Iratturamozhithal - 24 (final )

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்...

ஒரு வழியா கடைசி அத்தியாயத்துக்கு வந்துட்டேன்..

வழக்கம்போல.. படிச்சு பிடிச்சா.. லைக்...

கூட வந்த, வாழ்த்து சொன்ன, ஊக்கமளித்த தோழமைகளுக்கு நன்றி.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
IM 24

அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கிய பொழுதில் , காலை சூரியன் தகிக்கவா, வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தது. [மார்னிங் 7.30 டு 8.00 ங்கோவ் ]. பயன களைப்பு தீர குளித்து முடித்து, பெரியவர் முதல் குழந்தைகள் வரை கூடத்திற்கு வர, மணி பதினொன்றானது.

பாட்டி கேட்டார், "ஏம்மா சரண்யா, [அவருக்கு அப்படி கூப்பிடத்தான் வருதாம்.], இந்த நேரத்துக்கு பலகாரம் எடுத்து, எப்போ மதியம் சாப்பிடறது? பலகாரமெல்லாம் பசி அடக்காதும்மா.."

"அப்போ என்ன பண்ணட்டும் பாட்டி, சாப்பாடே போட்டுறலாமா? அதுவும் ரெடியா இருக்கு, தியா ரெண்டுமே ரெடி பண்ணி வைக்க சொல்லிட்டு தான் போனாளாம். இன்னும் கால் மணி நேரத்துல அவளும் வந்துடுவா.."

"அவ யாரு பொண்ணு?, சொல்லாமலே எல்லாத்தயும் புரிஞ்சிக்கிடுவால்ல ?", என்று அவர் சிரிக்க, சரணும் பெருமையாய் முறுவலித்தாள் ..

"இலை போடட்டுமா பாட்டி?"

"ஆங்... எனக்கு கைல பிடிச்சு போடனும் ", பேரனின் மகன் ஆரம்பிக்க... வாண்டுகள் அனைவரும் அதிலேயே நிற்க... பேரன்களும் அந்த வரிசையில் சேர.. களை கட்டியது, SNP யின் வீடு.. ஒன்னரை வயது பிள்ளையில் இருந்து, முப்பது வயதில் இருந்த திருமணமான பேரன்கள் வரை இதில் அடக்கம். கிட்டத்தட்ட இருபத்து மூன்று பேர், இடித்து பிடித்து, பாட்டியை சுற்றி வட்டமாய் அமர்ந்து உணவுண்ண தயாரானார்கள்; இதில் புது முகங்கள் பாஸ்கர் ஆதித்யாவும், கல்பலதிகாவும்தான்.

சளசள-வென பேச்சு, கத்தல்,

"பாட்டி நாந்தான் first",

"எனக்கு தான் முதல்ல",

"எனக்கு இன்னொரு அப்பளம்"

"எனக்குதான்டா அடுத்து",

"வரிசைல வா மாமா",

"நான்தான முதல்ல முழுங்கினேன்? பவ் பவ் ",

"என்னது பிடுங்கறான் பாட்டி",

யார் என்ன பேசினார்கள், யாரைப்பார்த்தது பேசினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். கல்பலதிகாவாவது, சிறுவயதில் ஊருக்கு போகும்போது வரும்போது, பிடிசோறு உண்டிருக்கிறாள்.

பாஸ்கருக்கோ புதுவித அனுபவம்.. ஃபோர்க்-ம் ஸ்பூனும், கூடவே பிறந்தது போல பாவிக்கும் அவன் .. முகவாய்கட்டை-யில் அங்கங்கே ஒன்றிரண்டு பருக்கைகள் ஒட்டி இருக்க, முழங்கை வரை அன்னரசம் வழிய, அது பேண்டில் படுவது கூட யோசியாமல், பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

பார்த்த SNP க்கோ , ரசனையாய் இருந்தது. அனைவரும், அரைமணியில் வயிறும், மனமும் நிரம்ப உண்டிருந்தனர். பொரியல் கூட்டு அப்பளம் ஊறுகாய் போடுவது மட்டுமே, சரணின் வேலை.

