வீர மாகாளி 2

Advertisement

கேரள நம்பூதிரி பெயர் பால கிருஷ்ண மேனன்.இந்தியாவில் மிகப் பிரபலமான மந்திர தந்திரங்கள் பில்லி சூனியம் ஏவல் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்.நல்ல காரியங்களுக்கு மட்டுமே மனிதர் கட்டுப்படுவார்.மற்றபடி கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்தாலும் அவரை மயக்க முடியாது.மீறினால் அவர்கள் காலி.

அப்படிப்பட்டவர் இந்த கிராமத்துக்கு வந்திருக்கிறார் என்றால் ஏதோ மிகப் பெரிய பிரச்சனை போலிருக்கு. அவர் அந்தக் கோவிலின் நிலையைப் பார்த்துவிட்டு அவர் கண்கள் கலங்கின.கையைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டு விட்டு மறுபடியும் பழைய இடத்துக்கு வந்து சேர்ந்தார்.அவர் கண்ணுக்கு சில உருவங்கள் வந்து போனது.அவர் முகம் வேதனையில் கலங்கியது.

இப்போ அந்த ஊரைப் பற்றியும் அந்த ஊரின் மக்களைப் பற்றியும் பார்ப்போம்.அந்தப் பெரிய வீடு அந்தக் காலத்தில் ஆங்கிலேயருக்கு உட்பட்ட ஜமீன் வீடு.அந்த வீட்டின் மூத்தவர் வீர மார்த்தாண்ட பூபதி.மனைவி குஞ்சரத்தம்மாள்.வீர மார்த்தாண்ட பூபதிக்கு உடன் பிறந்தவர்கள் விஜய மார்த்தாண்ட பூபதி என்ற தம்பியும் காஞ்சனமாலா என்ற தங்கையும் இருந்தனர்.காஞ்சனமாலா பிறந்து ஐந்து வயதில் ஒரு விபத்தில் இவர்களின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.

வீர மார்த்தாண்ட பூபதிக்கு அப்போது வயது பனிரெண்டு.பெற்றோர்களை ஒரே நேரத்தில் இழந்தது பெரும் துயரமாக இருந்த போதிலும் தன் தம்பி தங்கை நலன் கருதி தன் துயரத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு தன் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை தன் தாய் மாமனான ரகுபதியின் துணையுடன் செய்து முடித்தார்.

தன் தாய் மாமனின் உதவியுடன் ஒரு பக்கம் படிப்பு ஒரு பக்கம் தம்பி தங்கையின் நலன் ஒரு பக்கம் தன் தந்தை தாத்தா சேர்த்து வைத்துள்ள சொத்துக்களைப் பராமரித்தல் என்று திறம்படக் கையாண்டார்.தன் பெற்றோர் இல்லாத வாழ்வில் உறவுகள் எப்படி எதைச் சுருட்டலாம் என்று மல்லுக்கு நிற்க இவரோ தன் தாய் மாமனும் கணக்குப் பிள்ளையும் அவர்களுக்கு இருந்த சொத்துக்களை எல்லாம் காட்டி அதை எப்படிக் கையாள்வது என்று எந்த சுய நலமும் இல்லாமல் கற்றுக் கொடுத்ததை அவர் கற்பூர புத்தி பற்றிக் கொள்ள போலியான உறவுகளை விரட்டி அடித்தார்.

மாமனின் மனைவியோ தன் கணவணின் சரிபாதி என காஞ்சனமாலாவும் விஜயனும் அழும் தன் பெற்றோர்களை நினைத்து அழும் போதெல்லாம் அவர்களைத் தட்டிக் கொடுத்தும் ஆறுதல் கூறியும் சாப்பிட வைத்து தன் மடியில் தூங்க வைத்து பெற்றோர் இல்லை என்ற குறையை நீக்கினார்.காலம் யாருக்காகவும் காத்து இருப்பதில்லை.

தாய் மாமனும் மாமியும் தங்கள் தொழிலைப் பார்க்கச் சென்ற பிறகு தானே அனைத்தையும் கணக்குப் பிள்ளையின் உதவியுடனும் விசுவாசமான வேலைக்காரர்களுடனும் தொழிலைப் பார்த்துக் கொண்டார்.இயற்கையிலேயே பொறுமையும் அமைதியும் இரக்க சுபாவமும் அன்பும் உடையவராக இருந்ததால் அந்த கிராமத்து மக்களுக்கு மட்டும் அல்லாமல் சுற்று வட்டாரக் கிராமத்திலும் மதிப்பும் மரியாதையும் உள்ளவராக இருந்தார்.

ஆனால் அவரிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தாலும் ஏதாவது ஒரு கெட்ட குணமும் இருக்கும் அல்லவா.இவருக்கு உள்ள கெட்ட குணம் ஜாதி வெறி பிடித்தவர்.மேல் தட்டு மக்கள் முன் கீழ்த்தட்டு மக்கள் குனிந்து தான் இருக்க வேண்டும்.காதல் என்ற பெயரில் ஜாதி விட்டு ஜாதி பேசிப் பழகினால் கீழ்த் தட்டு குடும்பத்தையே அழித்து விடுவார்.

ஐயோ பாவம் நீ என்று விதி இவரைப் பார்த்து சிரித்தது.

தொடரும்.

கதையைப் படிச்சிட்டு நிறை குறைகளைக் கூறுங்க மக்காஸ்.இல்லைனா சாமி கண்ணைக் குத்திடும்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.

இந்துமதி
 

banumathi jayaraman

Well-Known Member
பரவாயில்லை
கேரள நம்பூதிரி பாலகிருஷ்ணன்
நல்லவராக இருக்கிறார்
வீர மார்த்தாண்ட பூபதியின் மாமனும்
மாமியும் சூப்பர் பர்சன்ஸ்
அடக்கடவுளே
நல்ல மனுஷன் வீர பூபதிக்கு ஜாதி
வெறியா?
ஜாதியில் என்னய்யா இருக்கு?
எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறம்தானே
யாரு கொடுத்தாலும் ரத்தம் ரத்தம்தானே
அப்போ ஒரு கீழ் ஜாதிப் பெண்ணின்
சாபம்தான் இந்த ஊரை ஆட்டிப் படைக்குதா?
இல்லை தம்பி விஜயன் கீழ் ஜாதிப்
பெண்ணை விரும்பி விட்டாரா?
இல்லை தங்கை வீர பூபதிக்கு பிடிக்காத
காதல் கொண்டாளா?
அதனால் வீர பூபதி யாரைக் கொன்று தீர்த்தான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top