வந்தேன் உனக்காக EP-2

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
"என்னமா... உடம்பு சரியில்லையா, காலையிலேயே வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்,... முகம்வேறு வாட்டமாக உள்ளது", என்று, அக்கறையாக வினவினாள், சமையல்காரி வள்ளி.

"உடம்பில்லை வள்ளியம்மா, மனம்தான்" என்று சனாயா விடையளித்தாள்.

"குடிக்க காப்பி ஏதும் வேண்டுமா பாப்பா"....

"வேண்டாம்", என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து, தனது அறைக்குள் நுழைந்தாள், சனாயா.

மனப்போராட்ட நேரங்களில் தனிமையை விரும்புகிறவள் சனாயா, என்பதனை நன்கு அறிந்திருந்த வள்ளி, தனது வேலையை தொடர்ந்தாள்.

சில மணித்துளிகள், கண்ணீர்த்துளிகளாய் கழிய, மனதை சமன்செய்து, தனது கனவனுக்கு அலைபேசியில் அழைத்தவள், "மாலை கடற்கரைக்கு வாருங்கள்" என கூறினாள்.

"என்னது பீச்சா!!.... உன்னக்கு தான் நிறைய வேலையுள்ளதே!!!", என்று வியப்பாய் அவன் வினவ,

"அனைத்தையும் விட முக்கியமானது இது"....

"சரிம்மா,... என்னாயிற்று என்று சொல், ஏன் இவ்வளவு இறுக்கமான குறளில் பேசுகிறாய்" என்று கனிவாய் வினவினான்.

"ஒன்றுமில்லை, மாலை கூறுகிறேன்" என்றாள் அப்போதும்.

"மாலையென்ன… இப்போதே பேசலாம், நான் வெளியே தான் நிற்கிறேன்".

"விளையாட நேரமில்லை, நான் விளையாடும் நிலையில்லும் இல்லை, பை பை", என வேகமாக கூறி, அலைபேசியை துண்டித்தாள் சனாயா,

"விளையாட்டில்லை… நிஜம்தான்", என்று, அவளருகில் வந்தான்.

"எப்படி!!!.... ஏன், வேலையை விட்டுவிட்டு, இங்கு வந்தீர்கள்", என்று அவள் கேட்க.

"உன்னை விடவா, அது முக்கியம்"...

"இருந்தாலும்... நீங்கள் வந்து விட்டால், அவர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள், கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்", என்றாள்.

"இது எந்த ஊர் நியாயம்... நீ நம் பள்ளியையும், அங்குள்ள வேலையையும், அப்படியே போட்டு விட்டு வரலாம், நான் வரக்கூடாதா" என்றான், பொய்யான கோபத்துடன்.

"உன்னை தனியே வருத்தப்பட விட மாட்டேன், எனக்கும் பங்கு வேண்டும்" என்று, அவன் குறும்பாக கூறவும்,

"உங்களுக்கு எப்படி தெரியும்" என்றாள் கலக்கமாக.

"கார்த்திக்கும், பிரபாவும், வந்து போனதை செபாஸ்டியன் கூறினான், அதனால்தான் வந்தேன்", என்றான் கம்மிய குரலில்.

"ம்ம்ம்ம்….", என்றவள், தனது கையை, தனது கணவனுடைய கையோடு பிணைத்துக் கொண்டாள்.

'நீ எங்கிருந்தாலும், அங்கு.. நானும் இருப்பேன், ஒரு கணமும், உன்னை விடமாட்டேன் சனா", என்றான், ஆறுதலாக அவளது கையை தடவிக் கொண்டே.

**************************************************

{பத்து வருடங்களுக்கு முன்பு}

“உன்னுடன் எல்.கே.ஜியிலிருந்து ஒன்றாக படித்த பாவத்திற்கு, நீ சேர்ந்திருக்கும் இந்த கல்லூரியிலேயே நானும் சேர்கிறேன்”, என்றாள் சனாயா.

புன்னகையுடனே... “நடிக்காதே, உனக்கு எம்.பி.ஏ படிக்க ஆசையென்று, எத்தனை முறை என்னிடமே கூறியுள்ளாய்", என, அவள் காதை திருகினாள் பிரபா.

"சரி, சரி, ஆனால் நீ இந்த கல்லூரியை தேர்வு செய்தது எனக்காகவா"... என சனாயா, கேள்வியாய் பார்க்க,

"இல்லை சனா... இதெல்லாம், என் மாமா கார்த்திக்காக தான்", என்று நெளிந்தாள் பிரபா.

"புரிகிறது.. ஆனால் அவருடன் சேர்ந்து கொண்டு, என்னை மறந்துவிடாதே", என்றாள் சனா.

"பார்க்கலாம்", என்று, நகைத்தாள் பிரபா….

"பார்க்கத்தானே போகிறேன்", என்று சனாயா, முறைக்கவும்,

"நீயே சொல்லு சனா... பள்ளி படிப்பு முழுவதும் ஊட்டி கான்வென்டில் சென்று விட்டது. ஒரு வருடம் கூட முழுமையாக நமது குடும்பத்துடன் இருந்ததே இல்லை. இந்த நிலையில், இனி ஒரு நிமிடம் கூட... என் மாமாவை பிரிந்து வாழ, என்னால் முடியாது", என்றாள் பிரபா.

கார்த்திக், பிரபா, இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்…

பிரபா பிறந்த உடனேயே, இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட…

பிரபாவிற்கு, நினைவு தெரிந்த நாளிலிருந்து கார்த்திக் தான், அவள் உலகமே….

அந்த உலகில் தனது இணைபிரியாத, உயிர் தோழியான சனாவிற்கும், ஒரு பெரும் பங்கு ஒதுக்கி இருந்தாள் பிரபா, என்பது மறுக்க முடியாத உண்மையே…

"அவர் இப்போது மூன்றாம் வருடம் படிக்கிறார் சனா, முன்னமே இரண்டு வருடம் வீணாய் போயிற்று", என்று சிணுங்கினாள் பிரபா.

"பரவாயில்லை பிரபா, மீதமிருக்கும் இரண்டு வருடம் பற்றி எண்ணிப் பார்", என்று சனா, புன்முறுவலிட்டாள்.

"ஆம் சனா, இந்த இரண்டு வருடங்களை அவருடன்ஆனந்தமாக கலிக்க வேண்டும்... அதுதான் எனது லட்சியமே" என்றாள், புன்னகையுடனே.

"என்னவோ …. நன்றாக இருந்தால் சரிதான்"... என்றாள் சனா.

"ஐயோ சனா!!!....மணி ஆறாகி விட்டது. நான் ஹாஸ்டல் செல்கிறேன். நாளை, முதல் நாள் கல்லூரி அல்லவா, நீயே வந்து என்னை அழைத்துக்கொண்டு செல்", என்றாள் பிரபா அவசர அவசரமாக.

"நாளை உனது மணாளனை பார்ப்பாயல்லவா" என்று சனா அவளை சீண்ட,

"அதற்குத்தான் நான் இப்போதே செல்கிறேன்".... என்றாள், முகம் சிவக்க,

"அதற்கும் இதற்கும் என்னடி சம்பந்தம்"...

"இல்லாமலென்ன... நான் சென்று எனது மேக்கப்களை, இப்போதிருந்தே செய்து... நன்கு தூங்கி எழுந்தால் தான், நாளை அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவேன்", என்றாள் பிரபா.

'சரிதான் போ", என, இயன்றவரை கேலி செய்து,

பிரபாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, தனது வீட்டை அடைந்தாள் சனா.

அவளது கணவான எம்.பி.ஏ படிப்பு கிடைத்ததையும். அவள் தோழியோடு நான்கு வருடம் இருக்க போவதையும் எண்ணி மகிழ்ந்தாள்.

சென்னையில் உள்ள, அந்த மிகச் சிறந்த கல்லூரியில், எம்.பி.ஏ பட்டப்படிப்பு கிடைப்பது என்பது மிகவும் சிரமம். பணமும்... அறிவும்... உள்ளவர்களால் மட்டுமே அங்கு படிக்க இயலும், அங்கே படிப்பது சனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இருப்பினும் டெல்லியில் உள்ள, புகழ்பெற்ற கல்லூரியில் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தூக்கி எறிந்துவிட்டு, அவள் இங்கே படிக்க முழு காரணமும் அவள் தோழி பிரபா தான், அவள் மேல் இவள் வைத்திருந்த அன்பினால் தான்.

****

மறுநாள் காலை... பிரபாவின் ஹாஸ்டல் முன் தனது காரை நிறுத்திவிட்டு சனா காத்திருக்க,

"ஹலோ!!!..., எப்படி இருக்க சனா, பார்த்து பல நாட்கள் ஆகின", என்று புன்னகையுடன் அவள் அருகில் வந்தான் கார்த்திக்.

"நலம் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க", என மிகுந்த மகிழ்ச்சியுடன் அவள் வினவ,

"எனக்கு என்ன சனா, ஆல்வேஸ் பைன், ஆனாலும் சனா... நீ டெல்லி வாய்ப்பை பிரபாவிற்காக விட்டுவிட்டு, இங்கே படிப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது" என்றான்.

"இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை அண்ணா. எனது சிறுவயது முதல் என் பெற்றோர்களை நான் ஒரு இருபது முறைதான் பார்த்திருப்பேன்"....

"அம்மா இறந்த பின், அப்பாவிற்கு அபுதாபியிலுள்ள வேலைதான் முக்கியம் என்றாகிவிட்டது. பிரபாவையும் என் வீட்டில் பணிபுரியும், வள்ளியம்மையும் தவிர, என் மீது அன்பு கொள்ள யாரிருக்கிறார்கள் சொல்லுங்கள்"....,

"பிறகு நான் எப்படி அவளை பிறிய முடியும்" என்றாள் கேள்வியாய்.

'குடும்பம் என்றால் என்ன, பாசம் என்றால் என்ன', என்று நன்கு தெரிந்து வளர்ந்தவன் கார்த்திக்.

'பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தங்கை, தாத்தா, பாட்டி', என்று அனைத்து உறவினர்களுடனும் சந்தோஷமாக, ஒரே வீட்டில் வளர்ந்தவன் அவன்.

இப்படி வளர்ந்தவனுக்கு, சனாவின் மீது, சிறுவயது முதலாகவே கரிசனம் உண்டு…
பிரபா, விடுமுறைக்கு வரும்போதெல்லாம், சனாவையும் அழைத்து வரச் சொல்வான்.

ஒவ்வொரு ஆண்டு விடுமுறையின் போதும், சனாவையும் அழைத்துவர எண்ணுவார்கள், பிரபா மற்றும் கார்த்திக்கின் குடும்பத்தினர்.
ஆனால் அந்த வாய்ப்பு ஒரே ஒருமுறைதான் அமைந்தது.

இப்போது அவள், 'எனக்கு பிரபாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்', என்று கேட்டவுடன்... கார்த்திக்கின் மனம் இளகியது.

"பிரபா மட்டுமல்ல… நானும், எனது குடும்பமும், எப்போதும் உனக்கு துணை தான், என்பதை மறந்து விடாதே", என்றான் கார்த்திக்.

"சரி அண்ணா", என்று முகம் மலர சிரித்தவள், சட்டென எதையோ நினைத்து,

"அடடே... மறந்தே போனது. எனக்கு ஒரு முக்கியமான வேலை ஒன்று உள்ளது அண்ணா. நான் செல்கிறேன்... நீங்கள் பிரபாவை அழைத்து வாருங்கள்', என்று கூறி அங்கிருந்து சென்றாள் சனா.

அவள் சென்று பத்து நிமிடம் ஆன பின், பிரபா மகிழ்ச்சியின் உச்சத்தில் கார்த்திக்கை நாடி வர,

"அட… நம்ம பிரபாவா இது" என்றான் அவன்.

'ஆம்…. உங்கள் பிரபா தான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்,

"ஆம் மாமா, நானேதான்" என்றாள் வாய்மொழியாய்.

"ஹாஸ்டல் பிடித்துள்ளதா, தண்ணீர், உணவு, எல்லாம் சரியான நேரத்துக்கு கிடைக்கிறதா" என்று ஹாஸ்டல் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"என்ன இவர், இவருக்காக நான் இவ்வளவு ஒப்பனை செய்து கொண்டு வந்தால், அதை கண்டுகொள்ளாமல்... இப்படி ஹாஸ்டல் பற்றியே விசாரிக்கிறார்", என்று உள்ளூர கடிந்து கொண்டிருந்த பிரபா,

"எல்லாம் ஃபைன் மாமா", என்று சுருக்கமாக விடையளித்தாள்.

"நான் நம் வீட்டுக்கு வந்த பொது கூட, நன்றாக தானே இருந்தாய். இப்போது ஏன் மோகினிப்பேய் போல் வேஷம் போட்டுள்ளாய்" என்று நக்கலடித்தான் கார்த்திக்.

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று அவள், முகத்தை திருப்பிக் கொள்ள,

"அடி.... மாமாவை கழுதை என்று குறிப்பிடுகிறாயா", என்று பொய்யாக கடிந்தவன்,

தன் சட்டை பைக்குள் இருந்த, கைக்குட்டையை எடுத்து, அவள் இதழில் அப்பியிருந்த அதிகபடியான சாயத்தை துடைத்து விட்டான்.

"லிப்ஸ்டிக் போடலாம், அதற்கென்று இவ்வளவா…..", என்றான் சிரித்துக்கொண்டே.

எதிர்பாராத நேரத்தில்…. எதிர்பாராத செயலை…. அவன் செய்ததால், சற்று திகைத்து போய் நின்றாள் பிரபா.

அதை உணர்ந்த கார்த்திக், 'கொஞ்சம் ஓவராக போய் விட்டோமோ' என்று நினைத்துக் கொண்டே,

"சரி வா பிரபா, செல்வோம்.." என்று கூறி, கார் கதவை திறந்து, அவளை அமர்த்தினான்.

'இப்போது என்ன நடந்தது, அவர் ஏன் அப்படி செய்தார். அது சரிதானா... இல்லை தவறா…. ஒன்றும் புரியவில்லையே', என சிந்தனை செய்த வண்ணம், அவனை தன் ஓரப்பார்வையால் பார்த்தாள், பிரபா.

அவன் மும்மரமாக காரை ஓட்டவும்,

"மகிழ்ச்சி தானே மாமா", என்றாள்.

"எது", என்றான்.

"நான் உங்களுக்காக இந்த கல்லூரியில் சேர்ந்தது"....

"எனக்காகவா"..... என ஆவலுடன், அவன் வினவ,

"இல்லை இல்லை, நீங்கள் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தது", என்று சமாளித்தாள் பிரபா.

"மிக்க மகிழ்ச்சி அம்மு, இதில் என்ன சந்தேகம்", என்றவன்,

"நமக்காக தான் உனது தோழி, ஏதோ வேலை உள்ளது, என்று ஒரு பொய்யைச் சொல்லி சென்றுவிட்டாள்", என்றான்.

"ஐயோ மாமா…. நான் நேற்று அவளை அழைத்ததையே மறந்துவிட்டேன். தெரியாமல் உங்களையும் வரச் சொல்லி விட்டேன்", என்றாள் பிரபா.

"கொஞ்சம் கவனம் பிரபா, சனா பெரிய வாய்ப்பை விட்டுவிட்டு, உனக்காக இங்கே படிக்கிறாள். அவளை காயப்படுத்தி விடாதே", என்றான்.

'நான் ஏன் அப்படி செய்யப் போகிறேன்', என்று நினைத்தவள்…."அப்படி எல்லாம் செய்து விட மாட்டேன் மாமா" என்றாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top