வெங்காயத்தாள் மெது பகோடா

Sahi

Well-Known Member
#1
தேவையானபொருட்கள்:
வெங்காயத்தாள் – 1 கட்டு
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - ¼ கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

செய்முறை:
கடலை மாவு மற்றும் அரிசி மாவை உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும். கலவையில் மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது சூடான எண்ணை சேர்த்து பிசையவும். இந்த கலவையில் நீர் விட்டு போண்டா பதத்திற்கு மிக்ஸ் செய்து எண்ணையில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்தால் சுவையான வெங்காயத்தாள் மெது பகோடா தயார்.
இந்த பக்கோடாவை மோர் குழம்பில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
நீங்களும் செய்துப்பாருங்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நன்றி IMG_20190216_153858.jpg IMG_20190216_154049.jpg
 

Advertisement

New Episodes