Chicken sinthamani

Advertisement

Manga

Well-Known Member
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

சிக்கனை விருப்பதோரை விரல் விட்டு எண்ணிடலாம்.. அதில் நானும் ஒருத்தி.. ஆனால் சமைக்க பிடிக்கும்.. பிறருக்கு செய்துகொடுக்க பிடிக்கும்.. ஆக சிம்பிளா செய்யக்கூடிய இந்த சிக்கன் சிந்தாமணி ரெசிபிய உங்களோட பகிர்ந்துக்கிறேன்..


தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 kg

சின்ன வெங்காயம் - 300gm

சிவப்பு மிளகாய் வத்தல் - 200gm (உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிடவும்...)

உப்பு - தேவையான அளவு

சீரகம் - 2 ஸ்பூன் (எண்ணெய் விடாது லேசாய் கடாயில் வறுத்து பொடித்துகொள்ள வேண்டும்.)

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

சமையல் எண்ணெய் - 200 ml

மல்லித்தளை & புதினா - ஒரு கைப்பிடி அளவு


செய்முறை

சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி, மல்லி புதினா சேர்த்து அதனோடு விதைகள் நீக்கிய மிளகாய் வற்றலையும் சேர்த்து , சின்ன வெங்காயமும் சேர்த்து வதக்கவும். அடுப்பு சிம்மில் இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. வெங்காயம் பாதி வதங்கியதும் கழுவி வைத்த சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் எல்லாம் கடாயில் சேர்த்து சிக்கன் வேகும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி சிக்கனை வேக விடவும்..

தண்ணீர் வற்றி, போட்டிருந்த மிளகாய் வற்றல் எண்ணெயிலும் தண்ணீரிலும் வெந்து கரைந்து சிக்கன் நிறமே சிவப்பாய் மாறி எண்ணெய் மிதந்து, சிக்கனும் வெந்து வரும் தருணம் வந்ததும் அடுப்பை அமர்த்திவிட்டு, வறுத்து வைத்திருக்கும் சீரகப் பொடியை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவும்..

சாப்பிடும் போது சூடாக பரிமாறலாம்...



Sis ithai pallipalayam chicken nu solli samaichiruken romba taste a irukkum. Coconut oil or groundnut oil will be even more better for this recipe.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Yummy chicken enga enga.....
Wow ippove senju sapdanum pola irukey... Aaan nethu thana veetla panaga :( suma suma keta adi than vilum...En thala mela orey chicken ah suthudhe..:p:ptry pani paniduvom kuyilamma;);)
Hahah enakum Adey thought thaan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top