வாழ்க்கையில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமா?

Eswari kasi

Well-Known Member
#1
வாழ்க்கையில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமா?

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியதை நாமும் கடைபிடிக்க தொடங்கினால் அடுத்த கட்டம் காலடி எடுத்து வைக்க முடியும்.

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.

அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன்.

ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரரை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.
எனது படை வீரன் என்னிடம் சொன்னார்..... அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய்ப் பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றார்..

நான் குறுக்கிட்டேன்..... அது அல்ல உண்மை. வீரனே....!!

உண்மை என்ன தெரியுமா......!!

நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார்.என்னை அடிக்கடி கொடுமைப் படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்....

நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்...

இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்.

இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்....

ஆனால் இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதுமல்ல...

பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி யெழுப்பாது, அழித்து விடும்.

அதே நேரம் சில விஷயங்களில் மனதின் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்......
என்றார் மண்டேலா...

நாமும் சாம்ராஜ்யம்அடைய வேண்டுமா?சகிப்பு தன்மை கொண்டு வாழுங்கள்...

படித்ததைப் பகிர்ந்தேன்
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
#7

சிஸ்.... யாருக்கு சரியோ இல்லையோ... எனக்கு இன்னிக்கு இது சரியா இருக்கு.... ஹா...ஹா.... தேங்க்ஸ் ஈஸ்வரி சிஸ்....
 
mila

Writers Team
Tamil Novel Writer
#8
உண்மை பழிவெறியோடு திரிந்தால் நம்ம வாழ்க்கையும் தன் அழியும்.

மன்னிப்பதே சகல சிறந்தது. சிறந்த தலைவருக்கு இருக்க வேண்டிய சிறந்த குணங்களில் ஒன்ரும் அதுவே!
 
Seethavelu

Well-Known Member
#9
நூத்துக்கு நூறு உண்மை இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தலைமுறைக்கு சகிப்புத்தன்மையை இல்லை அதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோரே
 
Advertisement

New Episodes