வண்ணங்களின் வசந்தம் -22

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20210215-WA0007.jpg

அத்தியாயம் -22

மாப்பிள்ளையை பார்த்து அதிர்ந்து உள்ளே ஓடிய சூர்யா மதுவிடம் சென்று “அடியே மாப்பிள்ளையா வந்துருக்கறது சர்வர்டி” என்க தோழிகள் நால்வரும் புரியாது விழித்தனர்.

அபி. “தெளிவா சொல்லுடி என்ன சர்வர்” என்று கேட்க சூர்யாவோ தலையில் கை வைத்தவள் “ஹய்யோ அடியே நேத்து ஹோட்டல்ல பார்த்த அதே சர்வர்தான் மாப்பிள்ளையா வந்துருக்காரு” என்று சொல்ல, அதில் பயந்த மது “என்னடி சொல்ற அந்த சர்வரேதானா நல்லா பாத்தியா” என்றாள்.

அவளை முறைத்த சூர்யா “ஏன் டி எனக்கு என்ன கண்ணு தெரியாதா நல்லா பாத்துட்டேன் அவருதான்” .

அபி, மது “உங்க வீட்டில மாப்பிள்ளை வேலைபத்தி நல்லா விசாரிச்சாங்களா இல்லையா, எங்ககிட்ட சொல்லும்போது கூட நல்ல குடும்பம்னுதான் சொன்னாரு” என்று யோசனையாக கேட்டாள்.
பூஜா “ஒரு வேலை இந்த படத்துல எல்லாம் கம்பெனி பொறுப்பு குடுக்கணும்னா வேற கம்பெனில வேலை பாருன்னு சொல்லுவாங்களே அது மாதிரியே அவங்க பேமிலில இருக்கற பெரிய தலை ஏதாவது சொல்லி இருக்குமோ” என்று கேட்டவள் மேலும் “இல்லடி நேத்து சூப்பர்வைசர்னுதானே சொன்னாரு” என்று இழுத்தாள்.

ப்ரீத்தி “ஹய் இனிமே அந்த ஹோட்டல்க்கு போனா நாம பில் கட்ட வேண்டாமா” என்று குதிக்க அவளை முறைத்த நால்வரும் “வாயை மூடு” என்பது போல் சைகை செய்ய அவளோ ஒரு தோள் குலுக்கலோடு அமைதியானாள். இப்படியே தோழிகள் நால்வரும் ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல இங்கு மதுவிற்கு பீதி ஆக ஆரம்பித்தது.

உடனே அவர்களை அரண்டு போய் பார்த்தவள் “நீங்க முதல்ல நகருங்கடி.நானே போய் பார்க்கிறேன்” என்று செல்ல முயல, அவள் கையை பிடித்து தடுத்த சூர்யா “என்ன அவசரம் பொறுமையா இரு உன்னை கூப்பிட யாரவது வருவாங்க அவங்ககூட போ, இப்போ நல்ல புள்ளையா, கல்யாண பொண்ணா அமைதியா உட்காரு”என்றாள்.

அபி, “ஆமா ஆமாம் கல்யாண பொண்ணு நீ அதனால அச்சம், மடம் அப்புறம் என்னடி” என்று கேட்க “நாணம் பயிர்ப்பு” என்று பூஜா எடுத்து கொடுக்க, அவளுக்கு ‘ஹை பை’ கொடுத்த அபி “ஹான் அதேதான் அதை எல்லாம் பேக் பண்ணி மொத்தமா வச்சுட்டு உட்காரு நாங்க தான் முதல்ல பாப்போம் ஏனா நாங்க கல்யாண பொண்ணு இல்லை” என்று சொல்லி கதவின் அருகே செல்ல, அவளுக்கு முன் ஓடிய ப்ரீத்தி “நான்தான் பஸ்ட் நான்தான் பஸ்டு” என்றாள்.

நால்வரும் ஒருவர் தலைமேல் ஒருவர் தலையாக அடுக்கடுக்காக வைத்து ஹாலில் நடப்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

பெண்ணை அழைத்து வர சொல்ல மதுவின் பாட்டி அவளை அழைத்து செல்ல வந்தார்.கதவருகே நின்ற தோழிகளை கண்டு முகத்தை திருப்பி கொண்டு அவர் செல்ல,
அதை கவனித்த பூஜா,”கிழவிக்கு குசும்ப பாத்தியா எப்படி திருப்பிட்டு போகுதுனு” என்றாள்.

அபி, “ஹம்ம்…. விடுடி விடுடி இந்த வீட்ல நம்மள ஒரு ஆளா மதிக்கிறது இந்தக் ஓல்ட் லேடி மட்டும்தான். இதுவே நம்ம கண்டுகலைனா, கண்டிப்பா இந்த கல்யாணத்துல இதுக்கும் சம்பந்தம் இருக்குனுதான் அர்த்தம். என்ன ஆனாலும் சரி எப்படியாவது மாப்பிள்ளை கிட்ட பேச டைம் கேட்டு, நம்மளோட கண்டிஷன சொல்லணும். அவரு அதுக்கு ஓகே சொல்லல,வேற ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தறோம்” என்று தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் அந்த பாட்டியும் மதுவை அழைத்துக்கொண்டு கதவருகில் வந்திருந்தார்.தோழிகள் நால்வரும்அவளை சுற்றி நின்று கொண்டனர் முதலில் அபி “பயப்பாடாம போ, நம்மள மீறி எதுவும் நடக்காது” என்று சொல்லி கொண்டு இருக்க, அவர்களிடம் தலையாட்டிய மது தயக்கத்துடனே ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மாப்பிளையை பார்த்தாள்.

பீச் நிற ஷர்ட் சந்தன நிற பேண்ட்டில் அம்சமாக இருந்தவனை பார்த்தவுடன் கண்கள் மின்ன அவனையே அவள் பார்த்திருக்க, அவளது பாட்டியோ “இப்போ இதுங்க நம்மல போக விடுங்களா விடாதுங்களா” என்பது போல் தோழிகள் நால்வரையும் முறைத்து கொண்டு இருந்தார்.

பூஜாவும் தன் பங்கிற்கு அவளுக்கு தைரியம் சொல்லி கொண்டு இருக்க, அதை எல்லாம் மது காதில் வாங்கினால்தானே மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த பிரபாகரனை பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டு நிற்க, பூஜாதான் பேசி கொண்டே இருந்தாள். அப்போது அவளின் பேச்சை தடுத்த சூர்யா “ஹல்லோ நீ பேசறது வேஸ்டு மேடம் ஆல்ரெடி அவருகிட்ட விழுந்துட்டானு நினைக்கறேன்.உன்னை அவள் கண்டுக்கவே இல்லை” என்று சொல்ல, கடுப்பான பூஜா அவள் கையில் நறுக்கென்று கிள்ள அதில் முகம் சுழித்த மது அப்போதும் பிரபா மேல் இருந்த கண்ணை விலக்காமல் கொசு கடித்தது போல் தேய்க்க தோழிகள் நால்வரும் இவ அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டா போலயே என்பது போல் பார்வையை பரிமாறி கொண்டனர்.
ஒரு வழியாக மதுவை பாட்டி ஹாலிற்கு அழைத்து சென்றார். அவர்களின் முறைப்படி நிச்சய வேலைகள் நடக்க ஆரம்பித்தது. ஆனால் மாப்பிள்ளை…….. அவர் நிலைமையும் படு மோசமாக இருந்தது. ஏனென்றால் அவரும் மதுவை மண பெண்ணாக எதிர் பார்க்கவில்லை.

