Eid ul Adha- Bakrid

Advertisement

fathima.ar

Well-Known Member
*பக்ரீத் - ஈகை(தியாக) திருநாள்*

இறைவனின் தூதரான இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

*நடந்தது என்ன ?*

இப்ராஹிம்(அலை) அவர்கள், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.

நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி சாரா(அலை) மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள்.

*இறைவன் செய்த சோதனை*

இப்ராஹிம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு இறைவன், இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.

*அல்லாஹ்வுக்காக தன்*
*மகனை தியாகம் செய்த நபி*

இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம்(அலை), அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரீல்(அலை) என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து, மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

*பெருநாளில் நாம் செய்வது*

இப்ராஹிம்(அலை) அவர்கள் இறைவனுக்காக செய்ய துணிந்த இந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில், சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்களால் முடிந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு,

அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖➖➖
யா அல்லாஹ், எங்கள் வணக்க வழிபாடுகளை உனக்காகவே மட்டும் செய்யும் மனதை (இஹ்லாஸ்-மனத்தூய்மை) தந்தருள்வாயாக... ஆமீன்
 
Joher

Well-Known Member
பக்ரீத் வாழ்த்துக்கள் fathi........

ஆனால் நாளைக்கு தானே????? ஆடு என்னோட பங்கு பார்சல் பண்ணிடு.......

சாரா இஸ்மாயேல் எங்களுக்கும் உண்டு.......
 
Sasideera

அந்த ஆட்ட நல்லா பெரிய பீசா போட்டு பிரியாணி பண்ணி எனக்கு அனுப்பி வைங்க... கூடவே மட்டன் பிரை, மட்டன் சுக்கா, கிரேவி, இன்னும் வேறு கூட மட்டனில்.... :p:p
 
எனக்கு மட்டன் கட்லெட் :love::love::love:
 
Rukmani Sankar

Well-Known Member
*பக்ரீத் - ஈகை(தியாக) திருநாள்*

இறைவனின் தூதரான இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

*நடந்தது என்ன ?*

இப்ராஹிம்(அலை) அவர்கள், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.

நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி சாரா(அலை) மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள்.

*இறைவன் செய்த சோதனை*

இப்ராஹிம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு இறைவன், இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.

*அல்லாஹ்வுக்காக தன்*
*மகனை தியாகம் செய்த நபி*

இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம்(அலை), அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரீல்(அலை) என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து, மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

*பெருநாளில் நாம் செய்வது*

இப்ராஹிம்(அலை) அவர்கள் இறைவனுக்காக செய்ய துணிந்த இந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில், சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்களால் முடிந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு,

அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖➖➖
யா அல்லாஹ், எங்கள் வணக்க வழிபாடுகளை உனக்காகவே மட்டும் செய்யும் மனதை (இஹ்லாஸ்-மனத்தூய்மை) தந்தருள்வாயாக... ஆமீன்

Eid Mubarak to all Muslim friends ...
Enjoy your day with your family members ..

Enna pannalu, bai veettu briyani mathri varamatenguthu pa.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top