ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி எங்கு வாசம் செய்வாள்

#1
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள், லட்சுமியிடம் கேட்டார்.
நீ எந்தெந்த இடத்தில் இருப்பாய்?
எங்கு இருக்க மாட்டாய்?

அந்தக் கேள்விக்கு லெட்சுமி தேவி புன்னகை பூத்த முகத்துடன் பதில் கூறினாள்

இது ‘செளபாக்ய கல்பம்’ என்ற ஸ்தோத்திரத்தில் உள்ளது.

1. கண்ணா, வெள்ளை நிறம் வாய்ந்த சங்கு, பால், அதைத் தரும் பசு, மாடப் புறாக்கள் எங்கு இருக்கின்றனவோ

2. எந்த வீட்டில் சந்தியா காலங்களில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றப்பட்டு
கடவுளின் (என்னுடைய) நாமம் ஒலிக்கிறதோ

3. எந்த வீட்டில் கலகத்தை விரும்பாத, கள்ளம் கபடமற்ற குடும்பம் வாழ்கிறதோ

4. எந்த வீட்டில் தானியங்களும், வெள்ளி போன்ற அரிசியும் இருக்கின்றனவோ

5. எவர் வீட்டில் தான் உண்ணும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கின்றனரோ

6. எவர் வீட்டில் இனிமையான சொற்கள் பேசப்படுகின்றதோ

7. எவர் வீட்டில் தாய், தகப்பன் மற்றும் உள்ள பெரியோர்க்கும் பணிவிடை நடக்கிறதோ

8. எவர் வீட்டில் தர்ம காரியங்கள் நடக்கின்றனவோ

9. எவர் வீட்டில் சிறந்த கல்வியும் அறிவும் பெற்று அடக்கத்துடன் இருக்கிறார்களோ

10. எவர் வீட்டில் அன்பு பரிமாறப்படுகிறதோ

11. எவர் வீட்டில் குளிப்பதற்கு அதிக நேரமும் சாப்பிடுவதற்கு குறைந்த நேரமும் எடுத்துக் கொள்கிறார்களோ

12. மலர்களைக் கையில் வாங்கியவுடன் முகர்ந்து பார்க்காமல் இருக்கிறார்களோ

13. எவர் வீட்டில் புத்தகம், பணப்பை, விபூதி, குங்குமம் முதலிய மங்களகரமான பொருட்கள் காலில் படாமலிருக்கிறதோ

14. எவர் வீட்டில் எல்லோரும் திரிகரண சுத்தியுடன் (மனம், உடல், வாக்கு) செயல்படுகிறார்களோ

அவர்கள் வீடுகளில்தான் நான் எப்போதும் இருப்பேன்.

எனக்குப் பிடிக்காத செயல்கள்

1. வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து காலைக் கழுவாதவன்

2. ஒரு காலினால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புபவன்

3. அழுக்கான, கிழிந்த வஸ்திரங்களை அணிந்தவன்

4. தலையிலும் கன்னத்திலும் கை வைத்துக் கொண்டிருப்பவன்

5. குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்பவன்
(ஆண்களானால் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்களானால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்க்கலாம்)

6. இரண்டு கைகளினாலும் தலையைச் சொறிந்து கொள்ளுபவன்

7. தன் உடலில் தானே தாளம் போட்டுக் கொள்பவன்

8. அமாவாசை, திதி போன்ற நாட்களில் முடி, நகம் வெட்டிக் கொள்பவன்

9. தூசியைக் கையால் அள்ளுபவன்

10. தித்திப்புப் பண்டங்களை தான் மட்டும் உண்பவன்

11. ஆடையின்றி நிர்வாணமாகப் படுப்பவன்

12. உலர்ந்த பசையற்ற உணவை உண்பவன்

13. விளக்கேற்றாத இருட்டு இடத்தில் இருப்பவன்

14. தண்ணீர் கோலம் போடுபவர்கள்

15. கால் தூசி மற்றும் கழுதை, நாய், பூனை, ஆடு ஆகியவற்றின்
தூசி படும்படி நடப்பவன்

16. கெட்ட , கொடூரமான வார்த்தைகளைப் பேசுபவன்

17. மற்றவர்களைக் குற்றம் சொல்லுபவன்

18. டம்பமாக , தற்பெருமை உள்ளவனாக நடந்து கொள்பவன்

இவர்கள் வீட்டில் இருக்கமாட்டேன் ;

இந்த மாதிரி வீடுகளுக்கு என்னுடைய அக்காள் மூதேவியை அனுப்பி வைப்பேன்".

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மை நமஹ
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement