வாழ்க்கையின் திருப்புமுனை

Advertisement

பகுதி -10
மலைவாசஸ்தலத்தில் சில சந்தோஷமானத் தருணங்களை ஒன்றாகக் கழித்த பிறகு அவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குச் செல்கிறார்கள். ஹர்ஷிதாவின் தம்பி அகிலன் தனது பள்ளிப்படிப்பை முடித்து, ஹர்ஷிதா படிக்கும் அதே நகரத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான். அவர்களது குடும்பத்தினர் அந்த நகரத்திற்குக் குடிச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.அசோக் மற்றும் ஜெயஸ்ரீ அங்கு ஒரு புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளனர். எனவே அவர்கள் ஒரு புதிய வீட்டைத் தேடுகிறார்கள். பின்னர் ஹர்ஷிதாவின் இன்டர்ன்ஷிப் காலம் தொடங்குகிறது. ஹர்ஷிதாவும் அவளது நண்பர்களும் அவரவர் வேலைக்குகளுக்குச் செல்கிறார்கள். எல்லோரும் தங்கள் தேர்வுகளுக்கு மட்டுமே கல்லூரிக்கு வருகிறார்கள். எவின் மற்றும் நரேன் மட்டும் தினமும் கல்லூரி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள், மேலும் ஒரு பகுதிநேர வேலையாகச் செய்வதன் மூலம் தங்கள் வேலைகளை கல்லூரிக்கு முன்னும் பின்னும் நிர்வகிக்கிறார்கள். நரேனின் ஹோட்டலில் வாரத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

ஹர்ஷிதாவின் நிறுவனம், நரேன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அருகில் இருப்பதால் அடிக்கடி காலை உணவுக்காகவும், காபிக்காகவும் அங்கு செல்கிறாள், அவள் நரேனுடன் சிறிது நேரம் செலவிடுகிறாள். ஒரு நாள் அவள் ஹோட்டலில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக அவள் யஷ்வந்தைப் பார்க்கிறாள். பள்ளி காலங்களில் விபத்து நேராமல் அவளுடைய உயிரைக் காப்பாற்றியவன். மேலும் அவன் அவளுடைய பன்னிரண்டாம் வகுப்பு டியூசன் மாஸ்டரின் உறவினர். சிறு தாடியுடன் அவனது தோற்றம் மிகவும் மாறிவிட்டது. அவனது உதட்டில் ஒரு அழகான புன்னகை எப்போதும் மற்றவர்களை சோகமாக இருக்கும்போதும் கூட சிரிக்க வைக்கும் புன்னகை. நீண்ட காலத்திற்குப் பிறகு யஷ்வந்தைப் பார்த்த ஹர்ஷிதா, அவனுடன் பேச நினைத்தாள், அதனால் அவள் அவனை நெருங்கி சென்று “ஹாய் யஷ்வந்த், என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்கிறாள். அவன் “ஆம், நீ ஹர்ஷிதா தானே. எப்படி இருக்கிறாய்? ” என்று பதிலளித்தான். யஷ்வந்த் ஒரு அடக்கமான நபர் என்பதால் அரிதாகவே பெண்களுடன் பேசுவான். அவன் அவளிடம் “நீ இப்போது எங்கே வேலை செய்கிறாய்?” என்று கேட்கிறான். "அருகிலுள்ள ஐடி பார்க் நிறுவனத்தில்" என்று அவள் பதிலளித்தாள். யாசித்துடனான அவளுடைய உறவு குறித்தும் அவன் அவளிடம் விசாரிக்கிறான். அவள் அவனது கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவனிடம் “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்கிறாள். “நான் பார்த்திருக்கிறேன், நீ பன்னிரண்டாம் வகுப்பில் கணித டியூசனுக்கு வரும்போது நீங்கள் இருவரும் காலையில் பேசிக் கொண்டிருப்பீர்கள் அது காதல் தான் என்று நினைத்தேன்” என்று அவளுக்கு பதிலளித்தான். அவள் "நாங்கள் ஒருவருக்கொருவர் சில தனிப்பட்ட பிரச்சினைகளால் பிரிந்து விட்டோம். நான் மீண்டும் அதைப்பற்றி நினைக்க விரும்பவில்லை, நான் அதிலிருந்து நகர்ந்துவிட்டேன்" என்று கூறினாள். அவன் “ஓ! மன்னிக்கவும்” என்று கூறுகிறான். அவன் கேட்கும் விதம் அவளுக்குப் பிடிக்கவில்லை, அவன் அவளைப் பற்றி கருத்து தெரிவிப்பதைப் போல் அவள் உணர்கிறாள். பின்னர் அவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினால். பின்னர் நரேன் ஹர்ஷிதாவிடம் “உனக்கு அவரைத் தெரியுமா?” என்று கேட்கிறான். அவள் “ஆம், உனக்கும் அவரை தெரியுமா” என்று கேட்கிறாள். அவன் ஆம் என்று அவளுக்கு பதிலளித்தான், மேலும் அவள் "அவர் இங்கே என்ன செய்கிறார்?" என கேட்கிறாள். நரேன் “அவர்தான் இந்த ஹோட்டலின் உரிமையாளர். இது அவர்களின் ஹோட்டல். இந்த ஹோட்டலின் பல கிளைகள் அவர்களிடம் உள்ளன. நான் அவருடைய கட்டுப்பாட்டில் தான் வேலை செய்கிறேன்” என்று கூறினான். ஹர்ஷிதா அதிர்ச்சியில் இருக்கிறார், யஷ்வந்த் பற்றி நரேனிடம் மேலும் கூறும்படி கேட்கிறாள். பின்னர் நரேன் “கல்லூரி மாணவனுக்கு இந்த மேலாளர் பதவியை யாரும் வழங்க மாட்டார்கள். அவர் ஒரு நபரின் அறிவு, திறமை மற்றும் அவர்களின் கடின உழைப்பை மட்டுமே பார்க்கக்கூடிய நபர், அவர்களின் வயது அல்லது அனுபவம் அல்ல. அவர் அத்தகைய நல்ல குணமுடைய நபர், மேலும் அவருக்கு யாஷிகா என்ற தங்கை உள்ளார். நான் அவரிடம் கோரியபடி அவர் எனது நேர்காணலுக்குப் பிறகு என்னை நேரடியாக நியமித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தைக்கு பல சொத்துக்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன. தந்தை இறந்தபிறகு ஹோட்டல் நிர்வாகத்திற்காக படித்து, தந்தையின் நிலையை எடுத்து இந்த ஹோட்டல்களை நிர்வகித்துக்கொண்டிருக்கிரார். அவர் நமக்கு ஒரு வருடம் மூத்தவர்” எனக் கூறினான். ஹர்ஷிதா அதனைக் கேட்டு, “அவர் யாரையாவது காதலிக்கிறாரா?” என்று கேட்கிறாள். நரேன் , "இல்லை, அவர் தனது சகோதரி மற்றும் தாயைத் தவிர வேறு பெண்களுடன் பேசுவதை நான் ஒருபோதும் பார்க்கவில்லை" எனக் கூறினான். ஹர்ஷிதா, "இவரைப் போன்ற ஒரு அடக்கமான பையனை எந்தப் பெண்களும் விரும்ப மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்" எனக் கூறினாள். நரேன் புன்னகைத்து, "அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் நீ அவரை தவறாக நினைக்கிறாய்" என்று கூறினான். பின்னர் அவள் தனது வேலைக்குச் செல்கிறாள். தினமும் அவனை அவனது ஹோட்டலில் பார்க்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, யஷ்வந்த் வீட்டில், அவன் ஹோட்டலில் இருந்து திரும்பிய பிறகு, அவனது சகோதரி யாஷிகா அவனிடம் வந்து, "நான் ஐடி பார்க் நிறுவனத்தில் சேர விரும்புகிறேன், அங்கே யாராவது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். அவன் “இப்போதுதான் நீ உன் 3 வது ஆண்டை முடிக்கப் போகிறாய், பிறகு ஏன் இப்போதே வேலை தேடுகிறாய், போய் தூங்கு” எனக் கூறினான். யாஷிகா “அங்கே வேலை கிடைப்பது மிகவும் கடினம் அண்ணா நான் இப்போதே என்னை தயார்படுத்தத் தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தில் பணி செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த நிறுவனத்தின் நடைமுறையை அறிந்து கொள்ள வேண்டும், அதற்கேற்ப அங்கு பணிபுரிய தயாராக வேண்டும். இது உங்களுக்கு சமந்தம் இல்லாதது. அங்கு பணிபுரியும் யாராவது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அதை மட்டும் சொல்லுங்கள்." எனக் கேட்டாள். திடீரென்று அவனுக்கு அந்த நிறுவனத்தின் பெயரை எங்கோ கேட்டிருப்பது போலிருந்தது. அதனால் நிறுவனத்தின் பெயரை மீண்டும் கேட்கிறான். அவள் பதில் சொல்கிறாள். பின்னர் அவன் “ஆம் எனக்குத் தெரியும்” என்று கூறுகிறான். அவர்களது தொலைபேசி எண்ணைக் கேட்கிறாள். “இல்லை என்னிடம் அவர்களது தொலைப்பேசி எண் இல்லை" என்றான். அவள் அவர்களது தொலைப்பேசி எண்னைப் பெற்றுத் தருமாறு கேட்கிறாள். அவன் தனது சகோதரியுடன் மிகவும் பாசமாக இருப்பதால் சரி எனக் கூறினான்.

