வண்ணங்களின் வசந்தம் -19(b)

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20210130-WA0012.jpg
அத்தியாயம் 19(b)

மது, ப்ரீத்தி இருவரும் திடீரென்று அவள் செல்வதை புரியாமல் பார்க்க அவர்களை அமர சொன்ன சூர்யா தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு அபியின் பின்னோடு சென்றாள்.அங்கு அபியோ அந்தி மாலையில் தோன்றும் இள மஞ்சள் நிற வானை வெறித்து பார்த்துக்கொண்டே மனதில் “இதுநாள் வரை யாரை கண்டும் மயங்காத தன் மனம்,எட்டாத உயரத்தில் இருப்பவனை கண்டு மயங்கியது ஏன்?” என்ற கேள்வியை கேட்டு கொண்டது.

அதே நேரம் ஆடிட்டோரியத்தில் இருந்த ஆதிக்கு போன் வர அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன் போன் பேசி முடித்த உள்ளே செல்ல முயன்ற நேரம் ஒரு பெண்ணின் அழுகை குரல் காதில் விழ எதுவும் பிரச்சனையோ என்று எண்ணியவன் அந்த பெண் பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.
“என்னடி ஆச்சு மெடிக்கல் காலேஜ் காம்பௌண்ட் போயிட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க” என்று ஒருவள் கேட்க, மற்றொருவளோ அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி, “நல்லா வேலை அவங்க ரெண்டு பேரும் வந்தாங்க இல்லைனா அந்த பசங்ககிட்ட நல்லா மாட்டி இருப்பேன், அதுவும் அந்த இன்னொரு பொண்ணு அவனை ஓங்கி ஒன்னு விட்டுச்சு பாரு அவனுங்க யார் மூஞ்சிலையும் ஈ ஆடல, அவங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா……. “ என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அபியை பார்த்தவர்கள்.”ஹேய் அவங்க ரெண்டு பேரும் நிக்கறாங்க வா போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்” என்று அபி நின்றிருக்கும் இடத்தை நோக்கி ஓடினர்.

அபியோ மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தில் நின்றிருக்க, அவளிடம் வந்த சூர்யா “என்னடி ஆச்சு”என்று கேட்டு கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த பெண்கள் பேச ஆரம்பித்தனர்.

தொலைவில் இருந்து அந்த பெண்கள் அபியை பார்த்து செல்வதை பார்த்த ஆதி “ஹ்ம்ம் மேடம் பயங்கர தைரியமானவங்கதான் போல, நல்ல விஷயத்துக்குதான் அடிச்சுருக்கா,நாம நினைச்ச போல மோசம் இல்லை”என்று எண்ணியவனுக்கு அவளின் சோகமான முகம் மனதை உறுத்த, அவனையும் அறியாமல் ஒரு நிமிடம் வந்து போனது மாலில் மகிழ்ச்சியாக சுத்திய அபியின் முகம்.உடனே அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த மனதை அடக்கியவன்.முடிகளை கோதி தன்னை சமன்படுத்தி கொண்டவன் “வெரி டேஞ்சரஸ் கேர்ள், இவளை பார்த்தாலே என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வசியம் பண்ணிடறா, அன்னைக்கு மாலுலையும் அப்படிதான் என்னையும் அறியாமல், அவ பின்னாடி சுத்த வச்சா ஆனா அவளுக்கு என்ன நியாபகம் இருக்குமானே தெரிலயே” என்று பெரு மூச்சுவிட்டவன் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான்.

அபியிடம் வந்த பெண்கள் நன்றி சொல்ல, அவர்களை பேசி சமாளித்து அனுப்பிவைத்தனர் இருவரும், பின் சூர்யா அபியிடம் “நம்ம காலேஜ் விட்டிருப்பாங்க வாடி போய் பேக் எடுத்துட்டு வந்திரலாம்” என்றாள்.

தன் காதல் சொல்லாமலே, உணர்ந்த நொடியிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்ற கவலையில் இருந்த அபி “இல்லடி எனக்கு தலை வலிக்குது, நீ போய் எடுத்துட்டு வா” என்று சொன்னவளின் மனது முடிவெடுத்திருந்தது ‘ஆதியிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு அவனிடம் இருந்து விலகி விட வேண்டும்’ என்று.

அபி முகம் சோர்ந்து இருப்பதை கவனித்த சூர்யாவும் “ஆதியை பார்த்ததுல இருந்து உன் முகமே சரி இல்லை,தேவை இல்லாம எதையாவது யோசிக்காத, நான் போய் பேக் எடுத்துட்டு வறேன்.அது வரை நீ தனியா இங்க நிற்க வேண்டாம் உள்ள போ” என்று சொல்ல, அபியும் சம்மதமாக தலையாட்டியவள் “நான் போறது இருக்கட்டும் நீ பத்திரமா போயிட்டு கவனம்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

சூர்யாவும் தோழிக்கு திடீரென்று என்ன ஆனது என்ற யோசனையுடனேயே தங்களது வகுப்பை நோக்கி சென்றாள். பேகை அவள் கையில் எடுத்த நேரம் பின்னிருந்து யாரோ அவளது வாயை மூடினர்.அதில் பயந்தவள் யார் என்று திரும்பி பார்க்க முனைந்து முடியாமல் போக கையை எடுக்க முயற்சிக்க அதற்குள் அவளது கையும் கட்டப்பட, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றவளின் மனதிலோ பயம் கவ்வியது.

அவளை வேறு ஒரு வகுப்பிற்கு அழைத்து வந்தவன் வாயில் இருந்த கையை எடுத்துவிட்டு, கையில் இருந்த கட்டையும் கழட்டிவிட்டு சிரிப்புடன் நின்றிருந்தான் மாதேஷ்.

அவர்கள் படிக்கும் கல்லூரி பார்ட்னரின் மகன்.அவனை பார்த்தவுடன் வந்த எரிச்சலை முகத்தில் அப்படியே காட்டியவள் “லூசாடா நீ எதுக்குடா என்னை இங்க கூட்டிவந்த, கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா” என்று சரமாரியாக திட்டி கொண்டிருக்க அவனோ அது எதையும் காதில் வாங்காதவனாக “சில் ஸ்வீட்டி எதுக்கு இவ்ளோ கோப படற, நான் உன்கிட்ட என்னோட காதலை சொல்ல பல முறை ட்ரை பண்ணுனேன் ஆனா நீ எப்போ பாரு உன்னோட பிரண்டுங்க கூடவே சுத்திட்டு இருந்த, இன்னைக்குதான் தனியா மாட்டுன அதான் உன்னை தூக்கிட்டு வந்துட்டேன்” என்று பெருமையாக சொல்ல, அவனை கேவலமாக பார்த்தவள் “போடா லூசு லவ்வு ஜவ்வுனு இன்னொரு டைம் என் முன்னாடி வந்த கன்னம் பழுத்துடும் பார்த்துக்கோ,லவ் பண்ரானாம் லவ்வு போடா” என்றுவிட்டு செல்ல முனைய அவள் கையை பிடித்து தடுத்தவன் “இரு செல்லம் எங்க போற எனக்கொரு பதில் சொல்லிட்டு போ”என்க,அவன் பேச்சிலும், செயலிலும் கடுப்பான சூர்யா அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

கோவமாக தன் கண்ணத்தை தடவிய மாதேஷ் “எல்லா பொண்ணுங்களையும் டீல் பண்றமாதிரியே உன்னையும் டீல் பண்ணி இருக்கணும் பேசிட்டு இருந்தது என்னோட தப்புதான்.லவ் சொல்லியாச்சு நெக்ஸ்ட் கிஸ்தான்” என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி குனிய அவளோ அவனை தள்ள முயற்சித்தாள். அவனின் கரங்கள் அவளை அசைய விடாமல் சுற்றி வளைத்திருக்க அவளால் அவனை நகர்த்த கூட முடியவில்லை.

அவன் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த சூர்யா இனி அவ்வளவுதான் தன்னை காப்பாற்ற யாரும் வர போவது இல்லை என்ற எண்ணத்தில் அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் உருண்டு கீழே விழுந்த நேரம்
அவன் சாற்றி வைத்திருந்த கதவை உடைத்து கொண்டு வந்திருந்தான் திருனேஷ்.

அவனை அங்கு எதிர்பார்க்காத மாதேஷ் அதிர்ந்து நின்றிருக்க, கோவமாக இருந்த .திருவோ சூர்யாவின் கலங்கிய முகத்தையும் மாதேஷின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவன். அவனை இழுத்து அடிக்க ஆரம்பித்தான். தனக்கு உதவ யாருமில்லை என்று சூர்யா நினைத்திருந்த நேரம் திருவை பார்த்தவுடன், அவளையும் அறியாமல் மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

அவனையே சூர்யா தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருக்க, மாதேஷின் அலறல் சத்தத்தில் தன்னிலை அடைந்தவள்.திருனேஷின் அருகில் சென்று அவன் கையை பிடித்து தடுத்து “வேண்டாம் அவனை விடுங்க ஏதும் பிரச்சினையாகிட போகுது” என்று அவனிற்காக பயந்து சொல்ல, அவளை ஆக்ரோஷமாக பார்த்தவன் “என்ன பிரச்சனை வர போகுது எது வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.எவனாவது உன்னை தப்பா பார்த்தாலே அவனை வெளுத்து கட்டிடுவேன்.இவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா உன் மேல கை வச்சிருப்பான் இன்னைக்கு அவன் சாவு என் கையில் தான்” என்று சொல்லி அவனை கண்மூடிதனமாக அடிக்க ஆரம்பித்தான்.
சூர்யா அவன் கோபத்தை கட்டுப்படுத்தும் வகை அறியாமல் திணறித்தான் போனாள்.மாதேஷின் நிலையை கண்டு பயந்தவள் “பிளீஸ் அவனை அடிச்சது போதும்விடுங்க எதுவும் ஆகிட போகுது,வாங்க நாம போகலாம்” என்றவள் திருவின் கையை பிடித்து இழுக்க, அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் “நீ இங்க இருக்க வேண்டாம்,உனக்கு ஏதாவது பிரச்சினை ஆயிடும்.அதனால நீ முதல்ல கிளம்பு” என்று மாதேஷை அடித்துக்கொண்டே சொல்ல,அவளோ மறுப்பாகத் தலையை அசைத்து “முடியாது” என்றுவிட்டு, “உங்களுக்கும் எதுவும் பிரச்சினை ஆயிடும் நீங்களும் வாங்க சேர்ந்து போலாம், இல்லையென்றால் நானும் போக மாட்டேன்” என்று சொல்ல, திருவோ“இல்ல எனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நான் பாத்துக்கிறேன். உன்னோட பேர் இந்த பிரச்சனைல வர்றது எனக்கு பிடிக்கலை, அதனால நீ போ” என்று அழுத்தம் கலந்த மிரட்டலுடன் சொல்ல,சூர்யா மனமே இல்லாமல், கண்ணீருடன் அங்கிருந்து சென்றாள்.

சூர்யா சென்ற சிறிது நேரத்திலேயே அந்த பக்கமாக வந்த அந்த கல்லூரியின் மேனேஜர் மற்றும் மாதேஷின் தந்தையும், பார்ட்னருமான ஜனகராஜ் இருவரும் பேசி கொண்டு வந்தனர்.அப்போது மாதேஷ் கத்தும் சத்தம் அருகில் இருக்கும் அறையில் இருந்து கேட்க இருவரும் அடித்து பிடித்து அந்த அறையை நோக்கி வேகமாக ஓடினர்.

அங்கு திருனேஷ் மாதேஷை அடிப்பதை பார்த்து பதறிய ஜனகராஜ் அவர்கள் அருகில் விரைவாக சென்று “டேய் என்னடா பண்ற, என் மகனா விடுடா” என்று சொல்லி இருவரையும் விலக்க முயற்சிக்க,அவரை ஒரு பொருட்டாக மதிக்காத திருவோ மேலும் மேலும் அவனை அடிப்பதிலேயே குறியாக இருந்தான்.
மாதேஷின் உதடு கிழிந்து வாயில் இருந்தும்,மூக்கில் இருந்தும் ரத்தம் வர, வலி தாங்க முடியாமல் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தான். மகனின் நிலையை கண்டு அதிர்ந்த ஜனா மற்றும் மேனேஜர் இருவரும் முழு முயற்சி செய்து திருவை விலக்கி நிறுத்தினர்.அப்போதும் கோபம் அடங்காதவனாக நின்றிருந்தான் திருனேஷ்.

