வைரநெஞ்சம் 1

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?

பிரச்சனை வரும்போது அல்ல:

பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்த பாரதிக்கு வயது 17 {பிளஸ் டூ படிக்கும் மாணவி}இன்று பெரும்பாலும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அனைவரும் விடியற்காலையில் எழும் பழக்கம் உடையவர்களே!

பெரும்பாலும் இன்று இன்றைய தலைமுறை செய்யும் தவறு நேரம் சென்று எழுந்திருப்பது காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்துவிட்டு அது அடிக்கும் போது அணைத்துவிட்டு உறக்கத்தை தொடர்வதை நம்மில் பலரும் தினம் செய்து தான் வருகிறோம், இந்த அதிகாலை பழக்கம் , பாரதியின் தாய் வைஷ்ணவியால் பழக்கப் படுத்தப் பட்டது.

அதிகாலையில் எழுந்த பாரதி மூன்று முறை, “முருகாசரணம்” என்று சொன்னவள் என்று சொன்னவள் தனக்கு மிகவும் பிடித்தமான இன்னும் சொல்லப்போனால் சிறுவயதிலிருந்து மந்திரம் போல் இதையே திரும்பித் திரும்பி ஜபித்துக் கொண்டிருந்தால் ஜெபித்துக் கொண்டிருப்பார் கொண்டிருப்பாள்.

“எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்”… இந்த நான்கு வரியை எவரொருவர் உண்மையில் உணர்ந்து சொல்கிறாரோ சொல்கிறாரோ அவர்கள் நினைத்ததை அடைந்து வாழ்க்கையில் ஜெயிப்பது உறுதி என்ற நம்பிக்கையை கொண்டவள்.

நம் “திருக்குறளும்,” “நம் தேசிய கவிஞர் பாரதியும்” சொல்லாததை எந்த நூல் சொல்லி விடப்போகிறது, அதுவுமில்லாமல் அவள் அம்மா, அவளுக்கு பாரதி என்ற பெயரை வைத்ததில் பாரதிக்கு மிகவும் பெருமை அவள் பெயர் என்ன என்று கேட்டாள் பாரதி என்று ஒருவித கர்வத்தோடு அழுத்தி அவள் பெயரை சொல்வாள்.

இந்த நான்கு வரியை, உணர்ந்து சொல்லி முடித்தவள், தன் பக்கத்தில் படுத்திருக்கும், தன் தாய் வைஷ்ணவியை பார்த்து மென்மையாக புன்னகைத்தாள். தன் தாயின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு, எழுந்தவள் பார்வை தன்னைப்போல் ஒரு முறை அவர்கள் வசிக்கும் இந்த அறையை சுற்றி வந்தது .

அவர்கள் வசிக்கும் இந்த வீடு பத்துக்கு/ பத்து என்ற அளவில் இருக்கும் ஒரு சிறிய வீடு அதை சிறிதாக தடுத்து சமையல் செய்யும் அறையாக உபயோகிக்கின்றனர.

இவர்கள் இருவரும் இந்த வீட்டிற்கு வந்து 14 வருடம் ஆகிறது, பாரதி மூன்று வயதாக குழந்தையாக இருக்கும்போது, வைஷ்ணவி, பாரதியுடன் இந்த வீட்டிற்கு வந்தார். என்றும் தோன்றும் வாஞ்சையோடு அவள் பார்வை இன்றும் இந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தது நேரம் ஆவதை உணர்ந்தவள் வேகமாக எழுந்து குளித்துவிட்டு வந்தால்.

இந்தப் பகுதியில் மொத்தம் 14 குடும்பங்கள் வசிக்கின்றன, மொத்தம் மூன்று குளியலறை, மூன்று கழிப்பறை, ஆகவே நேரம் செல்ல செல்ல ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், இவர்கள் வசிப்பது “வேலையாட்கள் வசிக்கும் பகுதி” குளித்துவிட்டு பள்ளி சீருடையில் வந்தவள், புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள். சிறிதுநேரத்தில் எழுந்த வைஷ்ணவி, பாரதியைப் பார்த்து, மணி என்ன பாரதி? அஞ்சு ஆகப்போகுது என்று சொல்லவும், வேகமாக எழுந்தவர் அவரும் சென்று குளித்துவிட்டு, வந்து “சத்துமாவு கஞ்சியை” தயாரித்து பாரதிக்கும் கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்துக்கொண்டார்.

படிக்கும் தன் மகள் பாரதியை ஆசையாக பார்த்தவர், மனதில் தோன்றியது இதுதான், இவளை வேண்டாமென்று சொல்ல, அவர்களுக்கு எப்படி மனது வந்தது? என்ன குறை? என் மகளுக்கு அழகு, அறிவு, தைரியம் ,துணிச்சல் என்ன இல்லை? என் மகளிடம். ஒருவேளை இதெல்லாம் அவர்களிடம் இல்லை, என்ற காரணத்திற்காக இதையே ஒரு குறையாக சொல்லி இவளை வேண்டாம் என்று சொன்னார்களோ, என்னையும், என் மகளையும் வேண்டாம் என்று சொன்னவர்கள். முன் என் மகளை ஒரு பெரிய ஆளாக உயர்த்தி அவள் அவர்கள் முன் நிற்க வைக்க வேண்டும். அதேசமயம், தன்னிடம் இருந்து பிரித்த தன் மூத்த மகனை நினைத்து வைஷ்ணவியின் உள்ளம் ரத்த கண்ணீர் வடித்தது.

