Epi 1

Advertisement

Lava_iin

Writers Team
Tamil Novel Writer
விண் 1 :

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அதே போல் மனிதர்கள் கண்டறியாத நிறையவே இந்த உலகில் இருக்கிறது.

பால் வழி விதி மண்டலம் என்று அழைக்கப்படும் மனிதர்கள் வாழும் புவியில் இருந்து எதிர் திசையில் அந்த மாயலோகம் என்று அழைக்கப்படும் கிரகம் இருந்தது.

அது மனிதர் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்து காட்சி அளித்தது. தேவலோகம் என்று மனிதர்கள் என்னும் வகையில் இருந்தது.

நீரினால் ஆன நிலப்பரப்பு செந்தனலாய் பாய்ந்து ஓடும் நதிகள் , மஞ்சள் நிறத்தில் அக்னீ பிழம்பாய் வழியும் அருவிகள் மனித இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு கிரகம் என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு மனிதர்களை போல் காட்சி அளிதார்கள். அதோடு அவர்கள் அனைவருக்கும் சக்திகள் இருந்தன சிலருக்கு நீரை கட்டு படுத்தும் சக்தி சிலருக்கு காற்று , சிலருக்கு நெருப்பு அவர்கள் சக்திகள் போல் அவர்களின் கண்களில் வேறுபாடு இருந்தது நீரை கட்டுப்படுத்துவோர்க்கு நீல நிற கண்களும் , காற்றுக்கு பச்சை நிற கண்களும் , நெருப்புக்கு சிவப்பு நிற கண்களும் என இருந்தது.

அந்த கிரகத்தின் அரசன் குகிட் என்படுபவர் அவர் மனைவி அனி இவர்களுக்கு மூன்று செல்வங்கள் இருந்தது. மூத்தவன் டெசிட் காற்றை கட்டு படுத்தும் சக்திகள் இருந்தது. அவன் மனைவி சிம்சி நெருப்பை கட்டுப்படுத்தும் சக்திகள்.இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் ஜிம் தந்தை போல் காற்று சக்தி கொண்டவன்.

இரண்டாவது இஷித் நீல நிற கண்கள் கொண்ட இவன் நீரின் அரசனாகவே இருந்தான். நீரை கொண்டு அனைத்து மாயங்களையும் செய்து விடுவான். ஒரு துளி நீர் அவனிடம் இருந்தால் போதும் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில்.

மூன்றாவது ஹானி நெருப்பு சக்தி கொண்டவள்.

அந்த மொத்த கிரகத்தையும் கட்டு படுத்தும் சக்தி அங்கு ஒளி அளிக்கும் அந்த உயிர் க்ரிஸ்ட்டல் எனப்படும் அந்த கல்லில் இருக்கிறது.

அவர்களின் மொத்த சக்தியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த க்ரிஸ்ட்டல் ஒருவேளை அது இல்லை என்றால் அனைவரின் சக்தியும் கட்டுக்குள் இல்லாமல் அவர்கள் கிரகமே அழிந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த அசம்பாதிமும் நடந்தது அவர்கள் கிரகத்தை சேர்ந்த ஒருவன் அவர்களின் கிரகத்தின் ரகசியங்களை வெளியிட அதனால் அவர்கள் அவனை கிரகத்தை விட்டு ஒதுக்கி வைக்க அவன் அந்த க்ரிஸ்டலை அழித்துவிடுவான் வேறொரு கிரகத்தை சார்ந்தவர்களை வைத்து .

அந்த க்ரிஸ்டலின் மாதிரி இருந்தால் கூட அதை வைத்து இன்னொரு க்ரிஸ்டலை அவர்கள் சக்தி கொண்டு உருவாக்க முடியும் ஆனால் அவர்களிடம் அது இல்லை ஒரே இடத்தில் இரண்டு க்ரிஸ்ட்டல் இருந்தால் அவர்கள் அனைவரும் சக்தி இழந்து விடுவார்கள் அதனால் அதை அவர்கள் உருவாக்க வில்லை .

ஆனால் இப்போது அதை எடுத்து சென்றவன் அழித்து விட என்னவென்று புரியாத ஒரு நிலையில் அந்த கிரகவாசிகள் இருந்தனர்.

அந்த க்ரிஸ்ட்டல் இல்லாததுனால் அவர்கள் கிரகத்தை சார்ந்த சிறுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விட்டு கொண்டிருக்க அந்த க்ரிஸ்ட்டல் வரும் வரை அங்கு நீர் சக்தி உள்ளவர்கள் தங்கள் சக்தி கொண்டு ஒரு க்ரிஸ்ட்டல் போல் ஒன்றை தயாரித்து வைத்தனர் ஒரு மாத கால அவகாசத்திற்குள் அந்த க்ரிஸ்ட்டல் வைக்க வில்லை என்றால் அவர்கள் கிரகமே அழிந்துவிடும் என்பதோர் சூழ்நிலை.

அச்சூழ்நிலையை எவ்வாறு கை ஆள்வது என்று அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது அந்நாட்டின் இளவரசி ஹானி அதே போல் ஒரு க்ரிஸ்ட்டல் பால் வழி கிரகம் என்று சொல்ல படும் மனிதர்கள் வாழும் மண்டலத்தில் உள்ள தீவில் இருப்பதை கண்டறிந்தாள்.

ஆனால் அதை அடைவது மிகவும் சிரமமான காரியம் அங்கு உள்ளவர்கள் அந்த க்ரிஸ்ட்டல் கொண்டு தான் உயிர் வாழ்கிறார்கள் அது இல்லை என்றால் அவர்கள் அழிந்து விடுவார்கள் அத்தோடு அவர்கள் மனிதர்கள் போல் இருந்தாலும் மனிதர்கள் அல்ல.

அவர்களுக்கு மந்திரங்கள் தெரியும் அம்மந்திரங்கள் கொண்டே அவர்களின் ஆயுளை நீட்டித்து கொள்கிறாள். அங்கு நுழைவதே மிகவும் கடினம்.

இங்கு இருப்பவர்களுக்கு சில சக்திகள் இருக்கும் காற்று சக்தி கொண்டவர்களால் நினைத்த நேரம் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும்.

அதே போல் நீர் சக்தி கொண்டவர்களால் தங்களை யார் கண்களுக்கும் புல படாமல் மறைத்து கொள்ள முடியும்.

நெருப்பு சக்தி கொண்டவர்களால் யாரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

இது போன்ற சக்திகளே அவர்களை காத்து கொள்கிறது.

தங்களின் கிரகத்தை காப்பாற்ற பால் வழி மண்டலம் செல்ல அந்த கிரகத்தின் இரண்டாம் இளவரசன் இஷித்தும் அவனுடன் அவன் அண்ணனின் புதல்வன் ஜிம்மும் செல்ல தயார் ஆனார்கள்.

அவர்கள் கிரகத்தில் இருந்து பால் வழி மண்டலம் நோக்கி பயணத்தை துவங்கினார்கள் அவர்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது என்று அறியாமல்.

முழுவதுமாக மூன்று திங்கள் முடிந்து அந்த திங்கள் முடிந்து அந்த தீவில் கால் பதித்தார்கள்.

அந்த தீவு பார்பதற்கு மரங்கள் சூழ காட்சி அளித்தது. ஒரு பக்கம் முழுவதும் மலைகள் " நான் அந்த மேகங்களை தொட்டு தழுவுவேன் " என்று வானுயர்ந்து காட்சி அளிக்க , " நீ வானுயர்ந்து படர்ந்தால் நான் நிலப்பரப்பில் படர்வேன் உனக்கு போட்டியாய் " என்று கடல் தேவி நில பகுதியை தன் நீர் கொண்டு ஆக்ரமித்து இருந்தாள்.

அக்காட்சிகள் பார்க்க இயற்கை அன்னையின் அழகில் இந்திரலோகம் கூட பொலிவு இழந்து விடும் போல்.

அப்பப்பா என்ன ஒரு அழகு என்று அனைவரும் மூக்கின் மேல் விரல் வைப்பது போல் இருந்தது.

வேற்றுகிறக்கவாசிகள் கூட தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றும் தீவு.

அங்கு வைர வைடூரியம் இல்லை , செல்வ செழிப்பினால் ஆன கோட்டை இல்லை அதை ஆளும் மன்னன் இல்லை , ஆனால் முற்றுமுழுதாக பிரம்மன் தன் படைப்பை நிறைவேற்றி உள்ளான் என்றால் அது அங்கு தான்.

அங்கு ஆட்சி செய்யும் ராணி என்றால் அவள் இயற்கை அன்னையே அந்த இடத்தை பார்ப்பவர்கள் மனதை பறிகொடுத்து விடுவார்கள்.

இது வரை இப்படி ஒரு சொர்க்க பூமி இருந்ததும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை என்று நினைக்க தோன்றும்.

ஆனால் அந்த சொர்க்க வாசல் தான் அங்கு திறக்காமல் இருந்தது. ஆம் அவர்கள் இருவரும் அதன் அழகில் மயங்கி நின்றாலும் உள்ளே செல்ல முயற்சி செய்யும் போது அவர்களால் அந்த மந்திரத்திலானா திரையை நீக்கி உள்ளே பிரவேசிக்க முடியவில்லை.

மீண்டும் மீண்டும் இருவரும் முயற்சி செய்து பார்த்தனர் "ம்கூம் உள்ளே போக முடியல ஜிம் " என்றான் இஷித்.

"இஷி இன்னொரு பவர்ஸ் யூஸ் பண்ணலாம் " என்றான் ஜிம். அவர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும் அவர்களால் ஒருவரின் மன எண்ணங்களை துல்லியமாக அறிய முடியும்.

