வண்ணங்களின் வசந்தம் -19(a)

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20210130-WA0012.jpg
அத்தியாயம்-19

பூஜா அர்ஜூன் இருவரும் தங்களை மறந்து, பாடலுக்கு ஏற்றவாறு ஆடினர். பாடல் நின்றபின் தன்னிலை அடைந்து மற்றவர்களை பார்க்க, அதுவரை அவர்களையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவர்களோ,அந்த ஆடிட்டோரியமே அதிரும் வண்ணம் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

அதிலும் சில பெண்கள் ஓடிவந்து பூஜாவின் கையை பிடித்து குலுக்கி “சூப்பர் பூஜா சான்ஸே இல்லை, நீங்க ரெண்டு பேரும் செம்மையா ஆடுனீங்க, வாட் அ கெமிஸ்ட்ரி, வாட் அ பர்பாமென்ஸ் செம்ம போங்க, இன்னொரு விஷயம் தெரியுமா எப்பவும் பெர்பாமன்ஸ் பண்ணும்போது அர்ஜுனைதான் நாங்க சைட் அடிப்போம்.பட் பார் த பர்ஸ்ட் டைம் எங்களோட கவனத்தை புல்லா நீ மெஸ்மரைஸ் பண்ணிட்ட அவளோ அழகா ஆடுன” என்று சொல்ல தோழிகள் நால்வரும் பூஜாவை இரிடேட்பண்ணி பேசியவர்களை கெத்தாக பார்த்தனர். அவர்களோ முகம் கருக்க, அந்த இடத்தைவிட்டு சென்றனர்.

இங்கு பூஜாவோ அவர்களின் பாராட்டில் மென்மையாக சிரித்து அர்ஜுனை பார்க்க, அவனும் தன்னவளின் திறமையை எண்ணி முகத்தில் பெருமை பொங்க அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
பூஜாவின் பார்வை தன்னிடம் திரும்பிவிட்டது என்பதை உணர்ந்தவன் மற்றவர்கள் அறியா வண்ணம் இதழ் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை கொடுக்க,அவளோ அதிர்ந்து மற்றவர்கள் பார்த்துவிட்டார்களா என்று கண்களை சுழலவிட்டாள்.

அப்போது அவர்கள் அருகில் வந்த அபி “நாங்க எதுவும் பார்க்கல” என்று சொல்ல, அர்ஜுனோ நமுட்டு சிரிப்புடன் “பார்க்கலைல சந்தோஷம்” என்றான்.
அவர்கள் அருகில் வந்த சூர்யாவோ அர்ஜுனை முறைத்து கொண்டே “நாலு சின்ன புள்ளைங்க இருக்க இடத்துல இப்படிதான் நடந்துக்கறதா கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா” என்றாள்.

அர்ஜுனோ கிண்டலான குரலில் “ஆமாம் ஆமாம் யாரும் இல்லாத லிப்ட்ல குடுக்கணும்ற பொறுப்பு எனக்கு இல்லைதான்”என்று சொல்ல, சூர்யாவோ பேந்த பேந்த விழித்துவிட்டு “இவனுக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்,ஒரு வேலை அந்த லூசு உளறி இருக்குமோ” என்று யோசிக்க, மற்றவர்கள் புரியாமல் நின்றிருந்தனர் என்றால், ப்ரீத்தியோ அவனிடமே “என்ன லிப்ட்” என்று கேட்டாள்.

அப்போது அர்ஜுன் பின்னாடி இருந்து வந்த திருனேஷ் “நான் வேணா உங்க டவுட் கிளியர் பண்ணவா” என்று கேட்க, அவனை பார்த்து அதிர்ந்த சூர்யா ப்ரீத்தியிடம் திரும்பி “ரொம்ப முக்கியம் வாடி போலாம்” என்று சொல்ல, அர்ஜுனோ சூர்யாவிடம் “இருமா டவுட் கேட்டா கிளியர் பண்ணணும்ல” என்று கிண்டலாக கூற,

சூர்யாவோ “ஒன்னும் தேவை இல்லை பிரைடே பங்ஷன்க்கு பிராக்டிஸ் பண்ற வேலைய பாருங்க” என்று மனதில் அரண்டலும் வெளியே கெத்தாக சொல்ல, அர்ஜுனும் சிறு தோள் குலுக்கலில் அந்த பேச்சை முடித்தவன் மீண்டும் பூஜாவுடன் ஆட ஆரம்பித்தான்.
மீண்டும் பாடல் பிளே செய்யப்பட அர்ஜுன் பூஜாவின் இடையை அழுத்தமாக பற்றி தன் முன்னால் கொண்டு வந்து சுழற்றி தன்னை நோக்கி இழுக்க, அவளும் ஆடும் ஆர்வத்தில் அவன் மார்பில் மோதி நின்றாள்.அப்போது நொடி நேரத்தில் அவளின் இதழை அவன் தீண்ட, ஆடும் ஆர்வத்தில் முதலில் கவனிக்காமல் இருந்த பூஜா அவன் இதழ் தீண்டலில்தான் தன்னிலை அடைந்து விழி விரித்து பார்க்க, அவனோ ஒன்றும் நடவாதது போல் ஆட ஆரம்பித்தான்.

அர்ஜுன் அவளின் விரிந்த விழிகளை பார்த்து கண்ணடித்து சிரித்தவன் அடுத்த சுற்றில் இடையில் இருந்த கரத்தின் அழுத்தத்தை கூட்டி தோள்களில் மின்னல் விரைவில் முத்தம் பதிக்க பூஜாதான் அவன் செயலில் நெளிய ஆரம்பித்தாள். பின் பற்களை கடித்து கொண்டே மெல்லிய குரலில் "அர்ஜுன் என்ன பண்ற " என்று கேட்க அவனோ அவளை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் டான்ஸ் ஆடறேன் பேபி” என்று சொல்லி மேலும் ஆடி கொண்டே அவனின் சேட்டையை தொடர பூஜாதான் ஆட முடியாமல் நெளிய ஆரம்பித்தாள்.

அவர்கள் ஆடுவதை கவனித்த ப்ரீத்தி "டேய் என்ன டா டான்ஸ் இது.இவ்வளவு நேரம் நல்லாதானே டா ஆடுனா இப்போ என்ன டா இப்படி ஆடுறா ... " என்று வாயை பிளந்தபடி கேட்டாள்.

அதே அதிர்ச்சியில் இருந்த அபியும் ப்ரீத்தியின் கண்களை மூடி வெளியில் இழுத்து வந்து "இதெல்லாம் சின்ன பிள்ளைங்க பார்க்க கூடாது.நீ வா அப்படியே வெளிய போகலாம் " என்று சொன்னாள்.

மதுவும் பூஜாவை பார்த்து கொண்டே"என்ன டா, அவ நெளியுற மாதிரி தெரியுது. என்னடா நடக்குது அங்க, இவங்கள ஆட விட்டது தப்பா போச்சே " என்றாள்.

சூர்யாவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் பின் மதுவை பார்த்து “பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடறான் உனக்கு என்ன கண்டுக்காதவிடு"என்றனர்.

ப்ரீத்தியோ அபியின் கையை விலக்கியவள் “ஏது கண்டுக்காதையா என்ன தான் இருந்தாலும் காலேஜே, பார்க்குது டா " என்று சொல்ல”, சூர்யாவோ “யாருவேணா பார்க்கட்டும் ஆனா, நீ பார்க்க கூடாது அவ்வளவுதான்" என்று வெளியில் இழுத்து சென்றுவிட்டாள். ஏனென்றால் திருனேஷ் அவர்கள் எதிரில் நின்று அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான், அவனின் விழி வீச்சை எதிர் கொள்ள முடியாமல் சூர்யா அங்கிருந்து அனைவரையும் அழைத்து சென்றுவிட்டாள்.

இங்கு ஆடிட்டோரியத்தில் பூஜா நெளிந்து கொண்டே ஆட, அர்ஜுனோ "ப்ச் என்ன பூஜா ஸ்டெப் மிஸ் ஆகுது பாரு, நல்லா ஆடு, கான்செண்ட்ரேட், கான்செண்ட்ரேட்" என்று சொல்ல, அவளோ அவனை மனதினிலே திட்டினாலும் வெளியே ஒன்றும் சொல்ல முடியாமல், மீண்டும் மீண்டும் சொதப்பினாள்.

பூஜாவின் சொதப்பலை கண்டு கொள்ளாதவன்,ஒவ்வொரு முறையும் அவளது கழுத்திலும் தோள்களிலும் இதழ் பதித்து விலகினான். ஒருவழியாக அவர்கள் ஆடி முடித்த பின்,பூஜா செல்லும் போது, அவளை பிரிய மனமில்லாத அர்ஜுனோ அவளை நிறுத்தியவன், “இன்னும் சில ஸ்டெப்ஸ் பிராக்டிஸ் பண்ணனும் அதனால காலேஜ் முடிந்த பிறகு பிராக்டீஸ்க்கு வா” என்றான்.

அவன் சொல்வதை கேட்டு திகைத்த பூஜா “என்ன காலேஜ் முடிஞ்சு வரணுமா, இத்தனை பேர் இருக்கும் போதே இவ்வளவு சேட்ட பண்றான் யாரும் இல்லைன்னா, எவ்ளோ சேட்டை பண்ணுவானோ தெரியலையே,முட்ட கண்ணா, முட்ட கண்ணா” என்று வெட்கம் கலந்த செல்ல திட்டு திட்டி கொண்டே தோழிகளை தேடி சென்றாள்.
இவர்களின் டான்ஸ் பிராக்ட்டிஸ் பூஜாவின் திணறலிலும், அர்ஜுனின் சேட்டையிலும் செல்ல இதோ அதோ என்று கல்ச்சுரல்ஸ் நாளும் அழகாக வந்து சேர்ந்தது.

கல்ச்சுரல் தினத்தன்று அனைவரும் புடவையில் தயாராகி சென்றனர். அங்கு அர்ஜுன் மிகவும் பரபரப்பாக இருந்தான்.இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வந்திருந்தனர், அவனுக்கு இதுதான் கடைசி வருடம் என்பதால் எப்போதும் போல் இந்த வருடமும் வெற்றி பெற்று பரிசைப் பெற வேண்டும் என்ற ஆவல் அவன் பர பரப்பில் தெரிந்தது.

அருகில் இருந்த திருனேஷிடம் “ஒன்னும் பிராப்ளம் இல்லையே பென்டிரைவ் எடுத்து வச்சாச்சா, சாங் செக் பண்ணியாச்சா, கடைசி நேரத்துல சொதப்பிட போகுது”என்று பேசி கொண்டே போக,அவன் பரபரப்பை பார்த்து மென்மையாக சிரித்த திரு “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ டென்ஷன் ஆகாம கூலா இரு”என்று கூறி கொண்டிருந்த நேரம் பூஜாவும் வந்துவிட இருவரும் பேசட்டும் என்று திரு அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றுவிட்டான்.

அர்ஜுனின் முகத்தை வைத்தே அவனின் மனதை புரிந்து கொண்ட பூஜா அவனை ஆசுவாசபடுத்த சிறிது நேரம் பேச நினைக்க அவனோ “பேபி கிஸ் மீ” என்க, அதில் அதிர்ந்த பூஜா “வாட்” என்று கத்த அவனோ “ஐ நீட் இட்” என்றான்.அவனின் அலைப்புறுதலை புரிந்து கொண்டாலும் தான் எப்படி என்ற வெட்கம் பிடிங்கி தின்ன கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தவள் பின் ஒரு முடிவிற்கு வந்தவளாக பெரு மூச்சை விட்டு“அஜூ இனி இப்படி கேட்க கூடாது, இதுதான் லாஸ்ட் அதுவும் கன்னத்துலதான்” என்று முகம் சிவக்க தடுமாற்றத்துடன் சொல்ல,அவ்வளவு நேரம் அவனுக்கிருந்த அலைப்புறுதல் மறைந்து பூஜாவின் வெட்கம் நிறைந்த குரலிலும் தடுமாற்றத்திலும் சுவாரசியம் ஏற்பட அவளையே குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தான்.

பூஜா கண்களை மூடி கொண்டே அவன் அருகில் சென்று கன்னத்தில் இதழ் பதிக்கும் நேரம் முகத்தை அர்ஜுன் திருப்ப சரியாக அந்த நேரம் பூஜாவின் இதழ் அவன் இதழோடு இணைந்தது.அதில் அவள் அதிர்ந்து விலக நினைக்க அதற்குள் அவளை தன் கரங்களில் இருக்கிய அர்ஜுன் அவளின் இதழில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்து பின்தான் விலக அனுமதித்தான். அவள் அவனை முறைக்க மாய கண்ணனாக சிரித்தவன் “தேங்க் யூ பேபி” என்று சொல்ல, பூஜாவோ “முட்டக்கண்ணா நீ சரியான பிராடுடா” என்று கூற அவனோ அவார்ட் கொடுத்தது போல் சிரிப்புடனே அவளை பார்த்திருந்தான்.அதற்கு பின் இருவருக்கும் பேச நேரமில்லாமல் பிராக்டீஸ், மேக்அப் என்று நேரம் செல்ல ஆரம்பித்தது.

இங்கு மெடிக்கல் காலேஜில் கிளாஸில் பேகை வைத்துவிட்டு, கிரவுண்டில் அமர்ந்திருந்த சூர்யா, அபி இருவரும் எந்த கேப்பில் இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்திற்குள் செல்வது என்று யோசித்து கொண்டிருந்தனர்.

அப்போது என்ஜினீயரிங் காலேஜ் பெண்கள் அவர்களது காம்பௌண்டிற்குள் வர, அவர்களை சில மாணவர்கள் கிண்டல் செய்து வம்பிழுத்து கொண்டு இருந்தனர். அதை பார்த்து கோவப்பட்ட சூர்யா அந்த மாணவர்களிடம் சென்று “உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா பொண்ணுங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா, ஒரு டாக்டரா இருந்துட்டு ரவுடிங்க மாதிரி பிஹேவ் பண்றீங்க”என்று திட்ட, அவளையும் கிண்டலாக பார்த்தவர்கள் “இதோடா வந்துட்டாங்க ஆபிசர் பொண்ணுங்களுக்கு ஆபத்துன உடனே பொங்கரங்க, போமா வேலைய பாத்துட்டு, டைம் இருக்கும்போது சொல்றோம் அப்போ வந்து டாக்டர் எப்படி நடந்துக்கணும்னு கிளாஸ் எடு, இப்போ கிளம்பு” என்றனர்.

அவர்களை பார்த்து முறைத்தவள் “உங்ககிட்ட எல்லாம் இப்படி பேச கூடாது இங்கயே இருங்கடா வறேன்”என்றுவிட்டு அபியிடம் சென்றவள் நடந்ததை சொல்ல, கோவமான அபி அந்த மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்று அங்கு நடுநாயகமாக இருந்த மாணவனை ஓங்கி அறைந்து இருந்தாள்.

அதே நேரம் என்ஜினீயரிங் கல்லூரிக்கு சீப் கெஸ்ட்டாக அழைக்கப்பட்ட ஆதித்யன் தனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை ஏற்று கொண்டே பிரின்சிபல் அறை நோக்கி செல்ல, அவன் கண்ணில்பட்டாள் அந்த மாணவனை அறைந்த அபி.

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த ஆதி ‘இந்த பொண்ணு எப்போ பார்த்தாலும் யாருக்கிட்டையாவது வம்பிழுத்துட்டுதான் இருக்கும் போல, கொஞ்சம் கூட பொறுமையே இல்லை’ என்று மனதில் நினைத்து கொண்டே சென்றுவிட்டான்.

இங்கு அபியோ அங்கிருந்தவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு கிடைத்த கேப்பில் பூஜாவின் டான்ஸை பார்க்க சென்றுவிட்டாள். அபி, சூர்யா இருவரும் ஆடிட்டோரியம் வருவதை பார்த்த மது அபியிடம் “ஹேய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, அன்னைக்கு மால்ல ஒருத்தர திட்டினல அவருதான் இன்னைக்கு சீப் கெஸ்ட்டா வந்துருக்காரு, பிரின்சிபல் ரூம்ல இருக்காங்க, இப்போ வர்ற டைம்தான் ” என்றாள்.

தோழிகள் நால்வரும் ஆதிக்காக காத்திருக்க சிறிது நேரத்தில் ஆடிட்டோரியத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு இடத்தில் மட்டும் போக்கஸ் லைட் ஆன் செய்யப்பட்டது. ப்ரீத்தி லைட் எரியும் பக்கம் திரும்பியவள் “வந்துட்டாரு போல அங்க பாருங்க” என்று சொல்ல அபி வேகமாக திரும்பியவள் “வாங்கடி இன்னைக்கு எப்படியாவது அவருகிட்ட மன்னிப்பு கேட்கணும்”என்று சொல்லி ஆதி வரும் பாதையை நோக்கி ஓடினாள்.

அந்த அரங்கத்தில் நுழைந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் இவ்வளவு நேரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துடித்து கொண்டிருந்த அபி நடப்பதை நிறுத்திவிட்டு அப்படியே தன்னை மறந்து ஆதியை பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னால் வந்த மதுவோ வேகவேகமாக வந்தவள் திடீரென்று சிலைபோல் நிற்பதை கண்டு அவளை சுய நினைவிற்கு கொண்டு வர அழைத்து அழைத்து பார்த்தவள் கடைசியில் பொறுமை போனவளாக அபியின் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.அதில் சுயம் திரும்பிய அபி “இப்போ ஏண்டி என்னை அடிச்ச” என்று கோபமாக கேட்டாள்.

அவள் கேட்டதில் ஏகத்திற்கும் கடுப்பான மது அவளை முறைத்துக் கொண்டிருக்க,இவர்களுடன் வந்த ப்ரீத்தியும் சூர்யாவும் “ஆங்ங் இவ்வளவு நேரமா திறந்த வாய் மூடாம,வாய்க்குள்ள கொசு போறது கூட தெரியாம நின்னு சைட் அடிச்சிட்டு கேள்வியா கேட்கிற கேள்வி அடிங்ககொய்யால” என்று இருவரும் கோரசாக கூறினர்.

அபியோ மனதுக்குள் “அடச்சே இப்படி இவளுங்க ஓட்டுற அளவுக்கு அவனை வெறிக்க வெறிக்க பார்த்துட்டனே, இனி இவளுங்க இதை சொல்லி ஓட்டியே நம்மல கொன்னுடுவாங்கலே”என்று புலம்பியவள், பின் “அபி கெத்த மெயின்டன் பண்ணு கெத்த மெயின்டன் பண்ணு” என்று தனக்குள் கூறிக்கொண்டே அவர்களைப் பார்த்து “என்ன சும்மா ஆளாளுக்கு கிண்டல் பண்றீங்க, ஏதோ அன்னைக்கு தெரியாம திட்டிட்டமே எப்படி மன்னிப்பு கேட்கிறதுனு உள்ளுக்குள்ளேயே ஒரு ட்ரையல் பார்த்துட்டு இருந்தேன்” என்ற சமாளிப்பாக கூறினாள்.

உடனே அவளை கேவலமாக பார்த்த மூவரும் ஒரே குரலில் “ஹேஹேஹேஹே” என்று கத்தி “யாருகிட்ட கதை விடுற இதெல்லாம் புயல் காத்துல உட்கார்ந்து ஒருத்தன் பொரி சாப்பிடுவான் அவன்ட்ட போய் சொல்லு எங்க கிட்டேயேவா” என்றனர். அவர்கள் கூறியதை மறுக்க வாயைத் திறந்த அபியை பார்த்த சூர்யா “ஆதித்யாவோட பர்சனாலிட்டியை பார்த்ததும் கவுந்து அடிச்சு விழுந்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு, எகத்தாளத்த பாரு” எனவும் சூர்யாவிற்கு hi-fi கொடுத்தனர்.

ப்ரீத்தி, “எங்க மன்னிப்பு கேட்க ட்ரையல் பார்த்த அந்த மூஞ்சிய கொஞ்சம் காமி, மொச பிடிக்கிற நாய மூஞ்சியை பார்த்தா தெரியாது” என்று கலாய்த்து சிரித்து கொண்டிருக்க, இவர்களின் கலகலப்பில் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய ஆதித்யா அங்கு நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்த அபியை கண்டதும் தனக்குள் தோன்றிய எரிச்சலையும் கோபத்தையும் மற்றவர்கள் அறியாமல் எப்பொழுதும் போல் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு சென்றான்.

ஆதித்ய சக்ரவர்த்தி இதழ்களில் என்றும் இருக்கும் குருஞ்சிரிப்புடனும் தன் ஆறு அடி நீளத்திற்கு ஏற்ற உடல்கட்டுடனும் பார்ப்பவர் அனைவரையும் வசீகரிக்கும் அழகுடனும் இருப்பவன், தன் எதிரில் இருப்பவர்கள் எதிராளியாகவே இருந்தாலும் தன்னுடைய பேச்சை தட்ட முடியாத அளவிற்கு சாதுரியமான பேச்சு திறமை உடையவன்,கண்ணில் இருக்கும் கண்ணாடியை கழட்டி பார்க்கும்போது அவனின் கடைக்கண் பார்வைக்காக பெண்கள் அனைவரும் ஏங்கி நிற்பர். பெண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு சிவந்த நிறத்தை உடையவன்.தன் அழகில் மட்டுமின்றி தன் ஆளுமையாலும் பிசினசை திறன்பட நடத்தி,பிஸ்னஸ் உலகில் சிம்ம சொப்பனமாக இருப்பவன்.கம்பெனியை அவன் பொறுப்பேற்று கொண்ட மூன்று வருடத்திலேயே சிறந்த தொழிலதிபருக்கான விருதை பெற்றிருப்பவன் சக்ரவர்த்தி குரூப் ஆப் கம்பெனியின் சி ஈ ஓ.

அவனை பார்த்த முதல் பார்வையிலேயே தன் மனதை பறிக்கொடுத்த அபி அவனையே விழி எடுக்காது பார்த்து கொண்டிருக்க, அதற்குள் மேடையில் ஆதியை வரவேற்று இந்த இளம் வயதில் பிஸ்னஸ் உலகில் அவன் செய்த சாதனைகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தனர்.அவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்ட அபியின் இதயத்தில் இரும்பு குண்டை வைத்ததை போன்ற பாரம் ஏறிக்கொண்டது.

R அவருக்கும் உள்ள ஸ்டேட்டஸ் வித்தியாசம் மற்றும் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையை நினைவு கூர்ந்தவள், தங்களுக்கிடையிலான உறவிற்கு சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டவளின் மனது கசந்து வழிந்தது.கசந்தாலும் நிதர்ஷனம் இதுதான் தான் என்ற முடிவிற்கு வந்தவளுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்பது மூச்சு முட்டுவதை போல இருக்க அந்த ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியேறினாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top