வண்ணங்களின் வசந்தம் - 16

Advertisement

Aadhiraa Ram

Well-Known Member
IMG-20201222-WA0001.jpg
அத்தியாயம் -16
தோழிகள் நால்வரும் கல்லூரிக்கு சென்று அவர்களின் பேவரட்டானா மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருநந்தனர். அப்பொழுது சூர்யா எதேர்ச்சியாக திரும்ப அங்கு இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த திருனேஷ் இவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.உடனே லிப்டில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வர,அவனை மனதில் திட்ட ஆரம்பித்தாள். “நீ சொன்னா நான் கேட்கணுமா , நீ என்னடா சொல்றது நான் என்னடா கேக்குறது” என்று நினைத்தவள் மேலும் “இவன் சொல்றதை நான் கேட்க மாட்டேன்னு நிருபிக்கணுமே என்ன பண்ணலாம்” என்று கண்களை சுழல விட்டவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவர்களின் வகுப்பு மாணவன் முரளி. உடனே அவனை வைத்து சில பல திட்டங்களை மனதினுள்ளே போட்டவள் தோழிகளின் புறம் திரும்பினாள்.


சூர்யா, “அபி நம்ம கிளாஸ் முரளி அங்க உட்கார்ந்து இருக்கான் அவன்கிட்ட போய் இன்னைக்கு என்ன நடத்துனாங்கனு கேட்டுட்டு வரலாம் வாடி”.

அபி, “போடி மாலுல அலைஞ்சதே டயர்டா இருக்கு, நான் வரல நீ வேணும்னா போய் கேளு, இல்லையா விடு நாளைக்கு கேட்டுக்கலாம்” என்றாள்.
சூர்யா “இவ வேற நேரம் பார்த்து கால வாருறாளே. சரி சமாளிப்போம். இன்னைக்கு எப்படியா இருந்தாலும் அவனுக்கு நோஸ் கட் குடுத்தே ஆகணும் எவ்ளோ தைரியம் இருந்தா அப்படி பண்ணிருப்பான்” என்று நினைத்தவள் அபியிடம் “அப்போ நான் போய் கேட்டுட்டு வரேன்” என்றவள் திருனேஷை மிதப்பாக பார்த்துக்கொண்டே சென்றாள்.


சூர்யாவின் பார்வையை வைத்தே தன்னை கடுப்பேற்றும் விதமாக ஏதோ செய்ய போகிறாள் என்பதை புரிந்து கொண்ட திருனேஷ் அவளையே பார்த்திருந்தான். அவனது எண்ணத்தை பொய்யாக்காமல் ஒருவனின் அருகில் செல்ல,அவளது செயலை புரிந்து கொண்டவனாக, அவளை பார்த்துக்கொண்டே தனது இதழை நாவினால் வருடி காமித்தான். அதை கண்டு மனதில் மிரண்டாலும் வெளியே கெத்தாக காட்டி கொண்டவள் அந்த மாணவனின் அருகில் சென்று, அழைக்க போன சமயம் திருவின் பார்வை கூர்மையுடன் அவள் இதழில் படிந்தது.அவன் பார்வையின் வீரியத்தில் பயந்து போனவள் “என்னது பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பாக்குறான், இப்போ பேசினா சொன்ன மாதிரி பனிஷ்மென்ட்ங்கர பேர்ல ஏதாவது ஏடா கூடமா பண்ணிடுவானோ” என்று எண்ணி அவள் பயந்து கொண்டு இருந்தாள்.

அதே சமயம் தன் அருகில் நிழலாடவும் திரும்பிய முரளி சூர்யா அங்கு நிற்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தான். இருக்காதா பின்னே, பல முறை அவன் அவளிடம் பேச முயன்றாலும், அளவோடு பேசுபவள் இப்போது தன் அருகில் வந்து நின்றாள் என்றால் ஆச்சர்யம் வரத்தானே செய்யும்.
அதே ஆச்சர்யம் நிறைந்த குரலில் “சொல்லு சூர்யா என்கிட்ட ஏதாவது கேட்கணுமா” என்று கேட்க,அவளோ ஓரக்கண்ணால் திருவை பார்த்தாள். அவன் அவளது இதழ்களை கூர் பார்வை பார்த்துக்கொண்டே,தனது இதழ்களை வருடி காமிக்க,அதில் பயந்தவள் முரளியிடம் “ஒன்னும் இல்ல ப்ரோ இன்னிக்கு கிளாஸ்ல என்ன நடந்துச்சுன்னு கேக்கத்தான் வந்தேன்.வேற எதுவும் இல்லை” என்று பம்மினாள்.


இதை கவனித்த திரு அவளை நக்கலாக பார்த்து “அது” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து அகன்று விட்டான். இங்கு முரளியோ சூர்யா ப்ரோ என்றதில் முகம் அஷ்டகோணலாக நின்றிருந்தான்.

திரு சென்றவுடன் தன்னை நினைத்தே மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “என்ன இது இவன வெறுப்பேத்தலாம்னு பார்த்தா நம்ம தான் பல்பு வாங்குறோம் இனிமே இவன பத்தி நினைக்கவே கூடாது” என்று எண்ணியவள் முரளியிடம் சில தகவல்களை பெற்று கொண்டே தோழிகளிடம் சென்றாள்.

பூஜாவும் இவள் செல்லும்போது வந்திருந்திருக்க அவளிடம் அனைவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது வாடிய முகத்துடன் அவர்கள் அருகில் அமர்ந்தாள் சூர்யா. அபி அவளிடம் “என்ன சின்சியர் சிகாமணி கிளாஸ்ல நடந்தத கேட்டுட்டு வந்துட்டியா” என்றவள், அவளின் வாடிய முகத்தை கண்டு “அதுதான் கேட்டுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் உன் முகம் பியூஸ் போன பல்ப் மாதிரி இருக்கு” என்று கேட்க, பூஜாவோ வேற எதுக்கா இருக்கும், நாம இல்லாம பாடம் நடத்திட்டாங்களேன்னுதான் இருக்கும். இவளோட கடமை உணச்சி நமக்கு தெரிஞ்சதுதானே,” என்று சொல்ல ப்ரீத்தி ஓடி வந்து அவளுடன் ஹை பை அடித்து கொண்டாள்.

சூர்யா தான் பல்ப் வாங்கிய விஷயத்தை எப்படி சொல்வது என்று விழித்து கொண்டு இருக்கும்போதே, மது “ஹேய் என்னங்கடி நீங்க.அவதான் மால்ல இருக்கும்போதே தலைவலின்னு சொன்னாள்ள வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமாக சூர்யாவிற்குதான் ஒரு மாதிரி ஆகி போனது.

இது வரை எந்த விஷயத்தையும் ஐவரும் இது நாள் வரை ஒருவருக்கு ஒருவர் மறைத்தது இல்லை, ஆனால் இன்று நடந்த சம்பவத்தை அவர்களிடம் முதன் முறையாக மறைத்துவிட்டாள். இதை சொல்லவும் ஏனோ அவளுக்கு தயக்கமாகவே இருந்தது.
பின் “இது தேவை இல்லா விஷயம், அவனை இனி பாக்கவும் கூடாது, நினைக்கவும் கூடாது” என்று முடிவெடுத்தவள் சாதாரணமாக மாறி, பேசிக்கொண்டே தோழிகளோடு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.


வீட்டிலும் அப்பா, தம்பி என்று அனைவருடன் பேசினாலும் மனதினுள் ஆழமாக பதிந்து போன திருவின் செய்கையை மட்டும் என்ன முயன்றும் அவளால் மறக்க முடியவில்லை.அடிக்கடி அவன் நினைவே வந்து அவளை இம்சை செய்து கொண்டு இருந்தது. அதில் கடுப்பானவள் “இது வேலைக்கு ஆகாது” என்று எண்ணியவள் இரவு தூங்குவதற்கு முன் “எப்பா பெருமாளே அவன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான்,எப்படியாவது அவன்கிட்ட இருந்து என்ன காப்பாத்துப்பா” என்று வேண்டிக்கொண்டவள்,தூங்க ஆரம்பித்தாள்.

