வண்ணங்களின் வசந்தம் -25(a)

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_1367130390326538.jpeg

அத்தியாயம் -25(a)

கிருஷ் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவனை கண்டுகொள்ளாதவர்களாக மருமகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷமாக அரக்க பரக்க கிளம்பிக்கொண்டு இருந்தனர்.அவன் தாயும், தந்தையும்.“ஏங்க முதல் முதல்ல மருமகள பார்க்க போறோம் நம்ம தோட்டத்து பூவை பறிச்சுட்டு போலாமா”என்று கேட்க, அவரோ “இது என்னம்மா கேள்வி அப்படியே அவங்க பிரண்டுங்களுக்கும் சேர்த்து எடுத்துக்கோ நம்ம மருமகளுக்கு மட்டும் குடுத்தா நல்லா இருக்காது” என்றார்.

“சரிங்க நான் எல்லாருக்கும் சேர்த்துதான் எடுத்திருக்கேன்” என்றவர் “வாங்க கிளம்பலாம்” என்று வெளியே செல்ல, கிருஷோ “குடும்பத்தோட லவ் பண்ற பொண்ணோட அவுட்டிங் போன முதல் ஆள் நானாதான் இருப்பேன்”என்று புலம்பி கொண்டிருந்தவன், அருகில் வந்த அவன் தந்தை “இப்படியே நின்னுட்டு இருக்க போறியாடா, கிளம்புடா லவ் பண்ற பொண்ணுகூட டைம் ஸ்பென்ட்பண்ணக்கூட நாங்கதான் கிளப்பனும் போல, ஸ்கூல்க்கு கிளப்புன மாதிரி” என்று திட்ட அவனோ “எல்லாம் என் தலை எழுத்து”என்று புலம்பிக் கொண்டிருந்தவன் தோளில் தட்டிய அவன் தாய் “எங்களுக்கு வரக்கூடிய மருமகளை நாங்க பாக்க கூடாதா நீ மட்டும் போய் பார்த்துட்டு வறேனு சொல்ற எவ்ளோ நேரம் உனக்காக வெயிட்பண்றது சும்மா புலம்பாம வாடா”என்று சொல்லி இழுத்து சென்றார்.

அவனோ “பாருங்க பாருங்க நல்லா பாருங்க ஆனா இன்னொரு நாள் பாருங்கன்னுதானே சொல்றேன்,ஆனா அதை எங்க கேக்குறீங்க” என்று சொல்லி கொண்டே வந்தவன், அங்கு வண்டியின் மீது ஸ்டைலாக சாய்ந்து நின்றிருந்த பிரபாவை பார்த்து நெஞ்சில் கைவைத்து கொண்டான்.

கிருஷ், “நீ எங்கடா…..” என்க.
பிரபாவோ சீரியஸான முகத்துடன் “அது ஒன்னும் இல்ல மச்சி உனக்கு கோவிலுக்கு போக வழி தெரியலனா நடு தெருல நின்னு கஷ்டப்படக்கூடாது இல்ல, அதான் உனக்கு வழிகாட்ட……”என்றான்.

கிருஷோ அவனை மேலும் கீழும் பார்த்தவன் நக்கலான குரலில் “ஏன்டா இத்தன வருஷம் இங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்கு கோயிலுக்கு போக வழி தெரியாதுனு நீ வந்திருக்க, அதை நான் நம்பனும் போடா டேய் போடா, உன் ஆள பார்க்க வரேன்னு தெளிவா சொல்லித் தொலைடா பக்கி பக்கி ஏறு ஏறி தொலை என்னோட முதல் அவுட்டிங்கே உங்க புண்ணியத்துல அமோகமா அமைஞ்சிருக்கு” என்றவன் அலுத்து கொண்டே தன் டாடா சுமோவை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி செலுத்தினான்.

இங்கு கோவிலுக்கு போகும் பாதையில் அபி ப்ரீத்தியை திட்டி கொண்டு இருந்தாள்.ஏனென்றால் என்றும் இல்லாத திருநாளாக இன்று அபியை வண்டி எடுக்க விடாமல் தன் வண்டியில் போலாம் என்று ப்ரீத்தி அடம்பிடிக்க வேறு வழி இல்லாமல் அபியும் சம்மதித்துவிட்டாள். அவள் வண்டியை எடுத்து கொண்டு ஐவரும் கிளம்பினர்.ஆனால், கோவிலுக்கு இன்னும் பத்து கிலோமீட்டர் பக்கம் போக வேண்டிய இடத்தில் அவளின் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டதாலேயே இந்த திட்டு.

“அடியே லூசு என்னோட வண்டில போலாம்னு சொன்னா மட்டும் போதாது அந்த வண்டிக்கு பெட்ரோலும் போடணும், உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கணும், இங்க இருக்க பெட்ரோல் பங்குக்கு போனுனாலும் மூணு கிலோமீட்டர் நடக்கணும் ஏண்டி உயிரை எடுக்குற” என்று திட்டிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் அருகில் வந்து நின்றது ஒரு சுமோ.

பூஜா தன் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக தலையில் வைத்தவள், அவள் வண்டியில் சாய்ந்து கொண்டே “இவளே ஒரு அரைவேக்காடு இவளை நம்பி வந்த பாரு”என்று சொல்லிக்கொண்டிருந்தவள் அங்கு வந்து நின்ற சுமோவை பார்த்து “எவன் அவன்.....”என்ற ரேஞ்சில் திரும்ப காரிலிருந்து ஸ்டைலாக இறங்கினான் கிருஷ்.

அவனை பார்த்து ஆச்சர்யப்பட்ட பூஜா “இவன் இங்க என்ன பண்றான்” என்று யோசித்தவளின் பார்வை ப்ரீத்தியில் படிய அவளோ கிருஷையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.கிரிஷும் அவளை பார்த்து கண்ணடித்தவன் உடனே மற்றவர்களை பார்த்து எதாவது பிரச்சனையா” என்றான்.

அவர்களின் சம்பாஷணையை புரிந்து கொண்ட பூஜா“ரைட்டு இதுங்க ரெண்டும் சேர்ந்துதான் ஏதோ பிளான் பண்ணி இருக்குங்க, நடத்துங்கடா நடத்துங்க”என்று நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

தோழிகள் நால்வரும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதே பின்பக்கம் இருக்கும் கதவை திறந்துகொண்டு இறங்கிய கிருஷின் தாய் ப்ரீத்தியிடம் “என்னம்மா என்ன ஆச்சு” என்று கேட்டார். ப்ரீத்தியும் அப்பாவியான முகத்துடன் “ஒன்னும் இல்ல ஆண்ட்டி கோவிலுக்கு போகலாம்னு கிளம்பினோம் ஆனா வண்டியில பெட்ரோல் போட மறந்துட்டோம் அதான்,எப்படி கோயிலுக்கு போறதுன்னு..........” என்று அப்பாவி போல் இழுத்தாள்.

அவள் பேசியதை கேட்ட பூஜா “இது உலக மகா நடிப்புடா சாமி”என்க அவரோ “வாங்க நம்ம வண்டியில போலாம்” என்றவர் ப்ரீத்திக்கு நேரமே தராமல் தான் அமர்ந்திருந்த சீட்டில் அவளை உட்கார வைத்து தானும் அமர்ந்து கொண்டார். அவளின் ஒரு புறம் கிருஷின் அப்பாவும் மறுபுறம் அவனது அம்மாவும் இருக்க நடுவில் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.

மற்ற தோழிகள் நால்வரும் வேறு வழி இல்லாமல் ப்ரீத்தியை திட்டி கொண்டே பின் பக்கம் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டனர். மதுவின் பக்கத்தில் உட்கார முடியவில்லை என்று பிரபாவும், ப்ரீத்தியுடன் அமர முடியவில்லையே என்று கிரிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக பிரபா வேகமாக சென்று மது பக்கத்தில் அமர்ந்திருந்த அபியை பார்த்தான்.அவளோ அவனைக் கண்டு முகத்தை திருப்பிக்கொள்ள, சூர்யாவை பார்த்தான்.அவளும் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவிற்கு வந்தவன் அபியிடம் “ஹாய் சிஸ் முன்னாடி போயி உட்காருறீங்களா நான் என் ஆளு கூட உட்காரறேன்” என்றான்.

உடனே பூஜா வேகமாக “நோ….” என்று அலறி“ஹலோ ப்ரோ படிப்பு முடியற வரைக்கும் நோ டச்சிங் டச்சிங்” என்றவள் பின் “என் உயிர் எனக்கு முக்கியம்” என்றாள் பிடிவாதமாக.அவளை முறைத்த பிரபா “அந்த சத்தியம் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்னாடி இல்ல அதனால நான் இங்க தான் உட்காருவேன்” என்று அவனும் பிடிவாதமாகவே நின்றிருந்தான்.

அபியோ அவனை கண்டுகொள்ளாமல் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்து பாவப்பட்ட சூர்யாதான் “சரி நீங்களே உங்க ஆள் பக்கத்துல உட்காருங்க ஆனா ஒரு கண்டிஷன் நாங்கதான் வண்டியை ஓட்டுவோம் ஓகேவா” என்று கேட்க,பிரபாவோ சம்மதமாக தலையை ஆட்டினான் என்றால், கிருஷ்ணாவோ “என்ன….”என்று நெஞ்சில் கை வைத்து விட்டான்.

