விட்டில் பூச்சிகள் by Shanisha

Advertisement

fanishaa

Member
ஹாய் பிரெண்ட்ஸ்....சில பல கவிதைகள் எழுதிய நான் தொட்ட முதல் சிறுகதை முயற்சி.... நல்லாருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க...

திங்கள் கிழமை காலை 8 மணி பேருந்தில் ஏறினாள் இனியா.அரசு பள்ளியில் ஆசிரியராக 6வருடங்கள் பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.இது வழக்கமாக அவள் செல்லும் டைம் தான். இந்த பேருந்தை விட்டால் பள்ளிக்கு மிக தாமதமாகிவிடும்.
ஜன்னலோர இருக்கை தான் எப்போதும் அவள் விருப்பமானது.
ஆனால் இன்று அதில் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தாள்.
சுடிதார் மற்றும் ஷால் போட்டு அழகாக இருந்தாள்.அப்பெண் அருகில் அமர்ந்து கொண்டாள்
மணியைப் பார்த்தாள் இனியா. அவளது சக ஆசிரியை மீனா இன்னும் வரவில்லை. பீக் அவரில் இடம் பிடித்து வைக்கவும் முடியாது. இனியாவின் நேர் எதிர் சீட்டில் ஒரு இடம் காலியாக இருக்கிறது.மீனாவின் அதிர்ஷ்டம் இடம் பிடிப்பாளா என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
இனியாவின் பழக்கம் என்னவெனில் பயண நேரத்தை வீணடிக்காமல் சுற்றுபுற மனிதர்களை அவர்களின் வாழ்வியல் பரபரப்பை கண்களால் படம்பிடித்து கொள்வாள். ஏனெனில் நிதர்சனம் கற்றுத் தரும் பாடத்தை வேறு எந்த ஆசானும் கற்றுத் தர முடியாது என்பது அவள் கருத்து.
அருகில் இருந்த பெண் கண் மூடி அமர்ந்து இருந்தாள்.இனியாவின் விழிகள் ஜன்னல் மூலமாக தூரத்தில் வரும் மீனாவை கண்டு கொண்டது.மீனாவின் அதிர்ஷ்டம் எதிர்சீட் காலியா இருக்க வேகமாக மூச்சு வாங்க வந்து அமர்ந்தாள்.
இனியா “என்னப்பா இன்னைக்கு ஓடிவந்து பஸ்ச பிடிச்சிட்ட போல ”என்றாள்.
மீனா “ஆமாம் பா ...என்ன செய்ய உனக்கு ஸ்கூல் போகற அளவு கொஞ்சம் பெரிய பசங்க அத்துடன் உன் வீட்டுக்காரரும் ஹெல்ப் பண்ணுவார்”.எனக்கு அப்படியா “கையில் ஒண்ணு, வயிற்றில் ஒண்ணு” என தன் இயலாமையை கூறினாள்.
இனியாவுக்குத் தெரியும் மீனாவின் குடும்ப சூழ்நிலை அவள் கணவன் “பிரைவேட் கம்பெனி ஒன்றில் அக்கவுண்ட் செக்ஷனில்” வேலை செய்கிறார். மீனாவுக்கு முன்னா டியே அவர் கிளம்பியாகனும் என்ற நிலையில் இவளுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.
அத்துடன் கண்டக்டர் வரவும் பேச்சை இருவரும் முடித்துக் கொண்டனர். இனியாவின் காதில் மெல்லிய அழுகைச் சத்தம் கேட்டது. இனியா ஓரக்கண்ணால் பாத்தாள். அருகிலுள்ள அந்த இளம் பெண் தான் அழுது கொண்டிருந்தாள்.
இனியா கண்டக்டர் வரவும் திருவேங்கடம் ஒரு டிக்கெட் வாங்கி விட்டாள். கண்டக்டர் பக்கத்தில் உள்ள பெண்ணை நோக்கி “டிக்கெட் மா” என கத்தினார்.
அப்பெண்ணோ கண்ணீர் வடிய வடிய கண் மூடி அமர்ந்து இருந்தாள். இனியாவோ மெல்ல அப்பெண்ணை சுரண்டி கண்டக்டர் ஐ கை காட்டினாள்.
அவள் பதறிப் போய் தன் குட்டி ஹேண்ட் பேக்கை திறந்து ரூபாயை எடுக்கும் முன் கண்டக்டர் பின்னாடி டிக்கெட் போடச் சென்று விட்டார்.
அப்பொழுது அவள் மொபைலில் அழைப்பு வந்தது. அவள்
“ அக்கா நான் இப்போ தான் பஸ் ஏறி இருக்கேன்.மாமாக்கு தெரியுமாக்கா”? என அழுது கொண்டே கேட்டாள்.அந்த பக்கம் ஏதோ குரல் கேட்டது.இந்தப் பெண் “ம்ம்ம் சரிக்கா” என போனை ஆஃப் செய்து விட்டாள்.
பஸ் வேகமெடுத்து சென்று கொண்டு இருந்தது. ட்ரைவர் எப்போதும் பாடல்கள் போட மாட்டார். அப்படியே போட்டாலும் மென்மையான ஓசையில் ஒலிக்க விடுவார். இன்று அது கூட இல்லாமல் பஸ் அமைதியாக சென்றது.
அந்தப் பெண்ணின் மொபைல் ஒலித்தது. திரும்பவும் அப்பெண் அழுதுக் கொண்டே பேசினாள். இம்முறை அவள் அம்மாவிடம் “அம்மா எல்லாம் முடிந்து போச்சுமா இனி என் வாழ்க்கை அவ்வளவு தான்” என அழுதாள்.
எல்லாத்தையும் விட்டு விட்டு வெளியே வந்திட்டேன் மா...நான் எவ்வளவு தான் பொறுத்து போவதுமா ? என்னால முடியல மா! என்று ஒரே அழுகை.
கண்டக்டர் வேறு டிக்கெட் கேட்டு இடையில் வரவும் அப் பெண்ணால் தலை நிமிர்ந்து பாக்கக்கூட முடியவில்லை.
இனியாவே இடையிட்டு பணத்தை பெற்று“ எங்கு செல்ல டிக்கெட் வாங்க வேண்டும்”? எனக் கேட்டு பெற்றுக் கொடுத்தாள். சுடிதார் பெண்ணோ “தாங்யூக்கா ”எனக் கூறி வாங்கி கொண்டாள்.
திரும்ப போனில் விட்ட இடத்தில் இருந்து பேச ஆரம்பித்தாள். “அப்பாவ போய் பேசல்லாம் சொல்லாதம்மா அவன் அசிங்கப்படுத்துவான்” எனக் கூறினாள். இடையில் “இல்லமா பாப்பாவ அங்கேயே விட்டு விட்டு வந்திட்டேன்மா ”என ஒரே அழுகை.
இனியாவுக்கோ ஒரே அதிர்ச்சி ஏதோ பிரச்சினை என்றாலும் குழந்தையை விட்டு விட்டு வெளியே வரத் தோனுமா என்று நினைத்தாள். அடுத்து அவள் தோழியின் அழைப்பு “இல்லடி நான் இப்போ அக்கா வீட்டிற்கு சங்கரன்கோவில் போய்க்கிட்டு இருக்கேன்”. அவனப் பத்தி பேசாத அவன் ஒரு “பொம்பள பொறுக்கி ”என்று அழுதாள்.
இனியா அப்பெண்ணிடம்
“உன் பேர் என்னப்பா ? என்ன பிரச்சனை ?என்கிட்ட சொல்லமுடிஞ்சா சொல்லுப்பா” !!!எனக் கேட்டாள்.
என் பேரு கவிதா. எங்க ஊர் ஆலங்குளம். என் புருசன் கொடுமை படுத்துறான். 3வருசமாச்சு கல்யாணம் முடிஞ்சு இன்னும் அடுத்தவ பேச்சக் கேட்டு சந்தேகப்படுறான்.
இனியா “ பெரியவங்ககிட்ட சொன்னியா” என்று கேட்டாள்.
கவிதா “அவருக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான்”
அவங்களும்“ நாங்க லவ் மேரேஜ் பண்ணதால தனிக் குடித்தனம் வைச்சிட்டாங்க ”
அவருக்கு “ஒரு தங்கை மட்டும் தான் அதுவும் சின்ன பொண்ணு காலேஜ் படிக்குது”என்றாள்.
இனியா “இவளே இன்னும் சின்ன பொண்ணு தான் அது தெரியல.... என்ன சொல்ல”??? என மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
கவிதா “நீ என்ன படிச்சிருக்க?
எப்படி உன் ஹஸ்பெண்ட ல்வ் மேரேஜ் பண்ண??? என விசாரித்தாள்.
நான்“ ப்ளஸ்டூ நர்சிங் படிச்சிட்டு புகழ்பெற்ற ஒரு மருத்துவ மனையின் பேரைக் கூறி அங்கு வேலை பாத்தேன்”.
அப்போ“ இவர் அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட்க்காக அடிக்கடி வந்த போது பழக்கம்” ஏற்பட்டது. அப்படியே தினமும் டூட்டி முடிச்சிட்டு பஸ் ஸ்டாப் போகும் போது தினமும் பின்னாடியே வந்து “லவ்ப்ரொபோஸ்” செஞ்சாரு என்றாள். நானும் சரி சொல்லி எங்க வீட்டில் பேசச் சொன்னேன். வேற வழி இல்லனு ஒத்துகிட்டாங்க என்றாள்.
அவர் வீட்டில் கல்யாணம் முடிச்சதும ஒரு வருசத்தில் பாப்பா பிறந்ததும் தனியே ஒதுக்கி விட்டுடாங்க என்று கேவினாள்.
இனியா நீ விரும்பி பண்ண மேரேஜ் தானே !!!அப்புறம் என்ன ?என்றாள். எல்லாம் புதுசுல ஒண்ணும் தெரியல.ஆனா அவருக்கு உருப்படியான வேலை எதுவும் கிடையாது. என்னையும் வேலைக்கு அனுப்ப மாட்டேங்குறாரு என்றாள். இப்போ பாப்பா பிறந்ததும் என்கிட்ட ஆறு மாசம்தான் வைச்சிருக்க விட்டாரு என்றாள்.
அப்புறம் தான்“ தனிக் குடித்தனம் என ஒரு ஆறு குடித்தனம் உள்ள ஒர் காம்பவுண்ட் வீட்டில் குடி போனோம்”. ஆனா அங்க போன பின் தான் அவன் பக்கத்து வீட்டிலே எப்பொழுதும் இருப்பான் . அந்த பொம்பளை வீட்டில் “அக்கா அக்கானு” கதியா கிடப்பான். ஒர் நாள் “அவ புருசன் பாத்து அடிதடி வரை போய் அசிங்கமாச்சு...அக்கம் பக்கம் தலை காட்டமுடியல...ஏற்கனவே ஒரு தடவை என்னை அடிச்சு எங்க அப்பா வந்து பேசி சேர்த்து வைச்சாங்க” என்று கூறி ஜன்னல் வழியே வெறித்தாள்.இப்போ என் குழந்தையை கூட என்னிடமிருந்து பிரித்து அந்த பொம்பளை வீட்டில் கொண்டு போய் வச்சுகிட்டு என மேல் நடத்தை கெட்டவள் என பழி போட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளிட்டான்.
இனியாவோ இப்போ எங்க போற? என்ன செய்ய போற ?என்று விசாரித்தாள்.கவிதாவோ வாழவே பிடிக்கல செத்துடலாம்னு தோணுது
தோத்துபோயிட்டேனு!!! திரும்ப போய் பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல என்று மனம் வெறுத்து போய் அழுதாள்.
ஆனா “ என் பிள்ளையை நினைச்சாத் தான் பயமா இருக்கு!!! அங்கேயே விட்டு விட்டு வந்துட்டேனே ”என்று கதறினாள்
இனியாவுக்கு பரிதாபத்தையும் மீறி கோபம் வந்தது. இனியா வெளியே பாத்தாள். இன்னும் ஸ்டாப் வர பத்து நிமிடங்கள் உள்ளது. அதற்குள் அப் பெண்ணிற்கு ஏதேனும் வழியில் உதவிட நினைத்தாள்.
“கவிதா இங்கே பாரு நீ ஒண்ணும்
சின்ன பொண்ணு இல்ல! படிச்சு இருக்க !கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவெடு.
“சாகறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா .... நீ என்ன கஷ்டப்பட்டுட்ட? உன் பிள்ளையின் எதிர் காலத்தை நினைச்சு பாரு !!!! காதலிக்கும் போதே யோசித்து இருக்கனும் . பெத்தவங்களை பத்தி யோசிக்காமா அவங்க பேச்சக் கேக்காம இப்போ வந்து புலம்புறது” என்று பேருந்து என்றும் பாராமல் தாளித்து எடுத்து விட்டாள் இனியா.
கவிதாவோ “நான் இப்போ என்ன செய்வது ”?எனக் கேட்டாள். இனியாவோ “நேரா அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்பா அம்மாவுக்கு போன் செய்து உன் குழந்தையைத் தூக்கிட்டு வரச் சொல்லு. உன் கணவனுக்கு திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்து பாரு”.
இல்லன்னா நல்ல வக்கீலா பாத்து டைவர்ஸ் அப்ளை பண்ணு.
நீ திரும்பவும் உன் பெற்றோருடன் சேர்ந்து வாழு அதுதான் உனக்கும் உன் பிள்ளைக்கும் பாதுகாப்பு” என்று கூறினாள்.
கவிதாவோ “அப்பாக்கு சுமையா நான் திரும்ப போகனுமா” என
இனியாவோ“ நீ திரும்ப ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போ, தொலைநிலைக் கல்வி நிலையம் மூலம் உன் கல்வித் தகுதியை உயர்த்தி கொள்” என்றாள்.
அத விட்டுட்டு“ குழந்தையை விட்டு விட்டு சாகப் போறேங்கிறா” என்று சடசட வென கொட்டித் தீர்த்து விட்டாள்.
இன்றைய பெண்கள்“ விளக்கை தேடி போகும் விட்டில் பூச்சிகள்” போல தங்கள் வாழ்க்கையை
அவசரப்பட்டு கருக்கி கொள்கிறார்கள் என இனியா ஆத்திரப்பட்டாள் .
பின்னிருந்து யாரோ தோளைத் தொடவும் திரும்பி பார்த்தாள் .அங்கு மீனா ஸ்டாப் இறங்கும் ஆயத்த நிலையில் இருந்தாள்.
என்ன இனியா ஸ்கூலுக்கு வர இஷ்டம் இல்லையா??? அப்படியே சங்கரன்கோவில் போறதா பிளானா என்று மீனா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அவசர அவசரமாக இனியாவோ எழுந்து கொண்டே “கவிதா இந்தா இது என் நம்பர் என செல்பேசியின் நம்பரை டிக்கெட் பின்புறம் எழுதிக் கொடுத்தாள்”.
“ ஊருக்கு போனதும் போன் பண்ணு எந்த உதவினாலும் ஆலோசனை என்றாலும் தயங்காமல் போன் செய் என்றாள். என்னால் முடிஞ்ச உதவியை கண்டிப்பாக செய்வேன்” என விடை பெற்றாள்.
கவிதாவோ முகத்தில் புன்னகையுடனும் மனதில் நம்பிக்கை யுடனும் வாங்கிக் கொண்டு மனதார நன்றி கூறினாள்.
இனியாவிற்க்கு மனதில் இனம் புரியாத சந்தோஷத்துடனும் ஆத்மதிருப்தியுடனும் பள்ளிக்கு நடந்தாள்.
பேருந்து பயணிகளை இறக்கி விட்டு விட்டு புதிய பயணிகளை ஏற்றிச் சென்றது. வாழ்க்கையும் பேருந்து போலத் தான் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. அந்தந்த நிறுத்தத்தில் கவலைகளை இறக்கி விட்டு விட்டு சந்தோசத்தை மட்டும் நம்முடன் எடுத்துக் கொண்டு வாழ்க்கை எனும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்.
ஜன்னலோரப் பெண்ணின் முகத்தில் ஒரு நம்பிக்கை கீற்று ஒளி தெரிந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "விட்டில்
பூச்சிகள்"-ங்கிற அழகான
அருமையான புதிய முதல்
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Fanishaa டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Sisss ....
ஹா ஹா ஹா
தூக்கம் வந்திடுச்சுப்பா
இப்போ எழுதி கரெக்ட் பண்ணிட்டேன், Fanishaa டியர்
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவதுப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top