வாழைப்பழ அல்வா

Advertisement

Sahi

Well-Known Member
தேவையானபொருட்கள்:
வாழைப்பழம் (பூவம்/ரஸ்தாளி) – 4 (1 கப்)
வெல்லம் – (½ கப்)
முந்திரி - 10
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2 அல்லது எசென்ஸ் - 1 துளி

செய்முறை:
வாழைப்பழத்தை உறித்து மசித்து கொள்ளவும்.
வாணலியில் 1 டே. ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துவைக்கவும்.
பின்பு அதே வாணலியில் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து சிறிது சிறிதாக நெய் விட்டு நிறம் மாறும் வரை கிளறவும்.
கலவை வெந்ததும் வெல்லம்/சர்க்கரை (உங்கள் விருப்பம்) சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கினால் சுவையான சூடான அல்வா ரெடி.
நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி சேர்த்து ஆற விடவும். இதை அப்படியே அல்லது வில்லைகள் போட்டு ஒரு பாIMG_20190202_143400.jpgக்ஸில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
நீங்களும் செய்துப்பாருங்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top