வண்ணங்களின் வசந்தம் - 6

Advertisement

PAPPU PAPPU

Well-Known Member
eiY9USH52210.jpg

வண்ணம் 6 :

முதலில் அங்கு இருந்த ரோஸ் கார்டெனுக்கு சென்றனர். அனைவரும் சந்தோஷமாக சுற்றி பார்த்தார்கள். நமது ஐவர் குழு ஒவ்வொரு வண்ண ரோஜாக்கள் அருகிலும் சென்று செல்பி மற்றும் குரூப்பி எடுத்துக் கொண்டிருந்தனர் இதை யமுனா வஞ்சம் நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.பின் அவளது தோழிகளிடம் திரும்பியவள் “இங்க பாருங்கடி இவங்க எப்படி சுத்திக்கிட்டு இருக்காங்கனு, இவங்களை பழி வாங்கியே ஆகணும்” என்றாள் குரலில் கோபம் மின்ன.

யமுனாவின் பேச்சை கேட்ட அவளது தோழியோ “இங்க பாருடி மத்தவங்களாவது பரவால்ல அந்த அபி இருக்காளே அடிச்சாலும் அடிச்சுருவா அதனால இப்போதைக்கு பொறுமையா இரு நேரம் பார்த்து தான் அவங்களை பழி வாங்கணும்.மூணு நாள் முழுசா இருக்கு அப்போ நமக்கு சான்ஸ் கிடைக்காமலா போகும் பாத்துக்கலாம் விடு” என்று கூற அவளும் “இங்கிருந்து நாம கிளம்புறதுக்கு முன்னாடி அந்த குரூப்பையே கதரவிடணும் முக்கியமா அந்த சூர்யாவை” என்று கூறி அவர்களை முறைத்தவாறே மலர்களை பார்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

மதியம்வரை அங்கே இருந்தவர்கள் அதற்குப் பிறகு பைக்காரா போட் ஹவுஸ் செல்லலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றனர். படகில் செல்ல விரும்புபவர்கள் அனைவரையும் தனியாக ஒரு வரிசையாக நிற்கவைத்து கொண்டு இருந்தார் அவர்களது ஆசிரியர்.

மது தோழிகளை பார்த்து “வாங்க நாமலும் போலாம்” என்று அழைக்க அவளை தடுத்த அபி “எனக்கு போட்டிங்ல இன்ட்ரெஸ்ட் இல்லை அதனால நீங்க போயிட்டு வாங்க” என்று கூறினாள்.

நால்வரும் அபியை பார்த்து ஒரே குரலாக “முடியாது” என்று சொல்லி அவளையும் இழுத்து கொண்டு செல்ல முனைய அவர்களை தடுத்து சமாளித்து அனுப்பிவைத்தாள்.

படகு சவாரிக்கு அபி வராததை பார்த்த ரம்யா யமுனாவிடம் “ஹேய் அங்க பாருடி அந்த அபி மேலேயே நிற்கிறா, மத்த நாலு பேரும்தான் உள்ள போயிருக்காங்க போல,” என கூற, யமுனாவும் சூர்யாவை கதறவிட இதுதான் நல்ல சான்ஸ் என்று நினைத்து “வாங்க நாமும் போகலாம்” என்றவள் தோழிகளுடன் படகில் ஏறினாள்.

மது குரூப்போ ஒருவருக்கொருவர் தங்களுக்குள் கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

சூர்யா சிரிப்பதை பார்த்த யமுனாவிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. அவளை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வெறியாக மாற அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து. அவர்கள் காதில் கேட்க வேண்டும் என்றே சத்தமான குரலில் ரம்யாவிடம் “ ஏன்டி சில பேரு எல்லாம் சுத்தமா மனசாட்சி இல்லாதவங்க டி. தன்னால ஒரு பையன் ஸ்கூல்ல விட்டு போய் இருக்கான்னு ஒரு கில்ட்டி ஃபீலிங் கூட இல்லாம எப்படி சிரிச்சுக்கிட்டு இருக்காங்க பாத்தியா என்ன ஜென்மமோ. நம்ம சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் அடுத்தவங்க எப்படி போனா நமக்கு என்னனு எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிச்சுட்டு கூத்தடிக்க முடியுதோ தெரியல நம்மலா இருந்தா இப்படியா இருப்போம்” என்று கூற இங்கு சூர்யா கண்களில் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது.

யமுனாவின் பேச்சில் ப்ரீத்தி மற்றும் மது அதிர்ந்து போய் இருக்க, பூஜாவோ கோபமாக எழுந்து அவளை பார்த்து “ஏய் என்ன திமிரா அடிச்சு மூஞ்ச ஒடச்சுருவேன் பாத்துக்கோ” என்று பற்களை கடித்து சீறினாள்.

பூஜாவின் சீரளையோ, சூர்யாவின் கண்ணீரையோ கண்டு கொள்ளாத யமுனா அசட்டையான குரலில் “எதுக்கு என்ன பார்த்து கத்துற நான் என்ன உங்களை பற்றியா பேசினேன்.ச்ச…. ஜென்ரலா கூட இங்க பேச முடியாது போல என்று எகத்தாளமாக கூறிவிட்டு,வேறு இருக்கைக்கு சென்றுவிட்டாள். .

யமுனா போவதை பார்த்த பூஜா இவள….. என்று பல்லைக் கடிக்க அவள் தோளில் கைவைத்து சமாதானபடுத்திய மது கண்களாலேயே சூர்யாவை காட்டினாள். . சூர்யாவின் நிலையை உணர்ந்து கொண்டவர்கள் யமுனாவை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அழுது கொண்டிருக்கும் சூர்யாவை சமாதானபடுத்த முயன்றனர். ஆனால் அப்போதும் சூர்யாவின் அழுகையை நிறுத்த முடியாமல் போக ப்ரீத்தித்தான் “நாம கறைக்கு போய் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினாள்.

படகில் ஏறும்போது இருந்த உற்சாகம் குறைந்து அனைவரும் அமைதியாகவே கறையில் இறங்கி அபியை நோக்கி சென்றனர்.

அபியின் அருகில் சென்றவர்கள் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு “போகலாம்”என்று சொல்ல அவர்களை பார்த்த “அபி என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று கேட்டாள்.

ப்ரீத்தியை பார்த்த மது “நீ சொல்” என்பது போல் சைகை செய்ய அவளும் சரி என்னும் விதமாக தலையாட்டிவிட்டு யமுனா பேசிய அனைத்தையும் அபியிடம் ஒப்பித்தாள்.
ப்ரீத்தி சொல்ல சொல்ல இங்கு அபியின் கோபம் அதிகமாகி கொண்டிருக்க மறுபுறம் சூர்யாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“அவ வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்கு. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கா நானும் பார்க்கிறேன், முதல்ல இருந்தே நம்மலதான் அவ டார்கெட் பண்ணிட்டு இருக்கா, இன்னைக்கு அவ பல்லை உடைச்சு அவ கையில குடுக்கல என் பேரு அபி இல்லை” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே யமுனாவும் வந்து கொண்டிருந்தாள்.

அபியின் கோபத்தை பார்த்து மற்றவர்களும் யமுனாவை முறைத்து கொண்டு இருந்தனர்.யமுனா இறங்கியதை பார்த்த அபி அவளை நோக்கி சென்று “என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ எதுக்கு சூர்யாகிட்ட அப்புடி பேசுன, தைரியமான ஆளா இருந்தா நான் இருக்கும்போது பேசி இருக்கணும்”என்று கத்த ஆரம்பித்தாள்.

யமுனாவோ அலட்சியமாக அவளை பார்த்து “நான் என்ன பொய்யா சொன்னேன் உண்மையத்தானே சொன்னேன்.அது மட்டும் இல்லாம உங்களைனு நான் மென்ஷன் பண்ணி சொல்லவே இல்லையே பொதுவாதானே பேசுனேன், குற்றமுள்ள நெஞ்சு அதான் உங்களுக்கு குறுகுறுக்குது” என்று திரும்ப பதில் பேச ஆத்திரம் கொண்ட அபி அவளை அடிக்க சென்றாள். அவளது தோழிகள் அவளை தடுக்க முனைய இவர்களது சத்தத்தைக் கேட்ட அவர்களது ஆசிரியர் அங்கு வந்துவிட்டார்

ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டிருந்தவர்களை பார்த்த அவர்களது ஆசிரியர் பொது இடத்தில் என்ன இப்படி சத்தம் என்ற கோபம் எழ கடுமையான குரலில் “இங்க என்ன நடக்குது பப்ளிக் ப்ளேஸ்ல எப்புடி பிகேவ் பண்ணனும்னு தெரியாதா” என்று கேட்டார்.
ஆசிரியரின் கோபத்தில் இருக்கும் உண்மை புரிந்தாலும் தோழியை அழ வைத்தவளை விட முடியாத சூழ்நிலையில் அவரிடமே யமுனாவை பற்றி கூற ஆரம்பித்தாள் அபி ”சாரி மேம் இந்த யமுனாதான் சூர்யாவை ஹர்ட் பண்ற மாதிரி பேசினா என்று கூற யமுனாவோ “நோ மேம் நான் அப்படி எதுவும் பேசலை இவங்க எல்லோரும் வேண்டுமென்றே என்னை பிளேம் பன்றாங்க” என்று கூறினாள்.

ஆசிரியரோ இருவரையும் முறைத்து “பப்ளிக் ப்ளேஸ்ல நீங்க எல்லோரும் இப்படி பிஹேவ் பண்ணுனது தப்பு இப்ப ரெண்டு பேரும் அமைதியா போங்க இல்லை உங்க பேரன்ட்ஸ்கிட்ட இன்ஃபார்ம் பண்ண வேண்டியதா இருக்கும்” என்று கூறினார்.

ஆசிரியரின் பேச்சில் அதிர்ந்த மது அபியின் கைகளைப் பிடித்து கொண்டு “பிரச்சனை வேண்டாம்டி ப்ளீஸ் விடு வீட்ல இன்பார்ம் பண்ணுனாங்கன்னா இனி எப்பவும் எங்க வீட்ல என்னை வெளிய விட மாட்டாங்க” என்று அவளிடம் கண்களால் கெஞ்சினாள்.

அபியும் வேறு வழியில்லாமல் “ஓகே மேம்” என்று கூறிவிட்டு தனது தோழிகளுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.சண்டை வேண்டாம் என்று அழைத்து வந்து விட்டாலும் அனைவருக்குமே அந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவும் அபியை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சூர்யா தன்னைதானே சமாளித்து கொண்டவள் “பரவால்ல விடுடி அவ பேசுறதெல்லாம் எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது” என்று கூற அவளை முறைத்து பார்த்த மது “அப்புறம் ஏன் டி கண்ணு வேர்த்துச்சு” என்று நக்கலாக கேட்டாள். அதற்கு சூர்யாவோ அவ அப்புடி பேசும் போது மனசுக்கு கஷ்டமா இருக்காதா அது வலி வேற டிபார்ட்மென்ட் என்று சொல்ல மற்றவர்கள் அனைவரும் அவளை கேவலமாக பார்த்து ஒரே நேரத்தில் தூ…………. என்று துப்பினர்.

என்ன பீலிங்கா இல்ல பீலிங்காகனு கேக்குதும் , நீ வலி வேற டிபார்ட்மெண்ட்னு செல்றதும். நாங்க துப்பறதும் புதுசா என்ன……….. விட்றா விட்றா என்று ப்ரீத்தி கூற அதை கேட்டுஅனைவரையும் பாவமாக பார்த்து கொண்டிருந்த சூர்யாவின் தோள் மேல் கை போட்ட பூஜா “சரி விடு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்ல அப்போ அவளை வச்சு செஞ்சுக்கலாம்.அவ நம்ம கிட்ட சிக்காமலா போயிடுவா அப்படியே இல்லைனாலும் அவள் என்னுடைய நாத்தனாராக வந்துதானே ஆகணும் அப்ப வச்சுக்கிறேன் கச்சேரி” என்று கூற அவளை முறைத்துப் பார்த்த அபி “அந்த ஓணான்தான் உன்னோட நாத்தனார்னு நூறு தடவை ரிஜிஸ்தர் பண்ணிக்கிறியா வேண்டாம் அவள மாதிரி ஒரு ஆள்தான் நாத்தனார்ன, அவர் உனக்கு வேண்டாம் நீ அதுக்கு கல்யாணமே பண்ணிக்காம இருக்கலாம்” என்று கூறினாள்.

அபியின் பேச்சில் அலறிய பூஜா “அதெல்லாம் முடியாது நான் ஸ்கூல்ல கொடுத்த அதே பனிஷ்மென்ட் மாதிரி அவ சாப்பாட்டுல ஏதாவது கலந்து கொடுப்பேன், அவ பெட்ல இட்சிங் பவுடர் போட்டு வைப்பேன் இதெல்லாம் பண்ணனும்னா நான் அவங்க வீட்டுக்கு போகணும்” என்று கூற மற்றவர்களோ அவளை ஏகத்துக்கும் முறைத்து இப்போது பூஜாவை பார்த்து துப்பினர்.

அன்று இரவு அங்கு இருந்த ஹோட்டலில் தங்கியவர்கள் அடுத்தநாள் தொட்டபெட்டா பொட்டானிக்கல் கார்டன் மற்றும் அங்கிருக்கும் டீ பேக்டரி ஒன்றை பார்க்க செல்வது என்று முடிவெடுத்து இருந்தனர்.டீ பேக்டரி பார்த்த பிறகு நேரம் இருந்தாள் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க் போகலாம் என்றும் ஆசிரியர் கூறி இருக்க அனைவரும் அதற்கு ஏற்றார் போல் வேகமாக எல்லாம் பார்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டனர்.

இரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கேம்ப் ஃபயர் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அனைவரும் அந்த ஹோட்டலில் உள்ள கார்டன் ஏரியாவில் குழுமியிருந்தனர்.

ஆட்டம் பாட்டம் என்று அங்கு கலை கட்ட ஆரம்பிக்க அவர்கள் ஆசிரியரோ “ஒவ்வொருத்தரும் அவங்களோட தனித்திறமையை காமிங்க உங்களுக்குள்ள என்ன டேலண்ட் இருக்குன்னு எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று கூற ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டிக் கொண்டிருந்தனர்.

நமது ஐவர் அணியின் முறை வர ஒவ்வொருவரும் “நீ போ நீ போ” என்று மற்றவரை தள்ளிக் கொண்டிருந்தனர் அதை கண்ட யமுனாவின் குழுவிலிருந்த அவளது நெருங்கிய தோழி “அந்த ப்ரீத்தியை அனுப்புங்கப்பா சாப்பிடுறது எல்லாம் எப்படினு சொல்லுவா” என்று கேலி பேச ப்ரீத்தியை சொல்லவும் மற்ற நால்வரும் கோபமாக “ஏய் வாய மூடு தேவையில்லாம பேசாதே” என்று சண்டைக்கு சென்றனர்.

அவர்களது பேச்சு சண்டைக்கு செல்வதை உணர்ந்த ஆசிரியர் “ஷட் அப்” என்றவர் ரம்யாவிடம் திரும்பி “இது போல் மற்றவர்களை கேலி செய்ய சொல்லிதான் உங்கள் வீட்டில் வளர்த்தார்களா கேலி, கிண்டல்ங்கறது லிமிட்ல இருக்கும் வரைக்கும்தான் விளையாட்டு, லிமிட் தாண்டிருச்சுனா மற்றவர்களை காயபடுத்தும். இப்போது நாம் வந்திருப்பது என்ஜோய் பண்ண ஒருவரை ஒருவர் காயப்படுத்த இல்லை சே சாரி டு ஹெர்” என்று சொல்ல, ரம்யாவோ தலை குனிந்து “சாரி ப்ரீத்தி” என்றாள்.

ஐவர் குழுவை பார்த்த ஆசிரியர் அவள்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாள் இல்லையா இப்போது சண்டை தேவை இல்லை. போங்கள் போய் உங்கள் இடத்தில் அமர்ந்து ஒவ்வொருவராக வந்து உங்கள் திறமையை காட்டுங்கள் என்று சொல்ல ஆசிரியர் சொல்லவும் வேறு வழியில்லாமல் ஐவரும் போய் முன்பு போல் அவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

முதலில் பூஜாவை பாடுவதற்காக அனுப்பியவர்கள் அடுத்து மற்றவர்கள் செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்க பூஜாவும் எழுந்து அனைவர் நடுவில் சென்று நின்று பாட ஆரம்பித்த சில நொடியிலேயே யமுனாவின் குழுவில் இருந்தவர்கள் கழுதை போல் கத்த ஆரம்பித்தனர். அது பூஜாவிற்கு கோபத்தை கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் பாடிக்கொண்டிருந்தாள் ஆனால் மற்ற நால்வரும் சும்மா இருப்பார்களா என்ன? உடனே எழுந்து நின்றது நான்கு வேங்கைகளும் வேகமாக பூஜாவின் அருகில் வந்தவர்கள் பூஜாவின் காதில் ஏதோ சொல்ல அவளும் சிரித்துக் கொண்டே “ஓகே பிரண்ட்ஸ் இதுவரைக்கும் நான் பாடியதை கேட்டீங்க இப்போ எங்களை மாதிரியே நம்ம ஸ்கூல்ல இருக்க வேற ஒரு கேங் பாடினால் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்க போகிறோம் அது மட்டும் இல்லாம நாங்க பாடுவது தான் உங்களுக்கு தெரியுமே ஆல்ரெடி ஸ்கூல் பங்க்ஷன் எல்லாத்தையும் நாங்க டுரூப்பா பாடி இருக்கோம். சோ இன்னைக்கு புதுசா வேற ஒருத்தவங்கள இமிடேட் பண்ணி காண்பிக்கிறோம்” என்று கூறியவர்கள் யமுனாவையும் அவள் தோழிகளையும் பார்த்துக்கொண்டே
“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” என்ற பாடலை 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் பாடுவது போல் பாட அங்கிருந்த அனைவருமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அனைவருக்குமே இவர்கள் யாரை கேலி செய்கிறார்கள் என்பது நன்றாகவே புரிந்திருக்க யமுனாவின் குழுவினருக்கு விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

அன்றைய நாள் இரவு வெளியில் சுற்றிய காரணத்தினாலும் அன்று இரவு போட்ட ஆட்டத்திலும் அனைவரும் களைப்பில் உறங்கிவிட ஒருத்தி மட்டும் பெட்டில் உருண்டு கொண்டு இருந்தாள்..யார் என்று பார்க்கிறீர்களா எல்லாம் நம்ம மதுதான்.”ஹய்யோ அப்பவே சொன்னேன் ரொம்ப டான்ஸ் ஆட வேண்டாண்டி அப்புறம் எனக்கு பசி எடுக்கும்னு எவ கேட்டா இப்போ எனக்கு பசிக்கிதே இவளுங்க எல்லாம் தூங்கறாளுங்களே” என்று புலம்பி கொண்டிருந்தாள்.

மது புலம்பல் கேட்டோ இல்லை எதார்த்தமாகவோ அவள் பக்கத்தில் படுத்திருந்த அபி பாத்ரூம் செல்ல எழுந்தவள் மது திரும்பி திரும்பி படுப்பதை பார்த்து அவள் போர்வையை இழுத்தாள். திடிரென்று போர்வை இழுக்கப்படவும் பயந்து போன மது “அய்யோ……. அம்மா பேய்” என்று அலற அவள் சத்தத்தில் மற்ற எல்லோரும் அலறி அடித்து கொண்டு எழுந்து “பேயா… …. “ என்று கத்தி மதுவின் பெட்டிலேயே அவளை நெருக்கி கொண்டு அமர்ந்தனர் . அவர்களின் செயலில் தலையில் அடித்து கொண்ட அபி “அடியேய் ஏன்டி? ஏன்? நீ பயப்படறதும் இல்லாம அவளுங்களையும் பயமுறுத்தி எழுப்பி விட்ட . என்ன டிசைன்டி நீ” என்று திட்ட ஆரம்பித்தாள்.
மதுவோ அப்போதும் பயம் நீங்காதவளாக “இல்லடி நிஜமாலுமே என்னோட போர்வையை யாரோ இழுத்தாங்க” என்று சொல்ல அவளை கேவலமாக பார்த்த அபி.”ஏன்டி என்னை பார்த்தா உனக்கு எப்புடி தெரியுது.பாவம் புள்ளை தூங்காம திரும்பி திரும்பி படுத்துட்டு இருக்கியேனு நான்தான் போர்வையை இழுத்தேன் என்ன ஆச்சுன்னு கேட்க” என்று சொல்லி வாய் மூடும் முன் மற்ற மூவரும் மது மேல் பாய்ந்திருந்தனர் அடிக்க கட்டிலில் உருண்டு பிரண்டு சண்டை போட்டு கொண்டு இருந்தவர்களை பார்த்த அபி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

நால்வரும் அடித்து முடித்து அவர்களே ஓய்ந்து போய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டு அமர்ந்திருக்க அப்போதும் தலை எல்லாம் கலைந்த நிலையில் இருந்த மது “அதுதான் எல்லோரும் சேர்ந்து அடிச்சுடீங்களே இப்போ எனக்கு பசிக்குது ஒரு வழி சொல்லுங்க” என்று பிடிவாதமாகவும், பாவமாகவும் சொல்ல மற்ற அனைவரும் அவளை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தனர்.

ப்ரீத்தி மட்டும் சத்தம் இல்லாமல் மது அருகில் அமர்ந்து “ஆமாம் எங்களுக்கும் பசிக்கும்ல” என்று சொல்ல மற்ற மூவரும் “ஒன்னு சேர்ந்துட்டாளுங்க இனி ஒன்னும் பண்ண முடியாது” என்று நினைத்தவர்கள் ஆளாளுக்கு தாங்கள் கொண்டு வந்த பையை நோண்ட ஆரம்பித்தனர். ஒருவழியாக ஒருவரிடம் பிரடும், ஜாமும் இருக்க அதை சாப்பிட்டுவிட்டு மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்துவிட்டே உறங்க ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் பொட்டானிக்கல் கார்டன் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.அதன்படி அனைவரும் ஆயத்தமாகி வர, சரியாக ஒன்பது மணிக்கு இவர்களின் பேருந்து பொட்டானிக்கல் கார்டன் முன் வந்து நின்றது.அனைவருக்கும் பாஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆசிரியர் உள்ளே அனுப்ப நமது ஐவர் குழு ஒவ்வொரு செடியாக பார்த்து ஆச்சர்யப்பட்டு போயினர்.

கார்டனில் இருக்கும் விதவிதமான மலர்களை பார்த்து இதே போலான செடிகளை தங்கள் வீட்டிலும் வளர்க்க ஆசைபட்டவர்கள் அங்கிருக்கும் பார்மசியில் அவர்களுக்கு விருப்பப்பட்ட செடிகளையும், விதைகளையும் வாங்கி வளர்க்கும் முறைகளையும் கேட்டு அங்கிருந்தவர்களை ஒருவழி செய்துவிட்டுதான் கிளம்பினர்.கார்டெனின் வெளியில் இருக்கும் கடைகளில் தின்பண்டங்களையும், சிறுசிறு கைவினைப் பொருட்களையும் வாங்கி வைத்து கொண்டனர் .

அடுத்ததாக அவர்கள் சென்றது தொட்டபெட்டாவிற்கு அங்குள்ள மலை உச்சிக்கு சென்றவர்கள் கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் அவர்களை அடங்குவதற்குள் ஆசிரியர்களுக்கு தான் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின் மதியம் 3 மணிக்கு அங்கிருக்கும் டீ பேக்டரிக்கு சென்றனர். மது , ப்ரீத்தி இருவரும் “ஹய்யோ எங்களால நடக்க முடியல நீங்க மட்டும் போங்க. நாங்க இங்கு உட்கார்ந்து இருக்கறோம்” என்று அந்த பாக்டரியில் வெளியில் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்துவிட்டனர். அவர்கள் அருகில் வந்த சூர்யா “ஹேய் வாங்கடி உள்ள போலாம் உங்களுக்கு குடிக்க டீ தருவாங்க” என்று அவர்களின் வீக்னஸ் தெரிந்து அழைக்க அவர்களோ டீக்காக எல்லாம் உள்ள வர முடியாது கூட வறுக்கி தருவாங்களானு கேட்டு சொல்லு அப்போ வேணா வர டிரை பண்ணுறோம் என்று சொல்ல அவர்களை முறைத்தவள் மேலும் ஏதோ சொல்ல போக அபிதான் “சரி விடுடி அவளுங்கதான் நடக்க முடியலன்னு சொல்றாங்கல்ல நம்ம போகலாம் அவங்க இங்கயே ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொல்லி மற்ற இருவரையும் இழுத்து சென்றாள்.

அபி இழுத்த இழுப்பிற்கு சென்றாலும் மதுவை திரும்பி பார்த்த பூஜா இருவரையும் பார்த்து “உங்களுக்கு தராமையே டீ குடிக்கறோம் இருங்க” என்று கோபம் போல் சொல்லி செல்ல. அவளை பார்த்த ப்ரீத்தி “அடியே நீ குடிச்சுட்டு வரும்போது எங்களுக்கும் வாங்கிட்டு வா தனியா குடிச்சா வயிறு வலிக்குமாம் எனக்காக சொல்லலப்பா உனக்கு வயிறு வலி வரக்கூடாதேன்னுதான் சொல்றேன்” என்று அமர்த்தலாக கூறி தான் கையோடு வைத்திருந்த பையில் இருந்த பழத்தை சாப்பிட ஆரம்பித்தாள்.

ப்ரீத்தியின் வார்த்தையை கவனித்த மது அவளுடன் ஹைபை அடித்துக்கொள்ள அவர்களின் செயலில் கடுப்பான பூஜா ஆனாலும் உங்க வீட்டில் உங்களை ரொம்ப ஊட்டி வளத்துட்டாங்கடி எங்களால சமாளிக்க முடில என்று சலித்து கொண்டு மற்றவர்களை பார்த்து வாங்க நம்ம போலாம் அவளுங்க அவங்க வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க என்று பாக்டரியில் உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே சென்று வெகு நேரமாகியும் வராமல் இருக்க கையில் இருந்த கொறிக்கும் பண்டங்களை இருவரும் காலி செய்திருக்க அடுத்ததாக அவர்களின் பார்வை அருகில் இருக்கும் ஸ்வீட் கார்ன் கடைக்கு சென்றது.

இருவரும் கண்களாலேயே பேசி கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை பாக்டரியை திரும்பி பார்த்துவிட்டு அவர்கள் வரவில்லை என்றவுடன் கை கோர்த்து அந்த கடைக்கு சென்று ஆளுக்கு ஒன்று வாங்கி கொண்டு பழைய இடத்திலேயே சென்று அமர்ந்தனர். சாப்பிடும் ஆர்வத்தில் சுற்றி என்ன நடக்கிறது யார் இருக்கிறார்கள் என்று கவனிக்காத மது கப்பை பிரித்து ஒரு வாய் வைக்க போக அவள் கையில் இருந்த கப் பறிக்கப்பட்டது அங்கிருந்த குரங்கால்.

குரங்கை பார்த்தவுடன் ப்ரீத்தி அந்த பக்கம் நழுவி ஓடி கத்த ஆரம்பித்தாள். மதுவோ தீவிரமாக குரங்கின் கையில் இருக்கும் கப்பை புடுங்குவதில் குறியாக இருந்தாள்.அந்த பக்கம் சென்ற ப்ரீத்தியோ “ஹய்யோ குரங்கு. ..குரங்கு…… …குரங்கை காப்பாத்துங்க ச்சி.. .த்து…… ..என் பிரண்ட காப்பாத்துங்க” என்று கத்தி கொண்டு இருக்க அவள் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் சேர ஆரம்பித்தது.

ப்ரீத்தியின் கத்தல் எதையும் காதில் வாங்காத மதுவோ குரங்கிடம் இருந்து கப்பை தன் பக்கம் இழுக்க குரங்கு தன் பக்கம் இழுக்க என்று இருவருக்கும் இடையில் பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது.அவர்களின் சண்டையை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யத்துடன் கூடிய சிரிப்புதான் வந்தது.

ப்ரீத்தியோ “அடியே விடுடி கடிச்சிட போகுது என்று அலற அதை மது காதில் வாங்கினால்தானே அவளின் கவனம் முழுவதும் குரங்கிடம் இருந்து தனது ஸ்வீட் கார்னை வாங்க வேண்டும் என்பதிலேயே இருக்க அதற்கான முயற்சியில் இறங்கி இருந்தாள்.

பாக்டரிக்குள் போனவர்கள் டீ இலையை எப்படி பதப்படுத்தி தூளாக தயார் செய்கிறார்கள் என்று ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு மேலும் ஒரு சுற்று அந்த பாக்டரியை சுற்றிவிட்டு ஒரு வழியாக வேறு வேறு சுவைகளில் டீ தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு சாம்பிள்க்கு கொடுக்கும் டீயை வாங்கி குடித்தவர்கள் மற்ற இருவருக்கும் வாங்கி கொண்டு ஆளுக்கு ஒரு டீ தூள் பாக்கெட்டை பிடித்து கொண்டும் வாயிலிற்கு வர அவர்கள் கண்டது குரங்குடன் மல்லு கட்டி கொண்டிருந்த மதுவைத்தான்.

மூவரும் அதிர்ந்து கையில் இருந்த டீயை தவற விட்டனர்.அவர்கள் கையில் இருந்த கப் கீழே விழுந்ததை அந்த ரணகளத்திலும் கவனித்த ப்ரீத்தி “அய்யோ டீ போச்சே……ஏண்டி கீழ போட்டிங்க என்று கத்த ஆரம்பித்தாள். முதலில் சமாளித்து கொண்ட சூர்யா வேகமாக மது அமர்ந்திருக்கும் எதிர் புறம் சென்றவள் கத்தி அவளை திட்டி கப்பை விட சொல்ல அவளை அப்போதுதான் கவனித்த மது தோழியா கார்ன்னா என்று யோசித்து கார்ன்தான் என்ற முடிவிற்கு வந்த மறு நிமிடம் அவள் கையில் இருந்த கப் பிடுங்கப்பட்டது. மதுவின் நொடி நேர கவன சிதறலில் சுதாரித்த குரங்கு அவள் கையில் இருந்த ஸ்வீட் கார்ன் கப்பை பிடிங்கி கொண்டு ஓடியது.

ஒரு வழியாக இருவரின் போராட்டமும் முடிவிற்கு வர அங்கிருந்த கும்பலும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். மதுவை கொலை வெறியில் முறைத்து கொண்டு நின்ற நால்வரையும் பாவமாக பார்த்தவள் “கப்பை பிடுங்கிட்டு போய்டுச்சுடி” என்று சொல்ல வேகமாக அவள் அருகில் வந்த ப்ரீத்தி “ஏன்டி நான் அவ்ளோ கத்து கத்தறேன் கொஞ்சமாவது காதில் வாங்கினாயா உன்னால இப்ப டீயும் போச்சு” என்று குனிய வைத்து குத்த ஆரம்பிக்க மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து மதுவை மொத்த துவங்கினர்.

அனைவரிடமும் அடி வாங்கி கொண்டு இருந்த மது வேகமாக நிமிர்ந்து ப்ரீத்தியின் கையில் இருந்த அவளுடைய ஸ்வீட் கார்ன் கப்பை பிடிங்கி கொண்டு ஓட துவங்க அவளை மற்றவர்கள் துரத்த ஆரம்பித்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்ணில் கிண்டலுடனும் கொஞ்சமே கொஞ்சம் ரசனையுடனும் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது ஒரு ஜோடி விழிகள்.


வண்ணம் தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top