"அடுத்து எல்லாரும் பெரியவங்கதான், இலை போட்டிடலாமா?", சரண் கேட்பதற்கும், இளா வருவதற்கும் சரியாய் இருந்தது.. "மா..மா", என்று ஒரு வாண்டு அவன் மீது ஏறிக்கொண்டது.

"வாங்க இளா , தியா வர்றநேரந்தான்", மருமகனை வரவேற்றாள் சரண்.

"குட்டிங்க சாப்டீங்களா?", குழந்தையிடம் பேசியவாறே, "மாமா கை கால் அலம்பிட்டு வருவேனாம், அதுவரைக்கும் சமத்தா மெத்தைல உக்காருவியாம்", அறையில் சென்று சுத்தமாய் திரும்பினான்.

அதற்குள் அந்த வாண்டு, "நாங்க எல்....லாரும் பிடிசோறு சாப்பித்தோமே, பாத்தி கித்த, உனக்கு கிதையாதே ", தூக்கி வெளியே.. ஹாலுக்கு வரும்போது இந்த பேச்சு.

"ஏன் கிதையாது ? எம்பாத்தி எனக்கும் போடுவாங்க.. இல்ல பாத்தி?", அவனைப்போலவே பேசி பழிப்பு காண்பிக்க... அது இவனை முறைத்தது..

"என்ன?, இப்போலேர்ந்து ப்ராக்டிஸ் பண்றீங்களா?", தியா வந்திருந்தாள். இவனை நோக்கி கேள்வி தொடுத்தவள்.. பதிலுக்கு காத்திராமல்.. பொறுப்பாய், அடுக்களைக்கு சென்று அன்னையிடம், “எல்லாம் சரியா இருந்ததாம்மா?, சாப்பாடு முடிஞ்சதா? வேற ஏதும் வேணும்னா, தேங்காயும் லெமனும் உள்ள வச்சிருக்கேன், ரைஸ் கலந்துக்கலாம். சிப்ஸ் நேத்திக்கே போட்டு வைக்க சொல்லிட்டேன்..", பேசும் பெண்ணை அதிசயமாய் பார்த்தாள் , சரண்.. சில மாதங்களுக்கு முன், சாப்பிட மட்டுமே டைனிங் டேபிளுக்கு வரும் மகள்.... துரித உணவு தயாரிக்க இவளுக்கே சொல்லிக் கொடுத்தால்? சந்தோஷமாய் சிரித்து , "எல்லாம் சரியா இருக்குடா... சீக்கிரம் ட்ரெஸ் மாத்தி வா..,மாப்ள இன்னும் சாப்பிடல"
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இவர்கள் இங்கே உள்ளே பேசிக்கொண்டிருக்க, பாட்டியிடம் இளா, சாப்பாடு கையில் தான் போட வேண்டும் என அடம் பிடித்து கொண்டிருந்தான். அவன் அன்னை சிறுவயதில் தவறியதால், இளம்பரிதி எப்பொழுது ஊருக்கு சென்றாலும், பாட்டி பிடித்துத்தான் உணவு கொடுப்பார்.

"எனக்கென்ன ராசா?, அடுத்த ரவுண்டு உக்காருங்க.. ", என்றாரே பார்க்கலாம், பாட்டி? SNP, முதல், லதிகா சொந்தங்களில் சற்று பெரியவர்கள் நெளிந்தனர், ஆனால் மறுப்பு கூற இயலாதவாறு, இளம்பரிதி முதல் ஆளாய் உட்கார.. வேறு வழியின்றி மற்றவர்களும் அமர்ந்தனர்.. இப்பொழுது, SNP , சரண்யு சாயா, தியா, இளம்பரிதி , லதிகாவின் தாயார், மாமாக்கள், அத்தைகள் உட்பட அனைவரும் இதில் அடக்கம்.. அனுபவம் இன்மை காரணமாய் SNP உள்ளிட்ட சிலர் திணற, பாட்டி வழமையை கைவிடாது பேச ஆரம்பித்தார்.. இப்பொழுது, சளசள பேச்சுக்கள் இல்லை.. உபயோகமான பேச்சுக்கள்.

"ஏம்பாட்டி ?இங்க இம்ம்புட்டு பேசற? ஊருக்கு போனா சீரியலே கதின்னு கிடக்கறதுக்கு பேசாம இங்கயே இரு.. ", பரிதி சொல்ல ..

"ஹஹஹ, யாரு பாட்டியா?", தியா சிரிக்க...

"அய்யய்ய.. எப்பப்பாரு புடவ விளம்பரத்துக்கு வர்றவங்க மாதிரி, பட்டு புடவ கட்டி அரை இன்ஜு பவுடர் பூசி வருவாங்களே? அத... நாம்பாக்கவா? போடா போக்கத்தவனே, கொஞ்ச நா(ள் ) முன்ன வரைக்கு, பொழுது போக களத்துக்கு போவேன்.. உலகத்துல இருக்க மக்கமாரு பசி போக்க-ன்னு.. இப்போ தான் உலகத்தையும் சேர்த்து காப்பாத்துன்னு எம்பேத்தி, அதேன் உம்பொஞ்சாதி, எனக்கு மட்டுமில்லாம ஊரு பொம்பளைங்க புழைக்க, ஒரு வழி சொல்லி இருக்காளே?"

என்னவென கண்களால், கொண்டவன் வினவ...

" அதுவா? போன தடவை ஊருக்கு போனபோது, ரீயூசபிள் நேஃப்க்கின், டயப்பர் செய்யறது-க்கு அவங்களுக்கு ட்ரைனிங் ஏற்பாடு பண்ணினேன்.", என்றாள் அதிதி ஸந்த்யா.

"அட..இப்போ முக்கிய தேவையில்லையா இது? எட்டாயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு சேருதாமா நாஃப்க்கினால மட்டும்... எரிச்சா டையாக்சின்-னாமில்ல?, அந்த புகை உள்ளுக்கு போனா கான்சர் வருதாம்...", பாட்டி அவருக்கு புரிந்தவரை சொல்லி மேலும் தொடர்ந்தார்....

"இத விட மோசம்.. பூமி போர்வையாமில்ல ஓசோனு ? அதுல ஓட்டை விழுதாம் ...புளிய கொண்டா அடைக்க முடியும் ?, அட புதைச்சா ஒழியுதா-ன்னா.... தண்ணீ கெட்டு போயிரும்.."

"சரித்தா... உபயோக படுத்தற புள்ளைங்களுக்காவது தொல்லை இல்லாம இருக்கா? -ன்னா அதுவுமில்லை , யூரினரி இன்னபிக்ஷன், ரேயானால செர்விக்கல் கான்சரு , வாயில நுழையாத இன்னும் என்னென்னவோ?, அறிவு கம்மியா இருக்கிற எனக்கே இவ்வளவு பிரச்சனை தெரியும்போது ...................... ", இந்தம்மாக்கு அறிவு கம்மியாமா ?

"ஷ் பாட்டி., ஆம்பிளைங்க... ", என்று ஒரு பெண் ரகசியம் பேச.. [இத்தனைக்கும் பேச்சு பெண்களுக்குள்ளதான்]

"இது என்னாடி இது? எப்போ ஒளிச்சு பேச வேண்டிய விஷயமா இருந்தது?, வீட்ல விசேஷத்துக்கு நாள் குறிக்கும் போது , நாலு பேரு கூடி இருக்கிற இடத்துல கூட, அருமையா நம்மூருல கேட்பாங்க.. "ஏங்க , இது உங்க வீட்டம்மாக்கு தோதுப்படறா நாளா-ன்னு கேட்டு சொல்லுங்க-ன்னு". அது நாகரீகம் இல்லையா?, இந்தக் கால பொண்ணுக என்ன பண்றாங்க?, மாத்திரை போட்டு, தேதியை தள்ளிப்போட்டு உடம்பை கெடுத்து பின்னால கஷ்டப்படறாங்க, ஏன்னு கேட்டா, பொண்ணுக விடுதலை, தனி மனுச சுதந்திரம்.... , விளக்கெண்ண.... "

