Engiruntho vanthaan-2

Advertisement

Kalpasubramanya

Writers Team
Tamil Novel Writer
அடர்வான மரங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்தது அந்த சித்த மண்டபம்.சிதலமைடைந்த நிலையில் இருந்த அந்த மண்டபம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் ஒருவன் சித்தர் ஒருவருக்காக கட்டிக் கொடுத்தது.அவர் சமாதி அடைந்த பிறகு சில காலம் அவரின் சீடர்கள் சிலர் அங்கு வசித்தனர்.அவர்களும் போனப் பின் அந்த இடம் கேட்பாரற்று போனது.இப்போது சிதலமடைந்த நிலையில் இருந்த அதில் பேய் உலவுதாக வதந்தியும் பரவவே அங்கு யாரும் போவதே இல்லை.ஆனால் பயம் என்பதே அறியாத நம் கமலி அங்கே போய்க் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரத்தில் அங்கே வந்தடைந்த கமலி நிதானமாக அதன் உள்ளே போனாள்.வெளிச்சத்திலிருந்து வந்ததால் அங்கிருந்த இருட்டில் முதலில் சிறிது தடுமாறிய அவளுக்கு பிறகு அங்கே இருந்தது மங்கலாக தெரிந்தது.சிலந்தி வலையும் தூசியும் நிரம்பி இருந்தது.மெதுவாக வலையை நீக்கியவாறு கமலி உள்ளே உள்ளே போனாள்.சுவரில் இருந்த தூசியை தன் தாவணியால் துடைத்தாள்.அங்கே இருந்ததோ மதிப்பிட முடியாத ஓவியங்கள்.ஈசனின் வேறு வேறு வடிவங்கள் அழகான ஓவியங்களாக தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது.

ஓவியங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாக பார்த்தவாறு சென்றவள்,

"அப்பா.... எவ்ளோ அழகா இருக்கு இதெல்லா...இத பாத்து சந்தோஷப்படாம பேய் இருக்கு பிசாசு இருக்குன்னு இந்த ஜெனங்க இங்கே உள்ள வராம இருக்குதுங்க!"என்றவாறு அதை அடுத்த அறைக்கு சென்றாள்.அது ஒரு விசாலமான மண்டபம்.

அங்கே மத்தியில் சென்று பார்த்த கமலி ஆச்சரியமடைந்தாள்.அது ஒரு சிவலிங்கம்.ஆடை மலர் தீபம் நிவேதனம் பக்தர்கள் என எதுவும் இல்லாமல் ஏகாங்கியாக வீற்றிருந்தார் ஈசன்.பக்தியோடு அவரை வணங்கியவள் அங்கிருந்து வெளியே வந்தாள்.

சுவரின் மறுபுறம் இருந்த ஓவியங்களை பார்வையிட்டவள் அதிலிருந்த ஒரு ஓவியம் அவளை மிகவும் கவரவே அதை மெதுவாக தடவினாள்.அவ்வளவுதான் அவளுக்கு தெரிந்தது.சுவரிலிருந்து குதித்தது போல் ஒரு உருவம் கமலியின் மேல் விழுந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதுவரை எதற்கும் பயப்படாத கமலி,
"ஐயோ! ஐயோ!பேய்!பேய்! பிசாசு!அம்மா!உன் பேச்ச கேக்காம வந்து பேய்கிட்ட மாட்டிக்கிட்டேனே! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!"என தொண்டை கிழிய கத்தினாள் கமலி..

"பெண்ணே!பெண்ணே!பார் என்னை நான் பேய்யுமில்லை பிசாசுமில்லை மனிதன்தான்...கண்ணைத் திறந்து பார்!"என்றான் அவன்.

அவன் பேச்சில் சிறிது கண்களைத் திறந்த கமலி தன் எதிரில் இருந்தவனைப் பார்த்து விழி விரித்தாள்.எதிரில் இருந்தவன் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக இருந்தான்.ஆனால் அவன் உடை மட்டும் வேறு விதத்தில் இருந்தது.பழைய படங்களில் வரும் ராஜர்கள் அணியும் உடை போல் இருந்தது.அவள் பயத்தை போக்கிக் கொள்ள எதிரில் இருப்பவனோடு பேச முடிவு செய்தாள் கமலி.

"நீ... நீங்க யாரு?"என்றாள் நடுங்கிய குரலில்.

"சொல்கிறேன்.. ஆனால் அதற்கு முன் முதலில் நீ யார்?இது எந்த ஊர்?என்று சொல்...."என்றான் அவன்.

"என் பேரு கமலி..இது நந்திபுரம் கிராமம்...ஆனா நீங்க யாரு சொல்லுங்க?"

"நான் ஆதித்த சோழன்.. இந்த நாட்டின் இளவரசன்.."

"என்ன நீங்க இளவரசனா?"எனக் கேட்ட கமலி அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள்.

"பெண்ணே! இதில் நகைக்கும்படி என்ன இருக்கிறது?"

"பின்ன என்ன..ராஜாவாம்! இளவரசராம்! இந்த காலத்தில ஏது ராஜா?ஏது இளவரசர்?என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சீங்களா?எங்கயோ நாடக கொட்டகாய்லேந்து பாதில வந்திட்டு இளவரசருன்னு பொய் சொல்றீங்களா?"

"பெண்ணே!நீ என்ன சொல்கிறாய்? நான் நிஜமாகவே இளவரசன் தான்....என் தந்தை மகாராஜா அநாபய சோழன்.இப்போதாவது தெரிந்ததா?"

"இப்போ ராஜாவே இல்லேங்கறேன்... மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றீங்களே!"என்றாள் கமலி பொறுமை இழந்த குரலில்.

"ராஜரே இல்லையா?!இது எந்த ஆண்டு?"

"ஆண்டா?ஓ....வருசமா!ரெண்டாயிருத்து பதினெட்டு..."

"என்ன?!!!! இரண்டாயிரத்து பதினெண்டா!!! அத்தனை வருடங்களா சென்றுவிட்டது?!!!ஐய்யகோ! இப்போது என்ன செய்வது? நான் எப்படி திரும்பி போவது?"என படபடத்தான் அவன்.

"என்ன திரும்பி போறதா? எங்க போனும் உங்களுக்கு?உங்க ஊருக்கு ரயில்லையோ பஸ்லியோ போக முடியாதா?"

"அப்படி என்றால்?"

"அது கூட தெரியாதா?!ஒரு இடத்திலேந்து இன்னூரு இடத்துக்கு எப்படி போவிங்க?"

"குதிரையில்...என் குதிரை பலராமன்... எவ்வளவு வேகமாக போகும் தெரியுமா?!"

"குதிரையா?!அடக் கடவுளே! அப்படின்னா நீங்க நெஜமா இளவரசரா?"

"ஆமாம் இப்பொழுதாவது நம்பிக்கை வந்ததா? இன்னுமொரு சாட்சி காட்டுகின்றேன் பார்!"என்றவாறு தன் கையிலிருந்த மோதிரத்தை எடுத்துக் காட்டினான்.

நவரத்தினங்களால் மின்னிய அந்த மோதிரத்தை கண்கள் அகல பார்த்த கமலி அதன் பின்புறம் இருந்த புலி சின்னத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"இப்ப உங்கள நம்பறேன்.ஆனா நீங்க இந்த காலத்துக்கு எப்படி வந்தீங்க? விசித்திரமா இருக்கே!"

"அது ஒரு பெரிய கதை.என் தந்தை அநாபய சோழர் வீராதி வீரர்.எத்தனையோ போர்க்களங்களை கண்டவர்.சோழ ராஜ்ஜியத்தை பெருமளவு விஸ்தரித்தவர்.என் தாய் பூங்கோதை நாச்சியார்.மங்கையருள் மாணிக்கம் அவர்.அடுத்து என் தனயன் விஜயராஜன்.அவனும் வீராதி வீரனே.வெளி பகைவர்கள் குறைத்திருக்கும் இந்த காலத்தில் உள் பகைவர்கள் சிலர் புதிதாக எழுந்திருக்கிறார்கள்.அவர்களில் முக்கியமான பகைவன் சேனாதிபதி ஜெயசிம்மன்.அவன் மேல் பல நாளாக எனக்கிருந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவனின் ரகசிய மாளிகையை சோதனையிடப் போனேன்.ஜெயசிம்மன் தந்திரம் மட்டுமல்ல.மந்திரவாதத்திலும் கை தேர்ந்தவன் என கேள்விப்பட்டிருக்கிறேன்.அவன் அறையை சோதனையிடும் போது மிகவும் மணமான ஒரு திரவத்தை முகர்ந்தேன்.அவ்வளவுதான் எப்படி ஆனது என்று தெரியாமலே இங்கே வந்து விழுந்து விட்டேன்."

"அச்சோ!அப்படியா ஆயிடுச்சு?!இப்ப என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியலையே.இத சொன்னா யாரும் நம்ப மாட்டாங்களே!"என்றாள் கமலி கவலையோடு.

"பெண்ணே நீ என்னை நம்பி எனக்கு உதவுவாயா?"என்றான் ஆதித்த சோழன் எதிர்ப்பார்ப்போடு..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கல்பாசுப்ரமண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top