வீரமாகாளி 11

Advertisement

வீரமாகாளி 11

“ எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அதுவே நடந்தது கண்டு அதிர்ந்து போயினர்”. கல்லூரியே ஸ்தம்பித்துப் போய் விட்டது. ' நிர்வாகியின் நிலைமையோ சொல்வதற்கு இல்லை'. “ இதுக்குத் தானே வேண்டாம் என்று சொன்னேன், கடைசியில் இன்று ஒரு உயிர் பலி கொடுக்க வேண்டியதாகப் போச்சே”, என்று அழுதார்.

அந்தப் பெண்ணை “ஹாஸ்பிட்டலுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையில் கொண்டு சென்றனர்”. விஜயன், “ அனைத்துக் கடவுளிடமும் வேண்டிக் கொண்டே சென்றான்'. அருணும் , சங்கரும், ' அந்தப் பொண்ணு இறந்து விட்டது; என்று சொல்லியும்; ஏதோ ஒரு நம்பிக்கையில் ; ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு சென்றான். ஸ்டெரக்சரில் கிடத்தி, டாக்டரிடம், 'அவள் இறந்து விட்டாள் ', என்று கூறுகிறார்கள்.

ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது டாக்டர், அவள் பிழைத்து விடுவாள் என்று கூறினான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவளை, ' எப்படியாவது பிழைக்க வைத்து விடுங்கள் ', என்று கூறினான். டாக்டர், உள்ளே நுழைந்து, அவள் கையைப் பிடித்துப் பார்க்கும் போதே, அவளுக்கு உயிர் இல்லை என்று தெரிந்து கொண்டார்.

ஆனாலும், அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தார். ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிரிப் போட்டார்கள். எல்லாவற்றையும் விஜயன், கண்ணாடித் தடுப்பு வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குத் தொடர்ந்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததில், அவளுடைய இதயம் துடிக்க ஆரம்பித்தது.

விஜயன், தொடர்ந்து வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே இருந்தான். அருணும், சங்கரும் ஒருவரை ஒரு வர் பார்த்துக் கொண்டனர். அவன் அப்படி வாயில் முனுமுனுக்க அந்தப் பெண்ணின் இதயத் துடிப்பு சீரானது. டிரிப் மூலம் மருந்துகள் ஏற்றப்பட்டது. டாக்டர் வெளியே வந்து, “ இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை; இட்ஸ் எ மிராக்கில்; நான் இது வரைக்கும் இப்படி பார்த்ததே இல்லை என்று புலம்பினார்”.

அருண், அடுத்தது என்ன செய்யப் போறீங்க? என்று கேட்டான். அவளுக்கு ஸ்கேன் பண்ணிப் பார்க்க வேண்டும். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகு தான் “ ஆப்பரேசன் பண்ணுவதா, வேண்டாமா, என்று முடிவு செய்ய முடியும் என்றார்.” அதை முதலில் செய்யுங்க சார் என்றனர் இருவரும். இவர் , ஏன் ஒன்றுமே பேசாமல் ஏதோ வாய்க்குள் முனு முனுத்துக் கொண்டிருக்கிறார்? என்று கேட்டார்.

எங்களுக்கும் ஒன்னும் புரியவில்லை சார். “ நீங்க உள்ளே போனதிலிருந்து கண்ணாடித் தடுப்பு வழியே,அந்தப் பெண்ணைப் பார்த்தவாறே, இப்படிப் பண்ணிக் கொண்டு இருக்கிறான்.” அப்போது, ஒரு வயது முதிர்ந்த ஒருத்தர் வந்து,' விஜயா, ‘நீ சொல்லும் மந்திரத்தை மட்டும் நிறுத்தாதே', என்று கூறினார். இப்போதைக்கு, ' அந்த அரக்கனை அழிக்க வேண்டும் என்று நினைக்காதே'. அதற்கான தருணம் இன்னும் வரவில்லை. “ இந்தப் பெண்ணைப் பிழைக்க வைக்கச் சொல்லி; இரண்டு ஆத்மாக்கள் ; ‘எம்பெருமான் ஈசனிடம் முறையிட்டு கதறி அழுததால்; ஈசன் என்னை அனுப்பி வைத்துள்ளார்”, என்று கூறிவிட்டு ; அந்தப் பெண் இருந்த அறைக்குள் சென்று; அந்தப் பெண்ணின் நெற்றியில் ; கை வைத்தார். “

அந்தப் பெண்ணின் தலை மீது கை வைத்ததும், மூச்சு சீராகவும், இதயத் துடிப்பும் சீராகியது. வெளியே நின்றவர்களை உள்ளே அழைத்தார். “ அவ்வளவு பேரும், ஏதோ மந்திரத்துக்குக் கட்டுண்டது போல் உள்ளே சென்றனர்.” உள்ளே நுழைந்ததும், விஜயன், அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். அவரும் சிரித்துக் கொண்டே, அவனுக்கு ஆசி வழங்கினார்.

விஜயன், அவரிடம் நான் இது வரை தங்களைப் பார்த்தது இல்லையே! என்று, அதிசயமாகக் கேட்டான். ' என்னை உனக்குத் தெரியாது விஜயா', ஆனால், எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும். ' உன்னைப் பற்றி அறிந்து கொள்ளும் நேரம் வரும் போது ; நான் உன் பிறப்பின் இரகசியம் கூறுவேன்; அது வரைப் பொறுமையாக இரு” என்று கூறினார்.

அவன் கழுத்தில் ஒரு ருத்திராட்சம் மட்டும் கயிற்றில் கோர்த்து, இறைவனை வணங்கி , அவனுக்குப் போட்டு விட்டார். அதே போல், அருணுக்கும், சங்கருக்கும் போட்டு விட்டார். “ இனி உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம், என்னை நினைத்தால், நான் உன் முன் நிற்பேன்,” என்று கூறினார். இப்போது சொன்ன மந்திரத்தைத் தினமும் காலையிலும் மாலையிலும் சொல்லிக் கொண்டிரு. இந்த மந்திரத்தின் பேர் என்ன சுவாமி? , என்று கேட்டான். இது “மகா மிருத்யஞ்ச மந்திரம்”.இதைச் சொல்லி வழிபட்டால் தீராத நோயும் குணமாகும். இது எம்பெருமான் ஈஸ்வரனின் மந்திரம்.

“ எனக்கு மந்திரத்தைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதே”, நான் எப்படி இந்த மந்திரத்தை உச்சரித்தேன் என்று கேட்டான். அது இறைவன் செயல் விஜயா. அதைப் பற்றி மற்றொரு நாள் பேசலாம். மருத்துவர் ஐயா!, தாங்கள் இனி , இந்தப் பெண்ணிற்கு வைத்தியம் செய்யுங்கள். நான் வருகிறேன் என்று கூறிக் காற்றில் மறைந்தார்.

அனைவரும் சுற்றி சுற்றித் தேட, விஜயனோ, “ டாக்டர் நீங்கள், அவளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கப் பாருங்கள் “, என்று கூறினான். அவரும் தன் வேலையைச் செய்யப் புறப்பட்டார். அருண், கல்லூரிக்கு போன் பண்ணி சொல்லி விடு , என்றான் விஜயன். டேய் எனக்கு, இங்கே நடந்ததையே நம்ப முடியவில்லை. என்னைப் போய் பேசச் சொல்றியேடா என்றான்.

சரி நானே பேசுகிறேன் என்று கூறி, போனை ஆன் செய்து பேசினான். சார், “ அந்தப் பொண்ணு ஆசிட் நினைச்சு, வேறு எதையோ குடிச்சிருக்கு சார்”. இப்போ, அதை வெளியே எடுப்பதற்கான ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு சார் என்றான். என்ன விஜய் சொல்றே!, 'நீ சொல்றது உண்மையா?, என்று கேட்டார். நான், “சொல்வதெல்லாம் உண்மை தான் சார், உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை”, என்று கூறிச் சிரித்தான்.

நான், உடனே கிளம்பி அங்கே வருகிறேன் என்று கூறினார். இந்த செய்தி காட்டுத் தீ போல் கல்லூரி முழுவதும் பரவியது. நிர்வாகியும், பிரின்ஸ்ப்பலும் ஹாஸ்ப்பிட்டலிற்கு வந்து, அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு தான் , அவருக்கு உயிரே வந்தது. ஆனாலும் விஜயனிடம், “ அந்தப் பெண்ணைக் கட்டி அணைக்க முயன்ற போது, யார் போனில் வீடியோ எடுத்தார்களோ, அதைக் கண்டு பிடித்து, அதை அழிக்க வேண்டும் விஜய் “, என்று கூறினார்.

நான் சாயந்திரத்துக்குள்ளே கண்டு பிடிச்சிடுறேன் சார், என்று கூறினான். அதற்குள் விசயம் தெரிந்து, கதறியபடி வந்த பெற்றோரிடம், ஒன்றும் பிரச்சனை இல்லை. அவள் நன்றாகத் தான் இருக்கிறாள். பணம் எல்லாம் நான் கட்டிக்கிறேன். உங்க பெண்ணைப் பார்த்துக்கோங்க, என்று கூறி அவரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பினான்.

டாக்டரிடம், சார் அவங்களுக்கு ஸ்பெசல் வார்டே கொடுங்க. பணம் எதுவும் வாங்க வேண்டாம். மனநல மருத்துவர் இருந்தால், அவரிடம் கூறி கவுன்சலிங் ஏற்பாடு பண்ணுங்க. எப்போ டிஸ்ஜார்ஜ் ஆகுறாங்களோ , அது வரைக்கும் நல்ல சாப்பாடு, பழங்கள், பால் எல்லாம் கொடுக்கச் சொல்லுங்க. இதில் ஐம்பதாயிரத்துக்கான செக் இருக்கு. தேவையானதைக் கொடுங்க என்று கூறி கல்லூரிக்கு வ ந்தனர்.

வந்தவுடன் , மாணவர்கள் அவர்களைக் கூட்டமாக, சுற்றி வளைக்க, அதெல்லாம் ஒன்றுமில்லை. அவள் நல்லாயிருக்கா. இப்போ யாரும் அவளைத் தொந்தரவு பண்ண வேண்டாம். நம் வேலையைப் பார்ப்போம். அந்தப் பொண்ணை, அவன் கட்டி அணைக்க முயன்ற போது, யார் போனில் வீடியோ எடுத்தது? அது எனக்கு , நாளைக் காலைக்குள்ளே, நம்ம பிரின்சிப்பல், பேராசிரியர்கள், என்னிடம் கூடத் தனியாகச் சொல்லலாம்.

“ நீங்களே சொல்லி விட்டால் நல்லது, நாங்களாகக் கண்டு பிடித்தால், அதன் விளைவு பயங்கரமாக இருக்கும்”, என்று கூறினான். நாளைக் காலை வரை உங்களுக்கு டைம் என்று கூறி முடித்தான். அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த விசயம் நிர்வாகி மூலம் கூறப்பட்டது. சரி நம் வேலையைத் தொடங்குங்கள் என்று கூறினான். மறு நாள் காலை வரை ஒருவரிடம் இருந்தும் பதில் வரவில்லை. விஜயன், மதியம் வரை பொறுத்துப் பார்த்தவன், கமிசனருக்கு, போன் செய்து உதவி கேட்டான். ' அவரும் இன்று இரவுக்குள், உனக்குத் தகவல் அனுப்புகிறேன் ', என்று கூறி போனை வைத்தார்.

விடியும் காலை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top