"எல்லாத்துக்கும் பழைய முறைக்கு வந்துடீக. கைக்குத்தல் அரிசி, இயற்கை வேளாண்மை, செக்கு எண்ணெய், இயற்கை உரம், சைக்கிள் பயணம்-ன்னு, இதுல எப்போ மாத்தம் வரபோகுது ?, ஒருவேளை "ஊருக்குத்தாண்டி உபதேசம்... உனக்கும் எனக்குமில்லை "-ன்னு, கவுரதி (கவுரவம்) குறைஞ்சுரும்-னு நினைச்சு .. கேன்சர் மாதிரியான வியாதிய இழுத்துக்க போகுதுங்களோ? சிறுசுங்க அவங்களேத்தா முடிவு பண்ணிக்கணும்.."

ஒரு பக்கமாய் அமர்ந்திருந்த பெண்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்க, உணவும் உள்ளே போனது, சுற்றி இருந்த ஆண்கள் ஒரு காதை பெண்களின் பேச்சிலும், மறு காதை அவர்களது கதைப்பிலுமாய் வைத்திருந்தனர்.. பாட்டி ஆண்கள் பக்கம் திரும்பி, "என்ன அம்புட்டு கலக்கம்?, சாமிகிட்ட கண்ணு கலங்குற அளவுக்கு?, கிழவிட்ட சொல்லலாம்னா சொல்லு, எல்லா நம்மாளுகதேங்.", SNPயை பார்த்து பாட்டி கேட்க.. அந்த சிறு கூட்டம் நிசப்தமானது.

"சின்ன பிரச்சனை, கொஞ்சம் சங்கோஜமான விஷயம்.. வெளில வந்து அவமானமாகாம கடவுள் காப்பாத்திட்டாரு.. ", சரண் பூடகமாய் விளக்க..

"தப்பு உன்னதா? உண்மதேன் சொல்லணும் ", பாட்டி என்ன ஏதென்று துருவாமல், வேறு கோணத்தில் கேட்டாலும், உரிமையாய் கேட்டதால்,

"உண்மையா தப்பு என்னது இல்ல., .", SNP யை ஒருவர் கேள்வி கேட்டு அதற்கு இத்தனை நிதானமாய் அவன் பதிலுரைப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், யாருக்கும் பதட்டமோ பயமோ எதுவுமில்லை...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
"அப்ப வெளில வந்தா என்னாகும்? உனக்கு நீ சரின்னு தோணும்போது.. எதுக்கால இருக்கிறவன் என்ன நினச்சா உனக்கென்ன?, கேட்டுக்கிற மத்தவங்களுக்கு சாக்கிறதாயா இருக்கணும்-னு தோணுமில்ல? ", என்று அவர் கேட்க.. ஆமாம், இப்படியல்லவா நினைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

"உனக்கு மட்டுமில்ல ராசா.. எல்லாருக்குந்தென் சொல்றேன். நமக்கு ராமாயணம், பாரதம் தெரியும், ராமருக்கு புறவு.. அவங்க வாரிசுங்கதேன் ஆட்சி பண்ணுனாங்க.. ஆனா ஆராவது அவரு சரித்திரத்தை மாத்தி எழுத நினச்சாகளா? "

"ஏன் மாத்தணும்?,"

"அவரு என்ன தப்பு பண்ணினாரு ?",

"இந்தா வாரேன்..", "யம்மாடி லலிதா, தயிறு புளிக்கிறா மாதிரி இருக்கு, கொஞ்சமா பால ஊத்து ",லத்திகா, பாட்டியிடம் லலிதாவானாள். தயிர் சாதம் கலந்து, பரிமாற ஆரம்பித்தார் பாட்டி..

"எங்க விட்டேன்?..ஆங்... ராமர் கதையை எதுக்கு மாத்தணும் ?... இன்னிக்கு வரைக்கும், தெருவில போற குப்பனும் சுப்பனும்,...... ராமரு பொண்டாட்டிய காட்டுக்கு அனுப்பினாரு , வாலிய மறைஞ்சு நின்னு கொன்னாரு-ன்னு திட்டிட்டுதானே கிடக்கான்?"

"அவரு கடவுளு... தேவலோகத்துலேந்து நாரதர் வந்து ராமாயணம் சொன்னாரு, அது இதிகாசங்கிறதெல்லாம் நா பேசல", "அவரு அம்புட்டு பெரிய்ய ராசா.. செஞ்ச தப்பு தெரியகூடாது ன்னு நினச்சாரா?, இல்ல அவுக புள்ளைங்கதா நினச்சுதுங்களா? அவரு தப்ப வச்சு அடுத்தவன் பாடம் படிக்கட்டும்-னு தான விட்டாரு..?."

"கத தெரிஞ்ச அத்தனை பேருக்கும் தெரியும், சீதம்மா-வ காட்டுக்கு அனுப்புனது ராசாராமென், சீதாராமனில்லை.. அங்கன, அவரு ராசாவா நின்னாரு"

"யாரு சரணம்-னு கால்-ல விழறாங்களோ, அவங்க எதிரியா இருந்தாலும் காப்பாத்தறது ராசகுல மரபு. வாலிங்கிற குரங்கை கொல்ல , சாத்திர சம்பிரதாயமெல்லா பாக்கவேணாம்-னும் இருக்கு, வேட்டைக்கு போகையில, புலிக்கு நேராவா நின்னு சண்டை போடுவாக? ஊர்ல பேசுறவக பேசட்டும், உண்மைய சொல்லு-ன்னு இல்ல ராசாராமன் நின்னாங்க.."

"மனுஷனா புறந்தவன், தப்பு செய்யத்தான் செய்வான்... நம்ம ஊரு பாதிரி சொல்லுவாரு, "கடவுள் தமது சாயலாக ஆணும் பெண்ணுமாக மனிதர்களை படைத்தார்"-ன்னு, சாயலாத்தான் படைச்சாரு.. தப்பு செய்யாதக்கி இருந்தாகளா ? இல்லையே?, அதுக்காக கடவுள் கை வுட்டுட்டாரா என்ன?"

"பொள்ளாச்சி பக்கத்துல எதோ ஊராமா.. எழுவது பொண்ணுகளுக்கும் மேல, மூஞ்சிப்புத்தகமாமில்லே? அதுல பழகி, கன்னாபின்னா-ன்னு அவுகள போட்டோ புடிச்சிருக்கானாமா, ஒரு பரதேசி... , ஒத்த பொண்ணு கம்பளைண்டு கொடுத்ததுனால, இப்போ அந்த பக்கிப்பய கூட்டம் உள்ள கிடக்காம், இத அந்த முதலாவது பாதிக்கப்பட்ட பொண்ணு கொடுத்திருந்தா , அந்த கட்டைலபோறவங்களுக்கு இம்புட்டு தைரியம் வந்திருக்குமா?, இத்தனை பொண்ணுங்கள சீரழிக்க துணிஞ்சிருப்பானா?"

"அந்த ஒரு பொண்ணுக்கு இருக்கிற தகிரியம் உனக்கில்லாத போச்சில்ல?, கேட்டா மானம் அவமானம்.. ன்னு ... பேச்சு.."

"பேசறவங்க எப்பவும் பேசத்தான் செய்வாங்க...எதப்பு வாழ்க்க? நான் கஷ்டப்பட்டேன், என் அனுபவமிது, நீ சூதானமா நடந்துக்க ன்னு, கூட வர்ற மனுஷங்களுக்கு சொல்றதுதானே? சுத்தி இருக்கிற மக்க மேல காட்டற பாசமும் அன்பும்தானப்பு நிசம்?, கை காஞ்சு போகுது பாருங்க... போங்க ... போய் கை கழுவுங்க",பாட்டியின் பிடிசோறு வயிற்றை நிறைத்திருந்தது, பேச்சு மனதினை.

அனைவரும் மௌனமாய் கலைந்தனர்.

ஆம்.. எது வாழ்க்கை?
அனைவரிடத்தும் அன்பாயிருத்தல் வாழ்க்கை..

