Enai Meettum Kaathalae - Final

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
சவி டியர் கதையின் ஆரம்பமும் சரி முடிவும் சரி அருமை, பிரணவ் மாதிரியான கதாபாத்திரம் வெகு அபூர்வம் ரதி குழந்தையே தான் கோபத்திலேயும் சரி அன்பு காட்டுவதாக இருந்தாலும் சரி, நன்றி சகோதரி நல்ல கதையை தந்தமைக்கு.
 

n.palaniappan

Well-Known Member
Hi Makkaley,

Vanthiten last epi poda vanthiten... Thank you for the continuous support my dears... :):):)

Here is the episode of Enai Meettum Kaathalae Final

Final

Read and share your comments my dears... Kavithai ubayam - @semao @ Meera Karthik


Saveetha Murugesan:)
எல்லா முடிச்சும் பிரிஞ்சாச்சு. முகுந்தன் முடிச்சு so nice.
 

Sasideera

Well-Known Member
சகோதரி சவீதா முருகேசனுக்கு

உங்கள் எழுத்தில் நான் படிக்கும் நான்காவது நாவலான எனை மீட்டும் காதலே பற்றி சில வரிகள். பொதுவாக காதல் என்பது திருமணத்துடன் முடிவடைவது என்பது பொதுவான திரைத்துறை கருத்து. ஆனால் உண்மையில் காதல் என்பது அன்பு, விட்டுகொடுத்தல், சகிப்பு தன்மை என்று திருமணத்துக்கு பின் வருவதே உண்மையான காதல் ஆகும். அப்படிபட்ட காதலை சார்ந்தது இந்த நாவல். ஒரு நல்ல காதல் நாவல் சற்று சஸ்பென்சுடன் படிக்க அருமையாக இருந்தது. கண்டதும் காதல் என்பர்கள். ஆனால் ஹீரோயின் மனோபாரதி, ஹீரோ பிரணவ் கண்டதும் காண்டகி, பின் அவன் காதலை உணர்ந்து அவன் மேல் காதல் கொள்கிறாள்.

ஹீரோ கிருத்திக் பிரணவ் அவளை கண்டு, பின் அவள் குழந்தை குணம் கண்டு அவள் மீது காதல் கொள்கிறான். அவள் சுழ்நிலை கைதியாகும் போது அவளின் அப்பாவின் ஆசைபடி, அவனின் வீட்டுக்கு தெரியாமல், அவளுக்கே புரிந்தும் புரியாமல் திருமணம் செய்கிறான். பின் அவன் மீது அவளுக்கு உள்ள காதலை அவளுக்கே உணர்த்தி, அவள் காதலில் கரைந்து நட்பின் துணையோடு உறவுகளுடன் சேர்கிறான். நாவலை ரமணிஅம்மா ஸ்டைலில் ஆரம்பித்து ராஜேஷ்குமார் ஸ்டைலில் முடித்துயிருக்கிறீர் சகோதரி.


ஆசைப்படுவதற்கு!
தகுதி தேவையில்லை -அதை
அடைவதற்கான தகுதியை!
உருவாக்கிக்கொள்..
என பிரணவ் தனது கனவு வேலை சிபிஐ அடைய பல தியாகம் செய்து உழைக்கிறான்

பொறாமைச்செடியில்
பூக்கும் இதயம்
அன்பை அழிக்கும்
மணமே வீசும்...!
என பொறாமை பட்டு பின் பொறுமை கொண்டு ஹீரோவுடன் இணைக்கிறாள் மனோபாரதி


தொலைவில் நின்றாள்

அருகில் வந்தாள்
தொலைந்து போனேன்
என அவளில் உள் தொலைகிறான் பிரணவ்

ஆனால் விரும்பி விலகினாலும்!
விரும்பிவிட்டு
விலகினாலும்!

வலிகள் இருவருக்கும்
என மனோவின் சந்தேகசண்டையால் பிரிகிறார்கள் இருவரும்


தூரங்களால்
விலகி இருந்தாலும்
உள்ளத்தால்
நெருங்கி இருப்பவன் காதல் கணவன்
என உள்ளதால் இணைந்து உடலால் பிரிகின்றார் இருவரும்.


