வீரமாகாளி 13

#1
வீரமாகாளி 13

வீரமாகாளி கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் படித்து வரும் அனைத்து சகோதரிகளுக்கும் இந்துமதியின் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். தொடர்ந்து படித்து தங்கள் ஆதரவையும் நிறை குறைகளையும் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அருண் , வெளியில் போன திவ்யாவையும், வள்ளியையும் காணாமல் இருக்கவும் , வேகமாக வெளியில் வந்தான். அவனைத் தொடர்ந்து ராணியும் , நான்சியும், தங்கவேலுவும் வந்தார்கள்.வந்தவர்கள், வள்ளியைப் பார்த்து , அதிர்ந்து போய் ! என்னாச்சுக்கா என்று கேட்டனர். திவ்யா, திவ்யாவைத் தேடுங்க என்றாள்.

திவ்யாவுக்கு, என்னாச்சுக்கா?, என்றனர். அவளைத் தூக்கிட்டுப் போனாங்க என்றாள். அனைவரும், அதிர்ந்து போய் நின்றார்கள். வள்ளி, “ ஏய் ஓடுங்கடா, அவளைப் பாருங்க, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவள், எழுந்து திவ்யாவைத் தூக்கிச் சென்ற பக்கம் ஓடினாள்.

அவள் ஓடுவதைப் பார்த்த பிறகே, அதிர்ச்சியாகி நின்றவர்கள், ஸ்மரணை வந்து அவள் பின்னே ஓடினார்கள். வள்ளி, ஓடிய வேகத்தில் எதுவோ தட்டி விட்டு விழுந்தவள், எழுந்து பார்த்த போது, திவ்யா இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனாள். வேகமாக மற்றவர்கள் ஓடி வரும் போது தங்கவேலுவிடம், உன் வேட்டியை கழட்டிக் கொடுங்க என்று கத்தினாள்.

அப்படி கத்திவிட்டு, ஐயோ! திவ்யாம்மா, நான் சின்ன ஐயாகிட்டே, என்ன என்று சொல்லுவேன் என்று அழுதாள். யாரும் கிட்டே வராதீங்க. ராணி, அந்த வேட்டியை வாங்கிட்டு வா, என்று கத்தினாள். ராணியும் வாங்கிக் கொண்டு, நான்ஸியுடன் ஓடி வந்தாள்.

வந்தவர்கள், திவ்யாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போய், அலற ஆரம்பித்தார்கள். ராணி சுதாரித்து ஓடி வந்து , ஓடிப் போய் அருணிடம் சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகி கண்ணீர் வழிய நின்றார்கள். ராணி, தான் அருண் இது அழுவதற்கான நேரமில்லை. முதலில், விஜய் அண்ணாவைக் கூட்டிட்டு வா என்றாள். தங்கவேலுவைத் தேடி வந்த முத்துவிடம், அண்ணா காரைப் பின்னாடி எடுத்துட்டு வாங்க என்றாள்.

அதற்குள், விஜய் வந்துவிட விசயம் கேட்டவன் அதிர்ச்சியாகி நின்றான். பின், வேகமாக உள்ளே ஓடி , நிர்வாகி, பிரின்ஸிப்பாலிடம் விவரம் கூறினான். சார், இது ஹாஸ்பிட்டல் கொண்டு போக வேண்டாம் சார். நான், என் வீட்டுக்கே கொண்டு போறேன். நல்ல டாக்டர், இந்த விசயத்தைப் பற்றி வெளியே சொல்லக் கூடாத டாக்டர், நர்ஸ் வேண்டும் என்றான்.

நிர்வாகி, பிரின்சிப்பல் முகமே செத்து விட்டது. ஆனால், அதே சமயத்தில் விஜயன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவ்வளவு ரௌத்திரம் அவன் முகத்தில். நீ வீட்டுக்குப் போறதுக்குள் அங்கே , “ நீ கேட்டபடி டாக்டர், நர்ஸ் இருப்பார்கள்”, என்றார்.

நாங்கள் இப்போ வந்து பார்க்கலாமா என்றனர். இல்லை, வேண்டாம் சார். தாங்கமாட்டீர்கள். கொஞ்ச நாளாகட்டும் என்று கூறி விட்டு, “சார், இந்த விசயம், என்று இழுத்தான், யாருக்கும் தெரியாது”, என்றனர். தேங்க்ஸ் சார் என்று கூறி விட்டு, சங்கர் காரில் ஏறினான். விஜயன், ஏறியதும் சங்கர், காரை எடுத்தான்.நேரே விஜயன் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு, ஏற்கனவே டாக்டரும், நர்ஸும் இருந்தனர். முத்துவிடம், கீழே இருந்த அறையில் பெட்சீட் மாற்றச் சொன்னான். திவ்யாவை, கொண்டு போய் கட்டிலில் கிடத்தினர். அதற்குள், வள்ளிக்கு தலையில் கட்டுப் போடப் பட்டது. அதற்குள் சங்கரின் குடும்பத்திற்கு விசயம் தெரிந்து, வந்து விட்டனர்.

வரும் போதே சிதம்பரமும் லட்சுமியும், ஜானகியிடம் , சங்கருக்குத் துணிகள், அங்கே இருக்கும் பெண்களுக்கான சுடிதார், நைட்டீஸ் எல்லாம் எடுத்து வரச் சொன்னார். அவளும், எல்லாமே எடுத்துக் கொண்டு வந்தாள். உள்ளே, திவ்யாவிற்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருந்தது. நர்ஸ் வெளியே வந்து, ஒரு லிஸ்ட்டைக் கொடுத்து, இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார்.

சங்கரின் அப்பா, சிதம்பரம், நீங்கள் போக வேண்டாம், நான் போய் வாங்கிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றார். பால் பாக்கெட், நாலைந்தும், காபித் தூள், டீத் தூளும் வாங்கி வரச் சொன்னார் லட்சுமி. வள்ளி தான் புலம்பிக் கொண்டே அழுதாள். எப்படி கலகலனு இருந்த பொண்ணு ! இப்படி நாசம் பண்ணிட்டானுகளே.

இதுக்குத் தானே, ஐயா இங்கேயே விட்டு வைச்சிறுந்தாறு. வாய் ஓயாமல் கிண்டல் பண்ணி, சமையல் செய்றேனு அப்படி அலப்பறை பண்ணிணாளே. அது இதுக்குத் தானா என்று புலம்பி அழுது கொண்டிருந்தாள். நான், எப்பவுமே கையிலே கத்தி வைச்சிருப்பேனே. இன்னிக்கு, ஐயா, அதெல்லாம் கொண்டு வரக் கூடாதுனு சொன்னதாலே தானே, நான் எடுத்துட்டு வரலை என்று புலம்பி அழுதாள்.

விஜயன், அருண், சங்கர், ராணி, நான்ஸி, ரம்யா, தங்கவேலு, முத்து, லட்சுமி, ஜானகி அனைவரது கண்ணிலும் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அவள் இருந்த ரூமையே ஹாஸ்பிட்டல் மாதிரி ஆக்கி விட்டார் நிர்வாகி. போன் ரிங் போய்க் கொண்டே இருந்தது.

ஆனால், அதை யாரும் எடுக்கும் மனநிலையில் இல்லை. அடுத்தடுத்து ரிங் வரவும் ஜானகி சென்று, திரையில் நிர்வாகி என்று இருப்பதைப் பார்த்து, எடுத்து ஹலோ என்றாள். நிர்வாகி, ராணி என்று நினைத்து என்னம்மா, டாக்டர் என்ன சொன்னாங்க என்றார்.

இன்னும் ஒன்றும் சொல்லவில்லை சார். நான் சங்கரின் தங்கை, ஜானகி தான் பேசுறேன். அப்பா, மருந்து வாங்கப் போயிருக்கார் சார். டாக்டர் வெளியில் வந்து நிலைமையைச் சொல்லவும், நான் போன் பண்றேன் சார் என்றாள். ஓகேம்மா என்று போனை ஆப் செய்தார்.

அதற்குள் சிதம்பரம் மருந்துகள் வாங்கி வரவும், அதை டாக்டரிடம் கொடுத்தனர். நர்ஸ் வாங்கிக் கொண்டு, கதவை அடைத்தார். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் பேசத் தொடங்கினார். ரொம்ப போராடியிருக்கா போல. அதனால், கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். அதில், காது ஜவ்வு கிழிந்திருக்கிறது.

மேலும் நான்கு, ஐந்து பேர் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். மார்பு முழுவதும் நகக் கீறலும், பல்லும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உதடும் கிழிந்திருக்கிறது. கொஞ்சம் மோசமான நிலைமை தான். ப்ளட் லாஸ் அதிகமாயிருக்கு. உடனடியாக பிளட் ஏற்ற வேண்டும்.

இதில் மயக்க மருந்து வேறு ஹெவியா கொடுத்து இருக்காங்க. இதெல்லாம் விட அவள் தலையிலும், காலிலும் இரும்பு ராடால் அடித்திருக்கிறார்கள். கையைப் பிடித்து முறுக்கி இருக்கிறார்கள். இப்போ என்னதான் சொல்ல வருகிறீர்கள். மென்று முழுங்காமல், ஒரேயடியாகச் சொல்லி முடியுங்கள் என்று விஜய் கத்தினான்.

உடனடியா பிளட் கொடுக்க ஏற்ற வேண்டும். ஜுரம் வேறே பயங்கரமாக இருக்கு. நான் ஊசி போட்டுறுக்கேன். ஆனால் அது போதுமா என்று தெரியவில்லை. அது ஜன்னியாக மாற வாய்ப்பு இருக்கு. கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. தலையில் ஸ்கேன் பண்ணிப் பார்க்க வேண்டும்.

அதுவும் 24 மணி நேரம் கழித்துத் தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொன்னார். பிளட் குரூப் ஏபாசிட்டிவ். முத்து, தங்கவேலு, விஜயன், அருண் அனைவரதும் அதே குரூப் என்பதால், உடனே ஏற்றச் சொன்னார்கள். இப்போ ஏற்ற முடியாது. நான் கொடுத்திருக்கும் மருந்தில் காய்ச்சல் குறைந்தால் ஏற்றலாம் என்றார்.

அனைவரும் அதிர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டனர். விஜயன், டேய் ********#$ உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன்டா என்று கத்தினான். முத்து வண்டியை எடு என்றான். அப்போது மற்ற கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களும் விசயம் கேள்விப்பட்டு வந்தனர். ராணி, நான்ஸி, ரம்யா மூவரிடமும் துப்பாக்கி வைச்சிருக்கீங்க தானே, என்று கேட்டான். ம்ம் என்று தலையாட்டினார்கள்.

சில நண்பர்களை அங்கு பாதுகாப்பிற்கு விட்டு விட்டு, நேரே கமிசனர் வீட்டிற்குச் சென்றனர். அவர், என்ன இந்த நேரத்தில் வந்திருக்கீங்க? என்றார். நடந்ததை விஜயன் கூறினான். நாங்க, உடனே உள்துறை அமைச்சர், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.

அவன் முகத்தில் இருந்தே அவன் மனநிலையைப் புரிந்து கொண்ட கமிசனரும், உடனடியாக, உள்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் போன் பண்ணிணார். முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் விஜயன் வீட்டிற்கே வருவதாகக் கூறினார்கள்.

அனைவரும் திரும்பி விஜயன், வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். அங்கு வந்த போது, வீடே அலறிக் கொண்டிருந்தது. திவ்யாவிற்கு, ஜன்னி வந்து அவள் ஏதேதோ புலம்ப, அவளைப் படுக்க வைக்கப் போராடிக் கொண்டிருந்தனர் பெண்கள்.

விஜயன், உள்ளே போய் அவளை இழுத்துப் பிடித்து, படுக்க வைக்கப் போராடினான். அவளோ, டே ய் விடுங்கடா , என்னை என்று அலறினாள். அடுத்த நொடி இது என் விஜய் அண்ணணுக்குத் தெரிந்தது, உங்களைக் கொல்லாமல் விடமாட்டார், என்றாள்.

அடுத்த நொடி, டேய் நான் சம்பாதிச்சுத் தான்டா, என் அக்காவுக்குக் கல்யாணம் பண்ணணும், என் தம்பியைப் படிக்க வைக்கனும் என்றாள். டேய் விடுங்கடா, 'வலிக்குதுடா', என்று அழுதாள். டேய் இந்த விசயம், எங்க ஊருக்குத் தெரிந்தால், எல்லாப் பொண்ணுகளையும் படிப்பை நிறுத்திடுவாங்கடா, என்று அழுதாள்.

டேய் இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாதுடா. நான் இறந்து விட்டேன் என்றால், பேயா வந்து உங்க குடும்பத்திலே, ஒருத்தரைக் கூடக் கொல்லாமல் விடமாட்டேன், என்று அழுதாள். டேய் விடுங்கடா என்னை. எனக்கு, அப்பா அம்மா கிடையாதுடா. நான் நல்லாப் படிச்சு, நல்ல வேலையிலே இருந்தால் தான்டா என் குடும்பத்தைக் காக்க முடியும் என்று அழுதாள்.

டேய் என்னைப் இப்படிப் பண்றதுக்கு என்னைக் கொன்னுடுங்கடா என்றாள். அவளை இழுத்துப் பிடித்துப் படுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது யாருமே , எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.

சங்கர், அவளைக் கட்டிக் கொண்டு, அப்படிச் சொல்லாதேடி. நீ, “இல்லை என்றால் நான் வாழ்ந்து என்ன பயன்?”, என்று அழுதான். நான், “ உன்னிடம் என் காதலை சொல்ல வந்த போதெல்லாம், உன் படிப்பு கெட்டு விடக் கூடாதுனு தான்டி, நான் என் காதலைச் சொல்லலை”, என்று அழுதான்.

திரும்ப வந்துடுடி, நான் உன்னை என் கண்ணுக்குள்ளே வைச்சுப் பார்த்துக் கொள்வேன்டி, என்று அழுதான். சிதம்பரமும், லட்சுமியும், தங்கள் அருமை மகனின் வேதனையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தனர். ஒரு வழியாக அவளைப் படுக்க வைத்து, இன்ஜெக்சன் போட்டு தூங்க வைத்தார் டாக்டர்.

ஒரு அறைக்குள் நுழைந்தனர். ஜானகியிடம் காபியோ, டீயோ போட்டு, பிஸ்கட் எடுத்து வைத்து வரச் சொன்னான். விஜய், எதுக்கு வரச் சொன்னே?, என்று கேட்டனர். நான், இப்போவே அவனுகளை அழிக்கிற வேலையை ஆரம்பிக்கலாம் , என்று இருக்கிறேன் சார். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்றான்.

என்ன செய்யலாம்னு நினைக்கிறே? அந்த அமைச்சர் , மற்றும் பினாமிகள் வீடுகளில் ரெய்டு நடத்தப் போறேன். அதே சமயத்தில் ஒரு பிரிவு அவனுக பெத்துப் போட்ட அரக்கனைப் பிடித்து மொத்தமா ஒரே இடத்தில் வைத்து, அவனுகளே ஒருத்தர் ஒருத்தர் அடித்துக் கொண்டு சாக வைக்கப் போறேன் சார்.

இதில் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று கேட்டான். ஆல் தி பெஸ்ட். சென்னையிலே இருக்கிற மொத்த ரவுடிகளும் அழிய வேண்டும் என்றார். ஓகே தேங்க்யூ சார் என்றான். அவர் லெட்டர் பேர்டில் அதற்கான அங்கீகாரத்தை எழுதி சீல் வைத்து கொடுத்தார்.

அமைச்சர் வீட்டுக்கு ரெய்டு போக ரெடியாகுங்க என்றான்.

தொடரும்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement