6...எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....

Advertisement

Yazh Mozhi

Active Member
6...எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்......

கணவனின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் களை வருடிக் கொண்டிருந்த விழிகளில் நீர் தேங்கி நின்றிட ...

மணிமாறன் ஸ்வேதாவை சந்திக்க வந்தார்...

என்னம்மா... சாப்டியா...

ம்ம்ம் ஆச்சு ப்பா...

சரி கொஞ்சம் பேசலாமா...

நீ ஃப்ரீ ஆ...

என்னப்பா நீங்க என்கிட்டயே ஃப்ரீயானெல்லாம் கேட்டு டிஸ்டன்ஸ் மெயிண்ட்டெயின் பன்றீங்க...

இல்லமா நீ சாதாரணமா டிவி பாத்துட்டு உட்கார்ந்து இருந்தா நானே வந்து பேசி இருப்பேன்...

நீ கண்ணு கலங்கி இப்படி இருக்கும் போது எனக்கு என்ன பேசுரதுனு புரியலம்மா...

சாரி ப்பா...

சாரி நீ ஏன்மா கேக்குற....

நியாயமா நான் தான் கேக்கனும்... நீ காதல்னு வந்து நின்னப்போ இந்த சிக்கல் எல்லாம் வருமானு முன்னாடியே யோசிச்சு இருக்கனும்...

ஆனா நான் நீ சந்தோஷமா இருந்தாலே போதும்னு நினைச்சிட்டேன் மா... அப்பாக்கு கிடைக்காத எல்லா சந்தோஷமும் உனக்கு கிடைக்கனும்னு நினைச்சேன். .

ஆனா நீ இப்படி கண்கலங்கிட்டு அடிக்கடி உங்களுக்கு சண்டைனு வந்து நிக்கும் போது தான் யோசிக்காம தப்பு பன்னிட்டேனோனு பயமா இருக்குமா...

நான் அதுக்காக என்ன ஆனாலும் உன்ன அவன்கூட தான் வாழ்ந்தே ஆகனும்னு கட்டாயப்படுத்தல ஆனா என்னோட காலத்துக்கு அப்புறம் நீ எப்படி இருப்பியோங்கிற பயமே என்க்கு நிம்மதியே போயிடுதுமா...

நீ சந்தோஷமா வாழனும்னு தான் எதையும் பத்தி யோசிக்காம கல்யாணம் பன்னி வச்சோம்... இப்போ என்ன பிரச்சினை னு நீயும் சொல்லல...

நீ ஏதாவது பேசினா தானே நாங்க யாரு பக்கம் தப்பு என்ன பன்னலாம் னு பேச முடியும்...

மாப்பிள்ளை மேல தப்பு இருந்தா அத நாங்க பேசி என்ன ஏதுனு ஒரு முடிவு பன்னலாம்.. ஆனா நீயா முடிவு பன்னிட்டு இங்க வந்த...

வீட்டுக்கு வந்த மகள ஏன் என்னனு கேட்டு கஷ்டப்படுத்தாதனு நான் உங்க அம்மாவ கூட சத்தம் போட்டுட்டேன் டா...

ஆனா இப்போ இந்த டிவோர்ஸ் பேப்பர் இதெல்லாம் பாத்து அம்மா ரொம்பவும் மனசு உடைச்சு போயி இருக்கா...

என்ன தான்டா பிரச்சினை நீ சொல்லு அப்பா உனக்கு தான் எப்பவுமே சப்போர்ட் பன்னுவேன் உனக்கு என்ன தான் பிரச்சினை....

அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா....
ஒன்னும் இல்லாம தான் இப்படி ரெண்டு பேரும் டிவோர்ஸ் வரைக்கும் வந்து இருக்கீங்களா...
.
சொல்லுமா.... நீ ஏதாவது பேசினா தானே அப்பாக்கு தெரியும்....

அவருக்கு என்மேல பாசமே இல்லப்பா...
எத வச்சு சொல்ற நீ பாசமே இல்லைனு...

நீ பாத்தியா ... யாரு சொன்னது பாசமே இல்லைனு...

எனக்கேத் தெரியும்...

நீ பேசுறது ஏதோ சின்னக் குழந்தை பேசுற மாதிரி இருக்கு ஸ்வேதா...

கல்யாணம் ஆகி இந்த மூனு வருஷத்துக்குள்ள பாசம் இல்லாம போச்சுனு நீயா எப்படி முடிவு பன்ன...

இருக்குப்பா... நிறைய காரணம் இருக்கு ஆனா சொன்னா உங்களுக்கு புரியாது...

ம்ம்ம்... சரி சொல்லு அப்பா புரிஞ்சிக்கிறேன்...

லவ் பன்னும் போது எவ்வளவு பாசமா இருப்பாரு தெரியுமா ப்பா...

ரொம்ப ரொம்ப... என்ன திட்டவே மாட்டாரு.. எது சொன்னாலும் சிரிச்சிட்டே ஓ.கேனு மட்டும் தான் சொல்வாரு...

இப்போ எல்லாத்துக்கும் சண்டை... எதுக்கு எடுத்தாலும் சண்டை தான்... கோவம்...
முன்னாடி எல்லாம் நான் அவருக்காக டைம் ஸ்பெண்ட் பன்னலைனு சண்டை வரும்....
இப்போ அவரு ....

எனக்காக டைம் ஸ்பெண்ட் பன்றதே இல்லை....

வீட்டுக்கு வந்தா எப்போ பாரு ஃபோன் ஃபோன் ஃபோன் தான்... சேட்டிங் இல்லனா கேம்ஸ்... என்கூட பேசவே மாட்றாங்க

எதையும் ஷேர் பன்றதே இல்லப்பா....
நானா கேட்டாலும்... உனக்கு நான் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பன்னா மூக்கு வேர்த்துடுமா னு கேக்குறாங்க

எப்பவும் என்ன தான் அடிக்கடி அவுட்டிங் கூட்டிட்டு போவாங்க ஆனால் இப்போ ஃபிரண்ட்ஸ் கூட மட்டும் தான் போறாங்க...

பையன காரணம் காட்டி என்ன வீட்ல விட்டுட்டு போயிட்றாங்க.... அந்த நாலு சுவத்துக்குள்ளயே அடைஞ்சு இருக்க மூச்சு முட்டுது... ப்பா...

எப்போ நான் கால் பன்னாலும் பி.சி .... பி.சி... பி.சி தான்....

செகண்ட் லைன் ல கால் வருதுனு தெரிஞ்சா கூட அட்டன் பன்னாம பேசிட்டே இருக்காங்க....

எல்லா சோஷியல் நெட் ஒர்க்கும் யூஸ் பன்றாங்க... எல்லாத்துலயும் தினமும் ஃபோட்டோ அப்டேட் பன்றாங்க.. தனியா அப்படி இமேஜ் யூஸ் பன்னாதீங்க னு எவ்வளவு டைம் சொல்லிட்டேன் கேக்கவே மாட்றாங்க...

யூ நோ... காலேஜ் டேஸ் ல அவருக்கு கேர்ல்ஸ் ல பிரண்ட்ஸ் அதிகம்... சோ... அப்படி யாரும் அவர பாக்குறதையோ அவர் கூட சேட் பன்றதையோ ஏன்னால ஏத்துக்கவே முடியல...

ஃபோட்டோல கூட அவர வேற யாரும் பாத்து இரசிக்க கூடாதுனு... ஐ .. ஐ மீன்... வேற யாரும் அழன பாக்கவோ பேசவோ இரசிக்கவோ கூடாது...

அவரு மேல ஃபுல் காப்பி ரைட்ஸ் எனக்கு மட்டும் தானே இருக்கு அப்புறம் ஏன் எல்லாத்துலயும் எல்லாரும் பாக்குற மாதிரி இப்படி ஃபோட்டோ போடனும் டாடி...

உங்களுக்கு தெரியும்ல நான் எவ்வளவு போசசிவ்னு.... அவனுக்கும் தெரியும்... ஆனா இப்போ எல்லாம் வேணும்னு பன்றாங்க....

லவ் பன்னும் போது கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசு பேசு பேசுனு மணி கணக்குல பேச சொல்லி ஏதாவது பேசிட்டே இருப்பாங்க...

அப்போ எல்லாம் பேச முடியலனு நான் ஏதாவது ரீசன் சொன்னா கூட ஏத்துக்க மாட்டாங்க ரொம்ப கோவமா என்னவிட அதெல்லாம் முக்கியமானு கேப்பாங்க...

ஆனா இப்போ... நான் பேசினாலே கத்துறாங்க...

மனுஷனுக்கு வெளில போயிட்டு வந்தா எவ்வளவு டென்ஷன் பிரஷர் தெரியுமா சும்மா ஏன் நை... நை... னு இம்ச பன்றனு கேக்குறாங்க...
இப்போ நான் இம்சையா டாடி...
அப்படி .... அப்படி ....

இல்லாட்டி ஆரம்பிச்சாட்டாடா... உங்க அம்மாக்கு தினமும் நான் வீட்டுக்குள் வரும்போதே என்ன பிரச்சனை பன்னலாம்னு தான் நாள் பூரா யோசிப்பா போலனு சொல்றாங்க.... விஹான் கிட்ட...

என்கிட்ட முன்னாடியெல்லாம் கொஞ்சி கெஞ்சி பேசின குரலும் வாயும் இப்போ ஆர்டர் போடவும் அதட்டவும் மட்டும் தான் பேசுதுப்பா... தெரியுமா...
அவனுக்கு கோவப்படத் தெரியும்னு எனக்கு இப்போ தான் தெரியும்....

நான் கால் பன்னா என்கிட்ட இரண்டு நிமிஷம் மூனு நிமிஷத்துல கட் பன்னிட்றாங்க வேலை இருக்குனு...

ஆனா வீட்டுக்கு வந்தா கூட பைக் ட்ரைவ் பன்னும்போது கூட மத்தவங்க கிட்ட பேசிட்டே வராங்க... அதுவும் சிரிச்சு. சிரிச்சு....

என்கிட்ட ஏன் அப்படி பேசமாட்றீங்கனு கேட்டா...
சந்தேகமா நீயெல்லாம் திருந்த மாட்டனு சொல்லி ஏதோ கதவு சனானல் மாதிரி ட்ரீட் பன்றாங்க...
எவ்வளவு ஏக்கமா இருக்கு தெரியுமா.... டாடி.... கேட்டா.
ஏதாவது சொல்லி கோவத்த காட்ட தெரியாம அழுதா அதுக்கு கூட ஏன் இப்படி தேவை இல்லாம சீன் போட்றனு கேக்குறாச்க....
நான் என்ன ஸ்டூடியோ ல வொர்க் பன்ன கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆ சும்மா சும்மா அழுது சீன் போட.... எனக்குன உணர்வுகளே இல்லையா மனசு இல்லையா அழுதா அதுக்கு பேரு சீனா....
அதுக்கு கூட ....

உனக்கு எப்போ பாத்தாலும் சந்தேகம் தான் டி.. நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ... ச்சே வீட்டுக்கு வரவே பிடிக்கல டினு கத்துறாங்க...

முன்னாடி எல்லாம் சமைச்சா சிரிச்சிட்டே சாப்டுவாங்க.. நிறைய கமெண்ட் கூட சொல்வாங்க...
இத செய் அத செய்னு சமைக்க சொல்வாங்க....

இப்
போ எல்லாத்தையும் குறை மட்டும் தான் சொல்றாங்க... இல்லாட்டி மொபைல பாத்துகிட்டே சாப்பிட்டு எழுந்து போறாங்க...

முன்னாடியெல்லாம் வார்த்தைக்கு வார்த்த ஸ்வீட்டினு மட்டும் தான் கூப்டுவாங்க...

யூ நோ... வயசாகி பேரன் பேத்தி வந்தா கூட அப்படி தான் பெட் நேம் சொல்லி கூப்டுவைனு ப்ராமிஸ் பன்னான் டேடி....

ஆனா இப்போ போடி.... வாடி... ஏய் ஸ்வேதா... இவ்வளவு தான்....

டிக் டாக்ல முன்னிடி எல்லாம் என்கூட மட்டும் தான் வீடியோ போடுவாங்க.. அதுகூட முகத்த காட்டாம எனக்காக மட்டும் தான் போடுவாங்க...

ஆனால் இப்போ.. ஆஃபிஸ் ல கண்டவங்க கூட எல்லாம் சேர்ந்து வீடியோ போட்றாங்க...
அவங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைனு சொன்னாங்க டாடி...
ஆனால் இப்போ வீட்டுக்கே குடிச்சிட்டு தான் வராங்க...
இல்லாட்டி வீட்டுக்கே வாங்கிட்டு வந்து குடிக்கிறாங்க....
இப்போ கூட நான் வீட்டுக்கு போனா ஃபிட்ஜ் ல எவ்வளவு பீர் பாட்டில் இருக்கும் தெரியுமா கிட்சன் ல சிலிண்டர் பின்னால எவ்வளவு காலி பாட்டில் அண்ட் டின் இருக்கும் தெரியுமா....

முன்னாடி எல்லாம் நியூயர் நைட் எனக்கு தான் முதல் கால் வரும் அதுவும் அவரு மட்டும் தான் எனக்கு விஷ் பன்னனும்னு பிளான் பன்னி பதினொன்னு ஐம்பதுக்கே கால் பன்னி பேச ஆரம்பிச்சா பன்னெண்டு மணி ஆனா கூடா விடாம நான்ஸ்டாப் ஆ பேசுவாங்க... நானா தூங்கினாதான் கால் கட் ஆகும்...

இப்போ கூடவே வாழாந்தாலும் அவரு விஷ் பன்னுவாருனு முழிச்சிருந்து முழிச்சிருந்து ஏமாந்தது தான் மிச்சம்... அந்த டைம் ல மத்த பிரண்ட்ஸ் கால் பன்றாங்க அவங்களுக்கு எடுத்து விஷ் பன்றாரு... ஆனால் பக்கத்துலயே இருக்க என்னைய அவருக்கு கண்ணே தெரியல டாடி...

முன்னிடி எல்லாம் தினமும் லன்ச் பேக் பன்ன சொல்லி கேட்டு எடுத்துட்டு போவாங்க...

இப்போ நீ பேக் பன்னாத இன்னைக்கு பிரண்ட்ஸ் கூட லன்ச் போறேனு சொல்லி அதையும் விதவிதமா செல்ஃபி எடுத்து ஸ்டேடஸ் ல போடுறாங்க...

முன்னாடி எல்லாம் என் மேல எவ்வளவு பாசமா இருப்பாங்க தெரியுமா டேடி எதையும் என்கிட்ட மறைக்க மாட்டாங்க... ரொம்ப கேர் பன்னுவாங்க இப்போ ஒன்னுமே இல்ல...

முன்னாடி தூர தூரமா இருந்தப்போ கூட எந்த கவலையும் வந்ததே இல்ல எந்த சந்தேகமும் இருந்தது இல்ல...
ஆனால் இப்போ....

இப்போ பக்கத்து பக்கத்துல ஒரே வீட்ல ஒரே பெட்ல வாழ்ந்தாலும் எங்களுக்கு நடுவுல ரொம்ப இடைவெளி வந்துடுச்சி டேடி...

வேற யாரோ எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராங்களோனு எனக்கு பயமா இருக்கு டாடி...

அப்படி வேற ஒருத்தி உள்ள வந்து அவர் என்ன விட்டு போயிடுவாரோங்குற பயமே எனக்கு நிம்மதியில்லாம போச்சு டாடி...

அவரா என்ன வேண்டாம் நீ போனு சொல்லிட்டா கூட தாங்கிக்க முடியும் போல டாடி... ஆனா ஆனா... கூடவே வாழ்ந்துவிட்டு எனக்கு துரோகம் நடந்தா அத தாங்குற சக்தி எனக்கு இல்ல டாடி...

என்னால அவன விட்டு வாழவே முடியாது டாடி... அவன் இல்லனா நான் செ... செத்தே போயிடுவேன் டாடி...

முகத்தை கைகளுக்குள் பொத்திக்கொண்டு கதறி கதறி அழும் மகளைக் கண்டு மணிமாறனுக்கே கண்கள் கலங்கிவிட்டது...

இங்க பாரு ஸ்வேதா... ஸ்வேதாம்மா...

அப்பாவ பாருடா... நீ இப்படி அழுதா விஹான் குட்டியும் பயந்து முழிச்சிப்பான்...

பிளீஸ் ... டாடி சொல்றேன் ல... இங்க பாருடா...

தேம்பி தேம்பி அழுது கொண்டே கண்களைத் துடைக்கும் மகளைக் கண்டு அவருக்குள் எந்த எதார்த்தமும் வேலை செய்யவில்லை... குட்டிமா இங்க பாருடா...

கண்களைத் துடைத்துக் கொண்டவள்... முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சாரி டாடி... என்று தலையை கூனிந்து கொண்டாள்... இன்னும் புதைந்திருக்கும் ரணங்களையும் தந்தையிடம் கொட்டிவிடுவோமோ என்கிற பயம் அவளுடைய உணர்வுகளுக்கு தடைப் போட்டது....

இங்க பாரு ஸ்வேதா... நீ நினைக்கிற மாதிரி காதல் வெறும் மூனு மணி நேர சினிமா கிடையாது...

அது உங்க வாழ்க்கை...

ஒருத்தர பாத்ததும் மனசுக்கு பிடிச்சிட்டா அவங்கள கஷ்டப்பட்டு பேசி பழகி நம்பிக்கை கொடுத்து ரெண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கிறதுக்கு பேரு காதல் இல்ல.... இந்த கல்யாணத்தோட உங்க காதல் வெற்றி அடையல...

அது நீங்க ரெண்டு பேரும் எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எவ்வளவு வருஷம் போனாலும் எப்படி ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுத்து சேர்ந்து வாழுறீங்களோ அது தான் உங்க காதலோட வெற்றி...

நீ சொல்ற விஷயம் எல்லாம் சரிதான்டா... இதெல்லாம் சினிமாக்கு தான் சரியா வரும் .... ஆனா எதார்த்தம்னு ஒன்னு இருக்குல. .

கொஞ்சம் யோசிமா...

நீ வீட்டுக்குள் இருக்க மாப்பிள்ளை வீட்ட விட்டு வெளிய போனா எவ்வளவு வேலை இருக்கும் அதுக்கு நடுவுல பேசிட்டே இருக்க முடியுமா ...
புது வருஷத்துக்கு விஷ் பன்னல பொங்களுக்கு விஷ் பன்லனு இதெல்லாம் என்னடா சின்னப்புள்ள மாதிரி கம்ப்ளைண்ட் பன்ற நீ...
உனக்கே இப்போ ஒரு குழந்தை இருக்கான்... நீ இப்படி மெட்சூரிட்டி இல்லாம பேசுறத பாத்தா எனக்கு என்ன சொல்றதுனேத் தெரியலடா குட்டிமா...
எப்பவுமே ஒரே மாதிரி ஒரே மனநிலையோட சிரிச்சிட்டே இருக்க முடியுமா நீயே சொல்லு.. .
காதல்னா என்ன தினமும் ஒருத்தர ஒருத்தி மடில சாஞ்சி கதை பேசி கொஞ்சிட்டே இருக்க முடியுமா ... வேலை வெட்டிக்கு போக வேண்டாமா சம்பாதிக்க வேண்டாமா...
அப்படி ஓடிட்டே இருந்தா அது ஒரு வாழ்க்கை யா... ஏதாவது ஒரு பொழுதுபோக்கோ.... சின்ன சின்ன ரிலாக்சேஷனோ வேண்டாமா....

எல்லாருக்கும் ஏதாவதொரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் வேணும்டா

அதுக்காக ஃபோன் யூஸ் பன்றது கேம் ப்ளே பன்றது இதெல்லாம் சகஜம்டா...

வெளில வேலைல இருக்க டென்ஷன எங்கயும் காட்ட முடியாம உன்கிட்ட காட்டி இருக்கலாம் இல்லையா...

நீதானே புரிஞ்சி நடந்துக்கனும்...

அதுக்கு இப்படி சந்தேகம் வந்து அழலாமா...

சந்தேகம் ஒரு பெரிய வியாதிடா கண்ணா.
அது மட்டும் குடும்பத்துல அதுவும் புருஷன் பொண்டாட்டி க்கு நடுவுல வரவேக்கூடாது மா...

பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் நம்பிக்கை வேணும்டா ....

அப்படி ஏதாவது உன் மனசுக்குள்ள தப்பா இருக்குனு தோனினா நீ நேரடியா கேக்கலாம் ஆனா பொருமையா அதுக்குனு கேக்க நேரம் காலம் இருக்கு இல்லையா...

எடுத்த உடனே வெறும் யூகத்தால எதையும் யாரையும் கணிக்க கூடாது டா .. புரிஞ்சிக்கோ குட்டிமா...

போதும்பா.... நீங்க எல்லாம் ஆம்பளைங்க ல அதான் எப்படி சுத்தி வந்தாலும் உங்களுக்குள்ள தான் சப்போர்ட் பன்னிப்பீங்க....

அவரு பக்கம் இருக்க நியாயம் தான் உங்க கண்ணுக்கு தெரியுது என் பக்கம் இருக்க ஏக்கம் ... வலி ... இழப்பு... பயம்... என்னோட காதல் இதெல்லாம் அவனுக்கே புரியல...

உங்களுக்கு எப்படி புரியும் நீங்க போங்கப்பா... இனி இத பத்தி பேச வேண்டாம்... பிளீஸ்...

குட்டிமா... நான் சொல்றத நீ இன்னும் முழுசா கேக்கவும் இல்ல...

புரிஞ்சிக்கவும் இல்லடா பிளீஸ் காம் டவுன் ஸ்வேதா...

நோ டேடி பிளீஸ்...ஜஸ்ட் ... லிவ் மீ அலோன்... பிளீஸ்.....

__தொடரும்....
காயத்ரி வினோத் குமார்....
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்வேதாவின் அப்பா பேசுவது எல்லாம் சரிதான்
ஆனால் கார்த்திக்குக்கு சப்போர்ட் செஞ்சதை ஒப்புக்கொள்ள முடியாது
ஸ்வேதா பாவம்
நீ எப்போத் திருந்துவாய், கார்த்திக்?
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது
நாள்-ங்கிறதை கார்த்திக் நிரூபித்து விட்டான்
மனைவி என்பவள் மிஷின் இல்லை
லவ் பண்றப்போ போட்ட கடலையில ஒரு பெர்சென்ட்டாவது கல்யாணத்துக்கு அப்புறமா போடலாமே, கார்த்திக் தம்பிரி
வர்ஷாவை எங்கே இன்னும் காணோம்?
இன்னுமா அச்சாபீஸ்ல மேரேஜ் இன்விடேஷன் பிரிண்ட் பண்ணித் தரலை?
 

Yazh Mozhi

Active Member
ஸ்வேதாவின் அப்பா பேசுவது எல்லாம் சரிதான்
ஆனால் கார்த்திக்குக்கு சப்போர்ட் செஞ்சதை ஒப்புக்கொள்ள முடியாது
ஸ்வேதா பாவம்
நீ எப்போத் திருந்துவாய், கார்த்திக்?
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது
நாள்-ங்கிறதை கார்த்திக் நிரூபித்து விட்டான்
மனைவி என்பவள் மிஷின் இல்லை
லவ் பண்றப்போ போட்ட கடலையில ஒரு பெர்சென்ட்டாவது கல்யாணத்துக்கு அப்புறமா போடலாமே, கார்த்திக் தம்பிரி
வர்ஷாவை எங்கே இன்னும் காணோம்?
இன்னுமா அச்சாபீஸ்ல மேரேஜ் இன்விடேஷன் பிரிண்ட் பண்ணித் தரலை?
அடுத்த பதிவில் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top