வேர்க்கடலை சாதம் / வாழைத்தண்டு தயிர் பச்சடி

Bhuvana

Well-Known Member
#1
#வேர்க்கடலை_சாதம் :

தேவையானவை :
சாதம் – 2 கப்,
மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – கால் கப்,
உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8 அல்லது 10
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :
மிளகு, எள், வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாதம், பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு பரிமாறவும்.

#வாழைத்தண்டு_தயிர்_பச்சடி :

வாழைத்தண்டு - 1 கப் பொடியாக நறுக்கியது
துருவிய தேங்காய் - 1/4 கப்
தயிர் - 1கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி ஒரு கப் தயிரில் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் தாளித்த கடுகு, உளுந்தம் பருப்பு, சேர்த்து கலந்து பரிமாறவும்.
 
Attachments

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement