Azhagae Azhagae - Ep 8

Advertisement

Kalaarathi

Well-Known Member
நல்லா இருக்கு
அவன் போக்கு புரியல
மீராவுக்கு இனி என்ன
செய்யப் போகிறானோ
மிக்க நன்றி...
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 8

காலையில் விழிப்பு தட்டியதும் எழ முயன்ற மீராவால் முடியவில்லை. கீதனின் கைகள் அவளை சுற்றியிருந்தது. திரும்பி அவன் முகம் பார்த்தவள்¸ அவனருகில் உருவத்தில் தான் ஏதோ கோழிக்குஞ்சு போல் தெரிவதாக உணர்ந்தாள்.

‘சேச்சே… இனி இந்த மாதிரி நினைக்கக்கூடாது. பாட்டி சொன்னதுபோல் எனக்காக பிறந்தவன் இவன்தான் போலும். அதனால்தான் தாராவை பெண் பார்க்க வந்தவன்¸ தன்னை பிடித்திருப்பதாகக் கூறி¸ தாராவிற்கு அவனே மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்து¸ தன்னுடைய ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டான்… ஆனால்¸ இவனுடைய குணம் எப்படி? என்னை எப்படி நடத்துவான்? என்று தெரியவில்லையே…’ என்று அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு¸ ‘இப்படி தூரமான இடத்திற்கு சென்றால் பாட்டியை எப்படி பார்ப்பது?’ என்பதை நினைத்தும் அழுகை வந்துவிட்டது.

தன் அருகில் ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்றவே¸ கண்களைத் திறந்து பார்த்தான் கீதன்.

கண்களைத் திறந்தவன் ஒரு வினாடி தடுமாறிப் போனான். ‘யாரிந்த பெண்? நான் ஏன் இவளை அணைத்து படுத்திருக்கிறேன்? இவள் எதற்காக அழுகிறாள்? ஒருவேளை நான் இவளிடம் ஏதும் பலவந்தமாக நடந்து கொண்டேனா?’ எனப் பலவாறு எண்ணியபடியே எழுந்து அமர்ந்தான். தலை வலிப்பது போல் இருந்தது.

அந்த நேரத்தில் அவனது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசினான். அவனது தங்கை அஸ்வினிதான் அழைத்திருந்தாள். இவன் “ஹலோ” என்றதும்¸ “என்ன அண்ணா¸ இன்னுமா தூங்குறீங்க?” என்று கேட்டாள்.

“இல்லை¸ ஏன்?”

“அண்ணி முழிச்சிட்டாங்களா?” என்று கேட்டாள்.

‘அண்ணியா?’ என்று அப்போதுதான் நினைவு வந்தவன் போல்¸ அருகில் படுத்திருந்தவளைப் பார்த்தவாறு புன்னைகையுடனே “ஆம்” என்று பதிலளித்து அத்தோடு போனை கட் செய்தவன்¸ தன்னை நினைத்து சிரித்தான்.

‘ச்சே…தூங்கி எழுறதுக்குள்ள கல்யாணமானதே மறந்து போச்சு’ என்று நினைத்தவன்¸ “ஏய்” என்று அவளை உலுக்கினான்.

சட்டென எழுந்து அமர்ந்தாள் அவள். அவளிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு¸ அவள் பயந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு¸ “பயப்படாதே… நான் உன் கணவன் தான்ம்மா” என்றான்.

அவள் தன் கழுத்தில் கிடந்த தாலிச்செயினை பிடித்து பார்த்துகொண்டிருப்பதை கவனித்தவன்¸ தனக்கு தோன்றிய அதே உணர்வு போலும் என்றெண்ணி அவளது கையைக் கிள்ளினான். “ஆ!” என்று அலறியவளின் வாயைப் பொத்தினான்.

மிரட்சியாய் பார்த்தவளிடம்¸ “கனவான்னு தானே பார்த்தே?” என்று கேட்டான்.

அவள் “ஆம்” என்று தலையாட்டவும்¸ “இது உண்மைதான் என்று புரிய வைக்கத்தான் அப்படி…” என்று சொன்னவன்¸ “ஏன் அழுதாய்?” என்று கேட்டான்.

“என்னால என் பாட்டியை பார்க்காமல் இருக்க முடியாது. அவங்களையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்று கேட்டாள்.

நெற்றியை சுருக்கி யோசித்தவாறு¸ “பாட்டிக்கு ஓ.கே.ன்னா எனக்கு ஓ.கே.” என்று கூறியவன்¸ “அப்புறம் அது நம்ம வீடு” என்று சொல்லி குளிக்கச் சென்றான்.

அன்று அவர்கள் கோவை கிளம்பும்முன்¸ பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றவர்கள் பாட்டியையும் தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

அவர்¸ “இல்லம்மா மீரா¸ என்னால என் மகளைவிட்டு இருக்கமுடியாது” என்று அவளிடம் சொல்லிவிட்டு¸ கீதனிடம் “தம்பி¸ மீரா சின்னப் பொண்ணு. அவளை நீங்கதான் நல்லபடியா பார்த்துக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அவர்கள் செல்லும்முன் “என் பேத்தியை மாசம் ஒரு தடவையாவது அழைச்சிட்டு வந்து என் கண்ணில் காட்டுங்க” என்று காமாட்சி சொன்னபோது¸ “இல்லை பாட்டி. இனிமேல் நான் இங்கே அடிக்கடி வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள் மீரா.

வீடடிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார் ஜானகி.

“வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா… உன்னால எங்க வம்சம் தழைத்து விளங்கணும்” என்று கூறி அழைத்துச் சென்றார் அபிராமி.

வீட்டைப் பார்த்த மீரா¸ தங்கள் வீட்டைப் போலவே இந்த வீடும் பெரியதாக இருப்பதாக நினைத்தாள்.

விளக்கேற்ற வைத்து¸ அதன் பின் வீட்டை சுற்றிக் காட்டினாள் அஸ்வினி. வீட்டின் பின்வாசல் அமைப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசலின் இருபுறமும் திண்ணை அமைத்திருந்தனர். பின்பக்க தோட்டத்தை ரசிக்கத் தோதாக இருக்கும் என்று அஸ்வினியிடம் சொன்னாள்.

“ஆமா அண்ணி” என்று சொன்னவள்¸ அவளை அடுத்து கீதனின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ரூமிற்கு வந்ததும்¸ “இந்த அண்ணன் எங்கே போனார்?” என்று தன்னிடமே கேட்டுக் கொண்டவள்¸ “நீங்க இங்கேயே இருங்க அண்ணி¸ நான் உங்க லக்கேஜைக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிச் சென்றாள்.

அறையை நோட்டம் விட்டாள் மீரா. அறை சற்று பெரியதாக இருந்தது. வரவேற்பு அறை போல் அறையின் முன்புறத்தில் சோபா¸ அதனருகிலே கண்ணாடி டீபாய். அதற்கு சற்று தள்ளி சுவரில் பெரிய ‘எல்.இ.டி’ டிவி ஒன்று ஹோம் தியேட்டருடன் பொருத்தப்பட்டிருந்தது. கொஞ்சம் உள்ளே சென்றாள் பெரிய கட்டில் மெத்தை விரிப்புகளுடன் அழகாக இருந்தது.

‘இவர் எங்கே காணோம்?’ என்றெண்ணியவாறே அங்கிருந்த பால்கனியில் நின்று வெயியே தோட்டத்தைப் பார்த்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். கீதன் தான்.

குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி தன் கபோர்டை திறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே சென்று¸ “அண்ணா நீ உள்ளே தான் இருந்தியா? ஓ… வந்ததும் குளித்துவிட்டாயா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் அஸ்வினி. அவர்களது பேச்சை விடுத்து தோட்டத்தை ரசிப்பதில் கவனத்தை செலுத்தினாள் மீரா.

“ஆமா அஸ்வி, ஒரே கசகசப்பு. குளித்ததும் தான் பெட்டர்ரா இருக்கு” என்றான்.

“சரிண்ணா¸ அண்ணி எங்கே?” என்று கேட்டாள் அண்ணனிடம்.

“மீரா கீழே தானே இருந்தாள்” என்றதும்¸ “இல்லையே! நான் இங்கு கூட்டிட்டு வந்தேனே!” என்றாள் தங்கை.

“அப்போ எங்கே போனாள்?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே¸ அஸ்வினி பால்கனியில் நின்ற மீராவைப் பார்த்துவிட்டாள். அப்போது மீரா பால்கனியின் கிரில் கம்பியில் ஏறி நின்று கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணா…! அண்ணி அங்கே என்ன செய்றாங்கன்னு பாரு” என்று அவள் சுட்டிக் காட்டியதும்¸ கீதன் ஓடிப்போய் மீராவைப் பிடித்து இழுத்தான்.

அவளைக் கீழே இழுத்தப்பின்¸ “நீ சாகறதுக்காகத்தான் இங்கே வந்தாயா? அப்படி இருந்தாள் ஏன் கல்யாணத்திற்கு சம்மதித்தாய்?” என்று அதட்டி கேட்டுக் கொண்டிருந்தான்.

“அண்ணா விடு. அதான் ஒன்றுமாகாமல் தடுத்துவிட்டோமே” என்று அண்ணனிடம் சொல்லிவிட்டு¸ “என்ன அண்ணி? ஏன் இப்படி எங்களை பயமுறுத்தினீங்க?” என்று அன்போடு கேட்டாள் அஸ்வி.

“இல்ல… அந்த மாங்காய் பறிக்கலாம் என்று…” அவள் மெதுவாக சொல்லவும்¸ “என்ன! மாங்காய் பறிக்க மேலே ஏறினாயா? அதை எங்களிடம் கேட்டால் பறித்துத் தர மாட்டோமா…?” என்று கேட்டவாறு¸ அங்கிருந்த மாமரத்தின் கிளையில் தொங்கிய மாங்காயை நின்று கொண்டே பறித்து மீராவிடம் கொடுத்தான் அவன்.

அவன் கீழே நின்றவாறே பறிப்பதை பார்த்த மீரா¸ ‘அப்பாடி… எவ்வளவு நீளமான கை!’ என்று நினைத்தாள்.

மாங்காயை கையில் வாங்கியவள் அதையே பார்த்துக் கொண்டிருக்கவும்¸ “இப்படி பார்க்கத்தான் மாங்காய் வேண்டுமென்று அதைப் பறிக்க மேலே ஏறினாயா?” என்று கேட்டான் கீதன் இன்னும் சற்று கோபத்துடனே.

“இல்லை” என்று தலையசைத்தாள்.

“அப்ப சாப்பிடு” என்றதும் மாங்காயை ஒருகடி கடித்தவள் முகம் ஒரு மாதிரியாக மாறியது. அதை சட்டென வெளியே துப்பினாள்.

“இது ரொம்ப புளிக்குது” என்றாள்.

“எங்களை பயங்காட்டினேல்ல… இதை முழுவதும் நீ சாப்பிட்டுத்தான் ஆகணும்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அஸ்வினியைப் பார்க்க அவள்¸ “அண்ணன் சும்மா சொல்றான்” என்றாள். அதன்பின் “நீங்க குளித்து ரெடியாகுங்க. சாயங்காலம் மண்டபத்துக்குப் போகணும்¸ அங்கேதான் ரிசப்ஷனுக்கு அரேன்ஞ்ச் பண்ணியிருக்கு அண்ணி” என்று சொல்லிவிட்டு அவளும் சென்றாள்.

அவள் சொன்னதுபோல் தயாராக ஆரம்பித்தாள் மீரா.

மாலை ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்து வீடு வந்துசேர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. காரில் வரும்போதே மீரா தூக்கத்தில் அருகிலிருந்து கீதனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

திரும்பி அவளைப் பார்த்தவனுக்கு¸ சாலையில் மின்னி மறைந்த வெளிச்சம் அவள் கன்னத்தை ஆரங்சு வண்ணத்தில் பளபளப்பாகப் காட்டியது. ஒரு கையால் அவளது தோளை அணைத்தவன்¸ தன் தலையை அவள் தலைமேல் சாய்த்துக் கொண்டான்.

வீடு வந்ததும் டிரைவரை போகச் சொல்லிவிட்டான். அபிராமியும்¸ ஜானகியும் உள்ளே சென்றுவிட¸ அஸ்வினி தன் கணவனுடன் காரின் அருகில் வந்து “அண்ணா நாம் வீட்டிற்கு வந்துவிட்டோம்” என்று கார் கண்ணாடியைத் தட்டினாள். கண்ணாடியை இறக்கியவன்¸ “அஸ்வி பாரு¸ இவ தூங்கிவிட்டாள்” என்றான் தங்கையிடம்.

“அடடா…ரொம்ப நேரம் நின்றதால் களைத்துப் போயிருப்பாங்க. நாங்க போகிறோம் ¸ நீ அண்ணியை எழுப்பி உள்ளே கூட்டிப்போ” என்று சொல்லி அவர்களும் சென்றுவிட்டனர்.

“மீரா எழுந்திரு… நாம வீட்டுக்கு வந்துட்டோம்¸ எழுந்திரு” என்று அவளை எழுப்ப முயன்றான்.

“ப்ளீஸ்…நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே” என்று முனகினாள் அவள்.

சரிதான் என்று கீழே இறங்கியவன்¸ மறுபுறத்தில் வந்து அவளை எழுப்பி அருகில் நிறுத்திவிட்டு காரின் கதவை மூடும்முன் தூக்கக் கலக்கத்திலிருந்த மீரா கீழே விழுந்துவிட்டாள்.