மதுவை பார்த்த மறுநிமிடம் பிரபா மண்டையில் கொசுவர்த்தி சுருள் சுற்ற ஆரம்பித்தது.அதில் பிரபா நோட் பேடுடன் நிற்க அவன் எதிரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து மது உணவு வகைகளை லிஸ்ட் போட்ட காட்சி ஓடியது. இறுதியில் லிஸ்டை பார்த்து அலறியவன் “ இந்த பொண்ணை கட்டிக்க போற அப்பாவி ஜீவன் பாவம், அன்னைக்கு வேற மாலுல ரெண்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டா இப்ப இவ்ளோ ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணி இருக்கா அதுவும் இவளுக்கு மட்டும் , அந்த ஜீவனுக்கு சமையல் கட்டுலையே வாழ்க்கை முடிஞ்சுரும் போலயே,இல்லைனா இவளுக்கு மட்டுமே ஹோட்டல் வச்சு நடத்தணும்” என்று கிண்டலாக நினைத்தது ஓட, மனதில் அலறியவன் கடைசில நான்தான் அந்த அப்பாவியா ஜீவனா என்று ப்ரீஸ் ஆகி அமர்ந்திருந்தான்.

பிரபாவின் அருகில் இருந்த அவனது பாட்டி பேரனின் முகத்தில் இருந்த கலவரத்தை கண்டு இரண்டு முறை இருமியவர் நலிவான குரலில் “என்னப்பா…… “ என்க, அவரை பார்த்து “ஒன்றும் இல்லை” என்று தலையாட்டியவன் அப்படியே ப்ரீஸ் நிலையிலேயே அமர்ந்திருந்தான்.

அதன் பின் வேலைகள் ஜரூராக நடக்க பெண், மாப்பிள்ளை இருவரும் நிச்சய மோதிரம் மாற்றிய பிறகு பெரியவர்கள் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போதுதான் தோழிகள் அனைவருக்கும் தெரிந்தது அவர்களது குடும்ப தொழில் ஜவுளி கடல் வைத்திருப்பதாம், பிரபா தனது விருப்பத்தின் பேரில் ஹோட்டல் பிஸ்னஸ் நண்பனோடு சேர்ந்து நடத்தி கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

அவர்கள் சொன்ன தகவல்களை கேட்ட பின்புதான் தோழிகளுக்கு நிம்மதியாக இருந்தது.பூஜா, “நல்ல வேலை அவர் சர்வர் இல்லை” என்று சொல்ல .

ப்ரீத்தியோ “சர்வரா இருந்தா என்ன ஓனரா இருந்தா என்ன எப்படி பார்த்தாலும் ஹோட்டேல்க்கு போனா இனி நாம பில்லு கட்ட வேண்டாம்” என்று சொல்ல மூவரும் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொண்டனர்.

பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்து சாப்பிட எழுந்து போக அப்போது அங்கு வந்த தோழிகள் “நாங்க மாப்பிள்ளைக்கிட்ட பேசணும்” என்றனர்.அதை கேட்ட இரண்டு குடும்பத்தாரும் முகத்தை சுளிக்க மதுவின் தந்தையோ ஆதர்ஷை முறைத்து கொண்டு இருந்தார்.

ஆதர்ஷோ “ரைட்டு நம்மள வீட்ட விட்டு துரத்த பிளான் பண்ணிடுச்சுங்க. டேய் ஆது மாப்பிளை வீட்டுக்காரங்க இருக்கும்போதே நீ வீட்ட விட்டு எஸ் ஆகிடு இல்லை மொத்த குடும்பமும் உனக்கு போட்டோ மாட்டி படையல் போட்ருவாங்க” என்று நினைத்து கொண்டவன் “உங்கள பார்த்தாதானே முறைப்பிங்க நான் நிமிரவே மாட்டேன்டா அப்போ என்ன பண்றீங்கன்னு பார்க்கறேன்” என்று குனிந்து போனை நோண்ட ஆரம்பித்தான்.

மற்றவர்களை விட இரு பக்கமும் இருந்த பாட்டிகளுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவர்கள் முகமே காட்டியது.ஆனாலும் மதுவின் சுதந்திரமான வாழ்க்கைதான் முக்கியம் என்று நினைத்து கொண்டவர்கள்11QQ பிடிவாதமாக நின்றனர்.

உடனே மதுவின் பாட்டி “உங்க பிரண்டு மாப்பிள்ளைக்கிட்ட பேசணும் அவளோதானே” என்று சூசகமாக அவர்கள் பேசக்கூடாது என்பது போல் உறுத்து விழித்தார்.