+++++++++++++++++++++++

சில பல மாதங்களுக்கு பின்.....

அதிதி ஸந்த்யா , இளம்பரிதியின் மகன் ரவி கதிரோனுக்கு இன்று ஒரு வயது நிரம்பி இருந்தது... SNP யின் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. அனைத்து வேலைகளும் கல்பலதிகாவின் மேற்பார்வையில் கனகச்சிதமாய் நடந்தது.. மேற்பார்வை மட்டுமே.. நடந்தால், கால் வீக்கம் கண்டதினால், வேலை செய்யக்கூடாது என தியா உத்தரவு போட்டிருந்தாள். இப்பொழுது லதிகாவிற்கு ஏழு மாதம். [பெயர் கூட முடிவு செய்து விட்டார்கள் ஆணென்றால் ... சூர்யகிரண் பிரகாஷ்.. (SKP) பெண்ணென்றால் கிரண்மயி]

அனைத்திற்கும் சேர்த்து, மனோகரன் ஓடிக்கொண்டிருந்தான்.. ஆம்.. மனோகரன், மீன் வளர்த்து விற்ற, தொழிலில் பிரச்சனை வர காரணமாயிருந்த, SNP யை கடத்தி ஏடாகூடமாய் வீடியோவில் சித்தரித்த அதே மனோகரன்தான்...

அன்று பாட்டி சொன்னவை, நரேன் மனதில் தைக்க, அவர் [பேரனெல்லாம் எடுத்தாச்சு.. இனி அவர்ர்ர் தான்], கேள்விப்பட்ட விஷயங்களும் உவர்ப்பாய் இருக்க.. அடுத்த ஒரு வாரத்திற்குள் மனோகரனை சிறையில் சந்திக்க சென்ற நரேன் சரண் இருவரும் அவனிடம் பேசியது :

"என்ன எதுக்கு பாக்கணும்-னு வந்தீங்க?, ஜெயில்லயே போட்டு தள்ளிட ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா?", சிறை வாசத்தை விட, தன் பிள்ளையை பிரிந்திருப்பதில் பாதியாய் இளைத்திருந்த மனோகரன் கோபமாய் கேட்க..

"ஒரு விஷயம் உனக்கு சொல்லிட்டு, உன் பர்மிசனுக்காக வந்தோம்.", சரண் பதிலுரைத்தாள்.

"என்ன பர்மிஷன்?"

"உன் ஜாமீனுக்கு நான் அப்ளை பண்றேன், அதுக்கான பெர்மிஷன், ", சரண் கூற..

கேட்டவன் திகைத்து விழித்தான்... "நீங்களே ஜெயில்ல புடிச்சு போடுவீங்களாம், நீங்களே ஜாமீனும் எடுப்பீங்களாம்.. என்ன விளையாடறீங்களா ?", மனோகரன் சந்தேகமாய் கேட்டான்.

"இல்ல.. விளையாடலை .. நீ ஊருக்கு அனுப்பினேயே, உன் குழந்தை, அதுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு தர்றாங்க, உயிரோட இருக்கணும்ங்கிறதுக்காக மட்டும்.."

"இல்ல இல்ல அப்படிலாம் பண்ண மாட்டாங்க.. நான் அவங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கிறேன். அதெல்லாம் நல்லபடியா பாத்துக்கறாங்க, நீங்க பொய் சொல்லறீங்க.."

"பொய் சொல்ல வேண்டிய தேவை என்ன ? எல்லாத்தையும் காசால வாங்க முடியாது மனோ, இப்போவாவது புரிஞ்சுக்க.. அன்பு, பாசம், காதல், இதெல்லாம் தானா வரணும்.. நிச்சயமா பணத்துக்கு அதை வாங்கற சக்தி இல்ல..", சொன்ன SNP பகைவனுக்கும் அருள்பவனாய் நின்றார்.

""தெரிஞ்சோ தெரியாமலோ, ஒரு குழந்தைக்கு அம்மா இல்லாம பண்ணிட்டேன்.. அதை நானே நிவர்த்தி பண்றேன். நீ ஜாமீன்-ல வெளில வர்ற வரைக்கும், உன் குழந்தையை நான் பாத்துக்கறேன், அப்பறம் நீயே வச்சுக்கோ.. ", சொன்ன சரண், தொடர்ந்தாள்..

"அதுக்கும் ஒரு கோர்ட் ஆர்டர் தேவை, என் கஸ்டடி-ல குழந்தையை விட சம்மதிச்சு எழுதி கொடு.. அதிக பட்சம் ஒரு மாசம் இல்ல 40-50 நாள்தான்.., உன்ன வெளிய எடுத்திடறேன், ப்ளீஸ்..", என்றவள்..

"இப்போவும் சொல்றேன் .. நான் பண்ணினது தப்பு கிடையாது, ஆனா உன் இழப்பு என்னால நேர் செய்ய முடியாதது.. இத உன் மகனுக்காக செய்யறேன். அப்பறம் உன் இஷ்டம் ", என்று சரண் பேச்சை முடித்து இருவரும் கிளம்ப எத்தனிக்க...

"அம்மா... ", என்று நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான், மனோகரன்... தரையில் விழுந்தவனைத் தூக்கிய SNP எனும் நரேன் அவனை வாழ்க்கையிலும் தூக்கிவிட்டார். ஆம்.. மனோகரனுக்கு, இறால் பண்ணை அமைத்து கொடுத்து, அதன் ஏற்றுமதிக்கும் வழி வகுக்க... "தரம் .. மனோ - forms -ன் தாரக மந்திரம்",என்ற வாசகத்துடன்.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

மனோவின் ஒப்புதல் கிடைத்த அடுத்த நாளே, மனோவின் பிள்ளையை, வேலைக்காரர்களிடமிருந்து பிரித்து, கிட்டத்தட்ட அவர்களை உருட்டி மிரட்டி, வீட்டிற்கு கூட்டி வந்து விட்டாள், சரண்.

தியா, பரிதி தம்பதியின் புதல்வன் ரவிக்கதிரோனின் வரவுக்கு முன்பே தாத்தா பாட்டி ஆயினர் சரணும், நரேனும்.. மிக மிக மகிழ்ச்சியாய்....

அன்றிலிருந்து .. மனோ ... SNP யின் நிழல் போலானான்.. அவன் பண்ணை வேலை நேரம் தவிர, மற்ற நேரத்தில் SNP பின்னேதான் எப்பொழுதும். பாஸ்கரும், பரிதியும் , இவனை தோள் சேர்த்தாலும், எட்டியே நின்றான். சுருங்க கூறின், சூர்ய நாராயண பிரகாஷின் பக்தனானான், மனோகரன்.

ஞாயிறு ..எவ்வாறு ..
மேடு பள்ளம்,
நன்னீர், கழிவு,
இருப்பவன், இல்லாதவன்,
ஜாதி, மதம்,
மொழி, இனம் ... அனைத்தும் கடந்து...
ஒருநாளும் தன் கடமை தவறாது உதித்து .. பூமி செழிக்க உதவுகின்றதோ அது போல.....

இந்த "ஸூர்ய வன்ஷா " - வை சேர்ந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும்.... உலகத்தோர் அனைவர்க்குமாய் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை தொழுது முடிக்கின்றேன்.

வணக்கம்...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே... உங்களது மேலான ஆதரவுக்கு நன்றி.. நன்றி.. நன்றி...

எழுதியதில் / கருத்தில் தவறிருந்தால், பகிரவும்.. என்னை திருத்திக்கொள்ள நல்வாய்ப்பாய் எடுத்துக்கொள்கிறேன் ...

தளம் தந்த தோழிக்கு நன்றிகள் பல...
 

Joher

Well-Known Member
Hi ஆதி......
உங்காத்து சத்தம் அதிகமா கேட்டது இந்த epi ல......

மொத்தத்தில் சூரியவம்ஷம்......
எல்லா பேரும் அதை தான் சொல்லுது.....

நல்லா இருந்துச்சு......
Boss ஐ ரொம்ப அலைய விட்டு ஒருவழியா சேர்த்துட்ட......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top