னவஷிமா என்று அழைத்துக்கொண்டே “அபிமன்யு” வர வைஷ்ணவி சிந்தனையிலிருந்து மீண்டவர். வா அபி என்றழைத்து தங்களிடமிருந்த ஒரே நாற்காலியை போட வந்தவரை தடுத்த, அபிமன்யு என்ன னவஷிமா? இது எத்தன வாட்டி சொல்றது, நான் வருவது என்ன புதுசா என்று சொன்ன அபிமன்யுவை

பற்றி ஒரு சின்ன அறிமுகம் {அபிமன்யு நான்காம் வருடம் “எம்பிபிஎஸ்” படிக்கும் மாணவன். “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்று சொல்வார்களே, அது போல நம் அபிமன்யு, அவனுடைய தந்தை மகேந்திரன், தாய் சுதா, தங்கை ஜனனி, டெரர் பாட்டி வடிவுக்கரசி, இதில் ஜனனியும், பாரதியும் ஒரே பள்ளியில் படிப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பள்ளி இவர்கள் வசிக்கும் பகுதியில் பணக்காரர்கள் படிக்கும் “ஏ எஸ்” இன்டர்நேஷனல் ஸ்கூல் இந்த பள்ளி அபிமன்யுவின் தந்தை மகேந்திரன் உடையது.

இதுபோக பரம்பரை தொழிலான “உணவு சம்பந்தப்பட்ட ஏற்றுமதி தொழில்”தான் ஆர்கானிக் சிறுதானியங்கள், சீரகம், வெந்தயம், எள்ளு எண்ணெய், அதுபோக மூலிகைப் பொடிகள், தானியங்கள், மூலிகை எண்ணெய், இன்னும் நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அதுவுமில்லாமல் “ஏ எஸ் ஃபைனான்ஸ்” பணம் பட்டுவாடா, செய்வதும் இவர்கள் தொழிலில், ஒன்று. “இன்டர்நேஷனல்” ஸ்கூல் பொருப்பை, மகேந்திரனின் மனைவி சுதா பொறுப்பு ஏற்றுக் கொண்டு திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார், பாரதியின் தாய் வைஷ்ணவி, சுதாவும் பள்ளி தோழிகள். இத்துடன் இந்த அறிமுகத்தை முடித்துக்கொண்டு கதைக்குள் செல்வோம் மற்ற கதாபாத்திரத்தை கதையின் போக்கில் பார்க்கலாம் அபிமன்யு விற்கும் பாரதிக்கும் 14 வருட நட்பு } பாரதியும், வா அபி என்று அழைத்துவிட்டு விட்ட இடத்திலிருந்து தன் பாடத்தை தொடர்ந்தாள். அபியும் தன் கையோடு கொண்டு வந்திருந்த, புத்தகத்தை பிரித்து படிக்கத் தொடங்கினான். சிறிதுநேரம் செல்லவும் பாரதி தன் பாடத்திலிருந்து சந்தேகத்தை கேட்க அபியும் தனக்கு தெரிந்த அளவில் புரிய வைத்தான்.பாரதி இன்னும் மூணு மாசத்துல “போர்டு எக்ஸாம்” வருது அப்புறம் டாக்டர் ஆகணும்னா “நீட் எக்ஸாம்” கிளியர் பண்ணனும் உன்னை பயமுறுத்த இதை நான் சொல்லல, எல்லாத்துக்கும் தயாராகிக் கொள்ள தயாராகிக் “ஸ்காலர்ஷிப் கிடைக்க” “கட் ஆப் மார்க்” நிறைய வாங்க வேண்டியிருக்கும் அதனால எந்த சந்தேகம் வந்தாலும் எந்த நேரமானாலும் கேட்க தயங்காதே.

உங்க வீட்டுக்கும், எங்க வீட்டுக்கும் நடுவுல ஒரு சுவர் தான் இருக்கு, ஒரு மிஸ்ட் கால் குடு உடனே வந்து விடுவேன். எனக்கு தெரியலைனாலும் அன்பு மாமா கிட்ட கேட்டு சொல்றேன்.

இதை சொன்னதும் பாரதியின் மனதில் நினைத்தது”கரெக்ட் அபி சுவர் இருக்கு. “இது, நீ சொன்ன மாதிரி, இது வெறும் சுவர் அல்ல “காலம் காலமாக பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இருக்கும் மிகப் பெரிய சுவர்” உனக்கு பெரிய மனசு அபி நீ மனசு மட்டும் பார்க்கிறவன். உன்ன மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு அவசியம் இல்லையே என்று நினைத்துக்கொண்டு கசப்புடன் சிரித்துக்கொண்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வைரநெஞ்சம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரகதி கணேஷ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top