ஹாய் மக்களே

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ் ,

சாரி சாரி நான் இப்பவும் ud போட வரல. ud க்கு பதிலா ஒரு குட்டி டீசெர் தான் போட வந்து இருக்கேன். சோ என்ன திட்டாம இதை படிச்சுட்டு இருங்க நான் சீக்கரம் ud ஓட வரேன். உன்ன யாரு தேடுனா அப்படின்னு உங்க mindvoice என்னக்கு கேட்குது . ரொம்பவே குட்டீ டீசெர் தான்.

என் சுவாசமே ஒரு குட்டி டீசெர்


ஐ.சி.யு வின் அரை கதவு திறக்கப்பட்டது. எதோ தனது குடும்பத்தில் உள்ளவற்கே எதோ ஆனது போல் ஒரு பதற்றத்துடன் காத்திருந்தாள். டாக்டர் வெளி வர எடுத்துக்கொண்ட அந்த ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மட்டும் அல்ல அங்கே இருந்த மற்றவர்களுக்கும் இருந்தது.
இவள் இவ்வாறு இருக்க அம்முதியவரோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவர் அருகில் இருந்த டிரைவர் அவரை இரு முறை கூப்பிட்டு அழைத்தும் பயன் இல்லாமல் போக, அவரை தொட்டு அழைத்தார்.

அதில் தன்னிலை மீண்டவர், அவரின் முகத்தை ஏறிட்டு பார்த்தார். அவரிடம் டாக்டர் அவரை நோக்கி வருவதை தெரிவித்தார். உடனே அவர் முகம் அவரை தவிப்புடன் நோக்கியது. அவர் டாக்டரின் முகத்தை ஒரு பயத்தோடும் ஒரு ஆவலோடும் எதிர் நோக்கினர்.
அவர் கூறப்போகும் வார்த்தைகளுக்காக தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்.


டாக்டரின் முகம் ஒரு நொடி சந்தோசத்தையும், மறு நொடி துயரத்தையும் காட்டியது. “துரை நம்ம வாசு பொழச்சுட்டான். அவனுக்கு ஒன்னுமில்லைடா.” படபடவென சந்தோசத்துடன் கூறினார். “ஆனா?”, என ஒரு கேள்விக்குறியுடன் நிறுத்தினார்.



“என்னடா? என் மகனுக்கு என்ன ?”, அவரின் குரலில் ஒரு தவிப்பு தென் பட்டது. “நம்ம வாசுவுக்கு ஒன்னும் ஆகல பட் அவன் இன்னும் கண் முழிக்கலடா அதன் கொஞ்சம் டவுட் ஆஹ இருக்கு நீ ஒன்னும் பயப்படாத 24 மணி நேரம் வெயிட் பண்ணுவோம் அவன் கண்ணு முழிக்குறானனு பார்ப்போம் அப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.” என சொல்லிவிட்டு வெளியேறினார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top