பிறகு அருகில் நின்றிருந்த பிரபாவின் காதருகில் குனிந்தவன் “உனக்கு ஏன்டா இந்த கொலவெறி வருஷ கணக்கா காத்திருந்த லவ் இப்போதான் கைகூடியிருக்குனு நானே இப்போதான் சந்தோஷத்துல இருக்கேன்.அது பொறுக்கலையா, இவங்ககிட்ட போய் காரை குடுக்க சொல்ற, என்னோட உயிர் எனக்கு முக்கியம் என்றான்.பிறகு பிரபா தான் அவனிடம் கெஞ்சி சமாளித்து சாவியை வாங்கி சூர்யாவிடம் கொடுத்தான்.

கார் கீயை வாங்கிய அபியும் சூர்யாவும் “ஹே. ….” என்று கத்தி கொண்டே குதித்து முன்னால் ஓடினர்.

அபி, “போகும் போது நீ, வரும்போது நான் ஓகேவா”என்க, சூர்யாவும் “டீல்” என்று சொல்லி ஏறிக்கொண்டாள்.கிரிஷும் தன் தலைவிதியை நொந்தபடி பூஜாவின் அருகில் அமர்ந்தான்.

கிருஷின் தாய் கொண்டு வந்த பூவை தோழிகளிடம் கொடுத்தார். அனைவரும் பூவை வைத்துக்கொள்ள மதுவிடம் கொடுத்த பூவை பிரபா கையில் வாங்கி கண்களாலேயே “தான் வைக்கட்டுமா”, என்பதுபோல் சைகை செய்ய அவளும் வெட்கப்பட்டு சம்மதமாக தலை அசைத்தாள்.

இதை பார்த்து கடுப்பான பூஜா “ஆமா இவங்க ரெண்டு பேர் மனசுல அம்பிகா,கமல்னு நினைப்பு, ‘பூவெடுத்து வச்சு விடவா பின்னாடினு’ பாட்டு பாடிக்கிட்டு இருக்காங்க என்று முணுமுணுத்துக்கொண்டே, அவர்களை பார்க்காதது போல் கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள்.

அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருஷ் ப்ரீத்தியின் தோளை தொட கையை கொண்டு செல்ல அவன் கை தன்னை கடந்து செல்வதை கண்ட பூஜா ஒற்றைக் கண்ணை திறந்து “என்னப்பா தம்பி கை எங்க போகுது, அப்படியே விரலை ஒடைச்சுடுவேன் பார்த்துக்கோ”என்றாள்.

அவள் பேச்சில் அதிர்ந்த கிருஷ் “அண்ணன்மா” என்று பாவமாக சொல்ல, அவளோ “அண்ணன்னா என்ன வெண்ணென்ன என்ன பேசாம உட்காருடா நொண்ண உன்னாலதான் எங்க பிளான் ஊத்திக்கிச்சுன்னு, எனக்கு நல்லாவே தெரியும் அதனாலதான் உன்னோட பிளானும் டோடல் பிளாப்”என்று நக்கலாக சொல்ல, கிருஷோ “நல்ல மரியாதை தெரிஞ்ச கும்பலா இருக்குது இது” என்றுவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்.

அதன் பின் அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கோவிலுக்கு சென்றனர்.செல்லும் போதும் சரி திரும்பி வரும்போதும் சரி கிருஷின் தாய் தந்தை இருவரும் ப்ரீத்தியை பார்த்து கண் கலங்குவதும், அவள் தலையை வருடுவதுமாக இருந்தனர்.

கண்ணாடியில் அவர்களின் செய்கையை பார்த்த அபியின் புருவம் யோசனையில் சுருங்கியது. பின் அதை சூர்யாவிடம் கண்களால் காட்ட.அதை பார்த்து அவளும் ஆச்சர்யப்பட்டுதான் போனாள். பின் இருவரையும் கவனிக்க வேண்டும் என்று அபி, சூர்யா இருவருமே தங்களுக்குள் முடிவெடுத்து கொண்டனர்.

கோவில் பயணம் கிருஷை தவிர அனைவருக்கும் சிறப்பாக முடிந்தது. இப்படியே நாட்கள் சிறப்பாக சென்று கொண்டிருக்க, அடுத்த நிகழ்வாக பூஜாவின் பிறந்த நாள் வந்தது.

அர்ஜுன் பூஜாவின் பிறந்தநாளிற்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தவன் அவளது தோழிகளை பிடித்து தாஜா செய்து பூஜாவை எப்படியாவது இரவு 12 மணி போல் அழைத்து வரச்சொல்லியிருந்தான். நடுரோட்டில் கடல் காற்று முகத்தில் மோத யாரும் இல்லாத அந்த ஏகாந்த அமைதியை ரசித்தவாறு கேக் வெட்டி செலப்ரேட் செய்ய பிளான் செய்திருந்தான்.

அர்ஜுனின் பிளான் படி பூஜாவை அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வர காரை எடுத்துக் கொண்டு நால்வரும் கிளம்பினர்.சூர்யா காரை ஓட்டிக்கொண்டே தோழிகள் புறம் திரும்பியவள் “அபி நாம ரெண்டு பேரும் போயி பூஜாவை தூக்கிட்டு வரலாம் இவங்க ரெண்டு பேரையும் நம்ப முடியாது” என்றாள்.

உடனே வேகமாக துள்ளி குதித்த மது “அதெல்லாம் முடியாது நானும் பெரிய பொண்ணு ஆயிட்டேன், ஓட்டுப் போடுற வயசு வந்துடுச்சு, அதுமட்டுமில்லாம எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க, சோ நான் பொறுப்பானவள்தான்.இன்னைக்கு அத உங்ககிட்ட நான் புரூப் பண்றேன்” என்றாள்.

அதை கேட்டு சூர்யா அபி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அபி, “அடியே உன்னோட பொறுப்பு எல்லாம் எங்களுக்கு தெரியும். பேசாம இரு, ஏதோ போனா போகுதுன்னு உங்க அண்ணன் அடிமை ஆதர்ஷ்கிட்ட சொல்லி வீட்டுல யாருக்கும் தெரியாம உன்ன இந்த நைட்டு கூட்டிட்டு வந்து இருக்கோம்,அதுக்கு ஏத்தாப்ல கொஞ்சம் அடக்கி வாசி நாங்க போய் பூஜாவை தூக்கிட்டு வரோம்” என்று சொல்லி கொண்டிருந்தாள் அதை மது மறுக்க அவர்களின் வாக்குவாதத்தினோடே கார் பூஜாவின் வீட்டு வாசலில் நின்றது.

கார் நின்றவுடன் மதுவும் ப்ரீத்தியும் கீழே இறங்கியவர்கள் “நாங்க போய் அவளை தூக்கிட்டு வரோம்.அப்புறம் பாருங்க எங்க பொறுப்பை”என்று ஓடிவிட்டனர்.உள்ளே சென்றவர்கள் 10 நிமிடத்திலேயே போர்வையால் சுற்றிய ஒரு உருவத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தனர்.அவர்களை பார்த்த அபி “என்னடி இது, இப்படி தூக்கிட்டு வர்றீங்க” என்று கேட்க, ப்ரீத்தியோ, “கேள்வி கேட்டது போதும்,முதல்ல வந்து ஒரு கைப்பிடிங்கடி செம்ம வெயிட்டா இருக்கா”என்றாள்.

உடனே மற்ற இருவரும் வேகமாக வந்து பிடிக்க ஒருவழியாக, நால்வரும் சேர்ந்து அவளை காரில் தூக்கிப் போட்டுகொண்டு ஈசிஆர் ரோட்டை நோக்கி சென்றனர்.

அர்ஜுன் நடு ரோட்டில் பூக்களாலேயே அலங்காரம் செய்து ஒரு மேடையை உருவாக்கி இருந்தான். அந்த மேடையின் நடுவில் ‘ஹாப்பி பர்த்டே மை லவ்’ என்று பூவிலேயே எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இந்த அலங்காரத்தை பார்த்த தோழிகள் நால்வரும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினர்.

அவர்களின் ஆச்சரியத்தை பார்த்து சிரித்த அர்ஜுன் “இப்படியே நிக்காம சீக்கிரம் போய் பூஜாவை கூட்டிட்டு வாங்க”என்றான்.அதைக்கேட்டு திகைத்தவர்கள் பின் அவர்களுக்குள்ளேயே “நீ போய் எழுப்பு, நீ போய் எழுப்பு”என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.அதைப் பார்த்து கடுப்பான அர்ஜுன் “அவளை எழுப்ப எதுக்கு இதுங்க சண்ட போடுதுங்க”என்று நினைத்தாலும் வெளியே “சீக்கிரம் யாரவது ஒருத்தர் போய் கூட்டிட்டு வாங்க 12 மணி ஆக போகுது”என்றான்.

அதை கேட்டு திருதிருவென விழித்தவர்கள் வேறு வழியில்லாமல் பூஜா கேக் வெட்டும் போது வெடிக்க வேண்டும் என்று அர்ஜுன் வாங்கி வைத்த அலங்கார வெடியை எடுத்து கொண்டு காரின் அருகில் சென்று திருகினர்.

அதை திருகிய மறு நிமிடம் “ஐயோ அம்மா எங்க வீட்ல பாம் வச்சுட்டாங்க, வீட்டை காணோம்” என்று சுற்றி முற்றி பார்த்து கத்தி கொண்டே காரில் இருந்து துள்ளி குதித்து இறங்கினாள் பூஜா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top