வீரமாகாளி 5

Advertisement

அவன் கவனம் முழுவதும் சங்கரின் குடும்பத்தை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதிலேயே கவனம் இருந்ததால் மதிய உணவு இடைவேளை வந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.அவன் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அவனைத் தொட்டு எழுப்பியவுடன் தான் தான் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தான்.என்னடா உன் முகமே சரியில்லை என்னாச்சு.உனக்கும் சங்கருக்கும் இடையில் என்ன பிரச்சனை.உன்னை விட்டுட்டு எப்போவுமே அவன் சாப்பிடப் போக மாட்டான்.

இப்ப என்னடானா நீ இப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தும் உன்னைக் கூப்பிடாம அவன் சாப்பிடப் போயிட்டான் என்று ஒருத்தர் மாற்றி ஒருத்தராக கேள்விகளைக் கேட்டார்கள்.இவனுக்கும் யாரிடமாவது தன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தால் தான் தனக்கும் மனசு லேசாகும்னு நினைச்சு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவன் சொல்லி முடிக்கும் போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.அவன் சொல்லியதைக் கேட்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனாலும் நண்பனை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

காரணம் விஜயன் எந்த ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ எந்த உதவினாலும் செய்து விடுவான்.தப்புனு தெரிஞ்சா சும்மா விடமாட்டான்.மாணவிகளிடம் அவன் ஸ்டூடன்ட்ஸ் தலைவனாக தேர்ந்தெடுத்த உடனேயே நான் உங்க அண்ணண் மாதிரி.யாருக்கு என்ன பிரச்சனை உதவினாலும் உடனே என்னிடம் சொல்லலாம்.நான் உங்களுக்கு ஒரு அண்ணணாக எதையும் செய்வேன் என்று சொல்லிவிட்டான்.அதனால் மாணவர்கள் மாணவிகள் என்ற பேதம் பார்க்காமல் பண உதவி மருத்துவ உதவி பாதுகாப்பு உணவு என அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தான்.அதனால் மாணவ மாணவிகளுக்கு அவன் தான் கடவுள் போலத் தெரிந்தான்.

அதிலும் கல்லூரிக்குப் பக்கத்தில் இருந்த கிராமத்திலிருந்து முதல் தலை முறையாகக் கல்லூரிக்குப் படிக்க வந்த பெண்கள் மீது மிகவும் பாசமாயிருப்பான்.அவர்களும் அண்ணா அண்ணாணு பிரியமா இருப்பார்கள்.அவர்கள் கொண்டு வரும் சாப்பாட்டை தொடர்ந்து கவனித்து அவர்களைக் கேன்டீனுக்கு அழைத்துச் சென்று அவர்கள் சாப்பாட்டை வாங்கி இவன் சாப்பிட்டு விட்டு இவர்களுக்குக் கேன்டீன் சாப்பாடு வாங்கிக் கொடுப்பான்.அதன் பின் ஒரு நாள் இனி மதியச் சாப்பாடு கொண்டு வர வேண்டாம்.இனி உங்கள் சாப்பாட்டுச் செலவு என் பொருப்பு என்று சொல்லி விட்டான்.வீட்டில் திட்டுவாங்க அண்ணே அதுனாலே வேணாம்னு சொன்னப்போ அவங்க ஊருக்கு மெடிக்கல் கேம்ப் வைப்பது போலப் போய் அவர்களின் பெற்றோர்களிடம் பேசி சம்தம் வாங்கிவிட்டுத் தான் மறு வேலை பார்த்தான்.அதே போல் விசேச நாட்களில் அவர்களுக்கு நல்ல ஆடைகளையும் வாங்கிக் கொடுத்தான்.

அதுவும் அவனுக்குத் திவ்யானா ரொம்ப ஸ்பெசல்.காரணம் அவளுக்கு அப்பா அம்மா கிடையாது.ஒரு அக்காவும் தம்பியும் தான் அவளுக்கு உறவு.ஆடு மாடுகளை மேய்த்து பாலைக் கறந்து விற்றுத் தான் படிக்க வைத்தாள் அவள் அக்கா துர்கா.அதனால் அவள் குடும்பத்தை தன் கூடப் பிறந்தவர்கள் மாதிரி பார்த்துக் கொண்டான்.இன்று அவன் அழுவதைப் பார்த்த திவ்யா இப்போ எதுக்கு அண்ணா அழுகிறே.இப்போ என்ன நீ அண்ணியைப் பார்க்கனும் அவ்வளவு தானே.இரு வவாரேனு சொல்லிட்டுப் போய் ஆயிசா என்ற பெண்ணின் புர்காவைக் கொண்டு வந்து கொடுத்து இதைப் போடுண்ணா.புர்க்காவைப் போட்டு ஒருத்தியோட செருப்பையும் வாங்கிப் போட்டு அவனுடைய செருப்பை ஒரு கவருக்குள் போட்டு விட்டு ஏய் சங்கர் அண்ணா வந்து கேட்டா எல்லாரும் ஒரே பதிலைச் சொல்லி சமாளிங்க.சொதப்புனீங்க கொன்னுடுவேனு சொல்லிட்டு விஜயனைக் கூட்டிட்டு ஒரு ஆட்டோ பிடித்து சங்கர் வீட்டுக்குச் சென்றனர்.

ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு சங்கரின் வீட்டுக்குள் சென்றார்கள்.சங்கரின் அப்பா அப்போ தான் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.இவர்கள் உள்ளே நுழையவும் யாருமா நீங்க.என்ன வேணும் யாரைப் பார்க்க வந்தீங்கனு கேட்கவும் விஜயன் புர்க்காவைக் கழற்றினான்.சிதம்பரம் ஏன்டா இங்கே வந்தே எதுக்கு வந்தே.எங்களைக் குடும்பத்தோட கொழுத்தவா என்று கத்தினார்.அவர் மனைவி லட்சுமியோ ஏம்பா நாங்க உன்னை எங்க வீட்டுப் பிள்ளை மாதிரித் தானே பார்த்துக்கிட்டோம்.ஆனால் நீ ஒரு வார்த்தை கூட உன் குடும்பத்தைப் பத்தி சொல்லலையேப்பானு கேட்கவும் விஜயன் அங்கில் எனக்கே தெரியாது என் அண்ணணைப் பற்றி.என் அண்ணி தான் நீங்க போனவுடனே என் தங்கையிடமும் என்னிடமும் அவரைப் பற்றி சொன்னாங்க.சத்தியமா என் அண்ணணுக்கு இப்படி ஒரு முகம் இருக்குனு தெரியாது அங்கில். என்னை நம்புங்கனு சொல்லிக் கெஞ்சினான்.அதான் ஊரே உன் அண்ணணைப் பற்றி அவ்வளவு விசயத்தையும் வண்டி வண்டியா கதை சொன்னாங்களே.எனக்கு என் குடும்பம் முக்கியம்.நீ இனி மேல் இந்தப் பக்கம் கூட வரக் கூடாதுனு கத்தினார்.என்னாலே ஜானகி இல்லாம வாழ முடியாதுனு உங்களுக்கே தெரியும் தானே.இப்போ நீங்களே இப்படி சொன்னா என்ன அர்த்தம்.என்னது இவ்வளவு விசயம் தெரிஞ்ச பிறகும் எந்த நம்பிக்கையில் நான் என் பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்.யாராவது இது பாழும் கிணறுனு தெரிஞ்ச பின்னாலும் குதிப்பாங்களா.நான் என் பொண்ணுக்கு வேறே இடத்திலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.நீ இங்கிருந்து கிளம்பு.


நீங்க மாப்பிள்ளை பார்த்தால் உடனே ஜானகி கழுத்தை நீட்டுவாளா.அவள் மனசுலே நான் தான் இருக்கேன்.அவள் என்னை விட்டுட்டு வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா.பெத்து வளர்த்தவங்களுக்குத் தெரியாதா தன் பிள்ளைக்கு எது நல்லது எது கெட்டதுனு.அதெல்லாம் சரி தான்.ஆனால் அதை ஜானகி வந்து சொல்லட்டும் அவள் மனசிலே நான் இல்லைனு.நீங்க சொல்ல வேண்டாம் என்று சொன்னான்.ஆமா எனக்கு உங்களைப் பிடிக்கலை.போங்க இங்கேயிருந்து.நீங்க உண்மையா என்னை விரும்பியிருந்தால் உங்களைப் பற்றிய எல்லா விசயத்தையும் சொல்லியிருப்பீங்க.உங்க காதல் உண்மையில்லை.அப்படி சொல்லாதே ஜானு.எனக்கே இப்போ தானே தெரியும் என் அண்ணணைப் பற்றி.அப்புறம் எங்கேயிருந்து உண்மையைச் சொல்றது.என்னை நம்புங்க அங்கில். ஆன்ட்டி நீங்களாவது சொல்லுங்க அங்கில்கிட்டேயும் ஜானகிகிட்டேயும்.என்னத்தை அவள் சொல்றது போடா இங்கிருந்துனு சிதம்பரம் கத்தினார்.போறேன் போறதுக்கு முன்னாலே உங்க பொண்ணுட்டே இரண்டு நிமிடம் பேசிட்டுப் போறேன்.ஜானகி இங்கே பாருனு சொன்னான்.அவள் நிமிராமல் இருக்கவும் அவள் முகத்தை நிமிர்த்தி என் கண்ணைப் பார்த்துச் சொல்லு என்னைப் பிடிக்கலைனு.நான் நீ இல்லைனா செத்திடுவேன்டி.அதை ஏன்டி நீயும் புரிஞ்சுக்க மாட்டேன்கிறே.எனக்கு நீ மட்டும் போதும்டி.கையிலே படிச்ச படிப்பு இருக்கு.எனக்குக் கண்டிப்பா வேலை கிடைக்கும்.அதை வைச்சு நான் உன்னைக் கண்ணுக்குள்ளே வைச்சு காப்பாத்துவேண்டி.என்னைப் புரிஞ்சுக்கோடி.என் கண்ணைப் பார்த்து சொல்லு என்னைப் பிடிக்கலைனு என்று கேட்டான்.அவள் நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்த்தவள் அதில் தெரிந்த உண்மையான காதல் ஏக்கம் யாசகத்தைப் பார்த்தவள் அவள் மார்பிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள்.

ஏன் இப்படி பண்ணுணீங்க.நீங்க இல்லாமல் நான் எப்படி உயிரோடு இருப்பேன்.என்னாலே உங்களை மனசிலே சுமந்துட்டு வேறொருத்தனை எப்படி கல்யாணம் செஞ்சுக்குவேனு நினைச்சீங்கனு அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டே கதறினாள்.அவளை அப்படியே இருக்கிக் கட்டிக் கொண்டவன் நான் மட்டும் உயிரோடு இருந்திடுவேனோ உயிரோடு இருப்பேனோனு நினைச்சியா.பைத்தியம் நீ இல்லாத இந்த உலகத்திலே எனக்கு மட்டும் என்ன வேவலைடினு அவளை அனைத்து நெற்றியில் முத்தமிட்டான்.சிதம்பரம் அதிர்ந்து போய் நிற்க லட்சுமி முகத்தில் அப்படி ஒரு புன்னகை.தாய் அறியாத சூழ் உண்டா.பெற்றோரிடமும் உடன் பிறந்தவனிடமும் எவ்வளவு தான் சிரித்துப் பேசினாலும் அது மேல் பூச்சு என்று உணர்ந்தே இருந்தார்.அப்பாவும் அண்ணணும் சென்ற பிறகு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதும் அழுவதும் சாப்பிடுகிறேன் என்று பேருக்குக் கொறிப்பதுமாக இருப்பவளைப் பார்த்து பூஜை அறையே கதி எனக் கிடந்து அங்கிருக்கும் கடவுளிடம் எல்லாம் என் மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையைக் கொடு என்று அழுத தாயல்லவா.அதனால் விஜயன் வந்து பேசினால் மகளின் உண்மையான நிலை தெரிந்து விடும்
 

banumathi jayaraman

Well-Known Member
அட கூமுட்டை விஜயன்
அண்ணனைப் பற்றி சரியாத் தெரியாமல் சங்கர் வீட்டுக்கு போயிட்டானே
போறப்ப பர்தா போட்டுட்டு போனவன் வெளியே வரும் பொழுது.....?
இனி ஜானகி, சங்கர் அவன் பெற்றோர் எல்லோரும் அவ்வளவுதான்
மார்த்தாண்ட பூபதியின் ஆளு இவங்களைக் கொளுத்தப் போறான்
இது தெரியும் பொழுது விஜயன் என்ன ஆவான், இந்து டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top