வாழ்ந்து காட்டு

#1
*ஸ்ரீ கிருஷ்ணா*

*வாழ்ந்து காட்டு*

உன்னைக் கேவலப்படுத்தினவரின் முன் வாழ்ந்து காட்டு . . .

உன்னைக் கஷ்டப்படுத்துபவரின் முன் வாழ்ந்து காட்டு . . .

உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் முன் வாழ்ந்து காட்டு . . .

உன் கடந்தகால தோல்விகளை வெற்றியாக்கி வாழ்ந்து காட்டு . . .

உன்னை அவதூறு சொன்னவர்கள் முன் வாழ்ந்து காட்டு . . .

உன்னை அழிக்க நினைப்பவர்கள் முன் ப்ரஹ்லாதனைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை அவமரியாதை செய்தவர்கள் முன் த்ரௌபதியைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பற்றி அவதூறு பேசியவர்கள் முன் ஸ்ரீமதி மீராவைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஏளனமாகப் பார்த்தவர்கள் முன் விதுரரைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை ஒதுக்கித் தள்ளினவர்கள் முன் ஹரிதாஸ் யவனைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னைப் பரிகசித்தவர்கள் முன் பின் பழகிய பெருமாள் ஜீயரைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன் மனதைக் காயப்படுத்தியவர்கள் முன் ஸ்ரீமதி சக்குபாயைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை அலட்சியம் செய்பவர் முன் ஸ்ரீராமனின் தம்பி பரதனைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னைத் துரும்பாக எடை போட்டவர் முன் சத்ரபதி சிவாஜியைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை வேண்டுமென்றே சீண்டியவர்கள் முன் மஹரிஷி வசிஷ்டரைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை அனாதையாக அலைய விடுபவர்கள் முன் நாரத மஹரிஷியைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் முன் பாண்டவர்களைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னை அவநம்பிக்கையில் அழுத்துபவர்கள் முன் கூர்ம தாஸரைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன் சத்தியத்தை அழிக்க நினைப்பவர்கள் முன் ராஜா ஹரிச்சந்திரனைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றுபவர் முன் சந்த் துகாராமைப் போல் வாழ்ந்து காட்டு . . .

உன் மீது வீண் பழி சுமத்துபவர் முன் திருமழிசை ஆழ்வாரைப் போல் வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்ட வேண்டும்!

இதுவே உன் வாழ்வின் லக்ஷியம்!
இதுவே உன் வாழ்வின் சாதனை!
இதுவே உன் வாழ்வின் ப்ரயோஜனம்!

வாழ்ந்து காட்ட வேண்டும்!

இதுவே இன்று முதல் உன் வாழ்வின் தாரக மந்திரமாகட்டும்!

எது எப்படி நடந்தாலும் யார் என்ன செய்தாலும் நீ உலகில் வாழ்ந்து காட்ட வேண்டும்!

உன் க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான்!
நீ வாழ்ந்து காட்ட வேண்டும்!

உலகில் உனக்கென்று ஒரு இடம் இருக்கிறது!
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த இடம்!
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த ப்ரசாதம்!
உன் க்ருஷ்ணன் உனக்கென தந்த வாழ்க்கை!
இதில் வாழ உனக்கு முழு அருகதை உண்டு!
நீ வாழ்ந்து காட்ட வேண்டும்!

அதைக் கண்டு உலகம் ப்ரமித்து நிற்க வேண்டும்!
அதைப் பார்த்து க்ருஷ்ணன் கை தட்ட வேண்டும்!
அதைக் கேட்டு நான் எழுந்து நின்று உனக்கு மரியாதை செய்ய வேண்டும்!!!

நான் தயாராகி விட்டேன் . . .
க்ருஷ்ணன் எப்போதோ தயாராகி விட்டான் . . .
இனி நீதான் வாழ்ந்து காட்ட வேண்டும் . . .

ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளே சரணம்!!
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes