வண்ணங்களின் வசந்தம் -15

Advertisement

சுதிஷா

Well-Known Member
அத்தியாயம்-15

தோழிகள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அர்ஜுனிற்காக அங்கேயே
காத்திருந்தனர்.அப்போது அபி
“எவ்வளவு நேரம் இங்கேயே
இருக்கறது அர்ஜுன் போய் ஒன் ஹவர் ஆயிடுச்சு வாங்க அப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே கிளம்பலாம்”.

மது,”என்ன ஷாப்பிங்கா டப்பு லேதுமா லேது” என்க,அவள் தலையில் தட்டிய அபி “ நான் சொன்னது விண்டோ ஷாப்பிங் டி,வா போகலாம்” என்றவள் முன்னால் நடக்க ஆரம்பிக்க,மற்றவர்களும் அவளை தொடர்ந்து சென்றனர்.
ஒவ்வொரு ஷாப்பாக பார்த்து கொண்டு சென்ற பூஜாவின் கவனத்தை ஈர்த்தது , கிப்ட் ஷாப்பில் மண்ணில் செய்தது போல் கலை நயமாக செம்மண் நிறத்தில் இருந்த மணியை பார்த்தவள்,”இதை அர்ஜுனுக்கு பரிசளிக்கலாம், இது சத்தம் வரும்போது எல்லாம் என்னோட நியாபகம் வரும்” என்று நினைத்தவள் அதைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.

மற்ற நால்வரும் அவள் நின்றது தெரியாமல் முன்னே சென்று கொண்டிருந்தனர்.பூஜா மணியை வாங்குவோமா, வேண்டாமா என்ற யோசனையில் தோழிகளையும் அந்த ஷாப்பையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள். அப்பொழுது ஒரு வளைவில் அபி திரும்பும் நேரம் வேகமாக வந்த ஒரு இளைஞன் அவளை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

நொடி நேரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அனைவரும் அதிர்ந்து நின்றிருக்க, கீழே விழாமல் முதலில் தன்னை சமாளித்து கொண்ட அபி யார் தன்னை இடித்தது என்று திரும்பி பார்க்க அங்கு நல்ல உயரமாகவும் உயரத்திற்கு ஏற்ற உடல் கட்டுடனும் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவன் தான் தன்னை இடித்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து கோபமாக அவன் முன்னால் சென்று “என்னடா ஒரு அழகான பொண்ண பார்த்தா உடனே இடிக்கணுமா, உனக்கு கண்ணு தெரியாது நீ பாட்டுக்கு இடிச்சுட்டு போற, யாரு என்ன கேக்க போறாங்கங்கற தைரியமா போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடுவேன் ஜாக்கிரதை” என்று திட்டி கொண்டு இருக்கும்போதே, அவர்கள் அருகில் வந்த சூர்யாவும் தனக்குள் இருக்கும் கோபத்தில் அவனை திட்ட ஆரம்பித்தாள். “இதுக்காகவே மாலுக்கு வருவாங்க போல, இவனுக மாறி ஆளுங்கள எல்லாம் சும்மா விட கூடாது” என்று திட்டி கொண்டிருக்க அந்த இளைஞனின் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

அவனின் கோபத்தை கவனித்த அபி “தப்பு பண்ணிட்டு உனக்கு என்னடா கோபம் பிளடி ராஸ்கல்” என்று மேலும் திட்ட போக, அதற்குள் அவள் அருகில் ஓடி வந்த பூஜா, அபி கத்துவதை தடுக்கும் விதமாக அவளின் கையை பிடித்து “என்னடி இது இங்க என்ன நடக்குது” என்றாள்.

அபியோ கோபம் குறையாதவளாக “அந்த ராஸ்கல் என்னை இடிச்சதும் இல்லாம எப்படி மொரச்சுட்டு இருக்கான் பாருடி.இவனை எல்லாம் சும்மா விடக்கூடாது” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும்போதே, அவன் அபியை முறைத்து “இடியட்” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அபி சொல்வதை கேட்டு தன் தலையில் அடித்துக்கொண்ட பூஜா “லூசு உன்ன இடிச்சது அவரு இல்ல, வேற ஒருத்தன் அவன் உன்ன இடிச்சுட்டு வேகமா போயிட்டான். நீ தப்பான ஆள திட்டிட்டு இருக்க” என்று கூற, அபியோ “இல்லடி இவன்தான் இந்த பக்கமா வந்தான் அப்போ கண்டிப்பா இவனாதான் இருக்கும்” என்றாள்.

அபி பேச்சில் கடுப்பான பூஜா “லூசு தூரத்தில் இருந்து நான் பார்த்து கொண்டுதான் இருந்தேன். எனக்கு நல்லாவே தெரியும் உன்னை இடிச்சது அவரு கிடையாது. இன்னொன்னையும் தெரிஞ்சுக்கோ, இப்போ திட்டிட்டு இருந்தியே அவரு எங்க அப்பாவோட பிரண்ட் பையன். எனக்கு இவர முன்னாடியே தெரியும், ரொம்ப நல்லவரு,இவர போய் திட்டிட்டியேடி” என்றாள்.

பூஜா சொல்வதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க. அபியின் அருகில் வந்த ப்ரீத்தி “ஆமா நானும் பார்த்தேன் அவரு உன்ன இடிக்கல உன்ன இடிச்சவன் அதோ அந்த ஷாப்க்குள்ள போய்ட்டான்” என்று சொல்ல அவளை நால்வரும் முறைத்தனர்.

சூர்யா,“லூசு அவர திட்டுறதுக்கு முன்னாடியே இதை சொல்றத்துக்கு என்ன.ஹையோ நான் வேற இவர திட்டிட்டேனே பெருமாளே பெருமாளே என்ன மன்னிச்சுடு ” என்று புலம்ப அவள் காதருகில் குனிந்த ப்ரீத்தி “அவரை அதிகமா திட்டுன மெயின் அக்யூஸ்ட்டே அமைதியா அங்க நிக்குது. கொஞ்சமா மசாலா தூவுன நீ ஏன் இவளோ பில்டப் குடுக்கற.சரி விடு, நாளைக்கு நாலு நல்லவங்களுக்கு பிரியாணி வாங்கி குடுத்து அந்த பாவத்தை போக்கிக்கோ” என்றாள் சிரிக்காமல். அவளை முறைத்த சூர்யா “சண்டைல கூட மசாலானு திங்கற ஐட்டத்த சேக்குற பாரு அங்க நிக்குறடி நீ” என்றவள் “அந்த நாலு பேரு யாரு”என்று கேட்டாள், அவளை மிதப்பாக பார்த்த ப்ரீத்தி “வேற யாரு நாங்க நாலு பேரும்தான் என்றாள். அதில் கடுப்பான சூர்யா ஓர கண்ணால் அபியை பார்த்தவரே நமுட்டு சிரிப்புடன் “நீதான் தைரியமான ஆள் ஆச்சே எங்க என்கிட்ட சொன்னதை அப்படியே சத்தமா சொல்லு பாக்கலாம்” என்று சொல்ல ப்ரீத்தியோ திருத்திருவென விழித்தவள் “ஏன் டி உனக்கு இந்த கொலை வெறி இன்னைய கோட்டாக்கு நான் வாங்குன கொட்டு போதும் இதுக்கு மேல மண்டை தாங்காது” என்று தலையில் கைவைத்து சொல்ல, அவளை சிரிப்புடன் பார்த்தவள் “மண்ட பத்திரம்” என்றாள்.

உடனே சூர்யாவை முறைத்த ப்ரீத்தி நகர்ந்து நின்று கொண்டு “நாளைக்கும் ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டா பயபுள்ள நம்மள இல்ல பிரியாணி போட பாக்குது சிறுத்தைத் சிக்கும் சில் வண்டு சிக்காதுன்னு இவங்களுக்கு எல்லாம் தெரியல”என்று மனதில் நினைத்துகொண்டாள்.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டு இருக்கும்போதே பூஜாவிடம் அபி “நீ நிஜமாத்தான் சொல்லுறியாடி” என்று கேட்டாள். பூஜாவும் “சத்தியமா சொல்றேன் உன்னை இடிச்சது அவரும் கிடையாது அவர் அந்த மாதிரி ஆளும் கிடையாது இப்படி பண்ணிட்டியேடி.பப்ளிக் பிளேஸ்ல இப்படிதான் அவர திட்டுவியா, கொஞ்சம் யோசிச்சு பாரு தப்பே பண்ணாம இவ்ளோ பேர் முன்னாடி நீ பேசுனது அவருக்கு எவ்ளோ அசிங்கமா இருக்கும். இதே வேற யாரவது இருந்திருந்தா நீங்க பேசுன பேச்சுக்கு என்ன நடந்திருக்குமோ ஏதோ அவருங்கரதால அமைதியா போய்ட்டாரு. ஏன்டி இப்படி பண்ணுனீங்க” என்று கேட்டாள்.

மது, ஆமா பூஜா நல்லா சொல்லுடி ஒரு சூப்பரான ஆளு இடிச்சத நினைச்சு சந்தோஷபடாம திட்டுறாளுங்ளேன்னு எனக்கு கவலையா இருந்துச்சு தெரியுமா.அது மட்டும் இல்லாம சைக்கிள் கேப்புல இவளை இவளே அழகான பொண்ணுன்னு வேற சொல்லிக்கறா இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்ல.

அபி, இல்லடி நான் பாக்கும்போது அவருதான் அந்த பக்கம் போனாரு அதான் அவருனு நெனச்சு திட்டிட்டேன். “ச்ச........பாக்க அமுல் பேபி மாதிரி இருக்கும்போதே நினைச்சேன் இந்த வில்லத்தனமான வேலைய செஞ்சது இந்த மூஞ்சா இருக்காதுன்னு இருந்தாலும் முகத்தை பார்த்து எதுவும் முடிவு பண்ணக்கூடாதுனு திட்டிட்டேன்”என்று தலையில் கையை வைத்து நின்றவள் வருத்தமான குரலில் “நான் வேணா போய் மன்னிப்பு கேட்டுட்டு வரட்டுமா இப்போ ரொம்ப கில்ட்டியா இருக்கு, அவரு வேற போய்ட்டாரு. நீங்க எல்லாரும் இங்கயே வைட் பண்ணுங்கடி. நான் அவரை தேடி கண்டுபிடிச்சு மன்னிப்பு கேட்கறேன். அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றாள்.

பூஜா “அதெல்லாம் எதுவும் வேணாம் இந்த இடத்துல வேற ஏதாவது பிரச்சனை வர்றதுக்கு முன்னாடி வாங்க இங்கிருந்து கிளம்பலாம்” என்றாள்.

அபி,சூர்யா இருவரும் “தப்பே செய்யாதவரை திட்டிட்டமே” என்று புலம்பி கொண்டு வர, அப்போது மது “ஆமா டி தேவை இல்லாம திட்டியிருக்கவே கூடாது.அதுவும் தப்பு செய்யாதவரை திட்டி இருக்கவே கூடாது. நீங்க திட்டி இப்போ வருத்தப்பட்டுனு எல்லோருக்கும் மைண்ட் அப்செட் ஆகிடுச்சு, அதனால எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு மைண்ட கூல் பண்ணிக்கலாமா” என்று கேட்க. அவளை முறைத்த பூஜா “இது இப்ப ரொம்ப முக்கியமா” என்று கேட்டாள். ப்ரீத்தியும் மதுவுடன் சேர்ந்து கொண்டவள் “ஆமா ஆமா ஐஸ் கிரீம் சாப்பிட்டே ஆகணும், மைண்ட ரிலாக்ஸ் பண்ணியே ஆகணும் ” என்று சொல்ல, அபி தனக்குள் இருந்த வருத்தத்தை மறைத்தவளாக பூஜாவிடம் “சரி போய் வாங்கிட்டு வாடி. இல்லைனா இவளுங்க இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாங்க” என்றாள்.

பூஜாவும், மதுவும் சென்று ஐவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி வந்தனர். அதில் மது மட்டும் இரண்டு ஐஸ் கிரீம் கையில் வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்க அதை பார்த்த ப்ரீத்தி “உனக்கு மட்டும் ரெண்டு ஐஸ் கிரீமா,எனக்கு ஒன்னு குடுடி”என்று கேட்க, மதுவோ கையில் இருந்த இரண்டு ஐஸ் கிரீமிலும் துப்புவது போல் செய்து “வேணுமா” என்று கேட்க முகத்தை அஷ்டகோணலாக மாற்றிய ப்ரீத்தி பூஜாவை பாவமாக பார்க்க அவள் பார்வையில் கடுப்பானவள் “நிப்பாட்டு நிப்பாட்டு இந்த பச்ச புள்ள லுக் எல்லாம் விடாத நீ யாருனு எனக்கு நல்லாவே தெரியும் இப்ப என்ன ஐஸ் கிரீம் வேணும் அவளோ தானே போறேன் போய் வாங்கிட்டு வந்து தொலையறேன், தயவு செஞ்சு மூஞ்ச இப்படி வச்சுக்காத பார்க்க சகிக்கல” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

ப்ரீத்தியின் அப்பாவி முகத்தை பார்த்து மற்றவர்கள் சிரிக்க, ப்ரீத்தியோ அவர்களை கண்டுகொள்ளாமல் பூஜா எப்போது வருவாள் என்று பார்த்து கொண்டிருக்க,மதுவோ அவளிடம் “வேணுமா வேணுமா” என்று கேட்டே இரண்டு ஐஸ் கிரீமையும் பலிப்பு காட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.பின் பூஜா வரவும் ப்ரீத்தி அவளிடம் இருந்த ஐஸ் கிரீமை வாங்கியவள் “நான் தான் பர்ஸ்ட் போவேன்” என்று வெளியில் ஓடினாள்.

மதுவை புட்கோர்ட்டில் இருந்தே பார்த்து கொண்டிருந்த ஒருவன், இப்போது ஐஸ் கிரீம் சாப்பிட்டு செய்யும் சேட்டையையும் பார்த்து சிரித்து கொண்டே“ப்பா..... என்ன சாப்பாடு சாப்புடுது இந்த பொண்ணு.இவ சாப்பிடவே ஒரு ஹோட்டல் கட்டணும் போல இருக்கே. இந்த பொண்ண கட்டிக்க போற அப்பாவி எவனோ தெரிலயே பாவம் அந்த ஜீவன் (எப்பா மகராசா நீதான் அந்த அப்பாவி ஜீவன்) என்று சொல்லி கிண்டலாக சிரித்து கொண்டிருந்தவனை “பிரபா” என்ற அழைப்போடு நெருங்கினான் அவன் நண்பன் கிருஷ்ணா.

கிருஷ், என்னடா தனியா சிரிச்சிட்டு இருக்க.

பிரபா, “தனியாவா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க நடந்தத நீ பார்த்திருந்தினா இப்படி சொல்ல மாட்ட” என்றவன் சென்று கொண்டிருந்தவர்களில் மதுவை கை காட்டி முன்பு மது நடந்து கொண்டதை சொன்னவன் மேலும் சிரித்தான்.

பிரபா கை காட்டிய பக்கம் சென்று கொண்டிருந்தவர்களை கண்கள் மின்ன பார்த்தவன் “இவங்க இங்க இருந்தா அப்போ என்னோட ஆளும் இங்கதானே இருப்பா” என்று நினைத்தவன் பிரபா அழைப்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா இப்ப வரேன் “ என்று விட்டு அவர்கள் பின்னோடு ஓடினான்.அவன் ஓடுவதை பார்த்த பிரபா “இவன் ஏன் இப்படி ஓடறான்”என்று யோசித்தவன் பின் ஒரு தோள் குலுக்களுடன் ஒதுக்கிவிட்டு அருகில் இருந்த ஷாப்பிற்குள் நுழைந்தான்.

கிருஷ் நினைத்தது போலவே அவன் ஆளான ப்ரீத்தி கையில் இருந்த ஐஸ் கிரீமை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருக்க இவனும் அவளது செய்கையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
தோழிகள் அனைவரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடித்து மாலைவிட்டு வெளியே வருவதற்கும் அர்ஜுன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

பூஜாவை பார்த்த அர்ஜுன் “என்ன ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா” என்று கேட்க அவளோ “இல்ல கிளம்பலாம்னு டிசைட் பண்ணிட்டோம்” என்றாள். “கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா” என்று பூஜாவை அவன் முறைக்க. அபியோ “ஹலோ நாங்க மட்டும்தான் கிளம்பறோம், நீங்க உங்க ஆள கூட்டிட்டு போங்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூற,அவளை பார்த்து மெலிதாகப் சிரித்த அர்ஜுன் “ஓகே பாய் நாங்களும் கிளம்பறோம், நீங்க பத்திரமா போங்க வீட்டுக்கு போயிட்டு அவளுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க சரியா” என்று கூற, மதுவோ வேகமாக “ஹலோ நாங்க வீட்டுக்கு போகல காலேஜ்க்குதான் போறோம்.உங்க ஆளோட ஸ்கூட்டி இங்கயே விட்டுட்டு போறோம்.உங்க அல்லகை ஒருத்தனை அனுப்பி வண்டிய காலேஜ்ல கொண்டுவந்து விட சொல்லுங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உங்க ஆளையும் டைம்க்கு கொண்டு வந்து விடுங்க, இல்லைனா இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்களுக்கு நீங்கதான் ஸ்பான்சர் ” என்று சொல்ல, அவனோ “ஒரு வருஷத்துக்கா”என்று மிரண்டு விழித்தவன் “அம்மா தாயே கோகுல அனுப்பி இவ வண்டிய காலேஜ்ல நிப்பாட்ட சொல்றேன், நானும் உங்க பிரண்ட டைம்க்கு கொண்டு வந்து விடறேன் போதுமா,இந்த கும்பல்ல வந்து என்னை கோத்துவிட்டியே கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்” என்று சொன்னவனின் பைக் பூஜாவுடன் ஈ சி ஆர் நோக்கி சென்றது.

அவர்கள் கிளம்பியா பின் அபி சூர்யாவிடம் “நீ ப்ரீத்திய ஏத்திக்கோ, நான் மதுவ கூட்டிட்டு வரேன்”என்று சொல்ல, அவளும் “சரி” என்றவள் ப்ரீத்தியிடம் “நீ இந்த படிக்கிட்டயே நில்லு நாங்க போய் வண்டி எடுத்துட்டு வரோம். வேற எங்கயும் போய் பிரச்சனைய விலை கொடுத்து வாங்காத“ என்று சொல்லி சென்றாள். ப்ரீத்தியும் அவளிடம் நல்ல பிள்ளையாக தலையாட்டியவள் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றாள்.

கிருஷ் தன்னவள் தனியாக இருப்பதை பார்த்து மகிழ்ந்து“ஆஹா நம்ம ஆளு தனியா நிக்குது இதுதான் நல்லா டைம் போய் பேசிட வேண்டியதுதான் இப்பவிட்டா இனி இவளை தனியா பாக்க முடியாது” என்று முடிவெடுத்தவன் தன்னுடைய கூலர்சை எடுத்து ஸ்டைலாக மாட்டி கொண்டு அவள் அருகில் சென்று “ஹலோ” என்றான்.

யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த ப்ரீத்தி கிருஷ் நின்றிருப்பதை கண்டு “அய்யோ பாவம்.என்ன சார் ரோடு கிராஸ் பண்ணி விடணுமா, சீக்கிரம் வாங்க சிக்னல் விழுந்துடுச்சு” என்றவள் அவனை பேச கூட விடாமல் வேக வேகமாக இழுத்து கொண்டு சென்று ரோட்டின் அந்த பக்கம் நிறுத்தியவள் அதோடு நிறுத்தாமல் அங்கு நின்றிருந்தவர்களிடம் “எக்ஸ்க்யூஸ்மி சார் இவருக்கு கண்ணு தெரியாது பஸ் மாறி ஏறிட போறாரு கொஞ்சம் பாத்துக்கோங்க “ என்றாள்.இங்கு என்ன நடக்கிறது என்று கிருஷ் உணரும் முன், சூர்யா ப்ரீத்தியை அழைக்க அவளும் “இதோ வந்துட்டேன்” என்றுவிட்டு கிருஷிடம் “பாத்து பத்திரமா போங்க சார். நான் கிளம்பறேன்” என்று விட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.

ப்ரீத்தி “கண்ணு தெரியாதா” என்று கேட்டதில் இருந்து அதிர்ந்து இருந்தவன் அவள் சென்ற பிறகே தன்னிலை அடைந்தான். “எது எனக்கு கண்ணு தெரியாதா, ஸ்டைலா இருக்குமேனு கூலர்ஸ் போட்டது ஒரு தப்பா இப்படி அசிங்கபடுத்திட்டு போய்ட்டாளே” என்று புலம்பி கொண்டு இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நபர் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தார். அவரின் பார்வையை கவனித்த கிருஷ் “ஆத்தி இந்த மனுஷன் ஒரு மாதிரி பாக்குறாரே இப்படி சிக்க வச்சிட்டியே சிட்டு, இப்போ கண்ணு தெரியும்னு போனா நம்மல பத்தி கேவலமா நினைப்பாங்க, இப்படியேவும் மெயின்டென் பண்ண முடியாது, நம்ம இப்படி புலம்ப வச்சுட்டு போய்ட்டாளே”.

சூர்யா ப்ரீத்தியிடம் “கொஞ்ச நேரம் இங்க நிக்க சொன்னா எங்கடி போன“ என்று கேட்க,ப்ரீத்தியோ “அடியே இன்னைக்கு நான் ஒரு சமூக சேவை செஞ்சுட்டு வரேன் தெரியுமா” என்று சொல்ல, அவள் சொல்வதை கேட்ட அபி “அப்படி என்னை சேவை மேடம் பண்ணுனீங்க”என்று கேட்டாள்.

அபியை கண்ணில் பெருமை பொங்க பார்த்தவள் “அதோ அங்க நிக்கறாரு பாரு அவருக்கு கண்ணு தெரியாதாம் அதான் ரோடு கிராஸ் பண்ணி விட்டுட்டு வரேன்”என்றாள்.

அவளை கிண்டலாக பார்த்த மது “என் அறிவு கொழுந்தே நல்லா கேட்டியா அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் வந்தவரா இருக்க போறாரு. கஷ்டபட்டு இந்த பக்கம் வந்தவரை நீ மறுபடியும் அவரு கிளம்புன இடத்துலயே விட்டுட்டு வந்துட்டியா” என்று கேட்க, அவளை முறைத்த ப்ரீத்தி “போடி நானே இன்னைக்கு ஒரு நல்ல விஷயம் பண்ணிருக்கனேனு சந்தோஷமா இருக்கேன். அதை கெடுக்கறாப்புல ஏதாவது உளறாத. ஹப்பாடா இன்னைக்கு நைட் நிம்மதியா தூங்குவேன்“ என்றவள் சூர்யாவுடன் வண்டியில் அமர்ந்து கொண்டாள். அவள் சொல்வதை கேட்ட மற்ற மூவரும் சிரிக்க, அந்த சிரிப்புடனே காலேஜை நோக்கி வண்டியை செலுத்த ஆரம்பித்தனர்.

