From Me

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

உங்கள் எழுத்துக்கள் என்று வந்தாலும் உங்கள் ரசிகர்கள் ரசிக்க காத்திருப்பார்கள். நீங்கள் முதலில் உங்கள் உடல் நிலையில் கவனம் கொண்டு சீக்கிரம் நலமாக வாருங்கள். அந்த ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன். நன்றி
 

laksh

Active Member
ஹாய் பிரண்ட்ஸ் ,

ரொம்ப நாளே நான் ஆளே வரலை ஏன்னா வர்றமாதிரியான சூழ்நிலை இல்லை. திடீரென்று உடல் நலக் குறைவு நானே எதிர்பாராத வகையில். ஒரு வார ஹாஸ்பிடல் வாசம் அதற்கு பின்னும் கைல ஊசி வழியா பலதடவை மருந்து, ரொம்பவுமே சிரமப் பட்டுட்டேன்.

பொதுவாவே இந்த மாதிரி விளக்கங்கள் கொடுப்பது எனக்கு பிடித்தமில்லை. ஆனாலும் என்னை தேடுபவர்களுக்கு நான் கண்டிப்பா என்னோட நிலையை சொல்லணும்ன்றதுக்காக தான் இது.

சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும், நான் நல்லா இருந்தா தான் எழுத முடியும். அப்படி ஒரு சூழல் தான் இப்போ. கடந்த ஆறு மாதமாவே எழுதறதுல தொய்வு தான். இப்போ இன்னும் நாள் ஆகும்.

மூன்று மாதம் ஓய்வு எடுத்துட்டு வரலாமா இல்லை வாரம் ஒரு எபி ன்னு ஏதாவது எழுதலாமா இப்படி ஒரு ஊசலாடிட்டு இருக்கேன். ஏன்னா எழுதாம என்னாலையும் இருக்க முடியாது.

எதோ ஒன்னு எதுவா இருந்தாலும் எனக்காக பொறுத்துக்கங்க, அட்லீஸ்ட் அடுத்த வருஷமாவது என்னோட எழுதற ஸ்பீட் தடையில்லாம வருதான்னு பார்ப்போம்.

ஒரு சின்ன ரிக்வெஸ்ட் கூட இங்கே நம்ம சைட்ல நிறைய புது ரைட்டர்ஸ், உங்க கம்மண்ட்ஸ் தான் அவங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும், ஒரு ரெண்டு வார்த்தை நிறையோ குறையோ சொன்னா அவங்களுக்கு எழுத ஊக்க சக்தியா இருக்கும்.

கண்டிப்பா பழையபடி கூடிய விரைவில் வர முயற்சிக்கறேன். சில மாதங்களுக்கு slow தான். please and sorry for that.
Take care of your health
 
Dear Mallika Manivannan

I just saw your post about your illness and hospitalization and treatment.
Please Please take care of your health.
நீங்கள் எழுதியபடி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
நீங்கள் வரையும் சித்திரங்கள் மற்றவர்களை விட மிகவும் அழகானவை. அவை அப்படியே தொடர வேண்டுமானால் நீங்கள் நன்றாக-உடலும், மனமும், உணர்வுகளும் ஒத்துழைக்க வேண்டும்.
நான் உங்களுக்காக கடவுளை பிரார்த்திக் கொள்ளுகிறேன்.
நீங்கள் அந்த வைத்தீஸ்வரனையும் உங்கள் வணக்கங்களில் சேர்த்துக் கொள்ளுங்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

God Bless You with speedy recovery and return to healthy life.
 
Hi Malli Babe, it is very nice to see an announcement about you and your health. First take good care of yourself. As you said, you are the wall, so be mindful about it. I am very sure we all can all wait for you...... to get more of your writing
Ever loving Anubala
 

Latest profile posts

hi frnds... all the episode links of S.B Nivetha's Aval nan payanm are edited...
ஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
Fans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
Heart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி
படுத்து தூங்கிட Five Star-உ
பருவ பாடமோ Tin Beer-உ
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ
Fifty Kiss-உ தான் என் Share-உ
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா
Anaivarukkum iniya saraswathi pooja andayuda pooja nal vazhththukkal.
Anaivarukum aayuda poojai and saraswathi poojai nal vaazhuthukkal
இனிய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துகள் நட்புகளே

Sponsored