வீரமாகாளி

Advertisement

வீர மார்த்தாண்டனும் தங்கவேலுவும் கிளம்பிச் சென்றவுடன் காஞ்சனா தன் அண்ணியிடம் அண்ணி உங்ககிட்டே கொஞ்சம் தனியாப் பேசனும்னு காஞ்சனா கூறியவுடன் மனோவும் ஏதோ முக்கியமான விசயம் என்று நினைத்து தன் அம்மாவிடம் அம்மா நான் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சு வரேன் என்று சொன்னாள்.சரிம்மா போ போய் கொஞ்ச நேரம் படுத்துட்டு வா.நான் இவங்களை எல்லாம் கவனிச்சுக்கிறேனு சொன்னாங்க.மனோ காஞ்சனாவிடம் கண் ஜாடை செய்து விட்டு தன் அறைக்குள் சென்றாள்.காஞ்சனா சிறிது நேரம் கழித்து தன் அண்ணியின் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே போய் கதவை மூடப் போகும் நேரத்தில் விஜயனும் உள்ளே வந்து கதவை மூடித் தாளிட்டான்.மனோ காஞ்சனா கொஞ்ச நேரம் பொறுமையா இருனு சொல்லிட்டு விஜய் இப்போ சொல்லு என்றாள்.நீ அந்த வீட்டுப் பொண்ணை விரும்புறியானு கேட்டாள்.ஆமா அண்ணி.அவள் இல்லாமல் என்னாலே வாழ முடியாது அண்ணி.நீங்க தான் அண்ணி இதுக்கு ஒரு நல்ல தீர்வைச் சொல்லனும்னு சொன்னான்.மனோ அதற்குப் பதில் சொல்வதற்குள் காஞ்சனா ஐயோ அண்ணா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க.அப்புறம் அந்தக் குடும்பத்தையே பெரிய அண்ணண் கொழுத்தி விடச் சொன்னாரு.

இது எப்படித் தெரியும் உனக்குனு மனோ கேக்க விஜயனோ காஞ்சனா சொன்ன செய்தியில் உறைந்து போய் நின்றான்.காஞ்சனா அழுது கொண்டே காலையில் அண்ணணுடன் வந்த குடும்பம் போன பிறகு பெரியண்ணண் தங்கவேலு அண்ணண்கிட்டே சின்ன அண்ணண் காலேஜுக்குப் போனவுடனே அண்ணணை கண்காணிக்கச் சொல்லி இருக்காரு.அண்ணணும் அவங்களும் விரும்புறது தெரிஞ்சா குடும்பத்தையே கொழுத்தச் சொன்னாரு அண்ணினு அழுதாள்.

விஜயா நீ அழுகிறதை நிறுத்து.உங்க அண்ணணைப் பத்தி உங்களுக்கு சரியாத் தெரியாதுல.அவர் நல்லவர்ங்கிறது மட்டும் தானே தெரியும்.அவர் பயங்கற ஜாதி வெறி பிடிச்சவர்.மேல் ஜாதிக்கார ஆணோ பொண்ணோ கீழ் ஜாதிக்காரங்களை விரும்பினா பாதிக்கப்படுறது அந்த கீழ் ஜாதிக்காரக் குடும்பம் தான்.மொத்தமா இராத்திரியிலே தூங்கிட்டு இருக்கும் போது அந்தக் குடும்பத்தையே மொத்தமா கொழுத்திவிட்டு யாரும் தப்பிக்கவிடாம பண்ணிணா தான் அவருக்குக் கௌரதையா இருக்கும்.

நான் எத்தனையோ நாள் இதை நினைச்சு அழுதிருக்கேன்.உங்க அண்ணண்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி இப்படிப் பண்ணாதீங்க.இந்தப் பாவம் நம் அடுத்த தலைமுறையைப் பாதிக்கும்னுலாம் சொல்லி பல தடவை அழுதுருக்கேன்.ஆனால் அதுக்கு எனக்குக் கிடைத்த பரிசு பெல்ட்டாலே கிடைக்கும் அடி தான்.எங்க அப்பா அம்மா என்னை ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது.ஆனால் உங்க அண்ணண் கிட்டே நிறைய பட்டுட்டேன்.இப்போ இந்தப் பிரசவத்திலே நான் இறந்தால் கூடப் பரவாயில்லைனு இருக்கு.

ஐயோ அண்ணி அப்படிச் சொல்லாதீங்க.அப்புறம் எங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்கனு இரண்டும் அழுதுச்சுக.நாங்க உங்களை என்னிக்கும் அண்ணியா பார்க்கலை.அம்மாவாத் தான் பார்க்கிறோம்.அண்ணி என் காதலுக்காக ஒரு குடும்பம் அழியிறதை என்னாலே தாங்க முடியாது.நான் ஹாஸ்ட்டலில் சாப்பிட்டதை விட அவள் வீட்டிலே தான் அதிகம் சாப்பிட்டுறுக்கேன்.அதுனாலே நான் இனி காலேஜுக்குப் போகலை அண்ணி.இங்கேயே இருந்துடுறேன்.

ஆனால் என்னாலே யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது அண்ணி.நல்லா சொன்னே போ.அதுக்கும் இந்த மனுசன் அந்தப் பொண்ணை நினைச்சிட்டுத் தான் கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேனு அப்போவும் அந்தக் குடும்பத்தைத் தான் குறை சொல்லி அவங்களைக் கொல்லச் சொல்லுவாரு.ஆ என்ன அண்ணி இது ரொம்பக் கொடுமையா இருக்கு.ஆமாம் அது தான் நடக்கும்.இப்போ என்னதாண்ணி செய்யுறது.

ஒன்னு அந்தப் பொண்ணை மறந்துட்டு நீ வேறே பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனும்.இல்லைனா அந்தப் பொண்ணு குடும்பத்தையே கூட்டிக்கிட்டு இந்த நாட்டை விட்டே போயிடனும்.இதுக்கு அந்த குடும்பம் மொத்தமும் ஒத்துக்கனும்.இல்லைனா தன் மகளுக்காக மனம் இறங்கி உன்னோட அனுப்பி வைச்சாலும் அந்தக் குடும்பத்தில் ஒரு உயிர் கூட மிஞ்சாது.இது தான் எனக்குத் தெரியும்.நீ யோசிச்சு சொல்லு.ஆனால் மறுபடியும் காலேஜுக்குப் போகனும்னு முடிவெடுத்தால் அந்தக் குடும்பத்தோட எந்தக் காரணம் கொண்டும் பேசக் கூடாது.நீ மீறிப் பேசினால் அந்தக் குடும்பம் அழிஞ்சிடும்.

அண்ணி எனக்கு ஒன்னுமே புரியலை.வந்தவங்களை வீட்டுக்குள்ளே கூடக் கூப்பிடாமல் வெளியே அனுப்பினாரு அண்ணண்.சங்கர் அப்பாவும் லேசுப்பட்டவர் இல்லை.அவரும் பிடிவாதக்காரர்.நான் காலேஜுக்குப் போனா தான் அங்கே என்ன நிலவரம்.நீங்க சொன்ன ஐடியாவுக்கு ஒத்துக்குவாங்களானு பேசிப் பார்த்தால் தான் தெரியும்.ஆனால் அங்கே போய் பேசனும்னா காஞ்சனா சொன்னது போல தங்கவேலும் வருவான் போல.இதிலே எங்கே இருந்து நான் அவங்ககிட்டே பேசி அனுமதி வாங்கிறது.எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு.

அது வரை அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுட்டு இருந்த காஞ்சனா அண்ணா ஒரு ஐடியானா.சொல்லுமா அதையும் பார்ப்போம்னாங்க.அண்ணா நீங்க நேர்ல தானே பேச முடியாது.கடிதம் மூலம் பேசலாம்ல.அட ஆமா இந்த ஐடியா நமக்குத் தோணலைலனு சொல்லிட்டு சரி அதையே செஞ்சு பாரு விஜய்.ஆனால் சூதனமா நடந்துக்கோ.யாரையும் நம்பாதே.சங்கர் வாங்கலைனா அவன் புத்தகத்துக்குள்ளே கடிதத்தை வைச்சிடு.மற்ற யாரிடமும் கொடுக்காதே.உங்க அண்ணண் எப்போ எங்கே ஆள் வைச்சிருக்காருனு சொல்ல முடியாது.

நீங்க சொல்றதும் சரி தான் அண்ணி.நான் அப்படியே நடந்துக்கிறேன்னு சொல்லிட்டு வெளியேறினான்.காஞ்சனா தான் அண்ணி எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு சின்ன அண்ணணை நினைச்சுனா.ஆண்டவன் யாருக்கு என்ன வைச்சிருக்கானோ அது தான் நடக்கும் காஞ்சனா.எல்லாத்துக்கும் அவனுக்குக் கடவுள் துணை இருப்பார்.அண்ணி உங்களை அடிச்சதை எப்போவும் எங்ககிட்டேயோ அத்தை மாமாகிட்டே கூடச் சொல்லலையே.இராத்திரிலே அவ்வளவு அடியும் வாங்கிக்கிட்டு காலையிலே எப்படி அண்ணி வலியைப் பொருத்துக்கிட்டு ஒரு முகச் சுழிப்பும் இல்லாம காட்டிக்கிட்டீங்க.காஞ்சனா இது தான் பெண்களின் வாழ்க்கைனு நமக்கு சின்ன வயசிலேயிருந்து சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து நம்முடைய குரல் உயராத அளவுக்கு கலாச்சாரம் பண்பாடு மரபுனு சொல்லி வளர்த்துடுறாங்க.

அங்கேயே நம்ம முதுகெலும்பை வளைச்சிடுறாங்க.நிமிரக் கூடாது.நியாயம் அநியாயம்னு சொன்னா எனக்கேற்பட்ட கதி பரவாயில்லை.நிறையப் பெண்கள் மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தன் மச்சுனனு பாடுபட்டு மூச்சு விடக் கூட நேரமில்லாம மாடா தேய்ஞ்சு ஒரு கட்டத்திலே வாழ்க்கையே வெறுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டவங்க நிறையப் பேர்.சிலர் பிறந்த வீட்டுக்கு திரும்பி வந்து அங்கேயும் அண்ணண் பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி ஏவுற வேலையெல்லாம் பார்த்துட்டு தனக்கு சாப்பாடு கிடைக்கலைனாலும் பரவாயில்லை தன் பிள்ளைக்கு மூனு வேலைக்கும் கால் வயிறு கஞ்சியாவது ஊத்துங்கடினு அழுகிற ஜீவன்களும் உண்டு.இதுக்காகவே திருமணமான பெண்கள் யார் தொல்லை கொடுத்தாலும் சகிச்சுக்கிட்டு புகுந்த வீட்டிலேயே கிடந்துடுறாங்க.

நான் பெரிய படிப்பு படிக்கனும்னு ரொம்ப ஆசை.ஆனால் பெண்கள் இது படிச்சதே அதிகம்.ரொம்ப படிக்க வைச்சா சட்டம் பேசுவானு என் அப்பா படிக்கவிடலை.ஆனால் ஒவ்வொரு குடும்பம் பாதிக்கப்படும் போதும் ரொம்ப நாள் சாப்பிடாம கிடந்துருக்கேன்.என் மனக் குமுறலை யார்கிட்டேயும் சொல்ல முடியாம எனக்குள்ளேயே வைச்சு மறுகுவேன்.அப்புறம் எப்படி அண்ணி எனக்குத் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தீங்க.

நீயாவது உன் வாழ்க்கையில் தலை நிமிர்ந்து துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருக்கனும்னு தான் அப்படி பண்ணிணேன்.கணவன் வீட்டிலே என்ன பிரச்சனை வந்தாலும் எப்படி சமாளிக்கனும்கிறதுக்காக கற்றுக் கொடுத்தேன்.வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்து கொடு.துணிந்து நிற்க வேண்டிய. இடத்தில் துணிந்து நில். போதும் பெண்கள் வளைந்து கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் என்று கூறினாள்.

அண்ணியின் பேச்சைக் கேட்டு பிரமித்துப் போனாள் காஞ்சனா.தன் அண்ணிக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தெரியுமா.வீட்டு வேலையும் வேலை ஆட்களை கையாள்வதிலும் வீட்டை நிர்வகிக்கச் செய்வதிலும் மட்டுமே சிறந்தவள் என்று நினைத்தவளுக்கு அவளுக்குள் எவ்வளவு போராட்டங்கள்.இரவு அடியையும் வாங்கிக் கொண்டு காலையில் எப்படி இவர்களால் முகத்தில் கூட ஒரு சுணக்கம் இல்லாமல் நடந்து கொள்ள முடிந்தது என்று நினைத்து மருகினாள்

தாய் இல்லாத குறையே தெரியாமல் வளர்த்த அண்ணி அல்லவா என்று பல நினைவுகளில் மூழ்கிக் கிடந்தாள்.மனோ தான் காஞ்சனா நீ எதுக்கும் கவலைப்படாதே.விஜயன் ஆம்பளை.அவனைப் பத்தி அதிகமான கவலை இல்லை எனக்கு.உன்னை மட்டுமாவது பெண்ணிற்கு மதிப்பு கொடுக்கும் இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்று கூறினாள்.

வீர மார்த்தண்டன் வந்த சத்தம் கேட்கவும் காஞ்சனா அண்ணி அண்ணண் வந்துட்டாரு.நான் போய் சாப்பிடவோ குடிக்கவோ கேட்டால் குடுக்கிறேன்.நீங்க கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு வாங்கனு சொல்லிட்டு அறையை விட்டு வெளியே வருவதற்குக் கதவைத் திறக்கவும் வீர மார்த்தாண்டன் உள்ளே நுழைந்தான்.நீ இங்கே தான் இருக்கியா என்று கேட்டான்.ஆமா அண்ணா.அண்ணி மயக்கமா வருதுனு சொன்னாங்க.அது தான் கூட்டிட்டு வந்திட்டு பக்கத்திலே இருந்தேன்.

உங்களுக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வரவா அண்ணே என்றாள்.ம்ம் ஆமாம் காபி கொண்டு வா அதோடு ஏதாவது பலகாரம் இருந்தால் எடுத்துட்டு வா என்றான்.சரிண்ணேனு சொல்லிட்டு கீழே இறங்கிப் போனாள்.அதற்கப்புறம் வளைகாப்பு விழா சிறப்பாக நடந்தது.வீர மார்த்தாண்டன் கேட்டதற்கு ஒப்புக் கொண்டு மனோவுடைய பெற்றோர் இங்கேயே இருந்து பிரசவம் பார்க்க ஒத்துக் கொண்டார்கள்.விஜயனும் அண்ணண் அண்ணி தங்கையிடம் சொல்லி விட்டு காலேஜுக்குக் கிளம்பினான்.வீர மார்த்தாண்டன் தங்கவேலுவைக் கூப்பிட்டு இனி என் தம்பி ஹாஸ்ட்டலில் தங்க வேணாம்.

நீயும் உன் பொஞ்சாதியும் சென்னையிலே என் நண்பன்கிட்டே சொல்லி வீடு வாங்கச் சொல்லி இருக்கேன்.நீங்க போய் இறங்கினவுடனே அவன் வந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான் என்றான்.உனக்கு காலேஜுக்குப் போய்ட்டு வர கார் கூட இருக்கு.டிரைவர் இருக்கான்.அவன் நீ எங்கே போகனும்னாலும் கூட்டிட்டுப் போவானு சொல்லி எல்லா இடத்திலும் செக் வைச்சான்.அண்ணிக்கிட்டே பணத்தை வாங்கிட்டுக் கிளம்பு.படிக்கிற வேலை தவிர காதல் கீதல்னெ உன்னை விட்டுடுவேன்.அந்தக் குடும்பம் மொத்தத்தையும் அழிச்சிடுவேன்.ஞாபகத்தில் வைச்சுக்கோனு சொல்லி அனுப்பவும் சரிண்ணேனு சொல்லிட்டு அண்ணிக்கிட்டே வந்து நின்னான்.

தைரியமாப் போயிட்டு வா.நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும் என்று சொல்லி கையில் பணத்தைக் கொடுத்து திருநீறு பூசி அனுப்பி வைத்தாள்.

தொடரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top