“அடடா… இவளுக்கு எப்பவும் விழுறதே வேலையா போயிடிச்சி” என்று அவளைத் தூக்கி நிறுத்தி கையோடு அழைத்துச் சென்றான். அதன்பிறகு அவள் தள்ளாடியபடியே நடக்கவும்¸ ‘இப்படி நடந்தால் வீட்டிற்குள் போய் சேர்ந்த மாதிரிதான்’ என நினைத்தவன்¸ சட்டென அவளை தூக்கிக் கொண்டான்.

அறைக்குள் சென்று அவளைக் கட்டிலில் படுக்க வைக்கும் வரை அவளது தூக்கம் கலையவில்லை.

அவன் படுக்க வைத்ததும்¸ சற்றே தூக்கம் கலைந்தவளாக இயல்பாய் செய்யும் வேலை போல சேலையை இழுத்து கால்களை மறைத்துவிட்டு¸ முந்தானையால் தோளையும் போர்த்திக் கொண்டாள்.

அதைக் கவனித்தவன் ‘இவள் நிஜமாகவே தூங்குகிறாளா? இல்லை நடிக்கிறாளா?’ என்ற எண்ணத்துடனே சென்று அவளை எழுப்பினான்.

“ம்ம்…” என்று முனங்கியவளை வேகமாக ஒரு தட்டு தட்டிhனன். “என்னம்மா நீ… என்னை தூங்க விடாமல் தொல்லை பண்றே…” என்று பேசியவாறே எழுந்து அமர்ந்தாள்.

எதிரில் கீதன் இருப்பதைக் கண்டதும் தலைகுனிந்தால்.

“ஏய் என்ன சொன்னே… தொல்லை பண்றேனா? நமக்கு கல்யாணம் ஆயிடிச்சி ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான். அவளது பதிலை எதிர்பாராமல் “நீ இப்படி தூங்கிட்டு இருந்தால் நான் எப்படி உன்னை…” என்று சொல்லிச் சென்றவன்¸ ஆடை மாற்றிவிட்டு வந்து அவளை நெருங்கினான். மீரா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தபோது¸ அவன் அதை பொருட்படுத்தவில்லை.

காலையில் விழிப்பு வந்தபோது அவன் அருகில் இருக்கவில்லை. போர்வையை மேலே போர்த்தியபடி எழுந்து அமர்ந்தாள். உடம்பில் ஒரு இனம் புரியாத வலி. ‘ஏன் இப்படி?’ என நினைத்தவாறு அவள் குளிக்க சென்றபோது குளியலறையைத் திறந்து கொண்டு கீதன் வந்தான்.

அவனைப் பார்த்ததும் படபடப்பாக உணர்ந்த மீரா நின்றுவிட்டாள். அவன் அவளை கவனிக்காதது போல் சென்று தனது ஜாக்கிங் உடையை அணிய ஆரம்பித்தான்.

அவள் மெதுவாக நடப்பதைக் கண்டவன்¸ “உன் காலுக்கு என்னாச்சு?” என்று கேட்டதான்.

“ஏன்னு தெரியலைங்க. நடக்க முடியாமல் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது” என்று உதட்டைக் கடித்தாள்.

எதனால் என்று புரிந்தவன் “இது போகப் போக சரியாகிவிடும்” என்று சொன்னவன்¸ அவளை குளியலறை வரை சென்றுவிட்டு விட்டு வெளியேறினான்.

நாட்கள் சென்றது.

அஸ்வினி ஊருக்கு சென்றுவிட்டாள். அபிராமியும் ஜானகியும் அவளை நன்றாக கவனித்துக் கொண்டனர். ஜானகியை ஜானும்மா என்றே அழைத்தாள். அவரும் தன் மகளைப் போலவே பார்த்துக் கொண்டார்.

கீதனின் தேவைகளை அவளே கவனித்தாள். ஆனாலும் புதுமனைவிக்கு என்று எதுவும் பரிசுகள் வாங்கி வருவதையோ¸ அவளை வெளியே அழைத்துச் செல்வதையோ அவன் செய்யவில்லை. அதைப் பற்றி அவன் நினைத்ததுமில்லை.

இரவின் தனிமையில் கூட அவளிடம் முதல் இரண்டு நாட்களைப் போல அவன் பேசியது கிடையாது. அவனது தேவைக்காக அவளை அணைப்பவன்¸ அவளை எங்கோ சொர்க்கத்திற்கு அழைத்துப் செல்வது போல் சென்று திடீரென நரகத்திற்குள் தள்ளி விடுவதைப் போல சட்டென எழுந்து போய் படுத்துக் கொள்வான்.

இது ஏன் என்று மீராவிற்கு தெரியவில்லை¸ புரியவுமில்லை. ஏனென்று புரிந்தபோது அவளால் தாங்கவும் முடியவில்லை.

பாட்டியிடம் தினமும் இரண்டு முறையாவது பேசுவது மீராவின் பழக்கம். அன்றும் அப்படி அவள் போன் செய்ய சென்றபோது தான் டெல்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது அஸ்வினிக்கு விபத்து என்று. கீதன் தன் ஸ்டோர்ஸின் பொறுப்பை மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு¸ மனைவியையும் தாயையும் அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்டான்.

அஸ்வினிக்கு அதிகமாகவே அடிபட்டிருந்தது. ஜாக்கிங் செல்லும்போது ஓர் கார்க்காரன் இடித்துவிட்டு சென்றானாம். அவளுக்கு டிரீட்மென்ட் செய்த டாக்டர் அவள் உயிர் பிழைத்ததே அதிசயம் என்றார்.

அதன்பின் அவளது உயிருக்கு ஒரு பிரச்சனையுமில்லை¸ ஆனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது¸ அதற்கான சிகிச்சைகள் மட்டும் தான் இருக்கிறது என்ற நிலையில்¸ “அஸ்வினியை கோவைக்கு கூட்டிட்டுப் போகட்டுமா?” என்று அஸ்வினியின் கணவன் தனசேகரிடம் கேட்டான் கீதன்.

“ஸாரி மச்சான். என் வேலையைப் போட்டுவிட்டு என்னால் அங்கே அடிக்கடி ஓடிவர முடியாது… நீங்க தப்பா நினைக்கவில்லைன்னா அத்தையை கொஞ்ச நாளைக்கு இங்கே விட்டுவிட்டுப் போகமுடியுமா?” என்று கேட்டான் அவன்.

“அவள் என் தங்கை மாப்பிள்ளை. இதெல்லாம் நீங்க என்னிடம் கேட்கலாமா?” என்று அவனிடம் சொல்லிவிட்டு¸ தாயிடம் சென்று “அம்மா நீங்க இங்கே கொஞ்ச நாள் தங்கியிருந்து அஸ்வியை கவனிச்சிக்கோங்க… வெளியே போகும்போது நீங்களும் கவனமா போங்க. அப்புறம்¸ உங்க உடம்பையும் நல்லபடியா பார்த்துக்கோங்க” என்று சொன்னான். அவனுக்குத் தெரியும் தன் தாயாரும் இந்த முடிவில் தான் இருப்பார் என்று. அதனால் தான் அவன் அவரிடம் இங்கிருக்க சம்மதமா என்று கேட்கவில்லை.

குழந்தை தருண் அத்தையிடம் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தான். குழந்தையின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மீரா.

அவர்கள் அருகில் வந்த கீதன் “குட்டிப்பையா¸ என்கிட்டே வா” என அழைக்கவும்¸ “மாமா” என்று அவனிடம் தாவினான்.

“அத்தை பாரு தருண் பெருசா வளர்ந்துட்டான்” என்று மீராவைப் பார்த்து சிரித்தான். கீதனின் அருகில் அவள் ரொம்பவும் குட்டியாகத் தெரிவாள்¸ அதை சொல்லித்தான் சிரித்தான் குழந்தை.

“அம்மா உன்னை வர சொன்னாங்க¸ போய் பாரு” என்று அவளை அனுப்பினான்.

“அத்தை என்னைக் கூப்பிட்டீங்களாமே” என்று சென்றவளைத் தன்னருகே உட்கார வைத்து¸ “அம்மாடி மீரா நான் இனிமேல் கொஞ்ச நாளைக்கு¸ அதாவது அஸ்வினி எழுந்து நடமாடும் வரை இங்கேதான் இருக்கப் போகிறேன்… நீதான் அவனைப் பார்த்துக்கணும். நைட் லேட்டா வந்தால் சாப்பிட மாட்டான். இது எல்லாமே இனி உன் பொறுப்புதான். ஜானகியை கவனிச்சுக்க. உன் உடம்பையும் பார்த்துக்கோ… அத்தோட சீக்கிரமே நல்ல செய்தி சொல்லணும்¸ என்ன” என்று சிரித்தார் அவர்.

அன்று மாலையே “சரி தனா¸ நாங்க இன்றைக்கு நைட் பிளைட்ல கிளம்புறோம். நீங்கதான் எல்லாரையும் பார்த்துக்கணும்” என்று விடைபெற்றனர் அபர்கீதனும் மீராவும்.
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top