விழிக்க வைக்கும் விலைவாசி

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"காத்திருந்து கடமை செய்து
கஷ்டப்பட்டு காசு சேர்த்த காவலாளி
கனவில் கண்ட பொருளை
கையில் தொட போன போது
கடல் கடந்து சென்றது அவன் கண்டது
விலைவாசி உயர்வால்"

"ஊரையே சுத்தம் செய்து
உழைத்து சேர்த்த காசில்
உருப்படியாய்
ஒரு தோடு செய்ய நினைக்கையிலே
தொலைதூர வானமாய் ஆனது
துப்புரவு தொழிலாளியின் கனவு
எவரெஸ்டை எட்டி நிற்கும் தங்கத்தின் விலை கண்டு"

"பசியில் அழும் குழந்தைக்கு
பால் வாங்கி தந்திடத்தான்
பாடுபட்டு உழைத்த பாமரன் நினைத்தான்
பாலின் விலை கண்டு
குழந்தையின் அழுகை கண்டு
பாமரன் தன் பசியைத் தான்
பலவேளை பதுக்கினான்"

"நடைபாதைக் கடைக்காரன்
நாள் முழுதும் நடந்து களைத்தான்
அவன் நடை அது தடைபட
பேருந்து தேட பயணச்சீட்டின் விலைக்கண்டு
பாவி உயிர் மறித்தான்"

"உழைக்கும் வர்க்கம் அது
தன்னுள்ளே ஒடுங்க
உட்கார்ந்து தின்னும் வர்க்கம் தான்
தலைநிமிர்வோடு நிற்க
தற்கொலையில் தான் முடிக்கிறான்
தன் வாழ்வை
உழைக்கும் வர்கத்தின் கடைநிலை ஊழியன்"

"வரிகளினால் வாழ்க்கை தொலைத்து
மீள முடியா தூக்கம் செல்லும் முன்
மீட்டெடுப்போம் அவர்களை"

"கோடிகளின் குவியலில்
குடியிருப்பவனை குத்தாது விலைவாசிஉயர்வு
தெருக்கோடியில் தினம் இருப்பவனுக்குத் தான்
இதயத்தில் அடைப்பை தருகிறது விலைவாசி உயர்வு"

"விடியல் அதில் விலைவாசி உயர்வு மறைந்தால்
மலருவான் கடைநிலை ஊழியனும்
விநாடியும் நிரந்தரமற்ற வாழ்வதில்"
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes