Eid Mubarak

Advertisement

Gomathi1986

Well-Known Member
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.
குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்புக் கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீகப் பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்
இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. இரு பெருநாள் தினத்திலும் மகிழ்ச்சியுடன் களிக்க இறைவன் வழி செய்துள்ளான். அதே தினத்தை வீண் விளையாட்டிலோ, வீண் கழியாட்டத்திலோ கழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெருநாள் தினத்தில் முக்கியமாகப் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் தெளிவு படுத்தியுள்ளது.

தக்பீர் சொல்லல். பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகைவரை உள்ள நேரங்களில் ஈதுல் பித்ர் தினத்தில் சொல்வது சுன்னத்தாகும்.


இரு பெருநாள் இரவுகளிலும் அதிக நன்மையில் ஈடுபடுதல், உதாரணமாக அதிகமாக சுன்னத்துத் தொழுதல், அல்குர்ஆன் ஓதுதல், திக்ர், ஸலவாத்துக்கள் ஓதல், துஆக் கேட்டல் என்பன.

குளித்து சுத்தமாகிக் கொள்ளல் (நிய்யத்து அவசியம். ஈதுல் பித்ர் சுன்னத்தான குளியை நிறைவேற்றுகிறேன்)

புத்தாடை அணிதல், புத்தாடை இல்லாவிட்டால் சுத்தமான அழகிய ஆடை அணிதல்.

ஆண்கள் மணம் பூசிக் கொள்ளல். வெளியில் செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மணம் பூசுதல்.

இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்.

ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்தல்.

பெருநாள் தொழுகையிலும், குத்பாவிலும் கலந்து கொள்ளல்
ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு போத்தம் பழம் ஆகியவற்றைத் தர்மமாகக் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

பெருநாள் வாழ்த்துக்கள்
Eid Mubarak Fathi....
 

Manimegalai

Well-Known Member
ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள் fathi..
நம் தளத்தில் உள்ள இஸ்லாம்
சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.
சசி சொல்ற மாதிரி
இன்ஷா அல்லா
சுபஹான் அல்லா:love:
தான் தெரியும்
ஜோதா அக்பர் உபயம்.;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top