JERRY'ஸ் -2.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

JERRY

Active Member
#1

2. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

அத்தியாயம் 2. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

6 மணி நேரங்கள் கடந்த பின், ஈசனின் கெஸ்ட் ஹவுஸ்,

"டேய் ஈசா, யாருடா அது? பொண்ணு மாதிரி இருக்கு, உன்னைத் தான்டா கேக்குறேன், டேய் உன்னைத் தாண்டா, டேய்" என்று கதிர் கத்திக் கொண்டு இருக்க... பதில் சொல்ல வேண்டியவனனோ எதையோ யோசித்தாவரே நின்றான்.


"இவன் இப்போதைக்கு பதில் சொல்ல மாட்டான் போல சரி நாம இந்த பிள்ளை கிட்டயே கேப்போம், ஏம்மா நீ யாரு?" என்று அவள் முன்னாடி போய் கேட்க, அவளோ தன் முன் ஒருவன் இருக்கிறான்,தன்னிடம் கேள்வி கேட்கிறான் என்னும் எண்ணம் சிறிதும் இல்லாமல்,ஈசனின் விருந்தினர் மாளிகையை ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறு இருந்தாள்.
"இதுக்கு அவன் எவ்வளவோ தேவல, அடப்போங்கடா, தூங்கிட்டு இருந்தவனைக் கூப்பிட்டு ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்க, இப்போ உங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் எனக்கு பதில் சொல்லுறீங்க இல்ல நான் போய் தூங்கறேன்" என்றான் கதிர். "அட அல்பமே" என பார்த்தவர்களின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் "பதில சொல்லுங்க!" என்றான்.அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவள் ஈசனை நோக்கினாள், "நீ உனக்கு இடது பக்கம் இருக்குற ரூம்ல தங்கிக்கோ" என்று ஈசன் அவளிடம் கூறினான்.அவள் அந்த அறையை நோக்கி தான் கொண்டு வந்த பெட்டியுடன் சென்றாள்.
அதன் பின் கதிரிடம் திரும்பிய ஈசன், "அவள் அப்பாவோட தூரத்து சொந்தக்காரரோடா பொண்ணு, ஒரு விபத்துல பேமிலியை இழந்துட்டா, அவளும் நம்ம காலேஜ் தான் அவளுக்கு காலேஜ் ஹாஸ்டல்ல இடம் கிடைக்கல, அதனால அவ நம்ம கூட தான் தங்கப்போறா" என்றான்.


"நீயும், நானும் உன்னோட ரூமை ஷேர் பண்ணிக்கலாம் மச்சி, ரொம்ப களைப்பா இருக்கு, வா போய் தூங்கலாம், நாளைக்கு நம்ம எல்லாருக்கும் கல்லூரியின் முதல் நாள் சீக்கிரமா போகனும்" என்றவாறு அறையை நோக்கி சென்றான் ஈசன்."இவன் சொல்லுறத பார்த்தா எதையும் நம்புற மாதிரி இல்லயே", என பலவாறு யோசித்தவன் சிறிது நேரம் கழித்து, "சரி ஈசனே சொல்லுவான், அப்போ வச்சுக்கலாம் நம்ம மாப்பிளையை" என்றவாறு கதிரும் அவன் அறையை நோக்கி சென்றான்.கதிர் சென்று பார்க்கும் போது,ஈசன் கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தான். கதிரும் கட்டிலின் மறுபக்கத்தில் சென்று படுத்து உறங்கிவிட்டான்.கதிர் உறங்கியதும் ஈசன் கட்டிலில் எழுந்து அமர்ந்து அன்று நடந்தவற்றை சிந்திக்கலானான்.


முந்திய நாள் மாலை நான்கு மணி ஈசன் சென்னையை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் பயணத்தை தொடர்ந்தான்... இரு சக்கர வாகனத்தில் நெடுத் தூரப் பயணம் மேற்கொள்ள அவனுக்கு மிகவும் பிடிக்கும், அதனால் தான் வீட்டில் கார் இருந்தும் தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பினான், ஒரு மூன்று மணி நேரம் தொடர்ந்து சாலையில் கவனமாகவும், இயற்கையை ரசித்தவாறும் பயணித்தவன், சாலையில் ஒருவன் சிகப்பு கொடிப் பிடித்தவாறு ஈசனை மறித்து, " இந்தபக்கம் ரோடு போடுறாங்க சார், நீங்க உங்க இடது பக்கம் போற குறுக்கு பாதையில போங்க, இல்லாட்டி நீங்க மறுபடியும் அலைய வேண்டி வரும்" என்று கூறினான்.அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அவ்வழியில் தன் வாகனத்தை திருப்பினான், போகும் வழியில் ஈசனுக்கு தாகம் எடுக்க, அவன் சென்ற அந்த குறுக்கு வழியில் ஒரு சிறிய கடை தான் இருந்தது, அங்கு இருந்த கடையில் நீர் வாங்கி அருந்தினான் ஈசன்.

"சார் நீங்க சென்னை போறீங்களா?" என்றான் கடைக்காரன்.

"ஆமா"என்றான் ஈசன்.

"அப்போ இந்தப் பொண்ணை சென்னையில ட்ராப் பண்ணுறீங்களா"என்று கேட்டான்.

ஈசனும் எதுவும் யோசிக்காமல், ஏன் அவ முகத்தை கூட பார்க்காமல் "அவங்கள வர சொல்லுங்க" என்றான்.

"பாப்பா அவர் கூட போ" என்றுச் சொன்ன கடைக்காரனிடம் குடித்த தண்ணீருக்கு பணத்தை கொடுத்துவிட்டு சென்னையை நோக்கி, அந்த பாப்பாவுடன் தனது பயணத்தை தொடர்ந்தான்.


'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற பலகையை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தினான் ஈசன்.கொஞ்சம் இறங்குகளேன் என்றான் அந்த பாப்பாவிடம், அப்பொழுது திடீர் என்று ஒரு கார் வேகமாக வந்து அவன் முன்னால நின்றது, அந்த காரில் இருந்து ஈசனை நோக்கி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இறங்கியது.சற்றும் யோசிக்காமல் வந்தவர்கள் முன்னால் சென்று அந்த பாப்பா போய் நின்றாள்.


தன்னை நோக்கி ஆயுதங்களுடன் வந்தவர்களை பார்த்தவன் 'ரைட்டு... ஈசா!!! இருக்கு இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு' என்று நினைத்தவன் அந்தப் பாப்பா முன்னாள் வரவும் 'இந்த பாப்பா எதுக்கு முன்னால வந்து நிக்குது" என எண்ணும் போது, அவள் கைகள் வேகம் வேகமாக காற்றில் சுழன்றன, அவர்கள் வலியில் கத்தும் போது தான் ஈசன் உணர்ந்தான் அவள் அவர்களை தாக்கி உள்ளாள் என்று, 'என்ன பொண்ணுடா நாலு பேரை வெறும் ஊக்கு வச்சே பதம் பார்த்துட்டா, மொத்தமா ஒரு ரெண்டு நிமிஷம் தான் சண்டை போட்டு இருப்பா அதுக்கே அவனுங்க சுருண்டுடாங்க ' என்று பிரமிப்பாக நினைத்தவன் அவளைஆராய்ச்சியாய் நோக்கினான்.
அவளோ
,ஈசனின் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்து "நம்ம கெளம்பலாம்னு" சொல்ல,அதில் தெளிந்தவன் தன் மனதை சமதானப்படுத்தியவாறு வாகனத்தை இயக்கச் செல்ல அந்தநேரம் சரியாக அவனது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது,அழைப்பை ஏற்றவன் தந்தையின் "அவ இனிமே உன்னோட பர்சனல் பாடிகார்ட், உன்கூட தான் தங்கப் போறா, அவளுக்கும் நீ படிக்குற காலேஜ்ல அட்மிஷன் வாங்கியாச்சு, மத்த பாடிகார்ட்ஸ் மாதிரி இவளையும் தொரத்திடலாம்னு பகல் கனவு காணாத ஈசா, அவ உன்னோட பேச்சை கேக்க மாட்டா, அவ கிட்ட ரொம்ப ஆட்டம் போடதா, அடி பிண்ணிடுவா, இனிமே உன்னை பத்தி எனக்கு கவலை இல்ல அவ பார்த்துக்குவா,அப்புறம்... அவ பேரு பத்ரகாளி" என்ற சொல்லை கேட்டவன் அதிர்ந்து, "அப்பா நான் சொல்லுறது கேளுங்க" என்ற ஈசனின் குரல் காற்றோடு தேய்ந்தது.


"வெற்றி சார் சொல்லிட்டார் போல... எஸ் சார், ஐ அம் யுவர் பர்சனல் பாடிகார்ட் பத்ரா என்கின்ற பத்ரகாளி, நம்ம இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது உடனே கிளம்பனும் என்றாள். சார் நான் வேணா வண்டி ஓட்டவா, நீங்க கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க" என்ற பத்ராவின் குரலில் தன்னை மீட்டவன் அவளிடம் வாகனத்தை ஒப்படைத்தவன், அவளது பெட்டியை தான் வைத்து கொண்டு பைக்கின் பின்னால் அமர்ந்தான், அவனிடம் முகவரி கேட்காமலே அவனது விருந்தினர் மாளிகை வந்தடைந்தது வரை நினைத்து பார்த்தவன், அன்றைய நாள் நடைபெற்ற நிகழ்வுகளின் சிந்தனையிலேயே ஆழ்ந்து உறக்கத்தை தொலைத்தான்.


"வழியில் ஒரு பொண்ணு லிப்ட் கேட்டுச்சுனு குடுத்தது தப்பா? யாருக்கு நம்மள கொல்லுற அளவுக்கு கோபம்? அது எல்லாம் விட ஒரு பொண்ணால பாடிகார்டா இருக்கா முடியுமா?" என்ற ஈசனின் எண்ணத்திற்கு பதில்?


தொடரும்....

வாசக நண்பர்களுக்கு,

நீங்களே சொல்லுங்க, ஒரு பொண்ணால பாடிகார்டா இருக்க முடியுமா?...
முடியாதா?... உங்க எண்ணத்தை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க...

 
Saroja

Well-Known Member
#5
அருமை
ஒரு பெண்ணால கண்டிப்பா
முடியும்
பெண்கள் இப்ப எல்லா
துறையில் தனி முத்திரை பதிக்கறப்ப
இது முடியாதா என்ன
 
JERRY

Active Member
#6
அருமை
ஒரு பெண்ணால கண்டிப்பா
முடியும்
பெண்கள் இப்ப எல்லா
துறையில் தனி முத்திரை பதிக்கறப்ப
இது முடியாதா என்ன
கண்டிப்பா பெண்களால் அனைத்தும் சாத்தியம் sis:)(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement