வந்தேன் உனக்காக EP-8

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
அன்று ஆதி கல்லூரிக்கே வரவில்லை. 'ஏன் இவன் இப்படி செய்கிறான்', என்று அவன் மொபைலுக்கு அழைத்தால், அதற்கும் பதில் இல்லை.

'இவன் இப்போது எங்காவது தண்ணி அடித்துக்கொண்டு இருப்பானோ' என்று சிந்தித்த வண்ணம், பூங்காவுக்குள் நுழைந்தாள் சனாயா.

அங்கு மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை பார்த்து மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியில், ஆதியை பற்றிய கவலை வெகுவாக மறைந்தது.

"ஓ….சனா டார்லிங்… நீங்கள் இங்கே தனியாக உள்ளீர்கள் போல, உங்கள் நாயகன் ஆதி வரவில்லையா", என்று கூறி கொண்டே, அவள் அருகில் வந்தவன் மித்ரன்.

"வாயை மூடுங்கள்… என்னை டார்லிங், என்று கூறுயதும் இல்லாமல். எனது நண்பனை என்… சேச்சே… இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கமாகவே இல்லையா", என்று எரிச்சலுடன் அவனை முறைத்தாள்.

"உன் சிரிப்பு மட்டுமல்ல, கோபம் கூட அழகு தான். ஆதி உனது காதலன் இல்லையா, அப்படியானால் அந்த இடம் என்னக்கு கிடைக்குமா" …

"அதற்கு வாய்ப்பே இல்லை, வீண் முயற்சி வேண்டாம்", என்று கூறிக்கொண்டு வந்தவன் பிரதாப்.

அவன் வருகையை எதிர்பாராத சனாயா, அவனைக் கண்டதும், துள்ளிக்குடித்துக் கொண்டு, அவனருகே சென்று விட வேண்டும், என்று ஆசைப்பட்டாள்.

ஆனால், ஏதோ ஒன்று அவளை தடுக்க, இருந்த இடத்திலேயே நின்று கொண்டு... கண் சிமிட்டாமல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

சனாயா மட்டுமா, மித்ரனும் தான் அவனை எதிர்பார்க்கவில்லை.

"டேய் பிரதாப்... இது எனது சொந்த விஷயம், மற்றவரை விளையாட்டாக சீண்டுவதைப் போல இவளை நான் நெருங்கவில்லை"......

இவளை என்று நான் முதன் முதலாய் கண்டேனோ, அன்றே… என் மனதை பறிகொடுத்து விட்டான். அதனால் இங்கிருந்து கிளம்பு, வீண் பிரச்சினைகள் வேண்டாம்" என்றான் மித்ரன்.

"நானும் மற்றவரை, உன்னுடைய கேலிக்கூத்திலிருந்து காப்பாற்றுவது போல், இவளை காக்க வரவில்லை. இவள் என்னுடையவள்"......

"சாரி…. அதாவது…. என்னுடைய உறவினர். அதனால் உன்னை போன்ற மோசமான மனிதர்களுடன் பழகுவதை, நான் ஒருபோதும் அனுமதிக்க இயலாது" என்றான்.

"என்னையா மோசமானவன் என்று கூறினாய், நான் நினைத்தால் உன்னை கல்லூரியை விட்டே வெளியேற்ற முடியும். உன் எதிர்காலமே எனது கையில் தான், அதனால் கவனமாக பேசு", என்றான்.

"உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள், உனது மிரட்டலுக்கு பயப்பட நான் ஆளில்லை", என்று சவாலாக பேசினான் பிரதாப். அதுமட்டுமின்றி, அந்த கல்லூரியின் சொந்தக்காரரே பிரதாப்பின் பார்ட்னர் தான்.

"இதற்கெல்லாம் கண்டிப்பாக அனுபவிப்பாய் பிரதாப்" என்று அவன் கர்ஜிக்க,

"டேய்…. போடா… முதலில் சேர்மன் எலக்சனில் வெற்றி பெற முயற்சிப்செய், உன்னால் அதில்கூட என்னை தோற்கடிக்க முடியாது"......

"உனது ஆணவத்தை ஒழிக்க தான், உனக்கு எதிராக நின்றேன். வெற்றி பெறாமல் திரும்ப மாட்டேன்", என்று வீரவசனம் பேசிவிட்டு, சனாயாவின் கையை, மிக உரிமையாக பிடித்து, அவளையும் தன்னோடு அழைத்துச் சென்றான்.

"நான் மயங்கிய போது, ஆதி குடி போதையில் கிடந்தபோது, இப்போது", என அவனை பார்த்தாள்….

"நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் சனா. இப்போது நேரமாகிறது, உன் வீட்டிற்கு கிளம்பு, நாளை சந்திப்போம்" என்றான்.

"இதற்கெல்லாம் நன்றி என்று, ஒரு வார்த்தையில் முடித்து விட விரும்பவில்லை. மேலே என்ன பேசுவது என்றும் புரியவில்லை. குழப்பமாக உள்ளது" என்றாள்.

"சிறு புன்னகையுடன், உன் குழப்பத்திற்கான பதில் உனது மனம் சொல்லும்" என்றான்.

"ஆனால் எனது மனதின் மௌனத்தை, இப்போது முதல் முறையாக உணருகிறேன்"...

"இந்த மௌனம், ஒருநாள் கலவரமாகும், அப்போது தான் உனது குழப்பத்திற்கு பதில் வரும். அதுவரை எனது மனம் காத்திருக்கும்" என்றான்.

"புரியவில்லை"...

"அதுவும் நன்மைக்கே"....

*************

"ஹலோ சனா,.... என் மீது கோபமா. அதான் இப்போது வந்து விட்டேனே", என்று சனாயாவிடம் வந்து நின்றான் ஆதி.

"எனக்கு உன்னுடன் பேச விருப்பமில்லை, இன்னும் சிறிது நேரத்தில் ப்ரொபஸ்ஸர் வந்துவிடுவார், உன் இடத்தில் போய் அமரு"...

"அவன் கிடக்கிறான், மாங்கா மண்டையன். நீ என்னிடம் பேசினால் தான், இன்று அவரை பாடம் எடுக்க அனுமதிப்பேன்".....

"என் பொறுமையை சோதிக்காதே ஆதி… சொல்வதைக் கேல், முதலில் கல்வி கற்பிக்கும் ஆசானிடம் மரியாதையாக நடந்து கொள்ளக் கற்றுக் கொள்"...

"சரிமா தாயே, உனது போதனையை ஆரம்பித்துவிடாதே", என்று அவனது இடத்தில் சென்று அமர்ந்தான்.

சனாயா தான் உள்ளூர பொரிந்து கொண்டிருந்தாள்.

வழக்கம்போல் கல்லூரி நேரம் முடிந்ததும், பூங்காவிற்கு சென்றாள் சனாயா. அவளைப்போலவே ஆதியும் அங்கு வந்தான்.

"வந்துட்டேன்…", என்று சிறுபிள்ளை போல, ஆதி கூற,

முகத்தைத் திருப்பிக் கொண்டு கோபமாக அமர்ந்திருந்தாள் சனாயா.

"அப்படியே மனித குரங்கு போல உள்ளாய், கொஞ்சம் சிரியேன்"...

"ஆம்…..இப்போது அது தான் முக்கியம் பாரு"...

"எனக்கு அதுதான் முக்கியம், என் தோழி மகிழ்ச்சிதான் முக்கியம்"...

"வெறும் வாய் வார்த்தை, ஏதும் பேசாதே" என அவள் முகம் கடுக்க கூற,

"அப்படியெல்லாம் சொல்லாதே சனா, சாரி... இந்த ஒரு முறை மன்னித்துவிடு"...

"நான் மன்னிக்க வேண்டுமென்றால், நீ நிறைய மாற வேண்டும்"...

"சரி சொல், முயற்சிக்கிறேன்"...

"நம் வகுப்பில் படிக்கும் அனைவரிடமும், அன்பாக, நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும், குறிப்பாக பெண்களிடம்"...

"பெண்களிடமா…. ஆனால் நான் உன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லையே"...

"நீயாக பேசாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உன்னை மதித்து, உன்னிடம் பேச வரும் பெண்களை கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் கண்டும் காணாதது போல் செல்வது பெரிய தவறு" என்றாள்.

"கீர்த்தி மிகவும் நல்ல பெண். வெகுளியும் கூட. அவளிடம் மித்ரன் அடிக்கடி வம்பு செய்வதால், உன்னிடம் உதவி கேட்டு வந்தாள், ஆனால் நீ... தேவையில்லாமல் என்னை தொல்லை செய்யாதே, வேறு எவனிடமாவது போய் சொல்லு", என்று கடுமையாக கூறியுள்ளாய்,

"இது மிகவும் தவறு அதி. உனது வார்த்தைகள் மிகவும் தவறு, இனி இப்படி செய்யாதே, பிலீஸ்…", என்றாள்.

"சரி... உனக்காக மாற்றி கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் நான் குடித்துவிட்டு உன்னை தனியாக திண்டாட வைத்துவிட்டேன், ரொம்ப, ரொம்ப, சாரி" என்றான்.

"நான் ஒன்றும் தனியே கஷ்டப் படவில்லை, என்னுடன் பிரதாப் இருந்தார்"...

"பிரத்தாப் அண்ணவா"...

"ஆம், அது கூடவா உனக்கு நினைவில்லை"...

"அதெல்லாம் உள்ளது சனா"...

"ஏதோ… அவர் இருந்ததால், நான் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தேன், அவர் மட்டும் இல்லை என்றால்"...

"சரிமா… ஒரு முறைதானே"...

"ரொம்ப சலித்துக் கொள்ளாதே, இந்த ஒரு முறை, பல முறையாக மாறாமல் பார்த்துக் கொள்"...

"பிரதாப் அண்ணன், மிகவும் நல்லவர், எனக்கு அவரை இரண்டு, மூன்று வருடமாகவே தெரியும்", என்றான் ஆதி

"பிரபா, கார்த்திக், வல்லியம்மை, உன் தந்தை, இவர்களை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது என்று கூறினாயே" என்றான் ஆதி வியாப்பாக.

"ஆம் ஆதி, பிரதாபை நான் மறந்தே போய்விட்டேன், அவரை பார்த்த பின்தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது", என்று சனாயா, பிரதாப் புகழை பாடிக் கொண்டிருக்க,

"சரி சனா... இன்று முழுவதும், உன் உபதேசங்களைக் கேட்டு ரொம்ப போரடிக்கிறது, நான் கிளம்புகிறேன், நீயும் உன் வீட்டிற்கு செல்", என்று கூறிவிட்டு ஆதி கிளம்பினான்.

"இவனுக்கு திமிர் தலைக்கேறி விட்டது, போரடிக்குதாம்"… என்று முனகிக் கொண்டே சென்றாள் சனாயா.

"நான் வார்த்தைக்கு வார்த்தை பிரதாப்பை அண்ணன் என்று சொல்கிறேன், ஆனால் இவள் தப்பித்தவறி ஒருமுறைகூட அவரை அண்ணன் என்று சொல்லவே இல்லையே, அவ்வளவு நெருக்கமான நட்பா, என்னைவிட அவரிடம்தான் அதிக அன்பு இருக்குமோ", என்று எண்ணியவனுக்கு இதயம் படபடத்தது.

"இந்த ஆதி, குடியை விடவேண்டும். இப்படியே குடித்துக் கொண்டு இருந்தால், அவனது உடல் மட்டும் அல்ல மனமும் தான் கெட்டுப்போகும். இன்று இதைப்பற்றி பேசி சரிசெய்யலாம் என்று நினைத்தால், பிரதாப்பை பற்றிய பேச்சை எடுத்தவுடன் அனைத்தையும் மறந்து விட்டு அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன்" என்று நொந்து கொண்டாள் சனாயா.

"இப்போதெல்லாம் நான் பிரதாப்பை பற்றிய எண்ணத்தில் என்னையே மறந்துவிடுகிறேன், இதில் ஆதியின் குடியை மறந்தது ஆச்சரியமில்லை" என்று நினைத்தவளுக்கு, பல கேள்விகள், மனதில் இருந்து எழுந்தது.

"ஏன் இந்த மாற்றம், பிரதாப் அவர்களை பார்த்தாலோ, நினைத்தாலோ, நான் என்னையே மறப்பது சரிதானா. இதுவரை இதுபோன்று நான் இருந்ததே இல்லையே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம். பிரதாபும், ஆதியை போல ஒரு நண்பர் தானே. ஆனால், ஆதியின் அருகில் இருக்கும்போது நான் எப்போதும் போல தான் இருக்கிறேன். இவரிடம் மட்டும் ஏன்", என்ற பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டே தனது வீட்டை நோக்கி பயணித்தாள் சனாயா.

"கடைசியில் வீட்டையும் அடைந்தாள், ஆனால் தனது கேள்விக்கான விடையை மட்டும் அவளால் அடையவே இயலவில்லை"...

சரி… சிறிது நேரம் உறங்கிவிட்டு எதையாவது படிப்போம், என்று நினைத்தாள்.

ஆனால், இவ்விரண்டையும் அவளால் செய்ய முடியவில்லை. கண்களை மூடினால், பிரதாப் அவள் கையை பிடித்தது நினைவுவர, முகத்தில் அழகிய சிரிப்பும், உள்ளத்தில்
'எதற்கு இந்த சிரிப்பு!!!, ஆதி, கார்த்திக் அண்ணா, இவர்கள் உன் கையை பிடித்ததே இல்லையா?... அப்போதெல்லாம் வராத சிரிப்பு, இப்போது மட்டும் எதற்கு என்று கேட்டது'....

இதற்கிடையில் எங்கே உறங்குவது, என்று, புத்தகத்தை திறந்தாள்…. மன ஒருங்கிணைப்போடு படிக்கவும் முடியவில்லை.

இறுதியாக… இந்த டிவியாவது பார்ப்போம் என்று ரிமோட்டுடன் சோபாவில் அமர்ந்தாள் சனாயா.

அதில் வந்த வைரமுத்து அவர்களின் கவிதையை கேட்டாள்.

காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்,
ராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
.
.
.
.
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்.

இந்த வரிகளை கேட்ட சனாயா, "ஒருவேளை இதுவாக இருக்குமோ என்று கண்களை அகல விரித்தாள்"...

"சேச்சே… நமக்காவது, காதல் வருவதாவது, நமக்கு தான் அதன் அர்த்தமே தெரியாதே" என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

வல்லியம்மையின் சுவையான இரவு உணவுகளை சுவைத்து விட்டு, படுக்கைக்கு சென்றாள்.

கண்களை மூடினால் பிரதாப்பின் நினைவுகள், அதில் தூக்கத்தை இழந்த சனாயாவிற்கு, வைரமுத்துவின் கவிதை நினைவு வந்தது.

ராத்திரியின் நீளம் விளங்கும்….

தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
கன்னியின் மனம் கலங்கி குழம்ப ஆரம்பித்து விட்டது
ஏதாவது நல்லது நடந்தால் சரிதான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top