நன்றாக உறங்கி கொண்டிருந்த சூர்யா “ஐயோ அம்மா” என்று அலறி அடித்து கொண்டு எழுந்தாள். மகள் கத்திய சத்தத்தில் பெற்றோர்கள் இருவரும் பதறியடித்துக்கொண்டு வந்து “என்ன ஆச்சு சூர்யா,ஏன் கத்தின” என்று கேட்க,அவளோ திருதிருவென விழித்தவள் பின் “ஒன்னுல்ல அம்மா” என்றாள் வெளிறிய முகத்துடன்.

அவள் அருகில் வந்த தாய் சுந்தரியோ கெட்ட கனவு ஏதும் கண்டியா சூர்யா என்று கேட்க, உடனே “ஆமாம்” என்னும் விதமாக தலையை வேகமாக ஆட்டினாள். “சரி சரி....... இந்தா தண்ணீ இதை குடி எதுவும் இல்லை” என்று கூறி மடியில் படுக்க வைத்தவர் அவளை ஆசுவாசபடுத்தினார்.

அமைதியாக சிறிது நேரம் கண்மூடி படுத்திருந்தவளை பார்த்த அவளது தாய் “தைரியசாலி மாதிரி பேய் படம் பார்க்காதனு சொன்னா கேக்குறது இல்ல,அப்புறம் நடு ராத்திரி கனவு கண்டு பயந்து கத்த வேண்டியது. எதையும் யோசிக்காம அமைதியா தூங்கு” என்று கூறியவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
தாய் சென்றுவிட்டார் என்பதை உறுதிபடுத்தி கொண்ட சூர்யா நெஞ்சில் கை வைத்து கொண்டு மணியை பார்க்க அது அதி காலை நான்கு மணி என்றது. “பெருமாளே இப்படியா எனக்கு கனவு வரணும், என்று முன கியவள்,தனக்கு வந்த கனவை நினைத்து பார்த்தாள்.


சூர்யாவும் திருவும் மீண்டும் அதே லிப்டில் சிக்கி இருக்க இந்த முறை அவள் “என்னையா டா கிஸ் பண்ண இப்ப நான் கொடுக்கிற கிஸ்ல நீ ஐயோ அம்மானு அலறி அடிச்சுட்டு ஓடல என் பேரு சூர்யா இல்ல” என்று கூறியவள் மெல்ல அவனை நெருங்க அவனோ “இல்ல வேண்டாம் என்னை விட்டுடு” என்று கூறியபடி பின்னே நகர்ந்தான்.

திரு பின்னே செல்ல செல்ல அவனை நெருங்கியவள் அவன் இதழ்களை தனது இரு விரல் கொண்டு பிடித்து “ஆமா நீ என்ன பிக்பாஸ் பாலாஜி மாதிரி லிப்ஸ்டிக் போடறவனா நீ,அது எப்படிடா உன்னோட லிப்ஸ் மட்டும் இவளோ ரெட்டிஷா இருக்கு. ஏற்கனவே உன்னோட லிப்ஸ் மேல எனக்கு ஒரு கண்ணு இருந்துச்சு. இதுல நீ வேற என்னை வெறுப்பேத்தி கடுப்பாகிட்ட அதனால இன்னிக்கு அதை என்ன செய்யறேன் பாரு” என்று கூறியவள் அவனது இதழ்களை கடித்து வைக்க அவனோ “ஐயோ என்னை யாராவது இவகிட்ட இருந்து காப்பாத்துங்களேன், ராட்சசி வலிக்குது விடுடி என்னை” என்று கத்த அவளோ “கத்து கத்து எவ்வளவு வேணா கத்து உன்னை யாரும் காப்பாத்த வரமாட்டங்க “ என்றவள் அவன் இதழ்களை கடித்து குதறுவதிலேயே குறியாக இருந்தாள். வலி தாங்க முடியாதவன் அவள் இடையில் கிள்ளிவிட அதனால் ஏற்பட்ட வலியில்தான் “அம்மா” என்று கத்தி திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தாள்.

கனவை நினைவு கூர்ந்தவளோ “அச்சச்சோ பெருமாளே அபச்சாரம் அபச்சாரம் இப்படியா எனக்கு கனவு வரும்,அதுவும் விடிய காலைல.இந்த நேரத்துல வர்ற கனவு பலிக்கும்னு வேற சொல்லுவாங்களே பெருமாளே இது என்ன எனக்கு வந்த சோதனை” என்று புலம்பியவள் பின் “எல்லாத்துக்கும் அவன்தான் காரணம் அவனை நான் சும்மா விட மாட்டேன்,நாளைக்கு அவன ஒரு கை பார்க்காம விடறது இல்ல”என்ற முடிவெடுத்தவள் அதன் பின்னும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருந்துவிட்டு, காலை எப்போதையும் விட சீக்கிரமாகவே கிளம்பி தோழிகளுடன் இணைந்துகொண்டாள் .

காலேஜிற்கு வந்தவள் கண்களை சுழலவிட்டவாறே வண்டியை நிறுத்தி கொண்டிருந்தாள். அவள் நினைத்தது போலவே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து படித்து கொண்டிருந்தான் திருனேஷ்.அவனை பார்த்தவுடன் கோபம் சுறுசுறுவென ஏற, தோழிகளின் புறம் திரும்பியவள் “நீங்க எல்லாம் முன்னாடி போங்க, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என்றாள். அதை கேட்ட அனைவரும் குழப்பமான பார்வையுடன் “என்ன முக்கியமான வேலை அதுவும் எங்கள விட்டுட்டு” என்று கேட்க, அவர்களை பார்த்து திருத்திருவென விழித்தவள் மனதினுள் “இவளுங்க நம்மள விட மாட்டாங்க போலயே, இப்போ என்ன சொல்லி தப்பிக்கலாம்” என்று யோசித்தவள் பின் நினைவுவந்தவளாக ப்ரீத்தியை பார்த்து “லைப்ரரி போறேன் வர்றீங்களா” என்று கேட்க மற்ற நால்வரும் அலறியடித்துக்கொண்டு “அம்மா தாயே நீயே போ, நாங்க அதுவரை கேண்டீன்ல இருக்கோம் சீக்கிரம் வா”என்றுவிட்டு சென்றனர்.

சூர்யாவும் அவர்களிடம் நல்ல பிள்ளையாக “சரி”என்னும் விதமாக தலையாட்டியவள். பின் நேராக திருவிடம் சென்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, முறைத்துக்கொண்டு நின்றாள்.

தன் அருகில் யாரோ நிற்பது போல் இருக்கவும் புக்கில் இருந்து தன் பார்வையை நிமிர்த்திய திருனேஷ், சூர்யா கோபமாக நிற்பதை கண்டு “ஏன்” என்று புரியாமல் குழம்பி பின் “என்ன”என்பது போல் பார்த்தான்.

அவன் பார்வையில் கடுப்பானவள் “செய்யறதையும் செஞ்சுட்டு முழிக்கறதை பாரு பச்சபுள்ளையாட்டம்” என்று மனதில் திட்டியவள் வெளியில் அவனிடம் “ஹலோ மிஸ்டர் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க”என்று கேட்டாள்.

அவனோ கூலாக அவளது இதழ்களை கூர்ந்து பார்த்தபடி “நேத்து கொடுத்த பூஸ்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா கெடச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் கிடைக்குமா” என்றான்.
திருவின் பேச்சிலும் பார்வையிலும் அதிர்ந்தவள் எச்சிலை கூட்டி விழுங்கி திணறியவாறே “என்ன சொன்னீங்க” என்று கேட்க, வசிகரமாக சிரித்தவன் அவள் கண்களை பார்த்து “இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு கேட்டேன்” என்று சொல்ல,அதில் அதிர்ந்தவள் “இங்க பாருங்க இந்த மாதிரி பேசற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க” என்று கூற,திருவோ “சரி பேசல செயல்ல காட்டட்டுமா” என்று கேட்டபடி அவள் அருகில் நெருங்கி செல்ல, இவளோ “ஐயோ பெருமாளே” என்று கத்தி பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.


அவள் ஓடுவதைப் பார்த்து திரு சிரித்துக் கொண்டே “ஹேய் பொண்டாட்டி “ என்று கூப்பிட, அந்த அழைப்பில் அதிர்ந்தவள் வேறு யாரும் கவனித்துவிட்டார்களா என்று பயத்துடன் சுற்றி முற்றி பார்க்க, அவனோ கேட்டிருக்காது, கேட்டிருக்காது உன்னை தவிர வேற யாருக்கும் கேட்டிருக்காது” என்றவன், அவள் அருகில் சென்று “சும்மா என்னை வெறுப்பேத்த எதுவும் பண்ணாத அப்படி பண்ணுனா கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்”என்றான்.


சூர்யா அவனை விழி விரித்து பார்த்தவள், பின் அங்கிருந்து வேகமாக தனது தோழிகளிடம் ஓடிவிட்டாள்.அவள் ஓடி வருவதை பார்த்த அவர்கள் “என்னடி இப்படி ஓடி வர” என்ன ஆச்சு என்று கேட்டனர்.

திகைத்து அமர்ந்திருந்த சூர்யா அவர்களின் கேள்வியில் என்ன சொல்வது என்று விழித்துவிட்டு பின் “ஒன்னும் இல்லையே சும்மா” என்று மழுப்பலாக கூறினாள்.

அபியோ,”இல்லையே என்னவோ சரி இல்லையே ஒன்னும் இல்லைனா எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்க, அப்போ ஏதோ ஒன்னு இருக்கு ஒழுங்கா சொல்லு என்ன ஆச்சு, லைப்ரரி தானே போன அப்புறம் ஏன் இவ்வளவு படபடப்பு” என்று அவளை ஆராய்ச்சிச்சியாக பார்த்தபடி கேட்டாள்.

அப்போது பூஜாவும் “ஆமாடி இவ முழியே சரி இல்லை ஏதோ தப்பா இருக்கு, இந்த மாதிரி ரியாக்ஷன் லவ் பண்றவங்களுக்கு மட்டும்தான் வரும் உண்மைய சொல்லு என்ன ஆச்சு......... சொல்லு..... என்ன ஆச்சு சொல்லு........ “ என்று பாஷா பட ஸ்டைலில் கேட்டாள்.

மதுவும் அப்போது “எனக்கும் சந்தேகமா இருக்கு”என்று கூற, மூவரும் ஒரே நேரம் சூர்யாவை ஆராய்ச்சிச்சியாக பார்த்தனர். அப்போது ப்ரீத்தி “கிண்டலாக சிரித்தவள்,யாரு இவளாவது லவ்வு பண்றதாவது உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா இவளே கருத்து கந்தசாமி.

உடனே பூஜா “இல்ல இல்ல அஸ் அ கமிட்டட் பர்சன் எனக்கு இவ மேல டவுடாவே இருக்கு.உண்மைய சொல்லு குற்றம் நடந்தது என்ன” என்று சூர்யாவை துருவித் துருவி கேள்வி மேல் கேள்வியாக கேட்க, அவளோ “முதலில் திணறியவள் மனதிற்குள் “நேத்து நடந்த விஷயத்தையே உங்ககிட்ட சொல்ல முடியாம ஏதோ என்னை தடுக்குது, சரி அவன்கிட்டயாவது போய் பேசி தெளிவுபடுத்திக்கலாம்னு பார்த்தா, அவன் பக்கத்துல போனாலே என்னையும் அறியாமல் ஒரே தடுமாற்றமா இருக்கு. இது என்ன உணர்வுனு எனக்கே தெரியாத போது உங்ககிட்ட என்னனு சொல்லுவேன்” என்று புலம்பியவள். அவர்களிடம் “ஒன்னும் இல்லடி என்னப்பத்திய ஆராய்ச்சி போதும், இப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு சொல்ல போறேன் இன்னும் டென் டேஸ்ல கல்ச்சுரல்ஸ் வருதாம், நாமளும் கலந்துக்கலாமா “என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

உடனே அபி இப்போதைக்கு பார்ட்டிஸிபன்ட்டா கலந்துக்க இன்ட்ரெஸ்ட், இல்லை ஆடியன்ஸ்ஸா இருக்கதான் பிடிக்குது” என்று சொல்ல மற்றவர்களும் அவள் சொல்வதை ஆமோதித்தனர்.

பூஜாவோ, “அப்போ சரி நாம எல்லாரும் கலந்துக்கலாம்னு பார்த்தேன். நீங்க கலந்துக்கலைனு சொல்றீங்க. இப்போ நான் மட்டும் சிங்கிங் காம்பெடிஷன்ல கலந்துக்க போறேன்”என்று கூற, மற்றவர்களோ ஹார்ட் அட்டாக் வராத குறையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, முதலில் தன்னை சமாளித்து கொண்ட ,ப்ரீத்தி பூஜா கூறியது காதில் விழாதது போல் “வாங்க எல்லாரும் கிளாஸ்க்கு போலாம் டைம் ஆச்சு”என்று கூற அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு பூஜா “சிங்கிங் காம்பிடிசன்க்கு பேர் குடுத்துட்டு வரேன்” என்று செல்ல முனைய, அவளை தடுத்த சூர்யா “நல்லா யோசிச்சுட்டியாடி இதுதான் உன்னோட முடிவா, எதுக்கும் இன்னும் கொஞ்சம் பொறுமையா பேர் குடுத்துக்கலாமே” என்று கேட்டாள்.


அதை கேட்டு கடுப்பான பூஜா “என்னடி பேசற.என்னோட திறமையபத்தி தெரிஞ்சும் நீ இப்படி சொல்லலாமா, வேணும்னா ஒரு பாட்டு உங்ககிட்ட பாடி காட்டட்டுமா”என்று கேட்க, அவள் சொல்வதை கேட்டு அலறிய அபி “உன்னோட திறமை எங்களுக்கு தெரியாதா நீ சூப்பரா பாடுவாடி, அருமையா இருக்கும் உன்னோட வாய்ஸ், இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம போய் சீக்கிரம் பேர் குடுத்துட்டு வா”என்றாள்.

அபி சொல்வதை கேட்டு பெருமையாக தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டவள் “என்னோட அருமை உனக்குதான்டி தெரியுது இவளுங்களும் இருக்களுங்களே” என்று சொல்லி தலையில் அடித்து கொண்டவள் “சரி நான் போய் பேர் குடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பூஜா சென்றவுடன் அபியை நால்வரும் சேர்ந்து மொத்த ஆரம்பித்தனர். அப்போது மது “ஏன் டி இப்படி பண்ணுன, அவ எப்படி பாடுவானு தெரிஞ்சும் நீப்பாட்டுக்கு அவளை உசுப்பேத்தி அனுப்பிருக்கியே உனக்கு ஏன் இந்த கொலை வெறி”என்று கேட்க, அபியை பாவமாக பார்த்த ப்ரீத்தி “என்னை பார்த்தா பாவமா தெரியலையாடி,எந்த தைரியத்துலடி அவ வாய்ஸ் சூப்பரா இருக்குனு சொன்ன”என்று கேட்டவாறே மொத்த அவர்களை தடுத்த அபி “நிறுத்துங்கடி நான் அப்படி சொல்லலைனா நம்மகிட்ட பாடி காமிச்சுருப்பா, அதை கேட்குற தைரியம் உங்களுக்கு இருக்கா “என்றாள்.
அபி சொல்வதை கேட்ட சூர்யா “பெருமாளே” என்று கத்தியப்படி காதில் கைவைக்க அதை பார்த்த அபி “முடியாது இல்லை. இவளை பாட விடாம ஸ்கூல்ல இருந்து எல்லோரையும் காப்பாத்திட்டு வரோம், இப்போவும் ஏதாவது வழி கிடைக்காமையா போகும், விடுங்கடி பார்த்துத்துக்கலாம். அவளை பாட விடாம பன்றோம் இங்க இருக்கவங்களையும் காப்பாத்துறோம். டன் “என்று கட்டை விரலை உயர்த்தி கேட்க மற்றவர்களும் அவளுடன் தங்களது கட்டை விரலை உயர்த்தி “டன்” என்று இணைந்து கொண்டனர்.


பூஜா சென்ற திசையை பார்த்த ஐவரும் ஒரே குரலில் “இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா, கடவுளே இது என்ன சோதனை”என்று புலம்பிவிட்டு, அவள் பாடுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆளாளுக்கு ஒரு யோசனையில் மூழ்கினர்.

அப்போது பேர் குடுக்க சென்ற பூஜா போய் பத்து நிமிடத்தில், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க திரும்பி வந்தவள் தோழிகளிடம் பொறிய ஆரம்பித்தாள்.

பூஜா கோபத்திர்க்கான காரணத்தை நெக்ஸ்ட் எபில பார்க்கலாம்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top