விடுமுறை தினம்...

kavipritha

Writers Team
Tamil Novel Writer
#1
ஏதோ ஒரு விடுமுறைதினம்...

என்னை மட்டும்

இந்த, நாலு பிள்ளைகளிடம்

தனியே விட்டு...

வெளியே சென்றது ஒரு படை...

எல்லாம் பத்து வயதுக்குள்...

‘பட்டென’ ஒரு சத்தம்...

என்னடா... என நான்

சமையலறையிளிருது குரல் கொடுக்க...

‘பெரியம்மா...’

என அலறினான் சின்ன மகன்..

என்னடா... என்றேன் பொறுமையாக...


அண்ணா... லைட்ட ஒச்சிட்டான்....

வந்து பார்த்தால்.. ஹால்லைட், காலி....

எல்லாம் எடுத்து முடித்து

நிமிர்கையில்... மகள், ம்மா...

அவ, பவுடர கொட்டிட்டா...


ஐயோ... அதற்குள் இந்தபக்கம்...

பெரிம்மா... என் சைக்கிள்ல...

பாம் பாம், ஓடச்சிட்டா...

ம்மா... என் டெடி...

குடுடா... குடு....


ஐயோ என்மக்கள் எல்லாம்

வரம் வாங்கி வந்த அசுரர்களாய்..

அவதாரம் கொண்டு... நிற்கையில்...

வரம் கொடுத்த கடவுளாய்

நான் விழிபிதுங்கி நின்றேன்...


எங்கே எடுக்க... எதை சேர்க்க...

எப்படி கோர்க்க... எல்லாம்

களைந்த சிதறிய பொக்கிஷங்களாக...

நானும் அவர்களுடன் கலந்தேன்...

இதோ தொலைந்து கொண்டிருக்கிறேன்...

அவர்கள் உலகத்தில்...
 
Advertisement

New Episodes