" வேற வழி இல்லை அத தான் யூஸ் பண்ணனும் ஜிம் " என்றவன் ஜிம்மின் உதவியுடன் திரைக்கு இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றார்கள். ஜிம்மிற்கு அவன் தந்தை போல் காற்று சக்தி என்பதால் அவன் நினைக்கும் இடத்திற்கு ஒரு இடத்தில் இருந்து செல்ல முடியும்.

உள்ளே சென்றவர்கள் அந்த இடத்தின் அழகில் மீண்டும் தங்களை மறந்து நின்றார்கள்.

அங்கு உள்ள மலைகளில் அருவியாய் பொழிவது போல் இருக்க , அந்த அருவியின் ஆர்பாட்டமான பாட்டுக்கு மரங்கள் தங்கள் இலைகளை அசைத்து மெருக்கேற்றுவது போல் அதற்கு தங்களால் முடிந்தளவு இசை வாத்தியங்கள் போல் சத்தமிட்டு ஆர்பரிக்க அங்கு ஒரு இனிமையான இயற்கையால் ஆன இசைகச்சேரி நடந்தேறியது.

அங்கு பறந்து செல்லும் பறவையில் இருந்து ஊர்ந்து செல்லும் பூச்சிகள் கூட அதனை அழகாக மயக்கம் கொள்ளும் வகையில் இருந்தது.

அவர்களின் மனம் அங்கேயே லயந்து இருக்க தங்கள் அருகில் கேட்ட காலடி ஓசையில் நினைவு மீண்டவர்கள். உடனே சுதாரித்த இஷித் " ஜிம் இங்க வா " என்றவன் தங்கள் இருவரையும் சேர்த்து மறைத்து கொண்டான்.

அப்போது அந்த பக்கம் காட்டு வாசிகள் போல் உடைகள் அணிந்து வந்தவர்கள் தங்கள் மந்திர சக்தி மூலம் விழும் அருவிக்குள் உள்ளே புகுந்தார்கள் .

அவர்களை பின்தொடர்ந்து இஷித்தும் ஜிம்மும் மறைந்த வாகிலே உள்ளே நுழைத்தார்கள்.

அப்போது அவர்கள் பேசுவது இஷித், ஜிம் இருவருக்கும் கேட்டது. " ஹே சீக்கிரம் போனும் அப்போ தான் நமக்கு எந்த பிரச்சினையும் வராது இது மட்டும் அந்த இளவரசிக்கு தெரிஞ்சுச்சு நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு " என்று ஒருத்தி சொல்ல " ஏய் அவ நம்ம தோழி தாண்டி பார்த்துக்கலாம் " என்று ஒருத்தி சொல்ல அதற்கு இன்னொரு பெண் " நம்ம நாட்டு விஷயத்துல மட்டும் அவ தோழியும் இல்ல இளவரசியும் இல்ல தளபதி மட்டும் தான் அவளோட பொறுப்ப அவ சரியா நிறைவேற்றுவா " என்று அவர்கள் நடந்து கொண்டு இருக்க மீண்டும் ஒரு திரை வந்தது அதை தங்கள் மந்திரம் கொண்டு திறந்து அந்த திரைக்கு அந்த பக்கம் செல்ல அதை பார்க்க ஒரு கோட்டை போல் இருந்தது. ஆனால் அங்கு எல்லாமே மனிதர்கள் டெக்னாலஜி என்று சொல்வார்களே அதே போல் தங்கள் மந்திர சக்தியால் இயக்கி கொண்டு இருந்தார்கள்.

இவ்வளவு ஏன் அதற்குள் நுழைந்த உடன் காட்டுவாசிகள் போல இருந்தவர்களின் உடை பாவனைகள் கூட நவநாகரீக பெண்கள் போல் மாறியது.

இதை எல்லாம் ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர் ஜிம்மும் இஷித்தும்.

இடத்தை பார்க்க அரசர்கள் ஆட்சி செய்யும் கோட்டை போல் இருந்தது ஆனால் மனிதரகள் எல்லாம் நவநாகரீகமாக இருந்தனர். மனிதர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் மன்னர் ஆட்சியும் இக்கலாமும் ஒருங்கு இணைந்து இருந்தால் எவ்வாறு இருக்குமோ அதே போல் ஒரு வித புதுமையுடனும் ஆச்சராயதுடனும் இருந்தது.

உன்னை விட சொர்க்கம் உண்டோ...
உன்னை அளித்து இன்பம் தந்தாய் நீ...
உன்னை அழித்து துன்பம் பெற்றேன் நான்...
மனித மனம் மரித்து மிருகம் உயிர்த்தெழ..
மாண்டது என்னவோ இயற்கையெனும் மன்னவளே....

உன்னில் சேரவா......
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "விண்ணில் உதித்து
உன்னில் சேரவா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இஷானா நீலகண்டன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இஷானா நீலகண்டன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"அர்த்தாங்கினி" என்னப்பா ஆச்சு?
அருமையான கதை பாதியில் அப்படியே நிற்கிறதே, இஷானா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top