பெண்கள் எப்போதும்
அடிமைகள் தான்

ஆனால்
அதிகாரத்திற்கல்ல அன்புக்கு
மட்டுமே என அன்பால் இணைகிறார்கள் இருவரும்.


ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசல் வழி வந்தால் சந்தோஷம் பின் வழியாக செல்லும் என்ற கருத்தையும், சந்தேகக்கோடு அது சந்தோஷ கேடு என்ற கருத்தையும் அழமாகவும்,அழகாகவும் சொல்கிறது இந்த நாவல்.

ஒரு குடும்பம் ஒரு குழந்தை என வளரும் குழந்தைக்கு சற்று மனதைரியம் குறைவு என்பது உளவியல் கூற்று. அதை மெய்பிப்பது போல் மனோவின் பாத்திரபடைப்பு அருமை சகோதரி


நட்புக்கு முகுந்தன் – மீரா, ராகவ் – கிரண், ஷாலினி, ரம்யா உறவுக்கு பிரகாஷ் – மனோ கிருஷ்ணன்பெரியப்பா – மரகதம் பெரியம்மா, மாலதி – வெங்கடேசன், குமாரசாமி – ஜானகி, சிவமுருகன் – அபிராமி, வில்லன்கள் ஷ்யாம் கணேஷ், ஸ்ரீதரன், கார்த்திகேயன், நளினி, மற்றும் அந்த தன்னம்பிக்கை பெண் லதா நவநீத், சரவணன் – சசி, அர்ஜூன் - ஹேமா என சில மனதை கவரும் முக்கிய பாத்திரங்கள்.

நாவலில் மனதில் பதித்த சில இடங்கள் & கருத்தை கவர்ந்த கருத்துகள் சகோதரி.

வம்பு பேசும் பெண்களுக்கு அந்த சவுக்கடி பதிவு3 அருமை

ராகவ், முகுந்தன் இருவரும் அருமை பாத்திரங்கள்.

அவ்வப்போது மனதை திறந்து கொட்டிவிட்டால், மனதில் அழுத்தம் இருக்காது

சுயபச்சாதாபம் நம் மனசை பலவீனப்படுத்தும்.

மனித மனம் விசித்திரமானது, அதை பலமாக்குவதும், பலவீனமாக்குவதும் எண்ணங்களும் அதனை ஒட்டியசிந்தனைகளுமே.


வெற்றி என்பது பல தோல்விகளை உள்ளடக்கியது.

ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பா இருக்கிறவன் பாதுகாப்பா அவளை உணர வைக்கிறவன் தான் நல்ல கணவன்.

பொறுமை எந்த அளவோ அதைவிட கோபம் அதிகம் உள்ள மனோவின் அதிகபட்ச கோபம் பிரணவிடம், பிரணவின் அதிகபட்ச பொறுமை மனோவிடம். உரிமை உள்ள இடத்தில் தானே பேச்சும், கோபமும் வரும் என்பதை இறுதியில் அறிந்த மனோ, தைரியமும் துணிவும் பெண்களுக்கு முக்கியம் என உணர்கிறாள். அதேபோல் சொல்லவேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வது தான் எப்போதும் நல்லது என பிரணவுக்கு உணர்த்திவிடுகிறாள்.


நெஞ்சில் ஊறும் உன் நினைவுகளே
தஞ்சமென என் பொழுதுகள் கரைகின்றன..
பால் நிலவாக குளிர்விக்கும் நினைவுகள்
பகலவனின் தகிப்பையும் நெஞ்சில் மூட்டிச் செல்கின்றன..
உன் அருகாமைக்கான என் ஏக்கம்
நீ அறியாததல்ல என்னுயிரே
விரைந்து வந்துவிடு
விதியின் தீர்ப்பை மாற்றி அமைப்போம்

கவிதை சகோதரி ஆர்த்தி ரவி

என இருவரும் உணர்ந்தது இணைகிறார்கள். சொல்லதா காதல் செல்லாது எனவும், வாழு, விட்டு கொடுத்து வாழவும் பழகு என இந்த நாவல் உணர்த்துகிறது. மனோபாரதியை மீட்டது அவனின் காதல், பிரணவை மீட்டது அவளின் காதல் என எனை மீட்டும் காதலே இந்த நாவல்.



அருமை சகோ அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top