மகனின் நிலையை கண்டு வருந்தியவர், அவனை தூக்கி நிறுத்த முயற்சிக்க, அவனோ வாங்கிய அடியில் சுய நினைவின்றி தள்ளாட்டத்துடன் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தான். அதை கண்டு கோபம் கொண்டவர் திருவிடம் திரும்பி “உனக்கு எவ்வளவு திமிர் இருந்திருந்தா என் மகன் மேல கை வச்சிருப்ப, காலேஜ் கரஸ்பான்டன்ட் பையன்னா நீ என்ன வேணா செய்வியா, நானும் இந்த காலேஜ்ல ஒரு பார்ட்னர்தான் நியாபகம் வச்சிக்கோ.எதுக்குடா என் மகனை அடிச்ச” என்று கேட்டார்.

அவரை கிண்டலாக பார்த்த திரு ”ஹான் உன் மகன் போட்டுருந்த ஷர்ட் கலர் எனக்கு பிடிக்கல அதான் அடிச்சேன்” என்று சொல்ல அவனை முறைத்தவர் உன்னை எங்க சொல்லணுமோ அங்க சொல்றேன் என்க, அவரை எகத்தாளமாக பார்த்த திரு “சொல்லு சொல்லு எனக்கும் நல்லாவே தெரியும்.உன்னோட மகன் பண்ற வேலையும். அவனை காப்பாத்த நீ பண்ற தகிடுதத்தம் எல்லாமே தெரியும்.கூடிய சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு முடிவு எடுக்கறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற, செல்லும் அவனையே தற்போது எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன் பார்த்திருந்தார் ஜனகராஜ்.

ஆடிட்டோரியத்திற்கு வந்த சூர்யா அழுது சிவந்த முகத்துடன் இருக்க, அவளை பார்த்த அபி திகைத்து போனாள்.”அவளிடம் என்ன ஆனது” என்று கேட்க, அவளோ பிறகு சொல்வதாக சொல்லிவிட்டு பூஜா, அர்ஜுன் டான்ஸை பார்க்க ஆரம்பித்தாள்.ஆனால் அவர்களின் ஆடலில் மனம் லயிக்காமல் அங்கு திருவிற்கு என்ன ஆனதோ என்று கலங்கியவள், கண்ணில் வழிந்த நீரை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் சூர்யா.

ஆனால் அவளின் கண்ணீரை கண்டும் காணாமல் அமர்ந்திருந்த அபி அங்கு வைத்து எதுவும் கேட்க முடியாததால் பர்பாமென்ஸ் முடிந்த உடனே அவளை தனியாக இழுத்து சென்று நடந்ததை விசாரித்து தெரிந்து கொண்டாள்.
உடனே தன் போனில் இருந்து திருவை அழைத்தவள் சூர்யா வந்த பிறகு என்ன நடந்தது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டவள்,அவளிடம் திரு கூறிய அனைத்தையும் கூறி, “இதை இப்படியே மறந்திடு, யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம், இனிமே எல்லாம் திரு பார்த்துப்பாரு” என்று ஆறுதல்படுத்தினாள்.

அப்போது பர்பாமன்ஸ் முடித்து பூஜா,மது, ப்ரீத்தி மூவரும் ஆரவாரமாக வந்து சேர்ந்தனர்.இவர்களைப் பார்த்தவுடன் அபியும் சூர்யாவும் தங்களை சமாளித்து கொண்டவர்கள் சிறு சிரிப்புடன் அவர்களை பார்த்தனர்.

ப்ரீத்தி, நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க. நம்ம ஜொள்ளு இன்னைக்கு கலக்கிட்டா, அதனால இன்னைக்கு கண்டிப்பா ட்ரீட் வச்சே ஆகணும். வாங்க எல்லாரும் போலாம்.

மதுவும் “ஆமாம் ஆமாம் இன்னைக்கு ஹோல் காலேஜுக்கும் ஹெட் லைன்னே நம்ம பூஜாதான் அதனால இதை நாம செல்ப்ரேட் பண்ணியே ஆகணும்”என்று குதிக்க, அபியும் சூர்யாவும் தோழிகளுக்காக தங்களை சாதாரணமாக காட்டி கொண்டவர்கள் முழு முயற்சி செய்து அவர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலை மகிழ்ச்சியாக ஆரம்பித்த கல்ச்சுரல்ஸ் நாள் காதலில் மூழ்கி சோகத்தில் தத்தளித்து அடிதடியில் மூச்சு திணறி இதோ தோழிகளின் வழக்கமான சிரிப்பில் வந்து நிற்கிறது. இன்னும் ட்ரீட்ங்கற பேர்ல இவங்க என்ன அக்கப்போர் பண்ணபோறாங்கனு அடுத்த எபில பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top