Ennai Mayakum Mayavaney-4

Advertisement

vidhyaaj

Well-Known Member
அனைவருக்கும் வணக்கம்....
தாமதத்திற்கு மன்னிக்கவும்... அடுத்த அத்தியாயம் பதிவிடுகிறேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்...
அத்தியாயம் 4
நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளில் ராதைக்கு சோர்வு தட்டியது... விடாமல் வாயடைத்த சம்பூவிற்கும் களைப்பாக இருந்தது....

அதை வெளிக்காட்டாமல் ராதாவின் முகம் பார்த்தாள்... ஒரு வலக்கரம் இவர்களுக்கு தண்ணீரை குடுத்து விட்டு அமைதியாக இருந்தது...

தாங்க்ஸ் ஆண்ட்டி என்று கூறியப்படி மேலே தோழியை பார்த்து பேச தொடங்கினாள்... இப்படியே எவ்ளோ நாள் இருக்க போற சொல்லு இல்லை இவனையே கல்யாணம் பண்ணிட்டு இங்கையே வரட்டி தட்ட போறியா... இல்லை மாடு மேய்க்க போறியா சொல்லு என்றாள்...
ஏய் என்னடி இப்படி சொல்ற என்று ராதாவின் குரல் நலிந்து ஒலித்தது... ஒன்னு பேசுனா தப்பு இல்லை பேசாட்டியும் தப்பு... நீ எப்ப எதிர்த்து பேசுவன்னு நானும் இந்த எட்டு வருஷமா பாக்குறேன்...

நீ என்னமோ அவன வேண்டாம்ன்னு எங்க கிட்ட சொல்ற ஆனா இங்க பார்த்தா வாய தொறந்து பேசலைன்னா இப்பவே கல்யாணம் பண்ணி வெச்சுற பீல்ல இருக்காங்க...

அவனை மட்டும் நீ கல்யாணம் பண்ணி பாரு அவ்ளோ தான்டி உன்னை தொவைக்கிறது நானாச்சு எங்க இருந்தாலும் வந்து மிதிப்பேன் நியாபகம் இருக்கட்டும் என்று கூறினாள் சம்பூரணம்...

தோழியின் பேச்சு சிரிப்பை வரவழைத்தாலும் உண்மை என்று அவளுக்கும் ஓங்கி உரைத்தது...
ரிசல்ட் வரட்டும்டி நான் பேசுறேன் கவலை படாத என்று கூறினாள் ராதா...ஆமா நீ பேசும் போது கீழ விழுற முத்துக்காக நானும் வெயிட் பண்றேன்டி.... போடி

நீயும் உன் பேச்சும் தண்ணீல எழுதி பெட்டிக்குள்ள தான் பூட்டி வைக்கணும் பார்க்குறேன் அதையும்... ஆனா ரொம்ப டார்ச்சர் பண்ணா கண்டிப்பா எங்கிட்ட வந்துரனும் சரியாடி.... என்று தோழிக்கு மறைமுகமாக தைரியம் ஊட்டினாள்...

அவளின் முகம் பார்த்தவள் சரிங்க ஆபிசர் மேம் கண்டிப்பா உங்கள போய் மறப்பேனா... என்ன இரண்டு கமன்டோவ எனக்கு செக்யூரிட்டிக்கு குடுங்க நான் அப்புறம் பாருங்க எப்படி இருக்கேன்...

ஆமா வாய் கிழிய பேசு இப்ப தான் பார்த்தேனே... என்ன பண்ணனீங்கனு பார்க்குறேன்...
ஆனா என்ன ஆனாலும் நான் இருக்கேன்டி இது எப்பவும் மறக்காத சொல்லிட்டேன்....

யாரையாவது லவ் பண்ணிட்டா கூட பரவாயில்லைடி நீ ஆனா இவன மட்டும் என்னால உன்கூட பக்கத்துல வெச்சு பார்க்க முடியலை...

தயவு செஞ்சு உன் லைப்போட இவங்களை விளையாட விட்டுறாத எல்லாத்துக்கும் தலையாட்டாத... என்று சோபாவில் ராதாவின் மடியில் தலை வைத்து படுத்தாள் சம்பூ... அப்படியே கண்களை மூடியும் கொண்டாள்...

ராதாவிற்கு யோசனையாக இருந்தது... எப்படியும் இவனைத்தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க... இது தலை எழுத்து யாராலையும் மாத்த முடியாது போல...

ஊருக்கே சொல்லி வைச்சுருக்காங்க அத்தை....
இவனோட தான் கல்யாணம்ன்னு இனி யாராவது வந்து இது எல்லாம் மாத்துனா தான் முடியும் என்று சுவற்றில் மாற்றி இருந்த கிருஷ்ணனின் முகம் பார்த்தாள்...

எப்பவும் அவளை பார்த்து சிரிக்கும் பிரம்மை இப்பவும் தோன்றியது... அந்த சிரிப்பினை பார்த்து கொண்டிருந்தவள் மனதில் சஞ்லம் நீங்கி சற்று அமைதிப்பட்டது...

அவளும் அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்... மூடிய விழிகளில் ஒரு ஆண் கரம் அவளை வழுவாக இழுத்தது... அந்த கையின் விரல்கள் மட்டும் அவளின் கவனத்தை ஈர்த்தது....

திடிரென முழித்தவள் மணியை பார்த்தாள் வெறும் ஐந்து நிமிடங்களே கடந்திருந்தது... மறுபடியும் கிருஷ்ணனை பார்த்தாள்.. அப்போதும் சிரித்து கொண்டிருந்தான்...
தோழியை எழுப்பியவள் டைம் ஆச்சுடி எந்திரி வீட்டுக்கு போலையா இருட்டிட்டு வருது பாரு எந்திரிடி கிளம்பு அம்மா தேடுவாங்கடி என்றாள்...

என்னால எல்லாம் போ முடியாது.. இங்கையே படுத்துக்குறேன்... உங்கம்மாவ இட்லி பண்ண சொல்லுடி பசிக்குது என்றாள்...

திருந்தவே மாட்டடி அட்லீட்ஸ் போண் போட்டு சொல்லிடுடி அம்மா உன்னை எதிர் பார்க்காம இருப்பாங்கள போ பண்ணு என்றாள்...

அதையும் நீயே சொல்லுற டைம்ல பண்ணிருக்காலம்... ஏன்டி தொந்தரவு பண்ற நீயே சொல்லிரு டார்லிங் நீ கூப்பிட்டா சைலன்ட் ஆயிடுவாங்க... காலைல சாப்பாடு திட்டு வாங்காம சாப்பிடலாம் போ டியர் என்றாள் சம்பூரணம்...
அப்படியே அட்டாக்க கூப்பிட்டு சொல்லு அவளும் வரட்டும் இங்கையே படுத்துக்கலாம் என்றாள்...

ஆமா அவ வந்து இங்க மயங்கி விழுகாம இருந்தா சரி... அவளையும் கூப்பிடுறேன்டி வரட்டும் ஒழுங்க தூங்கினா சரி இல்லை பேசி சிரிச்சுட்டு இருந்தோம் கண்டிப்பா அம்மா கிட்ட திட்டு வாங்குவோம்...

அம்மா எதுவும் பேசல கோபத்துல இருக்காங்கன்னு நினைக்கிறேன் எல்லாம் உன்னால தான்... பாரு பெரியவங்களுக்கு மரியாதை குடுக்காம நடந்துகிறேன்னு திட்ட போறாங்க பாத்துட்டே இரு....

நம்ம கூட சேர்ந்து அவளும் வாங்கட்டும் கொஞ்சம் விளையாடலாம் ரிசன் சொல்லாம சும்மா இருக்கலாம் என்ன பண்றான்னு பார்ப்போம் என்றாள் ராதா...
தோழியின் முகத்தை பார்த்து தலை அசைத்தவள் அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தாள்... இங்க இருக்கிற வரை எப்படியும் எல்லாமே சரி பண்ணிட்டு தான் போகனும்...

இவ அத்தை எப்படியும் அடங்குற ஆள் கிடையாது... நாம அடங்க வெச்சுட்டு தான் போகனும் விடவே கூடாது... இது இப்போதைக்கான ரிலீப் தான் முடிவு கட்டனும்.... நாளைக்கு அப்பா கிட்ட இந்த ரகு பத்தி பேசனும்...

எப்படியும் அவனை எதாவது பண்ணாம கிளம்ப கூடாது பார்த்துக்கலாம் வருவது வரட்டும் என்ற எண்ணத்தோடு சம்பூ மறுபடியும் சோபாவில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.....

ராதாவிற்க்கும் அதே எண்ணம் தான் இருந்தாலும் இனி அவ ஐபிஎஸ் ஆகனும் அது வரைக்கும் இந்த டென்சன் எல்வாம் குடுக்க கூடாது.....
எப்படியும் சமாளிக்கனும்
சமாளிச்சு தான் ஆகனும் யாராரும் இல்லைன்னா எப்படி நடந்துருப்போமோ அப்படி தான் இனி எல்லாமே என்று எண்ணும் போதே கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது...

அவசரமாக துடைத்தவள் சம்பூவின் அம்மாவிற்கு அழைத்து கூறி விட்டு ரம்யா என்னும் அட்டாக்கிற்க்கும் அழைத்து கூறினாள்... இதோ வரேன்டி என்று அவளுக்குமே உற்சாகம் பீரிட்டது....

உள்ளே சென்று அம்மாவிற்கும் இன்னைக்கு இங்கையே தூங்குறாம்மா அவளுக்கும் சமைச்சிருங்கம்மா என்றாள்....

அவள் அம்மா அவளை நிமிர்ந்து பார்த்தோடு சரி என்று மட்டும் தலையாட்டினார்.... சரி தான் எப்ப வெடிக்கும்ன்னு தெரியலையே.....
வெடிச்சா இவளுங்களும் வாங்கனும் தனியா திட்டு மட்டும் வாங்க கூடாது இனி நைட் என்ன பண்ண போறாங்களோ எப்படியும் விடியும் போது தான் தூங்க போறோம் பேசலாம் நிறைய என்று எண்ணிக் கொண்டே வந்தவள்... வாசலில் ரம்யா வீல் என்று அலறிய குரல் கேட்டது

அய்யோ என்ன ஆச்சோ தெரியலையே என்று ஹாலை கடந்து ஓடினாள்.... அதற்கு முன் சம்பூவை பார்த்தாள் அவள் இவளுக்கு முன்னே ஓடியிருந்தாள்.... இப்பவே அலப்பறைய ஆரம்பிச்சுட்டாளே எதுக்கு கத்துனாளோ தெரியலையே போய் பார்க்கலாம் என்று முன் வாசலுக்கு சென்றவள் சம்பூவின் மடியில் மயங்கி இருந்தவளை பார்த்து சிரிப்பாதா அழுவாத என்று பார்த்தாள்....

ஏய் தூக்குடி செமா வெயிட் அதுக்கு முன்னாடி தண்ணி எடுத்துட்டு வா....
எரும எதுக்கு விழுந்தது கேட்கனும் அதுக்கு அப்புறம் இருக்கு இவளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு விழுந்து வைக்கிறா எழுந்ததும் அதுக்காகவே அடிக்கணும்.... நிக்காத போடி என்று விரட்டினாள்...

தண்ணிர் தெளித்து அவளை எழுப்பி காரணம் கேட்டவர்களுக்கு அவள் சொன்ன பதில்...

நாமும் மயங்குவோம்...
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top