அடுத்த நாள், ஹர்ஷிதாவின் எண்ணை எப்படிக் கேட்பது என்று யோசிக்கிறான். திடீரென்று நரேனிடமிருந்து எண்ணைப் பெற அவனுக்கு ஒரு யோசனை வருகிறது. பின்னர் அவன் நரேனிடம் கேட்கிறான். நரேன் காரணம் கேட்கிறான், யஷ்வந்தும் அதற்கான காரணத்தை சொல்கிறான். எனவே நரேனும் அவளுடைய எண்ணை யஷ்வந்திடம் கொடுக்கிறான். மாலையில் அவன் அவளுடன் எப்படி பேசுவது என்று யோசிக்கிறான். அவளுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறான், அவள் அழைப்பை எடுத்து, "இது யார்?" எனக் கேட்டாள். பின்னர் அவன் "உன்னை தொந்தரவு செய்ததற்காக மனிக்கவும் நான் யஷ்வந்த். என் சகோதரி உங்களுடன் பேச வேண்டுமாம்" என்று கூறினான். யாஷிகாவிடம் தொலைபேசியைக் கொடுக்கிறான். அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள். ஹர்ஷிதா யாஷிகாவின் வேலை வாய்ப்புக்காக நிறைய உதவுகிறாள்.
நாட்கள் செல்ல செல்ல, யஷிகா மற்றும் ஹர்ஷிதாவின் உறவு உண்மையான சகோதரிகளைப் போல மாறுகிறது. யஷ்வந்த் ஹர்ஷிதாவை ஹோட்டலில் பார்க்கும் போது பேசுவான் ஆனால் ஒவ்வொரு பேச்சும் சிறிய சண்டை மற்றும் தவறான புரிதல்களுடனே செல்லும்.ஒரு நாள் அவள் யாஷிகாவை அழைக்கிறாள், ஆனால் அவள் எடுக்கவில்லை, அதனால் அவள் யஷ்வந்தை அழைக்கிறாள். அவன் அதிகம் பேசவில்லை. அவள் கேட்கும் கேள்விக்கு மட்டுமே அவன் பதில் சொல்கிறான். ஹர்ஷிதா புன்னகைத்து “ ஏன் யாரும் உன்னை காதலிக்கவில்லை என இப்போது புரிந்து விட்டது” என முனுமுனுக்கிறாள். அவன் அவளிடம் “நீ இப்போது என்ன சொன்னாய்?” என்று கேட்கிறான். அவள் எதுவும் சொல்லாமல் தொலைபேசியை வைக்கிறாள்.

ஹர்ஷிதாவின் பெற்றோர் அந்த நகரத்தில் ஒரு வீட்டை முன்பதிவு செய்தனர். அவர்கள் ஹர்ஷிதாவை வரச்சொல்லி பொருட்களை மாற்ற உதவுமாறு கேட்டனர். அங்கு சென்றால் அவளுக்கு யாசித்தைப் பற்றி சில நினைவுகள் வரும் என்று அவள் கவலைப்படுவாள். எனவே அவள் “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அம்மா, என்னால் வர முடியாது, அதனால் நீங்கள் அனைவரும் பேக் செய்து வாருங்கள்” என் கூறினாள். அவர்கள் தங்கள் புதிய வீட்டிற்கு மாறிய பிறகு வீடு கிரகபிரவேசம் வைக்கிறார்கள். ஹர்ஷிதா தனது நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறாள், அவள் யஷிகாவையும் அழைக்கிறாள், அவளுடைய குடும்பத்தினருடன் வரும்படி கேட்கிறாள். ஹர்ஷிதாவின் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக நேரத்தை செலவிடவில்லை என்பதால், அனைவரும் இந்த வீடு கிரகபிரவேசத்திற்குச் சென்று ஒன்றுகூடி மகிழ்விக்க திட்டமிட்டுள்ளனர். எல்லோரும் ஹர்ஷிதாவின் வீடு கிரகபிரவேசத்திற்குச் செல்கிறார்கள்.
யாஷிகா தன்னுடன் வருமாறு யஷ்வந்திடம் கெஞ்சுகிறாள், ஹர்ஷிதா அவனையும் அழைத்தாள் என்று அவனிடம் சொல்கிறாள். யஷ்வந்த் அங்கு செல்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் யாஷிகாவிற்காகச் செல்கிறான். அவன் ஒரு சிவப்பு சட்டை அணிகிறான், இந்த சட்டை அவனுக்குப் பிடித்த ஒன்றாகும்.

அந்த பக்கத்தில், அருண், அவர்களின் பெற்றோருக்கு ஒரே மகன், அதனால் அவர்கள் அவனுடன் மிகவும் நட்பாக இருக்கிறார்கள், அவன் பிரியா மீதான தனது காதலை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அவர்களும் அதை எதிர்க்கவில்லை. பிரியாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால் எல்லோரும் பிரியாவைத் தவிர பெற்றோருடன் அங்கு வருகிறார்கள். அருணின் தாயைப் பார்த்ததும், பிரியா அவளிடமிருந்து ஆசீர்வாதம் பெறுகிறாள், அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள். அருண் தனது அம்மாவுடன் நன்றாக பேசி, நற்பெயர் வாங்குமாறு சைகைகளைக் காட்டுகிறான். அவள் அவனைப் பார்த்து புன்னகைக்கிறாள். அவனது அம்மாவிற்கு பிரியாவை மிகவும் பிடித்துவிட்டது.

அவ்வளவுதான் அருணின் வீட்டில் அவர்கள் காதலுக்க் சம்மதம் தெரிவித்துவிட்டனர். ஹர்ஷிதா தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அருணும் பிரியாவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களும் ஒன்றிணைந்து தருணத்தை அனுபவிக்கிறார்கள். ஹர்ஷிதா தலையில் பூக்களுடன் சிவப்பு சேலை அணிந்துள்ளாள். அவள் கண்கள் யஷ்வந்தைத் தேடுகின்றன. அவள் அவனுக்காக ஏங்குகிறாள் என்பதற்கான காரணம் அவளுக்கே தெரியவில்லை. அவள் கண்கள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. யஷ்வந்த் வருகிறான். உள்ளே நுழையும் போது அவன் ஹர்ஷிதாவைப் பார்க்கிறான், அந்த சேலையில் அவள் மிகவும் அழகாக இருக்கிறாள், அவள் அழகைக் கண்டு வியப்படைந்து நிற்கிறான். என்ன ஆனது என்று யாஷிகா கேட்கிறாள், அவன் "இவ்வளவு அழகை நான் பார்த்ததில்லை" என்று கூறினான். அவள் குழப்பமடைந்து “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்கிறாள். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு வந்து “இல்லை, ஒன்றுமில்லை, வா போவோம்” என்று பதிலளித்தான்.உள்ளே நுழைந்ததும், ஹர்ஷிதா யஸ்வந்தைப் பார்த்து, அவன் சிவப்பு சட்டையில் மிகவும் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறாள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹர்ஷிதா, யஷ்வந்த் மற்றும் யாஷிகா சில மணி நேரம் பேசுகிறார்கள், எந்த சண்டையும் போடாமல் பேசுவது இதுவே முதல்முறை ஆகும்.
எல்லோரும் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பின்னர் எல்லோரும் தங்கள் வீடு மற்றும் விடுதிகளுக்குத் திரும்புகிறார்கள்.

அன்று இரவு. ஹர்ஷிதா "நாம் ஏன் இன்று யஷ்வந்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தோம்" என்று யோசிக்கிறாள். "எனக்கு ஏதோ ஆகிவிட்டது" என்று தன்னைத்தானே சொல்கிறாள். யஸ்வந்தின் வீட்டில், யாஷிகா அவனிடம் "இன்று ஹர்ஷிதா அக்கா மிகவும் அழகாக இருந்தார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவன் “அவ்வளவு அழகாகலாம் இல்லை” என்று அவளிடம் பொய் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் செல்கிறான். அவனும் ஹர்ஷிதாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறான். அவனும் "எனக்கு ஏதோ ஆகிவிட்டது" என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறான்.அந்த பக்கத்தில், பிரியா அன்றைய தினத்தில் அருணுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து அருணுடனான தனது வாழ்க்கையைப் பற்றி கனவு காண்கிறாள்.அவள் மிகவும் சோர்வாக இருப்பதால் தொலைபேசியை கையில் பிடித்தபடி அவனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுகிறாள். சில நிமிடங்கள் கழித்து அவள் தந்தை பிரியாவை தூங்குகிறாரா இல்லையா என்று பார்க்க அவள் அறைக்கு வருகிறார். அந்த நேரத்தில் அவளது தொலைபேசியை அவள் கையில் வைத்துள்ளபடி தூங்குவதைக் காண்கிறார். எனவே அவர் தொலைபேசியை அவள் கையில் இருந்து எடுத்து மேசையில் வைக்கிறார். அந்த நேரத்தில் தொலைபேசியில் அருண் மற்றும் பிரியா ஒன்றாக எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காண்கிறார். அவளை எழுப்பி “அருணை காதலிக்கிறாயா?” என்று கேட்கிறார். முதலில் அவள் மறுத்துவிட்டாள், பின்னர் அவர் அந்த புகைப்படங்களைப் பற்றி கேட்கிறார். பின்னர் அவள் அருணுடனான தனது காதலை தன் தந்தையிடம் ஒப்புக்கொள்கிறாள். அவளுடைய தந்தை அவளை அறைந்து வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அவர்களின் காதலை அவர் ஏற்க மாட்டார் என்று கூறுகிறார். அவர் இப்போதே பிரியாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பிரியா மிகவும் பதட்டமாக இருக்கிறாள், அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளது தந்தை அவளுடைய தொலைபேசியை அவளிடமிருந்து வாங்கிவிட்டார். அவள் அம்மா கழிப்பறைக்குச் செல்லும்போது அவரது அறைக்குச் சென்று அம்மாவின் தொலைபேசியை எடுத்துக்கிறாள். அருணுக்கு டயல் செய்து நடந்தவற்றை தெரிவிக்கிறாள். அருண் மிகவும் அதிர்ச்சியடைந்தான், அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவன் ஹாஸ்டலுக்குத் திரும்புகிறான். எவினுடன் நிலைமையைப் பகிர்ந்துகொண்டு அழுகிறான். எதுவும் நடக்காது கவலைப்பட வேண்டாம் என்று எவின் கூறுகிறான். பிரியா இல்லாத வாழ்க்கையை அவனால் சிந்திக்கக்கூட முடியாது. எனவே அவன் இறக்க முடிவு செய்கிறான். எல்லோரும் தூங்கிய பிறகு தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ள முடிவு செய்கிறான். அவர் மாத்திரைகளை எடுத்து குடிக்கிறான். பொதுவாக அருணும் எவினும் ஒரே படுக்கையில் தான் தூங்குவார்கள். எனவே எவின் திரும்பிப் படுக்கும்போது அருணைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடிக்கிறான், அவனை அறையில் தேடுகிறான். சிறிது நேரம் அவனைத் தேடியபின் எவின், அருண் தல்லாடிய நிலையில் ஒரு மேசையில் கிடப்பதைக் காண்கிறான், அதனால் எவின் அவனை எழுப்ப முயற்சிக்கிறான், அருண் தன் துக்கங்களை எல்லாம் எவினிடம் வெளிப்படுத்துவது போல "அவளுடைய பெற்றோர் எங்கள் காதலை மறுத்து, அவளுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். என்னால் பிரியா இல்லாத வாழ்க்கையை கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. பிரியா இல்லாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று நான் நினைக்கிறேன், அதனால் நான் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டேன். நான் இறந்து கொண்டிருக்கிறேன் எவின்" என்று புலம்புகிறான். எவினுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவனை தூகிக்கொண்டு அழுதபடி மருத்துவமனைக்கு விரைகிறான்.

அங்கே, ஹர்ஷிதா யஷ்வந்த் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாள், திடீரென்று அவளுக்கு புதிய எண்ணிலிருந்து “ஹாய்!” என ஒரு செய்தி வருகிறது. அவள் அதை தவறான எண்ணாக கருதி கண்டுக்கொள்ளாமலிருக்கிறாள். மீண்டும் “ஹாய்!, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” எனச் செய்திகள் வருகின்றன. அவள் “நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியுமா?” என்று கேட்கிறாள். "நீங்கள் என்னை மறந்துவிட்டீர்களா?" என செய்தி வருகிறது. பின்னர் அவள் மீண்டும் அந்த எண்ணைப் பார்க்கிறாள், அவளுக்கு உறுதியாக யார் என்று தெரியவில்லை, ஆனால் அது யாசித் எண் போன்று இருந்தது. அவள் அதிர்ச்சியடைகிறாள், அவனுடைய முகம் மற்றும் அவன் மீது வைத்திருந்த காதல் ஒரு நிமிடம் அவள் நினைவிற்கு வந்து செல்கிறது. அப்போது எவின் ஹர்ஷிதாவை அழைத்து, அருண் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறான். "நாங்கள் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கிறோம்" என்று கூறினான். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த செய்தியிலிருந்து வெளியேறி மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறாள்.

அருண் இறந்துவிடுவானா? ஹர்ஷிதாவிற்கு செய்தி அனுப்பியது யாசித்தா அல்லது வேறு யாரோவா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top