பூஜா அர்ஜுனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாலும் ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருக்க, அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர் பார்த்து ஏமாந்து போன அர்ஜுன் “ஓகே நாம காலேஜ்க்கே போகலாமா, வண்டிய திருப்பவா” என்று கேட்க அவளோ புருவ முடிச்சுடன் “ஏன் இப்போவே கிளம்பலாம்னு சொல்லறீங்க லாங் டிரைவ் போகலாம்னு முடிவு பண்ணி இருந்தேன்” என்றாள் புரியாமல்.
அர்ஜுன், “ஆமா நீ தான் எதுவும் பேசாமல், ஏதோ யோசிச்சுட்டு இருக்க அப்புறம் ட்ரைவ் போய் என்ன யூஸ் அதுக்கு பேசாம உன்னோட பிரண்ட்ஸ் கூடவாவது இருப்பல்ல அதான்”என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொல்ல, அவனின் பேச்சில் உண்டான சிறு சிரிப்புடன் “சாரிப்பா அங்க மாலுல ஒரு பிரச்சனை ஆகிடுச்சு, அதைபத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவள், மாலில் நடந்த அனைத்தையும் அர்ஜுனிடம் கூற அவனும் “கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்.சரி முடிஞ்சதபத்தி பேசி நோ யூஸ். அதுதான் முடிஞ்சுருச்சு இல்ல இன்னும் அதை பத்தி என்ன யோசனை. இங்க பாரு பூஜா நமக்கான நேரத்துல நம்மல பத்தி மட்டும் யோசி. உங்க பிரண்ட்ஸ்கான நேரத்துல நான் வர மாட்டேன் அதே மாதிரி நமக்கான நேரத்துல அவங்க வர கூடாது” என்றவன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தான்.

அர்ஜுனின் மன நிலையை புரிந்து கொண்ட பூஜாவும்,தன்னவனுடனான தனிமையை இழக்க விரும்பாதவளாக “சாரி அஜூ இனி நம்மபத்தி மட்டும் பேசறேன் இப்போ சிரி” என்று சொல்ல,அவன் அமைதியாக வண்டி ஓட்டி கொண்டிருந்தான்.
பூஜா அவனை சமாதானப்படுத்த கெஞ்சி, கொஞ்சி முயன்றும் முடியாமல் போக, சோர்ந்தவள் மனதுக்குள் “ஆனாலும் இவனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.ஒரு பொண்ண எவ்ளோ கெஞ்சவிடறான் பாரு கல் நெஞ்சக்காரன்” என்று பும்பியவளின் மூளையில் டக்கென்று அந்த பல்ப் எரிந்தது.

உடனே “யுரேகா” என்று தனக்குள் சொல்லி கொண்டவள் வண்டியில் அமர்ந்தப்படியே அவன் தோள்களைபற்றி எக்கி அவன் கன்னத்தில் மென்மையாக முதல் முத்தம் பதித்தாள்.தன்னவளின் முதல் இதழ் ஸ்பரிசத்தில் அர்ஜுனின் கோபம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்துதான் போனது. இருந்தாலும் மனதில் தோன்றிய ஒருவித எதிர்பார்ப்புடன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் “செல்லாது செல்லாது இது போங்காட்டம் நான் ஒத்துக்க மாட்டேன்”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அவனின் அடுத்த கன்னத்திலும் மென் முத்தம் பதித்து “திருடா போதும் ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாது. உன்னோட கோபம் போய்டுச்சுனு எனக்கு தெரியும். லெட்ஸ் செலப்ரேட் அவர் டைம்” என்று சொல்லி அவனை அணைத்துக்கொண்டாள்.

அர்ஜுனும் மனம் நிறைந்த மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க புண் சிரிப்புடன் வண்டியை செலுத்தி கொண்டிருந்தான். ஈ சி ஆர் ரோட்டில் அடிக்கும் கடல் காற்றில் அவளின் கூந்தல் பறக்க, தங்களுக்கே தங்களுக்கான அந்த ஏகந்த பொழுதை இருவரும் ரசிக்க ஆரம்பித்தனர் .

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top