அவர் மனதிலோ ‘பேத்தி மட்டும் என்றாள் கூட பரவாயில்லை அவளை சமாளித்துவிடலாம் ஆனால் இந்த மூணும் பயங்கர விவரம் ஏதாவது தில்லு முள்ளு பண்ணிடுங்க” என்று யோசித்து அவரே மது,பிரபா இருவரையும் தனியாக பேச அனுப்பினார்.

ப்ரீத்தியோ, “இந்த பாட்டிக்கு காது கேட்குமா கேட்காதா நாம பேசலாம்னு சொன்னா அவங்க ரெண்டும் பேரையும் அனுப்புது”.

பூஜா, “அது எல்லாம் கிழவிக்கு நல்லா ஷேமமா கேட்கும் வேணும்னேதான் பண்ணுது வாங்க நாமலும் போலாம்” என்று செல்ல மூவரின் குறுக்கே ஒரு கரம் நீட்டப்பட்டது “யார்” அது என்று அவர்கள் பார்க்க அங்கு கோபமாக பார்த்து கொண்டு நின்றிருந்தார் பிரபாவின் பாட்டி.

தோழிகள் அவரை புரியாமல் பார்க்க அவரோ “ எங்க போறீங்க” என்றார் கணீர் குரலில் .

சூர்யா, “ஏன் பாட்டி நாங்கதான் முன்னாடியே சொன்னோமே பேசணும்னு அதுக்குதான்” என்க, அவர்களை அலட்சியமாக பார்த்தவர் பொண்ணு மாப்பிள்ளை பேசறது போதும்.“மத்த வீட்ல எல்லாம் நிச்சயமானவங்க பேசவே சம்மதிக்கமாட்டாங்க நாங்க அனுப்பிட்டோம் அவங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். வாழப்போறது அவங்கதானே” என்று முடித்து விட இவர்களுக்கு பக்கென்று இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்புதான் சொன்னாள் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று. ஆனால் இந்த பாட்டியின் கெடு பிடி பார்த்தாள்..... ‘கடவுளே’ என்று தோழியின் வாழ்க்கையை நினைத்து கலங்க ஆரம்பித்தனர்.

அப்போதைக்கு அந்த பாட்டியிடம் எதையும் பேசாமல் விலகிய தோழிகள் மதுவின் அறைக்கு சென்று ஆதர்ஷை எட்டிப் பார்த்தனர்.அப்போது அவனோ தன் குடும்பத்திற்கு பயந்து குனிந்த தலை நிமிராமல் போனை நோண்டி கொண்டிருந்தான்.

தன் போனை எடுத்த பூஜா ஆதர்ஷிற்கு அழைத்தாள்.தனக்கு போன் வரவும் யார் என்று பார்த்தவன் இந்த சில்லு வண்டா என்று நினைத்து “என்ன” என்பது போல் அவர்கள் நின்றிருந்த இடத்தை பார்க்க,அவர்களோ அவனை வெளிப்புறம் வர சொல்லி சைகை செய்தனர்.அவனோ ‘முடியாது’ என்னும் விதமாக தலையை மறுப்பாக ஆட்டினான்.

உடனே பூஜா தனது மொபைலை எடுத்து காட்ட தன் தலை எழுத்தை நொந்து கொண்டவன் எழுந்து மற்றவர் அறியா வண்ணம் வெளியே சென்றான். தோழிகளும் அவனை தொடர்ந்து சென்றனர்.

வீட்டின் தோட்டத்துப் பக்கம் சென்றவன் தோழிகளின் கும்பலை பார்த்து “எதுக்கு இப்ப என்ன வர சொன்னிங்க” என கடுகடுவென்று கேட்க. அவர்களோ அசராமல் அவன் தலையில் இடியை இறக்கினர். அது என்னவென்றால் “நாங்கள் இப்போ மது இருக்கும் இடத்திற்கு போகனும்” என்றனர். அவனோ அதிர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

அபி, “இப்படியே வெட்டியா உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம் நாங்க போயி பேசிட்டு வரணும். சீக்கிரம் ஒரு ஐடியா சொல்லுங்க அந்த கிழவிங்க ரெண்டும் வந்துர போகுதுங்க” என்று சொல்ல அவர்களை இழுத்து சென்றவன் அங்கிருந்த காம்பௌண்ட் அருகில் நிறுத்தி “இந்த சுவர் ஏறி குதிச்சா மாடிப்படி வரும் அந்த படியில் ஏறி போனீங்கன்னா மொட்டை மாடியில் அவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க போங்க போய் நீங்க பேசுனாலும் சரி இல்லை அவங்க பேசறதை வேடிக்கை பார்த்தாலும் சரி என்னமோ பண்ணுங்க நான் போறேன்” என்க,

சூர்யாவும் அபியும் கட்டி இருந்த தாவணியை தூக்கி சொருகி காம்பௌண்டில் ஏறி அந்த பக்கம் குதிக்க, பூஜாவும் லாங் பிராக்கை தூக்கி சொருகி ஒரே தாவில் அந்த பக்கம் ஏறி இருந்தாள். ப்ரீத்தி சுடி போட்டிருந்ததால் ஒரே தாவில் மறு பக்கம் சென்றனர்.இதை பார்த்து வாயை பிளந்த ஆதர்ஷ் “உங்களை எல்லாம் பார்த்து இப்போதான் பொண்ணுங்க மாதிரி இருக்குதுங்கனு நினைச்சேன். ஆனா அந்த குரங்கு சேட்டை மட்டும் மாறவே இல்லை என்ன டிரஸ் போட்டாலும் குரங்கு குரங்கு தான் என்க,
தோழிகள் அனைவரும் ஒரு சேர அவனை முறைக்க அவனோ அவர்களை கண்டு கொள்ளாமல் அப்படியே எஸ்கேப் ஆகி வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டான்.

தோழியின் வாழ்க்கையை எண்ணி பயந்து அலறி அடித்து வந்தவர்கள் அங்கு மதுவையும் பிரபாவையும் பார்த்து திகைத்தனர்.ஏனென்றால் பிரபா மதுவின் தோளில் கை போட்டு இருக்க இருவரும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.

சூர்யா, நான்தான் அப்பவே சொன்னேன்ல பயபுள்ள முதல்லயே அவருகிட்ட விழுந்துட்டான்னு யாராவது நம்புனீங்களா இப்போ பாருங்க” என்று சொல்ல, பூஜாவோ, “ துரோகி பச்ச புள்ளை மாதிரி முகத்தை வச்சு நம்மையும் ஏமாத்திட்டாளே இவளை……. “ என்று கோபமாக அவர்கள் அருகில் செல்ல அதற்குள் அடுத்த போஸ்க்கு மாறி இருந்தனர் இருவரும்.

அவர்கள் அருகில் சென்ற நால்வரும் இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டு இருக்க மதுவோ “பிரபு இந்த பக்கம் திருப்புங்க பின்னாடி ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் நிக்குது போல அதோட தலை தெரியுது” என்றாள்.பிரபாவும் யார் என்று திரும்பி பார்க்க தோழிகள் நால்வரையும் கண்டு. ‘இவர்களா’ என்னும் தோரணையில் நின்றான்.மதுவோ அவனில் இருந்து கண்களை எங்கும் நகர்த்தவில்லை.

அபி “எது பிரபுவா பேரையே சுருக்கியாச்சா” என்று கேட்டாள். அவளை கவனிக்காத மதுவும் “ஆமாம் மத்தவங்க கூப்பிடற மாதிரி…… “ என்று இழுத்தவள் பின் “இந்த குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே யார் அது” என்று சொல்லி கொண்டே திரும்ப அங்கே உக்கிரமாக அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்து அசடு வழிய “ஈஈஈ....” என்று சிரித்தவள் “அது அபி……அது.. வந்து......” என்று இழுத்தவள் மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க அவளை கேவலமாக பார்த்த தோழிகள் பிரபுவிடம் திரும்பி “நாங்க உங்ககிட்ட பேசணும்” என்றனர். அவனும் மாடியில் இருக்கும் கை பிடி சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டு “பேசலாமே” என்று சொன்ன மறு நிமிடம் அவனின் போன் அலறியது.

போனை எடுத்தவன் “அப்படியா சரி பாட்டி” என்றுவிட்டு , “கீழ வர சொல்றாங்க கிளம்பனுமாம் அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்லை, ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வைக்க முடியாது அதனால இப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லி மதுவை பார்க்க அவளும் அவனைதான் பார்த்து கொண்டிருந்தாள்.
பிரபா கிளம்புகிறேன் என்று சொல்லவும் கடுப்பான அபி “அந்த ஓல்ட் லேடிய பார்த்தா உடம்பு சரி இல்லாத மாதிரியா தெரியுது நல்லா நாலு பிளேட் பிரியாணிய தனியா சாப்பிடற மாதிரி இருக்கு.அதுக்கு உடம்பு சரியில்லையா.இந்த லூசு வேணும்னே பன்றானோ” என்று அருகில் இருந்த சூர்யா காதில் கேட்க அவளும் அதே எண்ணத்தோடுதான் யோசித்து கொண்டு இருந்தாள்.

பிரபா கிளம்புவதற்கு முன் மதுவிடம் பேச எண்ணியவன் அவள் அருகில் செல்ல உடனே அவளை தன் பின்னே இழுத்து நிறுத்தி கொண்ட அபி “கிளம்புங்க ப்ரோ உங்களுக்குதான் டைம் இல்லையே ஆனா எப்போ பேச டைம் இருக்கும்னு சொல்லுங்க நாங்க கண்டிப்பா பேசணும்” என்று அழுத்தமாக சொன்னாள்.

உடனே மது “விடுங்கடி அவரு கிளம்பட்டும் அதான் போன் நம்பர் என்கிட்ட குடுத்துருக்காரே கால் பண்ணி கேட்டுக்கலாம்.நீங்க கிளம்புங்க டாடா பாய்” என்று கை ஆட்டி அவனை கிளம்ப சொன்னாள் .

பிரபாவோ மனைவி ஆக போகிறவளிடம் அபி பேச விட வில்லை என்ற கடுப்பில் இருந்தவன், மதுவின் பேச்சால் மேலும் கடுப்பாகி அவர்களை முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனையே அலட்சியமாக பார்த்த அபி “ஒரு செல்பி எடுத்துட்டா நீ பெரிய ஆளா கிளம்பு கிளம்பு” என்னும் தோரணையில் நின்றிருந்தாள்.

தோழிகள் அனைவரும் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்தவர்கள் கீழே வந்த வழியே சென்று யாருக்கும் சந்தேகம் வராத படி மது ரூமில் உட்கார்ந்து இருந்தனர்.பிரபா குடும்பம் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பிய பின் கனவு லோகத்தில் மிதந்தவாறே வந்த மதுவை கோழி அமுக்குவது போல் நாளா புறமும் அணை கட்டியவர்கள் முறைத்து கொண்டு நின்றனர். அவளோ அதை கூட உணராமல் ப்ரீத்தி மேல் மோதிய பிறகுதான் சுய நினைவிற்கு வந்தாள்.

மது தன் மேல் மோதவும் கீழே விழுந்த ப்ரீத்தி “ஐயோ அம்மா கொலை….கொலை…கொலை….. என்ன இடிச்சே கொல்ல பாக்குறா, என்னை காப்பாத்துங்க” என்று கத்த ஆரம்பித்தாள்.மது கையை பிசைந்தவாறே பேந்த பேந்த விழித்து கொண்டு இருக்க வேகமாக ப்ரீத்தி அருகில் சென்ற பூஜா அவள் வாயை மூடி “அடியே ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாதுடி பேசாம இரு.இல்ல இவங்க குடும்பம் மொத்தமும் இங்க வந்துரும்” என்று சொல்லி அடக்கினாள்.ப்ரீத்தியும் உடனே வாயை கப்பென்று மூடி கொண்டாள்.

பின் மதுவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சூர்யா “ஏன் டி அபி யாரோ ஒரு மானஸ்தி எனக்கு கல்யாணம் வேண்டாம் நீங்கதான் வேணும் ப்ரீடம்தான் முக்கியம்னு பேசிட்டு இருந்தாளே அவளை பார்த்தியா” என்று கேட்க.

அபியோ மதுவை முறைத்து கொண்டே “அந்த மானஸ்தியதான் நானும் தேடுறேன் அவ மட்டும் கைல மாட்டட்டும் இன்னைக்கு சட்னிதான்” என்றாள் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவாறே. அவர்களை பீதியோடு பார்த்த மது “இங்க பாருங்கடி எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.நான் சொல்றதை முதல்ல கேளுங்க” என்றாள்.

அவளை முறைத்த பூஜா “முதல்ல சொல்லு அப்புறம் நாங்க தீக்கறதா இல்லையானு சொல்றோம்” என்றாள்.

மது உடனே பிரபா தன்னிடம் பேசியதை சொல்ல ஆரம்பித்தாள். அவர்கள் மாடிக்கு சென்று வெகுநேரம் வரை அமைதியாகவே நின்றிருந்தனர்.மது என்ன பேசுவது, என்ன சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு பதட்டமாக நின்றிருந்தாள். அவளின் உணர்வை புரிந்து கொண்டவன் போல் அவனே முதலில் பேச்சை ஆரம்பித்தான்.அதுவும் எடுத்த எடுப்பிலேயே “என்னை உனக்கு புடிச்சிருக்கா, இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம்தானே” என்று கேட்க அவளோ என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்தாள்.

முதலில் இந்த பெண்ணா என்று அலறிய பிரபா அவளின் இந்த இன்னொசென்ட் பார்வையில் தலைகீழாகவே விழுந்தான்.அவள் பதில் சொல்ல எடுத்து கொண்ட நேரத்தில் அவளை அவளே அறியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.

சற்று பூசினார் போன்ற உடல்வாகுதான் ஆனால் அதுதான் அவள் அழகை அதிகமாக்கியது போல் இருந்தது. அவளின் கண்கள் புருவம், கண்கள் என்று அலைந்து புசு புசுவென்றிருந்த கண்ணத்தை பார்த்து ‘கண்ணம் அது பன்னு மாதிரி’ என்ற பாடலை அவனே அறியாமல் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தான்.மேலும் அவனின் பார்வை இதழை தீண்டி கீழே செல்ல முனைய உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டவன் “அடே பிரபா என்ன காரியம் பண்ற நீ என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பொண்ண அந்த மாதிரி பார்ப்பது தவறு என்று தன்னை தானே கடிந்து கொண்டு. மூச்சை நன்றாக இழுத்துவிட்டவனின் மனசாட்சி “கல்யாணம் வேண்டாம் கல்யாணம் வேண்டாம்னு வீட்ல அவளோ சீன் போட்டுட்டு கடைசில உன் பாட்டிகாகதான் இந்த கல்யாணம்னு சொல்லிட்டு வந்துட்டு இப்போ நீ பண்ற காரியம் என்ன” என்று அவன் மனசாட்சி காரிதுப்ப அசடு வழிய அதை பார்த்தவன் “சரி சரி நான் என்ன பண்ணட்டும். நல்லா கோழி குண்டு மாதிரி கண்ணை உருட்டிகிட்டு அப்பாவியா ஒரு பொண்ணு கும்முனு நின்னா நான் என்ன பண்றது. முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு ஹஸ்பண்ட் அண்ட் வய்ப்குள்ள ஆயிரம் இருக்கும் நீ எதுக்கு இடைல கிளம்பு கிளம்பு”என்று விரட்டியவனை பார்த்த அவன் மனசாட்சி “என்னை விரற்றது இருக்கட்டும் ராசா அவ ஒன்னும் சொல்லாம இருக்கா அதை பாரு” என்றுவிட்டு சென்றது.

அதன் பின்தான் மதுவின் நினைவு வந்தவன் அவளை பார்க்க.அவள் முகம் குழப்பத்தை தத்தெடுத்திருந்தது அதை கவனித்தவன் யோசனையான முக பாவத்துடன் “ ஆண்டாள் அழகு நாச்சியார் உனக்கு என்னை பிடிக்கலையா, ” என்று ஒரு தவிப்புடன் கேட்டான்.

மதுவோ “என் பேரு மதுவந்தி ஆண்டாள் இல்லை” என்று அதுதான் முக்கியம் என்பது போல் சொன்னாள்.அவனோ “நாம என்ன கேக்கறோம் இவ என்ன சொல்றா” என்பதை போல் பார்த்து பின் சிறு சிரிப்புடன் “சரி மது” என்று சொல்லி முதலில் கேட்ட கேள்வியையே கேட்க.அவளோ வேகமாக “நான் எப்போ பிடிக்கலைனு சொன்னேன்” என்றாள்.”அப்போ பிடிச்சுருக்கு இல்லையா” என்று உல்லாசம் நிறைந்த குரலில் கேட்க உடனே தலையை குனிந்து கொண்டவள் “ம்ம்….” என்று சொல்லி ‘ஆமாம்’ என்னும்விதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.

“என்னதான் குடும்பத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்தாலும் உன் சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது அதான் கேட்டேன். உனக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணுமா” என்று அவன் கேட்டதற்கு “இல்லை” என்று மறுப்பாக தலையசைத்தாள்.

“சரி இது என்னோட பர்சனல் நம்பர் எப்போ வேணா நீ என்கிட்ட பேசலாம்” என்று சொல்லி தன் கார்டு ஒன்றை எடுத்து கொடுத்தவன் தயக்கத்துடன் “என்னோட பிரண்டு கிருஷ்ணா அவனும் நானும்தான் பிஸ்னஸ் பன்றோம் வீட்ல கொஞ்சம் ஸ்ட்ரிட் அதனால அவன் இங்க வரலை நாளைக்கு ஹோட்டல் போனா உன்னோட போட்டோ கேட்பான்.நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்குவோமா” என்று கேட்க அவளும் சம்மதிக்க அப்போதுதான் தோழிகள் இவர்களை பார்த்தது.

மது சொல்லி முடித்தவுடன் அவளை சுற்றி இருந்த நால்வரும் அவளை குனிய வைத்து மொத்த ஆரம்பித்தனர்.

அபி, ”ஏன் டி அறிவுகெட்டவளே அவருதான் ஏதாவது என்கிட்ட கேட்கணுமானாருல அப்போவே நான் படிக்கணும்னு சொல்ல வேண்டியதுதானேடி என்று திட்ட,
பூஜாவோ “ஆமாடி நான் போய் நிக்கறேன் பிரபு போனை திருப்புங்க டிஸ்டபன்ஸ் நிக்குதாம் இவளுக்கு எவளோ ஏத்தம் இருக்கும்” என்க, சூர்யாவும் தன் பங்குக்கு “அவரை பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டே எல்லாத்தையும் மறந்துட்டு இங்க வந்து நாய்க்கு லொள்ள பாரு, எகத்தாளத்த பாரு” என்று மொத்தினாள்.

ப்ரீத்தி, “உங்க ஹோட்டல ஓசில சாப்பிடலாம்னு நினச்சதுக்கு என் மேல மோதி கொலை பண்ண பாக்குற” என்று அடிக்க ஆரம்பித்தாள்.
குனிந்து அடி வாங்கி கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவர்களை தள்ளிவிட்டு அவள் ரூமை சுற்றி ஓட ஆரம்பிக்க மற்ற நால்வரும் அவளை துரத்த தொடங்கினர்.

மது இவர்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய போகிறாள்…..அதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

சுதிஷா

Well-Known Member
Hey thanks malli mam..... Super ud frd mm site ennoda first comment .. intha friends parkum pothu ennoda school nadantha sweet memories time marakkamudiyala.. super I miss my friends
எங்க ஸ்டோரி புடிச்சுருக்குன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் சிஸ். நன்றி :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top