வாசகர்களுக்காக....

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
Hi malli mam...

இந்த தளத்தில் புதிய எழுத்தாளர்ளை நீங்கள் ஊக்கப்படுத்தும் அளவிற்கு வாசகர்களக்கும் ஊக்கம் அளிக்கும்படியான நிகழ்வுகளை நான் எதிர் பார்க்கிறேன்.

கதை எழுதுபவர்களுக்கு பாேட்டி இருக்கு ஜெயிச்ச பரிசு கிடைக்கும்....
வாசகர்களுக்கு என்ன இருக்கு?

இது என் தாேழி என்னிடம் கேட்டது....

இந்த தளத்தில் கதை எழுதுபவர்கள் குறைவு.... ஆனால் வாசகர்கள் அதிகம்.
கதையை தவிர கவிதை, கட்டுரை, ஆன்மீக சிந்தனை, சமையல் குறிப்பு, என பல பயனுள்ள தகவல்களை பதிவிடும் நபர்கள் பலர் இருக்கின்றன.

அவர்களுக்கும் கதை எழுதுபவர்களுக்கு கிடைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

நான் எல்லாம் சின்னதா ஒரு பென்சில் கிடைச்சிட்ட கூட "ஜெயிச்சிட்டாேம்.... ஜெயிச்சிட்டாேம்... சாெல்லு பேக் பேக்" அப்படின்னு குதிக்கிற ஆளு.. எனக்கு தெரிஞ்சு என்ன மாதிரி பலர் இருப்பாங்க; ஆனா வெளியில் சாெல்லாம இருக்கலாம்.

என்னதான் வயசானாலும்.... படிச்சு பெரிய வேலையில் இருந்தாலும் மனசும் பாரட்டுக்கு ஏங்கி தான் இருக்கு....

என்னுடைய விருப்பம் என்னன்னா.....
சின்னதா... குட்டியா... வாசகர்களுக்காவும், விமர்சனம் செய்யிறவங்களுக்காவும் ஒரு சின்ன பாராட்டு கிடைக்கனும்..

பானு, சரஸ்வதி,வேணி, யாேகேஷ், சசி, chitra ganesh, Thamarai kannan,Rathi, Santonu, Ugina, Sumathi, santhamarai, Janvi, Puthumai, Rabi, Krishna, Haripriya, Hema lakzni, Sara, Inthilumathi Eswari kasi, Umamano, Varshini ( நியாபகம் இருக்கிற பெயர் மட்டும் எழுதிருக்கேன் மத்தவங்க என் பெயர் எங்கன்னு கேட்டு என் அடிக்க வர கூடாது) இப்படி பலர் எழுத்தாளர் கதைகளை படிச்சுட்டு மட்டும் பாேகாம ஒரு லைக், ஒரு கமென்ட் காெடுக்குறாங்க... எழுத்தாளர் எங்களுக்கு டானிக் மாதிரி. அவங்களுக்கான ஒரு சிறு பாரட்டுவேணும்..

அதே மாதிரி கவிதை, கட்டுரை, ஆன்மீக தகவல், சமையல் குறிப்பு, இப்படி பல வகையில் நம் தளத்தின் தூண்களுக்கு வலிமை தரும் நிகழ்வுகள் இடம் பெற வேண்டும்.

இப்படிக்கு,
ஆர்வ காேளாறு;
அதிக பிரசங்கி; ect
செசிலி வியாகப்பன்
 
mallika

Administrator
#2
அதாகப் பட்டது செசிலி , நமது தளத்தில் எழுத்தாளர்களுக்கு போட்டி என்பதுவே இது தான் முதல் முறை. இதை முதலில் சிறப்பாக முடிக்க வேண்டும். பின்பு தான் வேறு எல்லாம் யோசிக்க முடியும். இதை செய்வதில் எல்லாம் ஒரே ஒரு பிரச்சனை தான், இப்போதே எனக்கு எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இன்னும் இதில் எல்லாம் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தால்இன்னுமே நேரம் குறைந்து போகும். யோசிக்கலாம் வேறு ஏதேனும் செய்ய முடியுமா என்று. எதுவாகினும் முதலில் நம் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு தான். நன்றி
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#3
அதாகப் பட்டது செசிலி , நமது தளத்தில் எழுத்தாளர்களுக்கு போட்டி என்பதுவே இது தான் முதல் முறை. இதை முதலில் சிறப்பாக முடிக்க வேண்டும். பின்பு தான் வேறு எல்லாம் யோசிக்க முடியும். இதை செய்வதில் எல்லாம் ஒரே ஒரு பிரச்சனை தான், இப்போதே எனக்கு எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இன்னும் இதில் எல்லாம் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தால்இன்னுமே நேரம் குறைந்து போகும். யோசிக்கலாம் வேறு ஏதேனும் செய்ய முடியுமா என்று. எதுவாகினும் முதலில் நம் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு தான். நன்றி
K mam
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes