வந்தேன் உனக்காக EP-4

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
"உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மாமா, ஒரு மாதம் கழித்து இன்றுதான் என்னை வெளியே அழைத்து வந்துள்ளீர்", என்றாள் பிரபா கோபமாக.

"நீ கல்லூரியில் சேர்ந்தே ஒரு மாதம் தான் ஆகிறது" என்ற, கார்த்திக்கின் கண்கள் குறும்பாய் சிரித்தது.

"அதையே தான் நானும் கூறுகிறேன்" என்றாள் பொங்கிய சின்னத்துடன்.

அவன் மௌனமாய் இருக்க....

"நானே சொல்லிவிடுகிறேன் மாமா, இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றாள் பிரபா.

"நான் இங்கே படிப்பதே உங்களுக்காக தான், உங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போதாவது புரிகிறதா, இல்லை மேலும் விளக்க வேண்டுமா", என்றவளின் கண்களில் இருந்து, நீர் வெள்ளம் போல் பெருகியது.
அது கார்த்திக்கின் மனதை அசைக்க,

அதற்கும் மேலும் மௌனமாய் இருக்க இயலாமல், "வா சொல்கிறேன்" என்று தனது காரை ஒரு உயர்தர ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

அவளுடைய கையை பிடித்துக்கொண்டு, அந்த ஹோட்டலினுள் நுழைந்தான்.

"என்ன கார்த்திக், இவ்வளவு பெரிய ஹோட்டலில் யாருமே இல்லையே!!!", என ஆச்சரியமாய், விழிவிரித்து வினவினாள் பிரபா.

"எல்லாம் உனக்காக தான், உள்ளே வா", என்று கூறி, அவளது தோளை, தனது கைகளால் வளைத்தான் கார்த்திக்.

இவனது இந்த செயலால் திகைத்த பிரபா, செய்வதறியாது மீண்டும் விழித்தாள்.

சில நொடிகளில், மெல்லிய இசை ஒலிக்க, கார்த்திக், தனது கையில் ஒரு அழகிய பூங்கொத்தை எடுத்து, பிரபாவின் முன் மண்டியிட்டு,

"லவ் யூ பிரபா, என்னை திருமணம் செய்து கொள்வாயா", என ஒரு வசீகர புன்னகையுடன் வினவினான்.

தன்னை மீறிய மகிழ்ச்சியில்!!!.... ஆனந்தமான அதிர்ச்சியில்!!!.... கண் சிமிட்டாமல், அவனை பார்த்து கொண்டே, பூங்கொத்தை வாங்கினாள் பிரபா.

"எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, நீதான் என்னுடைய உயிர் பிரபா. அதேபோல், உன் மனதிலும் நான் உள்ளேனா, என்பதை தெரிந்துகொள்ள தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன்" என்றான்.

விழிகள் கலங்க, "லவ் யூ கார்த்திக்", என்று கூறி... அவனை அணைத்துக் கொண்டாள் பிரபா.

அவளால் வேறு எதுவும் பேச இயலவில்லை. உலகமே வசப்பட்டதாக இருவருமே உணர்ந்தனர்.

"நாளையிலிருந்து, தினமும் மாலை ஒரு மணி நேரம் என்னுடன் தான் கழிக்க வேண்டும்" என்றாள் பிரபா, கண்டிப்பான குரலில்.

"அதற்கு என்ன அம்மு, ஆனால் உனது தோழி சனாயா, என்ன செய்வாள்", என்று அவன் வினவ,

"அவள் நூலகம் சென்று படிப்பாள், ஒன்றும் பிரச்சனை இல்லை. நாம் செல்வோம்", என்று சிணுங்கினாள்.

மீற முடியாமல், "சரிம்மா கண்டிப்பாக உன்னுடன் இருப்பேன்", என்றான், அவளின் காதலன்.

"ஆனால் நீ ஒழுங்காக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும். இல்லையென்றால் வர மாட்டேன்" என்றான் சீரியசாக.

அவள் அதற்கு தலையசைக்க, பிறகு இருவரும் கடலில் மூழ்கினர்.

*****************

"வள்ளியம்மா…. எனக்கு ஒரு புது நண்பன் கிடைத்துள்ளான்", என்று கூறிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள், சனாயா.

"அப்படியா பாப்பா... ரொம்ப சந்தோஷம், ஆனால்… ஆண் பிள்ளைகளிடம், கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளவேண்டும், எல்லாரும் நம்மைப் போல நல்லவர்களாகவே இருக்க மாட்டார்கள்", என்றாள் வள்ளி.

"போ… வள்ளியம்மா, ஆதியை பார்த்தால், அப்படி தெரியவில்லை" என்று சனா கூற.

"கண்டிப்பாக இருக்கக்கூடும், ஆனால் நீ இதுவரை படித்த பள்ளிகளில், ஆண்கள் கிடையாது, பெண்கள் மட்டுமே, மேலும்… நீ கார்த்திக் ஐயாவை தவிர வேறு எந்த ஆண்களுடனும் பழகியதில்லை, ஏன் உன் தந்தையிடமே அவ்வளவாக பேசியதில்லை, சொந்தங்களும் இல்லை, இப்படியிருக்கையில்... ஒரு ஆண், உன்னுடன் எந்த நோக்கத்தோடு பழகுகிறான், என்பதை உன்னால் சுலபமாக ஊகிக்க இயலாது" என்றாள் வள்ளி.

"நீங்கள் இப்படித்தான் கூறுவீர்கள், இந்த காலம் வேறு வள்ளிமா... ஆண்களும், பெண்களும் சரிசமமாகவே பழகுகின்றனர், சகஜமாகவே பேசுகின்றனர், இதில் ஒன்றும் தவறில்லை" என்று அவள் கூற.

"நீங்கள் தாராளமாக பழகுங்கள் பாப்பா, ஆனால் கொஞ்சம் கவனத்துடன் பழகுங்கள், என்றுதான் கூறுகிறேன்" என கூறிய வள்ளியின் மனதில், கொஞ்சம் பயம் குடிகொண்டது.

"சரி அப்படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு "உணவு தயாரா" என, பேச்சை மாற்றினாள் சனாயா.

"வள்ளி கூறுவதும் சரிதான், தினமும் எவ்வளவு செய்திகளை கேட்கிறோம், பெண்களை ஏமாற்றுவது, கெடுப்பது, உயிரை பரிப்பது, என்று எவ்வளவு கொடூரங்கள் நாட்டில் நடக்கின்றன, தெரிந்தே இவ்வளவு அநியாயங்கள்,... கண்ணுக்கு தெரியாமல், இன்னும் எவ்வளவு துர்செயல்கள் நடக்கின்றதோ", என்று எண்ணமிட்டாள் சனாயா.

இவ்வளவு ஏன்... நடுரோட்டில், பட்டப்பகலில்... மது அருந்திவிட்டு, உடல்நலமின்றி அமர்ந்திருந்த ஒரு அனாதை பெண்ணை ஒருவன் துன்புறுத்துகிரான்.

அதைக்கண்ட... அவ்வழியே சென்ற மக்கள், எதையும் காணாததுபோல் செல்கின்றனர். சிலர் அதை புகைப்படம் எடுக்கின்றனர். ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

இந்நிலை அவர்கள் வீட்டு பெண்களுக்கு வந்திருந்தாள், இப்படி அலட்சியப்படுத்திவிட்டு சென்றிருப்பார்களா??,...

மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும், உள்ள ஒரே வித்தியாசம் மனிதநேயம், இரக்க குணம், தான். அதை இழந்துவிட்டு வாழும், இவர்களை நாம் என்னவென்று சொல்வது.

அவர்களை விடுங்கள், நம்மில் எவ்வளவு பேர் மனிதநேயத்தோடு வாழ்கிறோம். காந்தி மகான், கலாம் ஐயா, போன்ற மாமனிதர்களை கொண்ட, இந்திய பூமியில்... இதுபோன்ற துர் செயல்களை,
கண்டு கண்ணீர் வடிக்கத்தான் இயலுகின்றது.

சேர, சோழ, பாண்டியர்கள், வாழ்ந்த வீர பூமியில், இது போன்ற சம்பவங்களை கண்டு பயந்து ஓடினால்... அது அவமானம் அல்லவா… மற்றோருக்கு நடந்த சம்பவங்கள், நமக்கு நடக்க எவ்வளவு காலம் ஆகி விடப்போகிறது.

காதலை மறுத்தாள் என்பதற்காக, ஆசிட் எரிவது, அவமானப் படுத்துவது, என அநியாயங்கள் தலைவிரித்து ஆடுகின்றன.

பெண்ளுக்கு ஒரு அவமானம் என்றால், அது அந்த பெண்ணை மட்டுமல்ல, அவளது குடும்பத்தையே துக்கத்தில் ஆழ்த்திவிடும்.

எவனோ செய்த தவறுக்கு, வாழ்நாள் முழுவதும் அந்த குடும்பம் வலியையும், வேதனையும், அனுபவிக்கும்.

இப்போது இந்தியாவில் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அவமானம் அல்ல, இந்தியாவிற்கே மாபெரும் அவமானம் தான்.

நீ ஆண்பிள்ளை, அழக்கூடாது என சொல்லித் தரும் தாய்மார்களே, "நீ ஆண்பிள்ளை, பெண்கள் கண்ணீருக்கு காரணமாக இருக்கக்கூடாது", என்று சொல்லி வளர்த்துங்கள்.

ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும், என்று கற்று தரும் தந்தையரே, "உன் வீரத்தை கொண்டு, பெண்களை காக்க வேண்டும், எங்கே என்ன அநியாயம் பெண்களுக்கு நடந்தாலும், அது இந்த நாட்டிற்கே என கருதி, அதை எதிர்க்க வேண்டும்", என்று கற்றுத் தாருங்கள்.

"பெண்களை மதிக்கத் தெரியாதவர், ஒரு ஆணாக இருக்க இயலாது" என்று பள்ளியில் இருந்தே உணர்த்துங்கள்.

சிரிக்காதே, சத்தமாக பேசாதே, வெளியே சென்று விளையாடாதே, என்று பெண்களிடம் செல்வோரே, இதையும் அவர்களிடம் சொல்லுங்கள்.

"நீ ஒரு பெண், ஒரு உன்னதமான படைப்பு, உன்னால் மட்டுமே ஒரு உயிரை கொடுக்க முடியும், அதனை ஒரு நல்ல மனிதராக வளர்க்கவும் முடியும். மாறிவரும் இந்த உலகில் நீ நிம்மதியாக வாழவேண்டும் என்றால்... அனைத்தையும் விட முக்கியமானது, தைரியமும், தன்னம்பிக்கையும் தான்".

"உன்னை காக்க, உன்னால் மட்டுமே இயலும். உனக்கு ஏற்படும் சில அநீதிகளை கண்டு, பின் வாங்காதே… எதிர்த்து நில்… துணிந்து உன் இலக்கை நோக்கிச் செல்... மனதைச் சிதறவிடாதே…"

"ஒருவரிடம் பழகும் பொது, ஜாக்கிரதையாக இரு, உனக்கு பிடித்த உடையை அணிந்து கொள், ஆனால் அது மற்றவர் மனதில், சஞ்சலத்தை ஏற்படுத்தாத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள். உனக்கு பிடித்ததை மனம்விட்டுப் பேசு, மனதார சிரித்து மகிழு, ஆனால் அதை யாரிடம் செய்கிறோம் என்பதில் கவனம் கொள்".

"பெற்றோர் கூறுவது நமது நன்மைக்கே, அவர்கள் கூறும் விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்... அதையும் புரிந்து கொள். அசுரனிடம் இருந்து விலகி நில்", என்று கூறுங்கள்.

தொடரும்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"சேர சோழ பாண்டியர்கள் பாராவுக்கு அடுத்து கடைசி வரை வரும் பாராக்கள் அனைத்தும் அருமை
அதுவும் கடைசி பாரா வெகு அருமை
டாக்டர் அல்லவா?
அதான் மருந்தை அழகாக கொடுத்திருக்கீங்க
ஆனால் ஒரு தவறு இருக்கு
வள்ளியம்மா தான் வரணும்
வல்லியம்மா இல்லை
போன அப்டேட்டிலும் இந்த தவறு இருந்தது
 

Yasmine

Well-Known Member
அருமையான பதிவு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க இன்றைய சமுதாயத்திற்கு ரொம்ப தேவையான கருத்துக்கள்...

அம்மாவா நான் இத செய்யணும்னு நினைக்கிறேன்.
என் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுறது ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்க...தரமான எழுத்துக்கள் வாழ்த்துக்கள் சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் இருக்கு
 

Vinotha Thirumoorthy

Well-Known Member
"சேர சோழ பாண்டியர்கள் பாராவுக்கு அடுத்து கடைசி வரை வரும் பாராக்கள் அனைத்தும் அருமை
அதுவும் கடைசி பாரா வெகு அருமை
டாக்டர் அல்லவா?
அதான் மருந்தை அழகாக கொடுத்திருக்கீங்க
ஆனால் ஒரு தவறு இருக்கு
வள்ளியம்மா தான் வரணும்
வல்லியம்மா இல்லை
போன அப்டேட்டிலும் இந்த தவறு இருந்தது

மிக்க நன்றி:):)... இனி வள்ளி என மாற்றி விடுகிறேன்
 

Vinotha Thirumoorthy

Well-Known Member
அருமையான பதிவு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க இன்றைய சமுதாயத்திற்கு ரொம்ப தேவையான கருத்துக்கள்...

அம்மாவா நான் இத செய்யணும்னு நினைக்கிறேன்.
என் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுறது ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்க...தரமான எழுத்துக்கள் வாழ்த்துக்கள் சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் இருக்கு

மிக்க நன்றி:):):).... சீக்கிரமே பிழைகளை திருத்திக் கொள்கிறேன்:).
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top