் இனிமே நீ பாடுவ என மிரட்டும் தோணியில் இருந்தது,

"அப்போவே சொன்னாங்க இவனுக்கு பாடிகார்டா (bodyguard) போகதானு... நான் கேட்டேனா, இப்போ அனுபவிக்குறேன் தேவை தான் எனக்கு தேவை தான்” என்று வாய்விட்டு புலம்பியவன் பின் எதிர் நின்றவனை நோக்கி, ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து ஓடினான்.

அவன் ஓடுவதை வெற்றிச் சிரிப்புடன் பார்த்தான் ஈசன்.

இந்தியாவின் ரகசியப் பாதுகாப்பு பிரிவில் உயர் அதிகாரியாக பணிபுரியும் வெற்றிவேலனின் மகன் தான் இந்த ஈசன், ஈசனின் சிறு வயதிலேயே வெற்றி, தன் மனைவி அமுதாவை விபத்தில் இழந்தார், மனைவியின் மறைவுக்குப் பின் தனது மகனின் பாதுகாப்பிற்காக ஈசனின் சிறுவயதிலேயே அவனுக்கான மெய்க்காவலர்களை ஏற்பாடு செய்தார்.

இப்போது ஈசனுக்கு வயது 22, ‘நான் வளர்ந்திட்டேன் அப்பா, எனக்கு பாடிகார்ட்ஸ் வேண்டாம்’ எனச் சொன்ன மகனின் சொல் கேளாமல் வெற்றி இன்றும் ஈசனின் பாதுகாப்பிற்கான ஆட்களை ஏற்பாடு செய்கின்றார்.

தன் வேண்டுகோளை மறுத்த தந்தையின் செயலால், அவர் அமைக்கும் பாதுகாவலரை பாடச் சொல்லியும், சிறு சிறு உபத்தரவங்களை செய்து அவர்களே பொறுப்பை விட்டு ஓடுமாறு தொல்லை கொடுத்து விரட்டி அடித்தான் வெற்றியின் ஈசன்.

இப்பொழுது ஓடிய பாதுகாவலரை நினைத்து சிரித்துக் கொண்டிருந்த ஈசனின் கவனத்தை சிணுங்கி தன் பக்கம் திருப்பியது அவனது கைபேசி, திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அழைப்பை ஏற்றவன் “சொல்லு மச்சான்" என்றான், சில நிமிடங்கள் உரையாடலுக்கு பிறகு "ம்ம்ம் சரிடா, பைக்ல தான் வரேன், திருச்சில இருந்து சென்னை வர நாலு மணி நேரம் ஆகும்டா, ஈவினிங் நாலு மணிக்கு கெளம்பினா நைட் சென்னை வந்துருவேன், நாளைக்கு பார்க்கலாம்டா" என்றவாறு அழைப்பைத் துண்டித்தான்.

கைப்பேசியை துண்டித்த அடுத்த நொடி மறுபடி அலறிய அலைபேசியில் தந்தையின் அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்கப்பா அடுத்து யார அனுப்ப போறீங்க... நீங்களும் எத்தனை பேரை அனுப்புவீங்க... நானும் எத்தனைப் பேரை தான் ஓட வைக்குறது" என்று சொன்ன ஈசனிடம்,

"இல்ல நான் யாரையும் அனுப்பல இனிமே... நீ கொஞ்சம் கவனமா இரு ஈசா" என்று கூறி அழைப்பை வைத்தார் வெற்றி.
"அப்பா சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே பார்ப்போம் இந்த தடவ யாராவது அனுப்பட்டும் வரவனுக்கு இருக்கு" என்றவாறு நாளைய பயணத்திற்கு தயாரானான்.

சென்னை தீரனின் கோட்டையில் ,

அதே நேரம் , "டேய்! ‘ஈசன்' நாளைக்கு இங்க வரப்போ அவன போடுறோம்" என்று தீரன் தன் சகாக்களிடம் உறுமிக்கொண்டிருந்தான். தீரனின் கண்களில் இருந்தச் சிவப்பு நாளங்களில் அவனின் பழி வெறியும், கொலை வெறியும் பரவியிருந்தன!

பழி தீர்ப்பானா தீரன்?இல்லை அதனை முறியடிப்பானா ஈசன்? என்று அடுத்த அத்தியாத்தில் பார்க்கலாம்.
தொடரும்...


என் பெரும் மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு,

இந்த அத்தியாயம் வாசித்து பார்த்துட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்கப்பா .உங்க வீட்டு JERRY புள்ளைக்கு, சும்மா உங்க ஸ்டைலில் reviews சொல்லுங்க பார்ப்போம் :love::love::love:(y)
 
#3
:D :p :D
உங்களுடைய "ஐ ஹேட்
பாடிகார்ட்ஸ்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஜெர்ரி டியர்
 
Last edited:
#8
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜெர்ரி டியர்

யாரு இந்த தீரன்?
என்ன அவனுக்கு பிரச்சனை?
வெற்றிவேலன்தானே போலீஸ் ஆபீஸர்
வெற்றிவேலனைத்தானே அவனுக்கு எதிரியா தீரன் நினைக்கணும்?
ஈசனை ஏன் டிஸ்ஸுடர்ப்பு பண்ணுறான்?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement