AMP -20

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii.. Frds& siss.. AMP 20 epi pottachu... Padithuvittu comments kodukka marakkadhinga... Next final epiyodu varugiren... Happy Reading...:):):)
இப்பகுதியில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவது அல்ல... முழுக்க முழுக்க கற்பனையாகும்...
 

Gayus

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 20

சீருடைப்போட்டு நடந்தவனை...
சிறகுகள் பூட்டி பறக்க வைத்தாய்...
உடைகளில் தைத்த நட்சத்திரம்...
உயர வைத்தாய்...
கொடிமரம்போல நின்றவனை...
கொடியினைப்போல சுருட்டிவிட்டாய்...
இடிஇடித்தாலும் சிரித்தவனை...
இளக வைத்தாய்...

இப்படியே மூன்று நாட்கள் கடந்திருக்க... இளாவை ஐந்து நாட்கள் கழித்து ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி டாக்டர் சொல்ல... ஆதியும் சரி என்று சொல்லிவிட்டான்... இன்று தாஸை கோர்ட்டில் ஆஜர் செய்யவேண்டும் என்பதால் ஆதி காலையிலேயே இளாவை பார்த்துவிட்டு சென்றான்...
கோர்ட்டில் தாஸுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் இரண்டு லட்சம் அபராதமும் விதிக்கப்பட... ஆதியும் விஷ்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்... தாஸ் பத்து ஆண்டுகள் சிறை தண்டணை என்றதும் "நல்ல வேல... நம்மள தூக்குல போடல..." என்று மனதில் சந்தோஷம் பட்டுக்கொண்டான்... அவனுக்கு தெரியவில்லை இன்னும் ஒரு மணி நேரத்தில் தான் சாகப்போகிறோம் என்று....

கோர்ட்டில் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துவிட்டு தாஸை சிறையில் அடைக்க கொண்டுசென்றனர் ஆதி, விஷ்வா மற்றும் கான்ஸ்டபிள்ஸ்... காவல்துறை வண்டியில் எல்லோரும் புறப்பட்டனர்... ஆதி தாஸின் அருகில் அமர்ந்திருந்தான்... தாஸ் ஆதியை பார்ப்பதும் கீழே குனிவதுமாக இருந்தான்.. அந்த நேரம் ராஜன் ஆதிக்கு போன் செய்ய.. எடுத்து பேசினான்... "ஆதி.. ஸ்பாட் போயாச்சா.." என்று கேட்கவும் "இன்னும் பத்து நிமிஷத்துல ரீச்சாயிடுவோம் சார்.." என்று ஆதி சொல்ல "ம்ம்ம்.. ஓகே.. சீக்கிரம் இந்த கேஸ முடிச்சிடுங்க..." என்று ராஜன் சொல்லிவிட்டு வைத்தார்... போகும் வழியை எதர்ச்சையாக பார்த்த தாஸ் "என்ன இவனுங்க வேற ரூட்ல போற மாதிரி இருக்கு..." என்று யோசித்தவனை கண்ட ஆதி "என்னடா யோசிக்கற... எப்படி இதுல இருந்து தப்பிக்கலாம்னு திங் பன்றீயா..." என்று கேட்க.. "இல்ல.. ச..சார்.." என்று தாஸ் சொல்லி முடிக்கவும் வண்டி நிற்கவும் சரியாக இருந்தது... அந்த இடத்தை சுற்றி புற்கள் மற்றும் தண்ணீர் ஓடைதான்... யாரும் இல்லை...

"என்ன.. சார் வழிமாறி வந்துட்டீங்களா..." என்று வண்டியைவிட்டு இறங்கிய தாஸ் கேட்க... "சரியாதான்டா வந்துருக்கோம்..." என்று விஷ்வா சொல்ல... "கான்ஸ்டேபிள்ஸ்.. சரவ்ன்டிங் ஏரியாவையும் செக் பன்னுங்க..." என்று ஆதி தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டே சொல்ல.. "எஸ் சார்.." என்று இருவரும் சென்றனர்... தாஸ் மனதில் பயம் எழுந்தது... செக் செய்துவிட்டு திரும்பி வந்தவர்கள் "சார்.. செக் பன்னியாச்சு... யாரும் இல்ல.." என்று சொல்லிவிட்டு வண்டியின் அருகில் சென்று நின்றனர்... விஷ்வா தாஸின் சட்டையைப்பிடித்து இழுத்துசென்று வண்டியின் முன் சிறிது தூரம் தள்ளி முட்டிப்போட வைத்தவன் அவனின் அருகிலேயே நின்றுகொண்டான்... ஆதி வண்டியில் சாய்ந்து நின்று "டேய்.. உங்கள மாதிரி வெறிப்பிடிச்ச மிருகங்க இருக்கறதாலதான்டா... சாதிக்க நினைக்கற பொண்ணுங்கக்கூட கோழையாகி தற்கொல பன்னிக்கறாங்க... நம்ம நாட்டு பொண்ணுங்கள அவங்க பெத்தவங்க வேலைக்கு அனுப்பாம, படிக்க வைக்காம சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்தர்றாங்க.. வேலைக்கு அனுப்பமாற்றாங்க... என்னைக்கு பொண்ணுங்க நைட்லக்கூட தைரியமா நம்ம நாட்ல இருக்குற ஆண்கள நம்பி வெளிய வர்றாங்களோ... அன்னைக்குதான்ட நம்ம நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடச்சமாதிரி..." என்று ஆதி சொல்ல... தாஸ் "இங்க.. ப..பாரு எனக்கு கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்க.. என்ன ஜெயில்லவிட்டுடுங்க..." என்று சொல்லியவனை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்... "டேய்... எப்படியும் நீ பத்துவருஷம் இல்ல அஞ்சு வருஷத்துல வெளிய வந்துடுவ... வரும்போது திருந்திவரமாட்ட... மீண்டும் பல பொண்ணுங்களோட வாழ்க்கைய கெடுப்ப... சோ.. நீ இப்ப செத்துட்டன்னா அந்த பொண்ணுங்களோட உயிர காப்பாத்தலாம் இல்லையா.." என்று சொல்லிய ஆதி "விஷ்வா, கான்ஸ்டபிள்ஸ் ரெடியா.." என்று கேட்க அனைவரும் தங்களின் துப்பாக்கியை எடுத்து தாஸை நோக்கி குறிவைத்தனர்... ஆதி முதலில் சுட... பின் மூவரும் சுட.. தாஸ் துடிதுடித்து இறந்தான்... ஆதி "கான்ஸ்டபிள்ஸ்.. ப்ரஸ்கு கால்ப்பன்னி இங்க வரசொல்லிடுங்க... எதாவது கேட்டாங்கன்னா.. வர வழியில எங்கள தாக்கிட்டு வண்டியவிட்டு இறங்கி ஓடிட்டான்... அதானால சுட்டுட்டோம்னு சொல்லிடுங்க..." என்று சொல்லிவிட்டு ஆதியும் விஷ்வாவும் மேலதிகாரி ராஜனை பார்க்க சென்றனர்...

ராஜனிடம் நடந்த சம்பவத்தை சொல்ல... "இது என்ன நமக்கு புதுசா.. ஆதி... இவனமாதிரி ஜென்மங்களெல்லாம் உயிரோடையே இருக்கக்கூடாது.. சரி கேஸ் முடிஞ்சது... தென்..." என்று ராஜன் கேட்க... ஆதி மனதில் "வேறென்ன.. என் லாலீபாப்பும் நானும் ஹனிமூன் போகனும்..." என்று நினைக்க... விஷ்வா "ஷாலிக்கும் எனக்கும் கல்யாணம் தான்..." என்று நினைக்க இவர்களின் முகத்தை வைத்தே கண்டுபிடித்த ராஜன் சிரித்துக்கொண்டே "ஆதி.. யூ டேக் லீவ் டென் டேஸ் அண்ட் என்ஜாய் மேன்..." என்று வாழ்த்த... விஷ்வா "சார் எனக்கு எதுவும் லீவ் கிடையாத.." என்று கேட்க... "ம்ம்ம்.. ப்ர்ஸ்ட்.. கல்யாணம் பன்ற வழியபாரு... அப்புறம் லீவ் ஓகே..." என்று ராஜன் சொல்ல... "ஓகே சார்.." என்று விஷ்வா சொன்னான்.. இருவரும் விடைப்பெற்று விஷ்வா ஷாலியை பார்க்க செல்ல.. ஆதி இளாவை பார்க்க ஹாஸ்பிட்டல் சென்றான்...

ஹாஸ்பிட்டல் சென்ற ஆதி இளா தங்கியிருக்கும் அறையின் கதவை திறந்து உள்ளே செல்ல.. மொத்த குடும்பமும் இளாவை சுற்றிதான் இருந்தது... "கொஞ்ச நேரம் பொண்டாட்டிகிட்ட தனியா பேசலாம்னா... முடியலயே.. என்ன பன்னலாம்..." என்று ஆதி மனசுக்குள்ளே யோசிக்க... இளா இவனை பார்த்ததும் தனது அம்மாவிடம் "அம்மா.. கொஞ்ச நேரம் நானும் என் புருஷனும் பேசனும்.." என்று சொல்ல... "ஏன் நாங்க இருக்கும்போது பேசமாட்டியா..." என்று சொல்லிக்கொண்டே ஜூஸ் பிழிய... "அம்ம்மா... நான் என் புருஷன்கிட்ட ஐ லவ் யூன்னு.. சொல்லுவேன்... நீங்க எல்லாரும் இருந்தா... நான் எப்படிமா சொல்லுவேன்..." என்று சொன்னவளை கண்டு முறைத்த சீதா "உன்னலாம் திருத்த முடியாதுடி... என்ன பேச்சுப்பேசுற..." என்று சொல்ல... "ம்ம்ம்... நான் முன்னாடி சொன்னப்பவே நீ எல்லாரையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல.." என்று வாய் பேசினாள்... சீதாவோ "மீண்டும் இவளிடம் பேசினாள் என்னென்ன சொல்வாளோ..." என்று மனதில் நினைத்து அனைவரையும் நாசுக்காக வீட்டிற்கு அழைத்து சென்றார்...

அனைவரும் சென்ற பின்பு இளாவிடம் ஆதி "என்னடி சொன்ன அத்தைகிட்ட.." என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் அமர... "இத கேட்கதான் வந்தீங்களா... நான்கூட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப்போறீங்கன்னு... அம்மாகிட்ட .." என்று ஆரம்பித்தவள் தனது உரையாடலை சொல்லி முடித்தாள்... "அடிப்பாவி... அத்த என்ன நினைச்சிருப்பாங்க..." என்று ஆதி வருத்தப்பட... "அவங்க சந்தோஷம்தான் பட்டுருப்பாங்க... ஆது..." என்று இளா சமாதானம் செய்தாள்..
ஆம் உண்மையிலேயே சீதா சந்தோஷம் அடைந்தார்... "சரி... என்ன சொல்ல வந்தீங்க..." என்று இளா விடாமல் கேட்க.. வினிஷா தற்கொலையில் இருந்து ஆரம்பித்து இன்றுவரை நடந்த அனைத்தையும் விஷ்வா சொல்ல... எல்லாவற்றையும் கேட்ட இளா "அப்போ.. கேஸ் முடிஞ்சிடுச்சா.. ஆது..." என்று சிரித்துக்கொண்டே கேட்கவும் ஆதி "உனக்கு கோவம் ஒன்னும் இல்லையே... நானே அவன சுட்டுட்டேன்.." என்று தயங்கிக்கொண்டே சொன்னவனின் கைகளை பிடித்த இளா "நீங்க பன்னது சரின்னும் சொல்லமாட்டேன் தப்புன்னும் சொல்லமாட்டேன்... ஆனா என் புருஷன் எது செஞ்சாலும் நாட்டுக்கும் பிறருக்கும் நல்லதுதான் கடைசிவரை செய்வான்.." என்று சொல்ல... ஆதிக்கு தன்னவளை நினைத்து பெருமையாக இருந்தது... ஏதோ நினைவு வந்தவனாக "எதுக்கு கேஸ் முடிஞ்சுதான்னு ரொம்ப எக்ஸைட்டா கேட்ட..." என்று ஆதி கேட்கவும் "அது... அது வந்து.." என்று சொன்னவளின் முகம் சிவக்க.. அதிலேயே புரிந்துகொண்ட ஆதி அவளின் இருகன்னங்களிலும் கை வைத்து "உனக்கு கம்ப்ளீட்டா குணமான உடனே ஹனிமூன் பேக்கேஜ் தான்டி... லாலீபாப்..." என்று அவளின் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான்...

விஷ்வா ஷாலியிடம் "நம்ப கல்யாணம் பன்னிக்கலாம்டி... உங்க வீட்லதான் ஓகே சொல்லீட்டாங்கள்ள..." என்று கெஞ்சி கொஞ்சிக்கொண்டிருந்தான்.. "நோ.. நோ... அடுத்த வருஷம்தான் கல்யாணம்..." என்று ஷாலி ஸ்ட்ரிக்டாக சொல்ல... விஷ்வா "அப்போ நான் வேற பொண்ண பார்க்க வேண்டிருக்கும் பரவாலயா..." என்று கேட்டு செம்மையாக வாங்கிக்கட்டிக்கொண்டான்..

ஹரிஷ் இன்றுவரை நந்து என்ன சொன்னாள் என்று தெரியாமல் அவளிடம் மொக்கை வாங்கிக்கொண்டிருந்தான்... நந்து தனது அம்மாவிடம் டெரஸ் போயிட்டுவரேன்மா... என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்று ஹரிஷ்க்கு போன் செய்தாள்... அட்டண்ட் செய்தவனிடம் "உனக்குலாம் எதுக்குடா லவ்வு.. இப்பவரைக்கும் என்கிட்ட வந்து பேசனும்னு உனக்கு தோணவேலயா.." என்று காரமாக கேட்க... ஹரிஷிற்கு இவள் நம்பர் தெரியாததால் "ஹலோ.. யார் நீங்க.. உங்கள எப்போ நான் லவ் பன்னேன்... போங்க... நம்பர எதாவது மாத்திபோட்டுருப்பீங்க..." என்று சொன்னவனிடம் "நா...நான் நந்து பேசுறேன்... இனிமே உன்கிட்ட பேசவேமாட்டேன்டா..." என்று அழுதுகொண்டே சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.. "அய்யோ.. கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.." என்று ஹரிஷ் தலையிலே அடித்துக்கொண்டான்.. "நாளைக்கே இதுக்கு முடிவு கட்றேன்.." என்று நினைத்துக்கொண்டான்...

ரோஹித் மற்றும் ரேஷ்மிக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் என்று முன்னாடியே பேசிவைத்திருந்தனர்..

அடுத்த நாள் காலை சுந்தரிபாட்டியுடன் ஹரிஷ் ஆதியின் வீட்டில் இருந்தான்.. தனத்திற்கு ஹரிஷ் மாப்பிள்ளையாக சந்தோஷம் என்றாலும் ஆதியின் முடிவு என்னவென்று தெரியவேண்டும்... நந்துவிடம் அவர்களுக்கு காஃபி கொடுக்க சொல்லிவிட்டு.. ஆதிக்கு போன் செய்து சொல்ல.. "அம்மா.. ஹரிஷ் நம்ம நந்துவ நல்லா பாத்துப்பான்மா..." என்று ஆதி சொல்ல... "ரொம்ப சந்தோஷம்டா... நீ அங்க இளாவ பாத்துக்க..." என்று போனை வைத்தவர்... ஹாலுக்கு செல்ல... "என்னடி.. மாப்பிளைக்கு காஃபி கொடுக்கல.." என்று கேட்க... "என்ன... மாப்பளயா..." என்று வாயைபிளந்தாள்... பின்ன இவர்கள் எதற்கு வந்து இருக்கிறார்கள் என்று தெரியாமல்... ஹரிஷ் மேல் உள்ள கோவத்தில் பாட்டிக்கு மட்டும் காஃபி கலந்து கொடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்... இவளின் செய்கையை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தான் ஹரிஷ்... வெட்கப்பட்டுக்கொண்டே உள்ளே ஓடிவிட்டாள் நந்து... பாட்டியிடமும் ஹரிஷிடமும் சம்மதம் கூறினார் தனம்...

- தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top