போகுது போ
ப்ரீத்தி இறந்த அன்னிக்காவது அர்ச்சனாவை யாரும் ஒண்ணும் குறை சொல்லாமலிருக்கிறாங்களே
எவளோ ஒரு மாடலிங் பெண் தாஷா அவள் அஷ்வத்தைப் புரிந்து நம்பும் அளவுக்கு பெற்றோர் அவனை நம்பவில்லையே
அஷ்வத்தின் பிறந்த நாள்தான் ப்ரீத்தி மூதேவிக்கு தற்கொலை செய்ய நல்ல நாளாக தேர்ந்தெடுத்தாளா?
அந்த பிளாக் டேயில் என்னதான் நடந்ததுன்னு எப்போ வந்து சொல்லுவீங்க, விஜி டியர்?
துளசிராம் விவரம்தான்
பணத்தை வீணாக்காமல் உருப்படியா சொத்து வாங்கி போட்டிருக்கிறார்
பின்னே எல்லோரும் சீனிவாசன் மாதிரி முட்டாளாக இருப்பாங்களா என்ன?
சாப்பாடு நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன்னு பொண்டாட்டிக்கிட்ட சொல்லத் தெரிஞ்ச சீனிவாசனுக்கு பிராடு பயலை நம்பி லட்சக்கணக்கில் கடன் கொடுக்கக் கூடாதுன்னு புத்தியில்லையா?
அப்படி என்னதான் நியூஸ் பேப்பரில் பார்க்கிறே, சீனிவாசா?
உருப்படியா ஏதாவதா? இல்லை இப்பவும் சுற்றுலா பற்றித்தானா சீனிவாசன்?
அஷ்வத்தை ஒழிக்கும் மனோஜ்ஜின் திட்டம் என்னவாச்சு?
அர்ச்சனா அஷ்வத் எப்போ மீட் பண்ணுவாங்க?
அவள் படிக்கும் படிப்பு படிக்கும் அளவுக்கு.....
அதாண்டா நீ பண்ணின தப்பு.....
பையனுங்க மட்டுமில்லை பொண்ணுங்களும் இந்த மாதிரி ஆண்களை வற்புறுத்த தான் செய்றாங்க....
அவனுங்க ஆயுதம் எடுக்குறானுங்க....
பொண்ணுங்க சாவை நோக்கி....
இங்கே ப்ரீத்தி சாவுக்கு காரணம் ???
கனமான பதிவு விஜி.ப்ரீத்தியின் இறந்த நாள் அன்றாவது அர்ச்சனா மனம் புண்படுவது போல பேசாம இருக்காங்களே.ப்ரீத்தி விதவிதமா அஷ்வத்துடன் இருப்பது போல ஓவியம் வரைஞ்சி வச்சிருந்தா,அவன் அவளுடன் பழகி மோசம் செய்தான் என நினைப்பதா.
ப்ரீத்தி இறந்ததுக்கும் அஷ்வத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை, அஷ்வத்தை திருமணம் செய்ய தன் உயிரை பணயம் வைத்தாள் என சொல்ல முடியாமல் அர்ச்சனா தவிப்பது கொடுமை.
அஷ்வத் தவறான பாதையில் சென்றதற்கு உண்மை சொல்லாததே காரணம் என குற்றவுணர்ச்சியில் துடிப்பதும்,அஷ்வத்தை சபிக்கும் போது அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என கடவுளிடம் வேண்டுவது என அர்ச்சனாவின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.
தாஷா குடும்பத்தின் பணத் தேவைக்காக தாஷாவின் அழகு பணம் பெற்று தரும் என சொந்த தாயே சொல்லகூசுவதை போல நடந்து கொண்டது இவள் தாய் இல்லை பேய் என்றே தோனுது.
தாஷவின் நிலை மனதை கனக்க வைக்குது.
பணம் போட்டு விளம்பரம் எடுக்குறோம்னு, நகை கடை விளம்பரத்துக்கு பட்டுபுடவையில் வராமல், நீச்சல் உடையிலா நகையை போட்டுட்டு வர முடியும்.மகன் அமைதியா இருந்தாலும் அப்பன் ரொம்பவும் துள்ளுறான்.
விளம்பரத்துக்கு நடிக்க வந்தவள் அஷ்வத்தால் ப்ரீத்தி இறந்திருக்க மாட்டாள் என நினைக்க,அவன்
தந்தை அதை நம்பாததே அஷ்வத் தடம்மாற காரணமா ஆகிடுச்சு.அவள் படிக்கிற படிப்பை இவனும் படித்ததால் தான் பிரச்சனை.அவளை விட்டு விலகி வேறு காலேஜில் சேர்ந்து இருந்தால் ப்ரீத்திக்கு இந்த நினைப்பு வந்திருக்காதோ.